என்னமோ பறக்குது… மர்மமா இருக்குது…!!!

 

ஆகாயத்தில் அதிசயமாக நாம் பார்ப்பதில் முக்கிய இடம் பிடிப்பது விமானங்கள்தான். சில வேளைகளில் அழியாத நெடுங்கோடாகப் புகை விட்டுக்கொண்டு பறக்கும் ஜெட் விமானங்கள் என்றால் சில நேரங்களில் நமக்கு ஓசைகூட கேட்கும் அல்லது கேட்பது போன்ற பிரமை ஏற்படும். வலவன் ஏவா வானவூர்தி அல்ல என்றாலும் அதில் ஏறிப் பயணம் செய்யாதவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏறிச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவது இயற்கைதான். ஆனால், அதில் அடிக்கடி சென்று பயணப்பட்டவர்களுக்கோ சில – பல சந்தேகங்கள் தோன்றித் தோன்றி மறையும். ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும், சில வேளைகளில் அச்சத்துடனும் விமானங்களில் செல்வோரே அதிகம். அவர்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை தருகிறார் விமானி பேட்ரிக் ஸ்மித். ‘காக்பிட் கான்பிடன்ஷியல்’ என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் தகவல்கள் அனைவருக்குமே பொதுவானவை. பயணிகளின் சந்தேகங்களுக்குக் கேள்வி-பதில் வடிவில் அவர் சில விளக்கங்களைத் தந்திருக்கிறார்.

விமானம் பறக்கும்போது திடீரென தூக்கித்தூக்கிப் போடுவதும் அப்படியும் இப்படியும் அலைக்கழிப்பதும் குலுங்குவதும் என்னைக் குலைநடுங்கச் செய்கிறது, செத்துவிடுவோமோ என்றுகூட அஞ்சுகிறேன், இந்த அச்சம் நியாயமானதுதானே?

இல்லை. விமானத்தை அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடும்படியோ, விண்ணிலிருந்து வீசி எறியும் வகையிலோ எதுவும் நடந்துவிடாது.காற்றழுத்தம் குறைவான வான் பகுதியில் விமானம் செல்லும்போது குலுங்குவது இயல்பானது. அது உங்களுக்கு அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் அதனால் விமானம் கீழே விழுந்துவிடாது.

ஜெட் விமானத்தின் எல்லா இன்ஜின்களும் செயலிழந்துவிட்டால் விமானத்தால் பத்திரமாகத் தரை இறங்க முடியுமா?

முடியும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது உங்களுடைய கார் இன்ஜினை அணைத்துவிட்டால் எத்தனை ஆபத்தோ அத்தனை ஆபத்து இதில் இருந்தாலும் விமானத்தைத் தொடர்ந்து இயக்கவும் தரையில் இறக்கவும் முடியும்.

விமானத்திலிருந்து எரிபொருளைக் கொட்டிவிட முடியும் என்று தெரிகிறது, விமானம் இறங்கும்போது எடை குறைய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்களா?

ஆமாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. விமானம் மேலே எழும்போது இருக்கும் எடையைவிட கீழே இறங்கும்போது இருக்கும் எடையானது அதற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் அந்த நெருக்கடியைக் குறைக்க எரிபொருள் வெளியே கொட்டப்படுகிறது. இது அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய விமானங்களில்தான் சாத்தியம். சிறிய ரக விமானங்களில் கூடுதல் எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடித்த பிறகே தரையில் இறக்குவார்கள்.

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அதை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்?

ஒரு சேதமும் ஏற்படாது. விமானத்தின் அலுமினியத்தாலான உடல் அதைக் கடத்திவிடும்.

விமானம் பறக்கும்போது கழிப்பறையில் உள்ளவை கீழே கொட்டிவிடுமா?

இல்லை. விமானக் கழிப்பறையில் சேரும் கழிவுகள் விமானத்தின் கடைசிப் பகுதியில் உள்ள கழிவுத் தொட்டிக்கு அவ்வப்போது சென்றுவிடும். அது வெளியே சிந்தாது, சிதறாது.

விமானி அறையிலிருந்து வரும் மணியோசைக்கு என்ன அர்த்தம்?

