” எனக்கு கோட்டு தருகிறாயா …? ” ….

மகா பெரியவாளை தரிசிக்க செல்லும்போது ஆச்சரியமான பல நிகழ்சிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர், தான் கண்ட கனவை பெரியவாளிடம் உணர்ச்சி பொங்க விவரித்து கொண்டிருந்தார்.

அவர் கனவில் பெரியவாள் தோன்றியதாகவும், ‘எனக்கு கோட்டு தருகிறாயா?” என்று கேட்டதாகவும் சொல்லிகொண்டிருந்தார்.

இதை கேட்டுவிட்டு மகா சுவாமிகள் மெல்ல சிரித்தார்கள். “கோட்டு கேட்டேனா?” என்று சொல்லி விட்டு ஓர் இடைவெளி, “கேட்டிருப்பேன்… கேட்டிருப்பேன்”.

அருகில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘பெரியவாளுக்கு கோட்டு என்னத்துக்கு?”

பெரியவாளே பேசினார்கள்:

“கோட்டுன்னா என்ன அர்த்தம் தெரியுமா?”

என்ன பதில் சொல்ல? Coat என்றால் கோட்டுதான்!

“கோட்டு என்பதற்கு சரியான தமிழ்பதம் சொலுங்களேன்..”

‘மலை’ என்றார் ஒருவர். ‘கொம்பு’ என்றார் இன்னொருவர். “மேலங்கி” என்றார் மற்றொருவர்.

எல்லோரும் பெரியவாளின் பதிலுக்காக, செவிகளை தீட்டி கொண்டு காத்திருந்தார்கள்.

“அதெல்லாம் சரி. கோட்டு என்றால் கவசம்னு ஒரு அர்த்தம் உண்டு. காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சார்தணும்னு ஒரு எண்ணம் வந்தது. தங்க கவசம் பண்றதுன்னா.. சின்ன காரியமா? பணம் வேணுமே… இவர் பணக்காரர்.. ஒருவேளை இவரை கேட்டால், செய்து கொடுப்பார்னு தோன்றியிருக்கும். அதனால் கனவிலே போய் கேட்டிருக்கேன். எல்லாம் எனக்கு காமாட்சிதான். அம்பாளுக்கு கவசம் சாத்தினால், நான் கோட்டு போட்டுக்கொண்ட மாதிரிதான்…”

அந்த செல்வந்தருக்கு அடித்தது யோகம் – தங்க கவசம் செய்து சமர்ப்பிக்கும் யோகம்!

எத்தனை தலைமுறை புண்ணியமோ?

source:::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…”Peel Away the Skin of of Your Ego and Remove the Seeds of Evil Thoughts …”

The fruit of love is present in each and every person’s life. The only task to be done to experience the fruit is to remove the outer skin. Once you peel the skin of the fruit, also remove the bitter seeds within it. Then you can extract the sweet juice, partake it and discard the pulp. Understand that God has given you this body only to relish the sweetness of Love. Peel away the skin of ego and ostentatiousness. Remove all the seeds of evil intentions, thoughts and deeds. Discard the pulp of possession and attachment. Then what remains is the sweet juice of love. All of you are farmers. You must engage in spiritual practices to cultivate your heart. Is there any use for an uncultivated land? Without wasting your life and keeping the land barren, focus on cultivating your heart to enjoy the sweetness of the Divine.

 

Sathya Sai Baba

” உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை …”

 



“பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்..”

ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.

பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.

“என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?”


பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 

“ஹி … வந்து…எப்படி உத்திரவாகிறதோ அப்படி…” என்று இழுத்தார்.

“உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்சநஞ்சம் சாந்தியும் போயிடும்.. பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்… தேவைபட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்…”

பக்தர் “உத்திரவு” என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.

பகைமையை – அண்டை அயலாருடன் விரோதத்தை – வளரவிடகூடாது. இது, பெரியவாளின் தீர்மானமான கொள்கை .  

source:::: http://www.periva.proboards.com

natarajan

” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “

நமஸ்காரம்.

சுவாரஸ்யமான சில அனுபவங்களை உடனுக்குடன் போஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவசர கதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதில், முடியாமல் போகிறது.

