6-திருப்பதி… திருப்பம்… திருப்தி …..

இந்தியாவில் புராதனமான – பிரமாண்டமான எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று தரிசிக்கிறார்கள். பிரார்த்தனைக்கேற்ப பலன் பெறுகிறார்கள். ஏதோ, தங்களால் இயன்ற காணிக்கையையும் செலுத்துகிறார்கள்.

ஆனால், திருப்பதியில் மட்டும் பணத்தையும் தங்கத்தையும் ஏன் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள்?

‘162 வைரக் கற்களை ஒருவர் உண்டியலில் போட்டிருந்தார்.’

‘ஒரே ஆசாமி 2 கோடி ரூபாயை உண்டியலில் போட்டார்.’

– இப்படிப் பிரமிக்க வைக்கும் ‘உண்டியல்’ அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்!

    

காவாளம்’ என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும், உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலேயே நிறை மாத கர்ப்பிணியாய் தளும்பி, உடனடியாக வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?

ஏழுமலையான் தரிசனத்தை முடித்து விட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சரியாக உங்கள் முறை வரும்போது – நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில், அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்துகொண்டால், அதற்கு மேல் ஒரு நயா பைசா போடவும் அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலை ‘சீல்’ வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு வேறு உண்டியலை வைத்து விடுவார்கள்.

‘சீல்’ வைத்த உண்டியலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில், அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். பயப்பட வேண்டாம்… நல்ல தகவல்தான்.

 

இந்த உண்டியல் நிரம்பிவிட்டது… இதைக் கச்சிதமாக ‘சீல்’ செய்து எடுத்துக் கொண்டுபோனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன்’ என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். வங்கியில் லோன் வாங்கிய ஒருவருக்காக நாம் போடும் சாட்சிக் கையெழுத்து போன்றதல்ல இது. தைரியமாகக் கையெழுத்து போடலாம். இது சம்பிரதாயத்துக்காகச் செய்யப்படுகின்ற ஒன்று. தற்போது ஏராளமான ‘குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்’ ஆங்காங்கே செயல்பாட்டில் இருக்கும்போது, இதுபோன்ற விஷயங்களில் எந்த ஒரு திருட்டுத்தனமும் நடக்காது.

பிறகு, ஏன் இரண்டு ஊழியரைப் பிடித்துக் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால், ஆதி காலத்தில் இருந்து – அதாவது ‘குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்’ இல்லாத நாட்களில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாம் இது. ஆகவே, அதை இன்றும் விடாமல் கடைப்பிடித்து வருகிறது தேவஸ்தானம்.

இப்படி சாட்சிக் கையெழுத்து போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா? மீண்டும் ஒரு முறை ஏழுமலையான் தரிசனம் இலவசமாக – அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள். இந்த தரிசனத்தின்போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாக பிரார்த்தனை செய்து, ஒரு நமஸ்காரமும் செய்து வரலாம்.

ஆக, இனிமேல் திருப்பதி உண்டியலில் பணம் போடும்போது அல்லது போடுவதற்கு நிற்கும்போதோ, ‘உண்டியல் நிரம்பிவிட்டது போலிருக்கே… எங்கே தேவஸ்தான ஆட்களைக் காணோம். கையெழுத்து போடணுமே’ என்றெல்லாம் ஏக்கப்பட ஆரம்பிப்பீர்கள்தானே?!

திருப்பதி உண்டியல்களில் தினம்தோறும் சேரும் பணத்தை எண்ணி முடிப்பதே பெரும் வேலையாக இருக்கிறது தேவஸ்தானத்துக்கு. தற்போது வெளி ஆட்களையும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். உண்டியல் தொகையை எண்ண வேண்டும் என்று விரும்புபவர்கள், திருப்பதி தேவஸ்தானத்து இணையத்தில் நுழைந்து அதற்குரிய படிவத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டுமாம். நீங்கள் அளிக்கின்ற தகவல்களை வைத்து, ‘உண்டியல் எண்ணுவதற்கு இவர் நமக்குப் பயன்படுவாரா’ என்று தேவஸ்தானம் தீர்மானிக்கும். இப்படி உண்டியல் எண்ணுகிற (ஊழியர்கள் அல்லாத) பக்தர்களை தினமும் இரண்டு ஷிஃப்ட்டுகளில் அமர்த்திக் கொள்வர்.