இரு விதமான தேவைகளுக்காக மணியை ஒலிப்போம். முதல் வகை, இன்டர்காமில் பேசுங்கள் என்று விமானப் பணிக்குழுவினரை அழைப்பதற்காக. இரண்டாவது, விமானம் 10,000 அடி உயரத்தை எட்டிய பிறகு சீட் பெல்டைப் பயணிகள் தளர்த்தலாம் என்று அறிவிப்பதற்காக, மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னால் சீட் பெல்டைப் போடுங்கள் என்று கூறுவதற்காக. சில வேளைகளில் சீட் பெல்டை யாராவது போடவில்லை என்பதை எங்கள் முன்னால் உள்ள விளக்கு எரிந்து எச்சரித்தால் விமானப் பணிக்குழுவினருக்கு அதைத் தெரிவிப்பதற்காகவும்.

சில விமான நிலையங்களுக்கு 3 எழுத்தில் நீங்கள் வைத்திருக்கும் பெயர்கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றனவே?

சிலரை நினைவுகூர்வதற்காகவும் சில வேளைகளில் ஆபாசமான பொருள் தரும் வாசகங்களைத் தவிர்ப்பதற்காகவும் விமான நிலையங்களின் பெயர்களைச் சுருக்குகிறார்கள், அது விமானிகளுடைய பயன்பாட்டுக்கானது, பயணிகள் அதுகுறித்துக் கவலைப்பட ஏதும் இல்லை.

நவீன ரக விமானங்கள் அதுவாகவே பறந்துவிடுமாமே?

நிச்சயம் இல்லை. மருத்துவமனைகளில் கட்டப்படும் நவீன அறுவைக்கூடமே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்துவிடுமா என்ன?

விமானம் பறக்கத் தொடங்கும்போதும் தரை இறங்கும்போதும் பயணிகள் தங்களுக்கு முன்னால் இருக்கும் சீட் டிரேக்களை மூடி வைக்க வேண்டும், விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைக்க வேண்டும், சீட் பெல்டுகளைப் போட வேண்டும். கண்ணாடிகளைத் திரைபோட்டு மூட வேண்டும் என்றெல்லாம் ஏன் கழுத்தறுக்கிறீர்கள்?

விமானம் திடீரென தன்னுடைய வேகத்தை இழந்தால் இருக்கையிலிருந்து நீங்கள் முன்னே வீசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது நீங்கள் நிலைகுலையாமல் இருக்கவும் முன்புற சீட்டின் பின்னால் போய் முட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சீட் பெல்ட் போட்டு டிரேயை மூடி வைக்குமாறு கூறுகிறோம். விளக்கு வெளிச்சத்தைக் குறைப்பதும் கண்ணாடிகளின் திரையைப் போடுவதும் விமானத்துக்குள் ஏதாவது பறந்து விழுகிறதா, நெருப்புப் பிடித்து எரிகிறதா என்று விமானப் பணிப்பெண்கள் எளிதாகப் பார்ப்பதற்காகத்தான். இது பாதுகாப்பு நடவடிக்கை, பயணிகளின் நலனில் அக்கறை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது.

விமானம் பறக்கும்போது பயணிகள் நன்றாகத் தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்துக்குள் ஆக்சிஜன் அளவு குறைக்கப்படும் என்கிறார்களே?

சுத்த அபத்தம், அப்படி எங்கும் செய்வதில்லை.

விமானம் பறக்கும்போது பயணி யாராவது கிறுக்குப்பிடித்து கதவைத் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா?

விமானம் பறக்கும்போது கதவுகளையோ அவசர வழிகளையோ யாராலும் திறக்க முடியாது. விமானி அறையில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.

கைபேசிகளும் மடிக்கணினிகளும் ஆபத்தானவையா?

அது நேரத்தையும் சூழலையும் பொறுத்தது. கைபேசிகளைக் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யலாம் என்பதும் ஒரு காரணம். பல வேளைகளில் சோம்பேறித்தனத்தாலோ, இறங்கி வீட்டுக்குப் போகும் அவசரத்திலோ சில பயணிகள் கைபேசிகளை மறந்து விமானத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இது தற்செயலா, திட்டமிட்டா என்று தெரியாதபோது பதற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. விமானம் உயரக் கிளம்பும்போதோ தரை இறங்கும்போது அதில் ஏற்படும் வேக மாறுதல்களின்போது மடிக்கணினி கையிலிருந்து நழுவி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்கலாம். அப்போது அது யார் மீதாவது பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.டேப்லட்டுகள், மின் புத்தகங்கள் போன்றவற்றை விமானிகளே இப்போது விமானத்துக்குள் பயன்படுத்துவதால் அவற்றின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமா என்று விமானப் பயண நிர்வாகிகள் சிந்தித்துவருகின்றனர்.