அப்படித்தான் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை வியந்து வியந்து பார்த்தேன். நெகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ஆன்மிக அன்பர்கள் அதைப் படிக்க வேண்டும் என்று பதிவிட விரும்பினேன். ஆனால், நேரம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது இதைப் பதிவிடுவதற்கு பெங்களூரு மகா பெரியவா அத்யந்த பக்தர் திரு. கார்த்தி நாகரத்தினம் புண்ணியம் கட்டிக் கொண்டார். தேங்க்ஸ் கார்த்தி.
முதலில் விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வியாழன் அன்று எனது ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அரங்கில் துவங்கியது (ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாவது வியாழன் அன்று). அன்றைய தினம் எனது நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.

இதற்கான அழைப்பிதழை ‘க்ளேரியன் காஸ்மடிக்ஸ்’ நிறுவனத்தார் தயார் செய்திருந்தார்கள். என் தொடர்புடைய எந்த ஒரு அழைப்பிதழாக இருந்தாலும் சரி… நல்ல நிகழ்வாக இருந்தாலும் சரி… காஞ்சி ஸ்ரீமடம் போய் மகா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து ஆசி பெற்று அதன் பின் பணிகளைத் துவங்குவது வழக்கம். ஆனால், இந்த அழைப்பிதழ் வந்தும், உடன் நான் காஞ்சிக்குப் போக முடியவில்லை. என்ன ஒரு சமாதானம் என்றால், எப்படியும் இன்னும் நான்கைந்து நாட்களில் வெளியிடப்பட வேண்டிய புத்தகங்களின் பிரதிகள் வந்து விடும். அவற்றைக் கொண்டு போய் அதிஷ்டானத்தில் வைக்கலாம் என்று நேரம் கருதி எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அழைப்பிதழின் பிரதிகளை கூரியர் மூலம் அனுப்பத் தொடங்கி விட்டோம். சிறப்பு அழைப்பாளரான மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய இணை இயக்குநர் திருமதி. காவேரி மேடத்துக்குக் கொடுக்கலாம் என்று மயிலை போனேன். நேரில் கொடுத்தேன். அங்கிருந்து இன்னொரு நண்பர் மூலமாக திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசிக்கலாம் என்று என் மனைவி, மகளோடு புறப்பட்டு விட்டேன்.

அன்று சனிக்கிழமை (5.4.2014). ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமான கூட்டம். நண்பர் உதவியால் சிறப்பு தரிசனம் முடித்த பின் இதர சந்நிதிகளைத் தரிசித்துக் கொண்டு வரும்போது பின்பக்கம் உள்ள ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கப் போனேன். திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதிக்கு எவ்வளவு மரியாதையோ, அந்த அளவுக்கு ஸ்ரீநரசிம்மருக்கும் உண்டு. இந்த ஸ்ரீநரசிம்மர் ஆழ்வாரால் பாடல் பெற்றவர். தனி கொடி மரம், வைபவங்கள் எல்லாமே உண்டு. எப்போதும் இவர் சந்நிதியிலும் கூட்டம் இருக்கும்.

நரசிம்மரைத் தரிசிக்கப் போனோம். கூட்டமான கூட்டம். உள்ளே சந்நிதியில் இருந்த பட்டாச்சார்யர் ஆரத்தி காண்பித்து விட்டு வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். என்னிடம் காண்பிக்கும்போது ‘பெரியவாளைப் பாக்க நாளைக்குப் போவேளா?’ என்று கேட்டார். அவரை அதிசயமாகப் பார்த்தேன். இருவருக்கும் அறிமுகம் இல்லை.

‘பெரியவா’ என்றால், என்னைப் பொறுத்தவரை ‘மகா பெரியவா’தான் என்றாலும், ஒரு வைணவ ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர் யாரை பெரியவா என நம்மிடம் குறிப்பிடுகிறார் என்று குழம்பி, ‘‘புரியல’’ என்று சொன்னேன்.

பிறகு தெளிவாக, ‘‘மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு நாளைக்குப் போவேளானு கேட்டேன்’’ என்றார்.

தூக்கி வாரிப் போட்டது. ‘இவர் ஏன் கேட்கிறார்? காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கா என்ன?’.