உண்டியல் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன், திருப்பதியில் மட்டும் ஏன் இப்படிக் கொட்டேகொட்டென்று கொட்டுகிறது?

 

பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன், குபேரனிடம் கோடிக்கணக்கான தங்கத்தைக் கடன் வாங்கிவிட்டு, அதை அடைப்பதற்கு வழியாக, எம்பெருமான் ஸ்ரீநிவாஸர் திருவாய் மலர்ந்து சொன்ன வார்த்தைகள் தான் காரணம்.

யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக் கணக்குக்கேற்ப, கலியுகத்தில் அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்துவிடுவேன்’ என்று, புராண காலத்திலேயே குபேரனுக்கு வாக்கு கொடுத்துள்ளார் ஸ்ரீநிவாஸன். அதன்படி அவர் நம்மிடம் இருந்து இன்றைக்கும் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

குபேரனிடம் ஸ்ரீநிவாஸ பெருமான் ஏன் கடன் வாங்க வேண்டும்?

மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை விரும்பிய ஸ்ரீநிவாஸன் (வேங்கடவன்) அந்த தேவியை மணம் முடிக்கத் தயாராகி, திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கலானார். அப்போது, லட்சுமி தேவி ஸ்ரீநிவாஸனிடம் வாசம் செய்யாததால் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டார். தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும்போது, இந்தத் திருமணத்தை எப்படி விமரிசையாக நடத்துவது என்று தவித்தார் ஸ்ரீநிவாஸன்.

எனவே, எப்போதும் தனக்கு உபகாரமாக இருந்து வரும் நாரதரிடம், என்ன செய்வீர்களோ தெரியாது… எப்படியாவது பெருமளவில் பணம் திரட்டி இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

பகவானே பணம் கேட்கின்றாரே’ என்று நாரதர், தேவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்குத் தகவல் அனுப்பினார். நாரதர் சொன்ன தினத்தில் குபேரன் உட்பட அனைத்து திக்பாலகர்களும், நவகிரக அதிபதிகளும் சேஷாத்திரி மலைக்கு வரவழைக்கப்பட்டனர். இந்தத் தெய்வத் திருமணம் இங்குதானே நடக்கப் போகிறது!

சேஷாத்திரிக்கு வந்திருப்பவர்களில் யாரிடம் கேட்டால் பணம் கிடைக்கும் என்பது தெரியாதவரா நாரதர்? திக்பாலர்களையும் நவக்கிரகங்களையும் ஒருமுறை பார்த்த நாரதர், குபேரனைக் கண்டு அப்படியே பூரித்தார்.

குபேரனே… நீதான் சரியான தேர்வு. இந்த உலகத்திலேயே அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற பெரிய செல்வந்தன் நீதான்… வைகாசி மாதம் வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று, ஸ்ரீநிவாஸனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது ஸ்ரீநிவாஸனுடன் லட்சுமிதேவி இல்லை. எனவே, பணத்துக்குக் கஷ்டப்படுகிறார். ஏழையாக இருக்கும் ஸ்ரீநிவாஸனின் திருமணச் செலவுக்கு உடனடியாக நிறைய பணம் தேவைப்படுகிறது. இதற்குண்டான பணத்தை, நீ கொடுத்து உதவ வேண்டும். அந்தப் பணத்தை ஸ்ரீநிவாஸன் வட்டியுடன் திருப்பித் தருவார்” என்றார்.

குபேரனும் சந்தோஷத்துடன் சம்மதித்தான். எவ்வளவு தேவையோ, அவ்வளவு பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். ஸ்ரீநிவாஸனுக்கு குபேரன் கொடுத்த தொகை, ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் (இந்தத் தொகை பல்வேறு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன) என்று ஒரு தகவல். குபேரனிடம் கடன் வாங்கியதற்காக ஸ்ரீநிவாஸன் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

அதோடு குபேரனைப் பார்த்து, நீ கொடுத்த பணத்துக்குக் கலியுகத்தில் வட்டி செலுத்திக்கொண்டு கலியுகத்தின் கடைசியில் அசல் – வட்டி எல்லாம் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்” என்றாராம் ஸ்ரீநிவாஸன்.