-தி நியூ யார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

source:::::tamil.thehindu.com

natarajan

” எது சுதந்திரம் ” ?

தமிழகத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அழகான சாலைகள், அம்யூஸ்மெண்ட் பார்க்குகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என்று பல விஷயங்கள் அங்கே இருந்தாலும், சிங்கப்பூர் அவருக்கு பிடிக்கவில்லை. எப்போதடா இந்தியா திரும்புவோம் என்று காத்திருந்தார். அந்த வெறுப்புக்கு காரணம் எச்சில். சிங்கப்பூருக்கு சென்ற நாளில் நம்ம ஊர் வழக்கப்படி எதேச்சையாக இவர் சாலையில் எச்சிலைத் துப்ப, இதைப் பார்த்த போலீஸார் அவருக்கு எக்கச்சக்கமாக அபராதம் விதித்திருந்தனர். அதிலிருந்து மனிதருக்கு சிங்கப்பூர் கசந்தது. “ஒரு மனுஷன் நிம்மதியா துப்பக்கூட கூடாதுன்னா, இந்த ஊரு இருந்தா என்ன? அழிஞ்சாதான் என்ன?” என்று மனசுக்குள் கருவிக்கொண்டு எச்சிலை கட்டுப்படுத்தி நாட்களைத் தள்ளினார். எச்சில் துப்பாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் நகர்ந்தது அவருக்கு. கடைசியில் இந்தியாவுக்கு வரும் நாள் வர, விட்டால் போதும் என்று பறந்துவந்தார். நம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் முதல் வேலையாய் சாலைக்கு ஓடி வந்தவர் தன் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டு கா…றித்துப்பி தன் சுதந்திர வேட்கையைத் தீர்த்துக்கொண்டார்.

நம்மில் பலருக்கும் சுதந்திரத்தின் அர்த்தம் இதுவாகத்தான் உள்ளது. என் இஷ்டப்படி நான் வாழ்ந்துகொள்ள நம் பெரியவர்கள் போராடி வாங்கிக் கொடுத்ததுதான் சுதந்திரம் என்ற எண்ணத்துடன், அதைத் தவறான வழிகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒரு விஷயம்தான் இந்த எச்சில். நடுரோட்டில் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பற்றி கவலையே படாமல் வெற்றிலை அல்லது பான்பராக்கை நன்றாக மென்று, அதன் சுவையை ரசித்து சாலையிலோ அல்லது சுவரிலோ வண்ணக்கோலம் தீட்டாவிட்டால் பலருக்கு தூக்கமே வராது. இதை யாராவது கேட்கப்போனால் அவ்வளவுதான். தங்கள் சுதந்திரத்துக்கு ஊறுவந்துவிட்டதைப் போல் சண்டைக்கு வந்துவிடுவார்கள். “என்னயா, இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா” என்று கேட்டு நாம்தான் குற்றவாளியோ என்ற எண்ணம் வருகிறார்போல் ஒரு வாங்கு வாங்கிவிடுவார்கள்.