பிறகு சொன்னேன்: ‘‘நாளைக்குப் போற ஐடியா இல்லே. இன்னும் மூணு, நாள் கழிச்சுப் போவேன்’’ (புது புத்தகம் அப்போதுதான் அச்சகத்தில் இருந்து வரும். அதை வைக்கும் எண்ணத்தில் சொன்னேன்).

‘‘ஜீ தமிழ்ல தெய்வத்தின் குரல் டெய்லி பாக்கறேன். நன்னாருக்கு’’ என்றவர், ‘‘ஒரு நிமிஷம் இருங்கோ’’ என்று கருவறைக்குள்ளே போய் விட்டு ஸ்ரீநரசிம்மரின் பின்னால் இருந்து ஒரு பெரிய சம்பங்கி மாலையை எடுத்து வந்தார். என்னிடம் கொடுத்து விட்டு, ‘‘நீங்க எப்ப காஞ்சிபுரம் அதிஷ்டானம் போறேளோ, அப்ப இதை அவருக்கு சமர்ப்பிச்சிடுங்கோ’’ என்றார். ஸ்தம்பித்துப் போனேன்.

‘புத்தக ரிலீஸுக்குப் பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்துண்டு இருக்கே… எனக்கு இன்னும் கொடுக்கலையேடா’ என்று மகா பெரியவாளே கேட்பது போல் ஒரு எண்ணம் அந்த வேளையில் வந்தது.

புத்தம் புது மாலையை பவ்யமாகக் கைகளில் வாங்கிக் கொண்டேன். ‘‘நிச்சயம் சமர்ப்பிச்சிடறேன்’’ என்று புறப்பட்டேன்.

பயணத் திட்டத்தை மகா பெரியவா ஏற்படுத்திக் கொடுக்கிறார். ‘மலர் மாலையோட பத்திரிகையும் கொண்டு வாடா’ என்று சொல்றார் போலிருக்கு.

அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து சம்பங்கி மாலையுடனும், புத்தக ரிலீஸ் பத்திரிகையுடனும் காஞ்சிக்கு ஒரு டிராவல்ஸ் வண்டியில் புறப்பட்டு விட்டேன்.
………………………………………………..
இதில் பெங்களூரு கார்த்தி நாகரத்தினம் எங்கே வந்தார்?

பெரியவா மகிமை பற்றி அவர் ஓர் அனுபவத்தை எடுத்துச் சொல்ல… நான் இந்த திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மர் அனுபவத்தைச் சொன்னேன். அப்போது நரசிம்மருக்கும் பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்லி, ‘எல்லாம் அவரது விளையாடல்தான்’ என்றார். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.
…………………………………………………
இந்த நேரத்தில் இன்னொரு நரசிம்மர் அனுபவமும் என் நினைவுக்கு வருகிறது. நான் ‘மகா பெரியவா மகிமை’ பற்றிப் பேச வந்த நேரம் அது… 2012-ஆம் வருடம் ஒரு புரட்டாசி சனி என்று நினைக்கிறேன். கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் சென்னை தி.நகர் பாண்டி பஜார் பாலாஜி திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். சனி காலை 9.30 மணிக்கு அவர் சொற்பொழிவுக்கு முன்னால் என்னை அரை மணி நேரம் பேசுமாறு – அதாவது 9.00 – 9.30 வரை பேசுமாறு பணித்திருந்தார். அன்று காலை இல்லத்தில் இருந்து சீக்கிரமாகக் கிளம்பினேன்.

மகா பெரியவா தொடர்பாக என்னென்ன சம்பவம் சொல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். இடையே, நேரம் இருந்தால் – ஒரு நரசிம்மர் அனுபவத்தைச் சொல்லலாமா வேண்டாம என்று யோசித்தேன். ஆனாலும், நரசிம்மர் அனுபவத்தை சொல்வது அநேகமாக என் திட்டத்தில் இல்லை (ஒரு பெண்மணிக்குப் பிரசவ காலத்தில் கனவில் நரசிம்மர் வந்து ‘என் பெயர் வை’ என்று சொன்ன சம்பவம் அது)

ஏனோ, தொடர்பே இல்லாமல் சிவா விஷ்ணு கோயில் வழியாகப் போக நேர்ந்தது. கோயிலுக்குள் போகாமல் செல்ல மனமில்லை. உள்ளே போனோம். விறுவிறுவென்று சுற்றி விட்டு வெளியே வருவதாகத் திட்டம். வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து பாலாஜி திருமண மண்டபம் போக வேண்டும். மணி இங்கேயே 9 ஆகப் போகிறது. எனக்குள் பதட்டம், தாமதம் ஆகி விடுமோ என்று.

பிராகாரம் சுற்றி வரும்போது ஸ்ரீநரசிம்மர் சந்நிதியில் இருந்த ஒரு பட்டாச்சார்யர் (அறிமுகம் இல்லை) எங்களைப் பார்த்து, ‘ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வாங்கோ. அபிஷேகம் பண்ணிட்டு, ஆரத்தி காண்பிக்கறேன். பாத்துட்டுப் பிரசாதம் வாங்கிண்டு போங்கோ. எல்லாமே ரெடியா இருக்கு’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார்.

திவ்ய தரிசனம். நரசிம்மரைப் பத்தி மொதல்ல சொல்லு என்று மகா பெரியவாளே எனக்கு அறிவுறுத்துவதாக எண்ணி, அந்த சம்பவத்தைதான் பாலாஜி திருமண மண்டபத்தில் முதலாவதாகச் சொன்னேன்.
……………………………………
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

source:::: Experience of Shri. Swaminathan, my Friend thro email

natarajan

” நான் தான் அவனைத் திருட சொன்னேன் ….!!! “

Source: Dinamalar dated 29 April 2014  & http://www.periva.proboards.com

natarajan

 

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, “”வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா…” என்றவர், அவரை நிறுத்தி, “”அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,” என்றார்.

அவரும் விசாரித்து வந்தார்.

“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,’ என்றார்.

“”ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,” என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

“”எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,” என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, “”அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,” என்றார்.

அய்யர் அலறாத குறை தான். “”பெரியவா! மன்னிச்சுடுங்கோ” என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.

” தமிழில்தான் பேசணும் …தமிழ் பேச்சை மறக்க கூடாது …”

 



நடு வயது தம்பதிகள். நான்கு குழந்தைகள். எல்லாம் நவீன ஆடை – அலங்காரம்; நவீனத் தோற்றம். பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டும் கூந்தல் – எல்லையோர செடிகளை, இடுப்பளவு உயரத்துக்கு மேல் வளராதபடி கத்திரிகோலால் வெட்டி விட்ட மாதிரி; நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு.

பெரியவா, அந்த குழந்தைகளை தன் அருகில் வரச்சொன்னார்கள். வந்தன. “பேரென்ன? எங்கே படிக்கிறே? என்று விசாரணையாய் உரையாடல்.

குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன; உற்சாகமாக, தயக்கமில்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தன.

அருகில் இருந்த பழத்தட்டை காட்டி, ‘யாருக்கு என்ன பழம் வேணுமோ எடுத்துக்கலாம்’ என்று சொன்னர்கள்.

குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.

Thanks – என்று சொல்லிவிட்டு பழங்களை எடுத்துகொண்டன.

பெரியவா சொன்னார்கள்” “ஒரு request நான் சொன்ன கேட்பேளா?”

ஒரே குரலில், “Oh yes! certainly we will do” என்று குழந்தைகள் கூறின.

‘வெளி இடத்திலே, பள்ளிகூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்தில் பேசறபோது இங்கிலீஷ்லே பேசு. உங்க வீட்டிலே, அப்பா – அம்மா, சுவமிகளா இருக்கிற நான்; அப்புறம், பகவான் இவாளிடம் தயவு பண்ணி தமிழிலே தான் பேசணும். தமிழ் தாய்மொழி. தாய் தான் முதல் கடவுள். தமிழ் பேச்சை மறக்க கூடாது.”

குழந்தைகள். ‘இனிமே அப்பா – அம்மா , குரு, தெய்வத்துகிட்டே தமிழிலேயே பேசறோம். Promise!’ என்றன.

பெரியவா முகத்தில் கோடி சூர்ய பிரகாசம். மகா பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியை காட்டிலும் நூறு மடங்கு பிரகாசம்! 

source:::: http://www.periva.proboards.com

natarajan

Real Photography Using A Film Camera !!!