எச்சிலுக்கு அடுத்ததாக நம் மக்கள் அதிக சுதந்திரத்தை உணர்வது, குப்பை கொட்டுவதில்தான். தன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மனிதன் கருதுவது இயற்கை. ஆனால், அந்த வீட்டை சுத்தப்படுத்தியபின் குப்பைகளைப் ப்ப்டுவதிதான் வில்லங்கமே வருகிறது. பொதுவாக ஒவ்வொரு தெருவின் முனைகளிலும் குப்பைகளை போடுவதற்கென்று குப்பைத் தொட்டிகள் இருக்கும். ஆனால், அதன் பக்கத்தில் சென்று குப்பையைப் போட பலரையும் அவர்களின் ஈகோ தடுக்கும். அதனாலோ என்னமோ தங்களை கூடைப்பந்து வீரர்களை போல் பாவித்து தூரத்தில் இருந்துகொண்டே குப்பைத்தொட்டியைப் பார்த்து குப்பைகளை எறிவார்கள். குப்பையும் மிகச் சரியாக தொட்டியில் விழாமல், பக்கத்தில் இருக்கும் சுவரில் பட்டுத் தெறிக்கும். இதற்கென்றே காத்திருக்கும் நாய்கள் அதன் மீது பாய, கொஞ்ச நேரத்தில் ஏரியாவே நாறிவிடும். ஒரு சிலர் தங்கள் வீட்டில் அன்று பிரியாணியென்றோ, கறிக்குழம்பு என்றோ சமூகத்துக்கு பெருமையுடன் உணர்த்திக்கொள்வதற்காகவே குப்பைகளை வாரி இறப்பதும் உண்டு.

இந்தக் குப்பை வீச்சை தடுக்கப் போகிறேன் பேர்வழி என்று சிலர் குப்பைகள் சகஜமாக விழும் இடத்துக்கு பக்கத்தில் கடவுளின் படங்களை வரைந்து வைப்பார்கள். ஆனால், இதைப் பார்த்த பிறகாவது குப்பை கொட்டும் சமாசாரம் நிற்குமா என்றால், ஊஹூம்… உடனே கண்ணப்ப நாயனார்களாக மாறி தங்களிடம் உள்ள குப்பைகளால் சாமிக்கு அபிஷேகம் செய்யாமல் நகர மாட்டார்கள். “என்னப்பா இது, சாமி மீது குப்பை கொட்டுகிறாயே?” என்று கேட்டால், “நான் காலம் காலமா குப்பை கொட்டற இடத்துல நீ ஏன் சாமி படத்தை வரைஞ்சே?” என்று நம் மீது வம்புக்கு வருவார்கள்.

எச்சில், குப்பை ஆகியவற்றுக்கு அடுத்ததாக பலரும் சுதந்திரம் எடுத்துக்கொள்ளும் மற்றொரு விஷயம் ‘சாலை’. எத்தனை கூட்டமாக இருந்தாலும், என்னதான் டிராபிக் இருந்தாலும் நாம் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் வீடு போய் சேரவேண்டும் என்பது பலரின் விருப்பம். அதற்கு ஊறு வந்துவிட்டால் தாங்கவே மாட்டார்கள். சாலையின் இரு புறமும் வாகனங்கள் நெருக்கி நின்றாலும் தாங்கள் சென்றாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் எங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் நுழைந்துவிடுவார்கள். மகாபாரதத்தில் சக்கிரவியூகத்திற்குள் அபிமன்யு எப்படி நுழைந்தான் என்பதை தெரிந்துகொள்ளாதவர்கள் இவர்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சரசரவென்று சந்துகளில் நுழைந்து முன்னேறும் இவர்கள், மிகச் சரியாக அபிமன்யு சக்கரவியூகத்தில் சிக்கியதைப் போலவே மிக நெருக்கடியான ஓர் இடத்தில் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து மீள முடியாமல் போவோர் வருவோரிடமிருந்தெல்லாம் அர்ச்சனை வாங்கிக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இந்த ஏரியால ஒரு போலீஸ்காரனைக் கூட போடாம டிராபிக் போலீஸ் என்னய்யா பண்ணுது?” என்று தொண்டை கிழியக் கத்துவார்கள். சாலையில் போவதுதான் இப்படியென்றால் வண்டியை பார்க்கிங் செய்வதில் இன்னும் அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்வது சிலரது வழக்கம். “தோ… 5 நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லி வண்டியை நெரிசலான இடத்தில் நிறுத்தி, ஒட்டு மொத்த மக்களையும் டென்ஷனாக்கி தங்கள் சுதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் பலருக்கும் அலாதி சுகம்.

இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவமோ, எந்த மதத்தின் கடவுளும் தங்களை சத்தமாக வழிபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதில்லை. ஆனால், இப்போது இருக்கும் பக்தர்களுக்கோ சத்தமில்லாமல் கும்பிட்டால் கும்பிட்ட மாதிரியும் இல்லை. நாலு தெருவுக்கு மைக் கட்டி, அதில் உபயம் என்று தங்கள் பெயரைப் போட்டுக் கொண்டால், கடவுள் அருள் புரிவார் என்பது அவர்களது நம்பிக்கை. தேர்வு நேரமாச்சே, பசங்க படிக்கணுமே, நோயாளிகள் இருக்கிறார்களே என்று யாராவது கேட்டால் அவ்வளவுதான். “என் ஊருல என் சாமியைக் கும்பிடக்கூட உரிமை கிடையாதா?” என்று கடித்துக் குதறிவிடுவார்கள். அதைக் கேட்டபின் நமக்கே நாம் கடவுளின் எதிரியோ என்ற சந்தேகம் வந்துவிடும். சாமி விஷயமாவது ஏதோ பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால், தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் பிறந்தநாளில் சிலர் செய்யும் சாகசங்களை சகிக்கவே முடியாது. அவர்களைக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் ஊரையே ரெண்டுபடுத்தி விடுவார்கள்.

வசதியில்லாதவர்கள் சொகுசாகச் சென்றுவருவதற்காகத்தான் அரசாங்கம் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது. ஆனால், அதிலும் சிலர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரங்கள் இருக்கிறதே… சொல்லி மாளாது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கப் பாய்வதுபோல் ஸ்டாண்டுக்குள் பஸ் வரும்போதே ஒரு பெரும் கூட்டம் சீட் பிடிக்கச் சூழ்ந்துகொள்ளும். துண்டோ, செருப்போ, பையோ ஏதவது ஒரு பொருளை சீட்டை நோக்கி வீசி தங்கள் இடத்தை ஸ்தாபிதம் செய்துகொள்வார்கள். ஒரு சிலர் இந்த விபரீத விளையாட்டுக்கு தங்கள் குழந்தைகளைக்கூட ஜன்னல் வழியாய் பஸ்ஸுக்குள் நுழைப்பதுண்டு. இந்த வீரப் போரில் நீங்கள் தேறவில்லையென்றால், எத்தனை தூர பயணமாக இருந்தாலும் நின்றுகொண்டே போக வேண்டியதுதான். ஆனால், இத்தனை ஆக்ரோஷமாக சீட் பிடிக்கும் பஸ்களை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பார்களா என்றால் அதுதான் இல்லை. தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ, யாராவது தங்கள் உரிமையில் கைவைத்தாலோ முதலில் உடைப்பதும் பஸ்களைத்தான்.

ஒரு மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்பதும், அதைக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதும் மிகவும் உண்மை. ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது. ஆனால், நம்மில் பலரும் அதிகம் வீணாக்குவது தண்ணீரைத்தான். பல் தேய்க்க பிரஷ்ஷை எடுப்பதற்கு முன்பே பலரும் குழாயை திறந்துவிடுகிறார்கள். தங்கள் தேவை முடிந்து முகத்தை துண்டால் துடைத்த பிறகே அதை மூ வேண்டும் என்ற நினைப்பே பலருக்கும் வருகிறது. மின்சாரத்தின் நிலையும் இதுதான். நாளொன்றுக்கு 18 மணி நேரம் மின்வெட்டால் அவதிப்பட்ட நிலையிலும் இன்னும் மின்சாரத்தை இஷ்டப்படி செலவு செய்யும் சமூகம் நம் ஊரில் இருக்கிறது.

டாஸ்மாக்கில் சரக்கடித்து சவுண்ட் விடுவது, சாவு ஊர்வலத்தில் மொத்த டிராஃபிக்கையும் நிறுத்துவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, புகைப் பிடிப்பது போன்ற விஷயங்களில்தான் சுதந்திரத்தை அனுபவிப்பது என்ற மனநிலை பலருக்கும் இருப்பது வேதனைக்குரியது.

 
source:::: Sudhir in tamil.thehindu.com
natarajan

Message For The Day….Do Your Duty Regardless of Fruits Thereof …

Your duty (Karma) has to be done righteously (in dharma). Those dominated by ignorance (Thamas) do their duty solely for the sake of the fruits thereof and they resort to all sorts of subterfuges in order to gain the results they desire. For this category of people, the end justifies the means. Those dominated by passion (Rajas) are proud and pompous, and boast that they are the doers, the benefactors and the experiencers. Those dominated by qualities of calm serenity (Sathwa) do their duties regardless of the fruits thereof and leave the result to the Lord. They will not worry whether it leads to success or failure, ever conscious of their duties and never of their rights. As a matter of fact, there is more joy in the actual doing, than in the result that accrues. This attitude must be the experience of every true seeker.

 

Sathya Sai Baba

Smartphones and Tablets Harbour More Germs than Toilet Seats !!!

Smartphones, tablet computers and office keyboards are riddled with more dangerous bacteria than toilet seats, it is claimed.

Which? took swabs from 30 smartphones, tablets and keyboards

Watchdogs said routine swab tests revealed “hazardous” levels of germs that can cause vomiting, diarrohea and even harbour infections such as e.coli.

Which? took swabs from 30 smartphones, tablets and keyboards. One iPad had 600 units of Staphylococcus aureus, which creates toxins that can lead to food poisoning.

This compared with less than 20 units of Staphylococcus per swab of an office toilet, 140 on a smartphone and 480 on the dirtiest keyboard.

Which? said the results stem from today’s hectic lifestyles, with grubby fingers, snacking while typing and rushed toilet breaks all to blame. Part of the problem is down to people taking their must-have tech gadgets into the bathroom with them.

James Francis, the microbiologist that carried out the resaearch, said: “A count of 600 on a plastic device of any sort is incredibly high. It indicates that some people don’t wash their hands a lot.

“In the food industry, if we found those levels of bacteria from a hand swab of a food handler, they’d have to be taken out of the workplace and retrained in basic hygiene.”

Tests for Enterobacteria revealed 15,000 of the bacteria on one tablet, four smartphones and five keyboards. There were less then ten on the toilet seat and flush handle. Fortunately the Enterobacteria tests came up clean for both e.coli and salmonella.

Earlier this summer media regulator Ofcom revealed that we are so addicted to our smartphones and tablet computers that over one in ten – 11 per cent – now view video content on a device such as the iPad in the bathroom. Some 20 per cent of 18 to 24 year-olds do so.

Which? said it was essential to keep devices clean by using anti-bacterial wipes.

Keyboard users should tip them upside down and shake them to “dislodge any old food crumbs, dust and skin flakes”. Damp, soft, lint-free cloths should be used to remove streaks from phones and tablets.

Apple advises that fans of its products do not use alcohol-based cleaners on iPhones or iPads. Which? added: “Don’t rely on wiping your phone on a shirt sleeve or dry cloth.”

source::::  ,  in The Telegraph UK

natarajan

” ஊரில் எல்லா பய பிள்ளைகளும் படிக்க வேண்டும் ” !!!