 

Surreal Photography Using Only a Film Camera.

Oleg Oprisco has loved fairy-tales and other-worldly stories all her life. As a photographer, living in Lviv, Ukraine, she creates surreal images. But unlike many other surreal artists, she doesn’t use any digital manipulation, indeed, she uses nothing but an old film camera.  That means all you see in these photos is real, and had to be set up. These days, digital photography has diminished the use of ‘setting up a shot’ like this, and it’s a shame, because in my opinion it comes out beautifully.
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera

source::::: ba-ba mail site

natarajan

” ஒன்று உனக்கு , இன்னொன்று உன் குழந்தைக்கு …” !!!

 



1971-ஆம் வருடம். மகா பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாணம் வைபோகம் தான்!.

சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள்.

சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவாள். புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள்.

அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் – பார்கிறார் – வியக்கிறார்.

இரண்டு காசுகள்…!

என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்…!

தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன…? வேறு யாருக்கும் தெரியும்…?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.

பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

“என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே ..? அதான்.. இன்னொண்ணை…” 

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

“ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..!

அட, அப்படியா?

நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே… பெரியவாள் எதிரில் அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்…

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்!

கணேச – சுப்பராமன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவாள் தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை போவார்களா, மக்கள்?

சொக்க தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

When Madras First Voted !!!

 

S Satyamurti

S Satyamurti

Chennai has just voted, along with the rest of Tamil Nadu. Waiting for the results may be a good time to think of the first mass-based election – in 1937, when over 35 million or about 25 per cent of the adult population voted in all British-ruled provinces of India, for the local legislatures. In Madras Presidency, that meant elections to the newly created Madras Legislative Assembly.

Our city was the capital of this vast Presidency, which extended from Andhra to Kanyakumari and so the atmosphere was electric. Adding to the excitement was the Congress party, contesting elections for the first time. Leading the campaign effort was S Satyamurti, veteran freedom-fighter, lawyer, theatre personality, patron of music and a magnificent orator. Under Satyamurti, the campaign was to be a colourful one.

He had for long been using theatre and (from 1931) film artistes, to attract crowds for his public meetings. In the 1937 campaign he was to press them once again into service. Chief among these were KB Sundarambal and ‘Avvai’ TK Shanmugam. Those were polls when in place of symbols, each party was identified by a ballot box of a certain colour and the voter had to push his paper into the box of his/her choice. The Congress party was assigned the colour yellow. At each public meeting, Sundarambal and Shanmugam would sing song hits from their plays and when a sizeable crowd had collected, would speak about the Congress. Then Sundarambal would wax eloquent on the good and auspicious qualities of turmeric and therefore the colour yellow. They would then depart after asking everyone assembled to vote for the yellow box. The Devadasi campaigner Tanjavur Kamukannammal would give the colour a different twist. She would speak about snuff and then ask everyone to vote in the ‘snuff box’! A special gramophone record containing the songs of Sundarambal and Musiri Subramania Iyer along with Congress appeals carried the message into households.

Such was the Congress juggernaut that some opposing candidates opted to withdraw rather than fight the polls. The first unopposed return to the Assembly was announced a month before the election – a certain K Kamaraj Nadar (!!) was declared elected from the Sattur-Aruppukottai rural constituency.

Those were days when newspapers could get away by being blatantly partisan (or patriotic depending on how you looked at it). The Hindu, carried a headline instructing its readers to “Fill the Yellow Boxes”. “Voters should require little persuasion at this time of the day to vote for the Congress,” it said. On the eve of polling day (February 14) NS Varadachari, a Congress candidate, was roughed by hired thugs in the Triplicane area. The Hindu carried a column on this and also had a photograph of Varadachari leading a procession, with bandaged head!

The results, when announced on February 24, were well worth the effort. The Congress had cornered 74 per cent of the seats in the Assembly, the best performance by the party anywhere in India.

Keywords: hidden histories columnS SatyamurtiMadras voting

SRIRAM.V in The Hindu …MetroPlus

natarajan

முள்ளும் குறடும் ….முருகன் கருணை …!!!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது. 


பி.என்.பரசுராமன்   IN dINAMALAR….Vara malar…

natarajan