கோவை மாவட்டம், திம்மராயன்பாளையத்தைச் சேர்ந்த கொதியப்பா- நஞ்சம்மாள் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் டி.கே.ராமசாமி. எழுபத்தைந்து வயதான இவர், முன்னாள் தலைமையாசிரியர்.
இவர், தன், கிராமத்தைச் சேர்ந்த, எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது கைகாசு மட்டுமல்லாமல், கடன் வாங்கி, கல்விக்காக, செலவழித்து வருகிறார்.
தனது கல்விச்சேவை குறித்து அவர் கூறியதாவது: என் அம்மா ஒரு தெய்வமுங்க. அப்போது, ஐந்தாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றாலே, பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கூடம் போக வேண்டும். ஆனாலும், என் அம்மா, ” நான்தான் கைநாட்டா போய்விட்டேன் ராசா, நீ அப்படி இருக்கக் கூடாது; நல்லா படிக்கணும். நல்லா படிக்கிறது மட்டுமில்ல, நீ, நாலு பேரை படிக்க வைக்கணும்’ என்று, சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்தார்.
பள்ளிக்கூடம் போவதற்காக, 1952 ல், 52 ரூபாய்க்கு, ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அந்த 52 ரூபாய், கடனை அடைக்க மூணு வருஷம் கஷ்டப்பட்டார். அதிகாலை மூணு மணிக்கு எழுந்து, மாட்டுத்தீவன புல்லை அறுத்து, அலசி எடுத்து, பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து, மேட்டுப்பாளையம் போய் காலணா, அரையணா காசிற்கு விற்று சம்பாதித்த காசில், சைக்கிள் வாங்கிய கடனை அடைத்தார்.
அந்த கஷ்டத்திலேயும், எனக்கு பிடிச்ச கடலை பொரியை வாங்கி, மடியில் கட்டிக்கொண்டு வந்து, கொடுப்பார். நான் சாப்பிடும் அழகை, பார்த்து ரசித்த, என் அம்மாவிற்கு, நான் செலுத்தும் காணிக்கையே, தற்போது, ஏழை மாணவர்களை தேடிப் பிடித்து படிக்க வைப்பது.
பள்ளி ஆசிரியராக, 1961ல் சேர்ந்து, 1998ல், தலைமையாசிரியராக பணி ஓய்வு பெற்றேன். நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், மாணவ,மாணவியரை என் சொந்த பிள்ளைகளாகவும், பள்ளி கூடத்தை என் வீடாகவே பாவித்து வந்தேன். கிராமத்தில் எந்த குழந்தையும் படிக்காமல் இருந்து விடக்கூடாது என்பதில், தீவிரமாக செயல்பட்டேன். பள்ளி மற்றும் அதனை சார்ந்த இடங்களில் மரம் வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டினேன். சிறுமுகை பள்ளியில் பணியாற்றும் போது, நான் வளர்த்த தேக்கு மரங்கள், இன்று, பல லட்சம் பெறும் என்பதை எண்ணும்போது, சந்தோஷமாக இருக்கிறது. விடுமுறை தினங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு, ஊரில்,தெருவில் மரம் நட கிளம்பி விடுவேன். அந்த வகையில், இன்று, இலுப்பம் பாளையம் கிராமம் ஒரு சோலை போல இருக்கிறது என்றால், நானும், என் பிள்ளைகளும், அன்று வைத்த மரங்களே காரணம் என்று சொல்லுவேன்.
நான் படித்து, பணியாற்றி, ஓய்வு பெற்ற இலுப்பம் பாளையம் அரசு பள்ளி தான், எனக்கு சொர்க்கமான இடம். அரசு சார்பில், சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்த போது, அந்த சுவர்களில் தேசிய மலர், தலைவர்கள், விலங்கு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியம், மரங்களின் முக்கியம் போன்றவைகளை, முப்பதாயிரம் ரூபாய் செலவழித்து, ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன். இதை, தினமும் பார்க்கும் குழந்தைகள் மனதில், நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும்.
கடந்த, 98ல், பணி ஓய்வு பெற்ற பிறகு, சமூகப்பணியாற்றுவதில் தீவிரமாக இறங்கினேன். என் பென்ஷன் பணம் 17 ஆயிரத்தில், எனக்கும்,என் மனைவிக்குமான குடும்ப செலவிற்கு, மாதம் ஆறாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு, மீதம் 11 ஆயிரம் ரூபாயை, பொதுக்காரியத்திற்கு செலவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.
அதிலும், பெரும்பகுதி பணத்தை, கிராமத்து பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வாங்குவதற்கு செலவு செய்து விடுவேன். பள்ளி ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் கூடுதலாக செலவாகும். அதைப்பற்றி கவலைப்படாமல், கடன் வாங்கி செலவழித்து, அப்புறம் பென்ஷன் பணம் வந்த பின், கடனை அடைப்பேன்.
இது போக, ஊர் பிரச்னைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, கோவில் காரியங்களை எடுத்துச் செய்வது, சுற்றுச்சூழல், கல்வி, தனிமனித ஒழுக்கம் குறித்து, பள்ளிகளுக்குச் சென்று இலவச பாடங்கள் நடத்துவதுடன், உயர் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறேன். மேலும், நர்சிங்,என்ஜினியரிங் மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
நான் பணியில் இருக்கும் போது செய்த நற்காரியங்களை பாராட்டி, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். விருதுக்காக நான் எப்போதும் வேலை செய்தது இல்லை. என் மனசாட்சிக்காகவும், “நீயும் நாலு பிள்ளைகளை படிக்க வைக்கணும்’ என்று, என் தாய் சொன்ன சொல்லுக்காகவும், முடிந்ததை செய்து வருகிறேன். இதை, என் ஆயுள் உள்ளவரை தொடர்ந்து செய்வேன்.
பெரியவர் ராமசாமி சொல்லி முடிக்கும் போது, வானம் இருண்டு, மழை பெய்ய ஆரம்பித்தது. “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை’ என்பதற்கிணங்க, இந்த மழை, ராமசாமி என்ற நல்லார் பொருட்டு, எல்லாருக்கும் பெய்த மழையாகும்.

source::::: Dina Malar….Tamil Daily

natarajan

Message For The Day….Want of Faith is a Source Of True Weakness…

Look at Arjuna! When the choice was placed before him to decide which he should receive – the entire army of redoubtable Yadhava war heroes or Lord Krishna alone, unarmed and refusing to fight – without any hesitation, he chose Krishna alone! He knew; he believed; and so, he was saved. What profit will an individual or country make if it accumulates money, gold and grain? The bliss derived from the worship of the Lord which arouses spiritual joy is, any day, far more desirable than the above. Want of faith is a source of true weakness. Love (Prema) is the seed, the overpowering experience of merging with the Divine is the tree (thanmayathwam), and inexhaustible bliss (Anandam) is the fruit. Achieve this consummation with firm faith in the Divine.

 

Sathya Sai Baba

தமிழ் வளர்த்த பெரியவர்கள் !!!

ரசிகமணி டி.கே.சிதம்பரநாதனின் மகனான தீர்த்தாரப்பன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆற்ற முடியாத துயரத்தில் அமர்ந்திருந்த டி.கே.சி.க்கு ஒரு கடிதத்தை தந்தார்கள். அதை வாங்கி, கண்களை இடுக்கி மெதுவாக படித்தார். திடீரென்று கண்கள் பிரகாசமாகின. மகனின் மரணத்தை மீறியும் அவரின் குரலில் ஓர் உற்சாகம். “ஆஹா! ஆஹா” என்று அவர் பூரித்துப்போக, ‘என்ன சங்கதி’ என்று அவர் கையில் இருந்த தாளை வாங்கிப்பார்த்தார்கள். கவிமணி அவரின் மகனின் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கற்பா அது. “இப்படி ஓர் இரங்கற்பா கிடைக்க எத்தனை மகனை வேண்டுமானாலும் இழக்கலாம்!” என்று சொன்னாராம் ரசிகமணி. பெயருக்கு ஏற்ற ஆள்தான் அவர்.

சுசுமு ஓனோ எனும் ஜப்பானிய பேராசிரியர் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் பொற்கோவுடன் இணைந்து எண்ணற்ற ஆய்வுகளை தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து செய்தார்கள். அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.

பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து, கடந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தது வரலாறு. அவரை எல்விஸ் துரை எனும் ஆங்கிலேயர் சந்தித்தார். அவர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாற்றிக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார். உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை சற்றும் காட்டிக்கொள்ளாமல், “எத்தனை பிரதிகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐநூறு!” என்று ஆர்வம் கொப்பளிக்க விடை வந்து விழுந்தது. அத்தனை பிரதியையும் அப்படியே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார் பாண்டித்துரை தேவர். வேலையாளை அழைத்தார். “எல்லாத்தையும் குழி தோண்டி சீமெண்ணெய் ஊத்தி கொளுத்திடு!” என்றார். ஒரு தவறான திருக்குறள் பிரதிகூட தமிழனுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அத்தனை கவனம் இருந்தது அவரிடம்.

Keywords: தமிழ், மொழி, அறிஞர்கள், ரசிகமணி, பாண்டித்துரை தேவர், திருக்குறள்
Topics: சிறுவர்| இலக்கியம்| தகவல்| வரலாறு|

source ::::The Hindu  Tamil

natarajan

Message For The Day….What Does Gopikas Love Towards Krishna Mean …

The love of the Gopis towards Krishna has led many ignorant people enmeshed in worldly attachments and physical attractions, to turn their faces away from God. Before passing judgement on any subject, you must investigate closely. The love of the Gopis towards Krishna was super-physical, the love of the soul for the Over-soul, of the river for the sea. Their joy when they feel His presence is as supreme as their grief when they feel they are deprived of it. That is why among the songs of the saints, you have Nindhaasthuthi also; that is to say, songs, which blame Him for being cruel, partial, negligent, etc.! Persons deep in this type of love see nothing else, hear nothing else; they behave like mad persons in the world’s view.

 

Sathya Sai Baba