குபேரனிடம் ஸ்ரீநிவாஸன் வாங்கிய கடனைத்தான், இன்று பக்தர்கள் உண்டியலில் கொட்டோ கொட்டென்று கொட்டி அடைத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பக்தர்களிடம் வசூலித்துத் தருவேன்” என்று குபேரனிடம் ஸ்ரீநிவாஸர் சொன்ன வார்த்தைகளையே, திருமலையில் உண்டியல்களுக்கு அருகிலும் தேவஸ்தானம் குறிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறது.

நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)  and P.Swaminathan

Source…..www.balhanuman.wordpress.com

Natarajan

” பூனையாலே வந்தது …பூனையாலே போனது …” !!!

எனது பாட்டி எனக்கு அறிவித்த ஒரு அதிசய சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.

“”தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.

பெற்றோரிடம், “”கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர்கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்

.

அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.

அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர்

சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.

இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.

முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?

Read more: http://periva.proboards.com/thread/9451/#ixzz3cSEyogTw

Source….www.periva.proboards.com  and Dinamalar dated 17 june 2014

Natarajan

 

 

 

 

 

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் !!!

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில………

* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

2* திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

* பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

* ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சதராயர் போன்றோர். ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்5கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

* திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

* ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.1

* திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

* திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

4* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

* திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

source:::: in ஆன்மீக அர்த்தங்கள்கட்டுரைகள்  & Dinamani Jothidam

natarajan

 

கந்த சஷ்டி தோன்றிய கதை !!!

Temple images

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

source:::::dinamalar..tamil daily

natarajan

திருப்பதி கோயில் அர்த்த மண்டபம் …மஹா பெரியவர் ….ஒரு Flashback !!!!!

திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!

சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே!

நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், “இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?” என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று. ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்.. பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.

“என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?..” அமைச்சர் கேட்டார். “என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?..” ஸ்தபதி கேட்டார்.

“தாராளமா…..””எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா….மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்… அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த
இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!…”

எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!

அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!

பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, “அங்கேர்ந்து வரயா?” என்றார். “ஆமா….பெரியவாகிட்ட முக்யமான விஷயம்…..” அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,

“இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! …” ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், “இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்…ன்னு சொல்லு..”

அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா…ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, “பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்…என்னோட பாக்யம் ” என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்போது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.

“இப்போ சொல்லு….” எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.”அப்பிடி அர்த்த மண்டபத்தை ஒடைச்சா, என்ன ஆகும்?..” தெரியாதவர் மாதிரி கேட்டார்

“அர்த்த மண்டபத்ல கைவெச்சா…பெருமாளோட சக்தி பூரா போய்டும்.. .பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்…ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா…ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா… அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்..”
பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!

“ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!..” ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, “என்ன ஸ்தபதி ஐயா !…இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!..” என்றார். “ரொம்ப அவசரம்…நான் அவரைப் பாக்கணும்…”

“appointment இருக்கா?””இல்லையே..” “அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!..”ரொம்ப அவசரம்…நான் பாத்தே ஆகணுமே!..”

ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்… “ஐயா…ஒண்ணு செய்யலாம்…சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா…..காலேலதான்!..”

ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக…..”என்ன கணபதி? இத்தனை காலைல?” “உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்….” “என்னது? வாங்க…” என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!

“திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!” என்று எடுத்த எடுப்பில் “கண்டேன் சீதையை!” மாதிரி போட்டு உடைத்தார். “என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?…” அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, ” பெருமாளோட சக்தி பூரா போய்டும்” என்று நிறுத்தினார்.

முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு “ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!..” அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்…… “முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?…”

“அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்…” இழுத்தார். “திருப்பதியில் என்ன நடந்தது…ன்னுதான் கேட்டேன்!..” கத்தினார் முதமைச்சர்.

அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார். “மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!” என்று ஒரே போடாகப் போட்டார்!

“திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்…இது என் உத்தரவு!..” பட்டென்று போனை வைத்தார். “கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க..” வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.

வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன….. “ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!”…..

பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான் !

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்…..

source:::::input from a friend of mine

natarajan

படித்ததில் பிடித்தது …செந்தூர் இலை விபூதி மகிமை !!!!

படித்ததில் பிடித்தது

பார்த்தாலே நோயைப் பறக்கடிக்கும் விபூதி

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம் மார்ச் 2013 இல் வெளி வந்த சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய செந்தூர் விபூதியின் மகிமையைப் பற்றிய அருமையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். –

எழுதியவர் சித்ரா மூர்த்தி, திருப்புகழ் ஆய்வாளர், சிறந்த இசைப்பேருரையாளர்.
“அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே”

Senthil Andavar பொருள்:
“தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.”

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் ‘பத்ர பூதி’ என்பது என்ன?

விபூதியின் வரலாறு
‘பத்ர’ என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

Adi Sankaraஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்” என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனததைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

“என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்” என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

“இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்”
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று…”

என்று பாடுகிறார். நாமும் “ஆறுமுகம்” என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

நன்றி: 2013 மார்ச் மாத ஞான ஆலயம்.

source::::input from a friend of mine…

natarajan

Message For The Day….Rituals Must Result In Righteousness…

Kama (desire) is a three-headed demon; when you win your desire, you develop lobha (greed) to retain the gain and see that it multiplies; when you are defeated in desire, you develop krodha (resentment or anger). Kama, lobha and krodha are all forms of rajoguna (quality of passion and activity), the feverish activity that ignores the ‘means’ while concentrating on the ‘end’. Rajoguna pursues the goal, but is not particular about the correctness of the path. Lanka was a land that reverberated with the recitation of the Vedas; its air was thick with sacrificial smoke. Yet the demons living there were wicked. Rituals must result in righteousness; otherwise, it is only rigmarole. Ravana sought to gain Prakrithi, not Purusha (the manifestation not the Manifestor), and so his life became futile.

Sathya Sai Baba

 

அக்ஷய திருதியை !!!….என்ன செய்ய வேண்டும் அன்று ?

அட்சயத் திருதியை 13-5-2013

“அட்சயத் திருதியை” பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது என்பதை பார்போம். எனக்கு தெரிந்த, புரிந்து கொண்ட விவரங்களை இந்த பதிவினில் பதிவு செய்து உள்ளேன். பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள்‘’

எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது,அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”, பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் விநாயகர் எழுதச் சொல்லி கட்டளையிட்டார். அது வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.

செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம்தான் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. 20 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

16 கருட சேவை! அட்சய திருதியை நாளன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பதினாறு பெருமாள் கோயில்களில் இருந்து புறப்படும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, குடந்தை பெரிய தெருவுக்கு வந்து தரிசனம் தருகின்றனர்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

பெண்கள் சொல்ல வேண்டிய பாஞ்சாலி அபய மந்திரம்!

சித்திரை  மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயா

ச்யுத!

கோவிந்த! புண்டரீகாக்ஷ!

ரக்ஷமாம் சரணாகதம்

எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும். அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.

அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.
இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த “தங்கம் வாங்க வேண்டும்” என்பது.

உண்மையில் அன்றைய தினம் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் “கல்”உப்பு போன்றவைதான்

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் “கல்”உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பாக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).

இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.

அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும்,பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும்,அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டுசெல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை.ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அன்று தானம் கொடுப்பதால் ஆயுள் பெருகும்.கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி? அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம்.

யோசிச்சு பார்த்தால் மக்களின் அறியாமையே இந்த முட்டாள் தனத்திற்கு காரணம்ன்னு தோன்றும். அரசியல் வாதிகளை போலவே நகை கடைக்காரர்களும் மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள விரும்புகின்றனர்.

அட்சய திருதியை சொல்லியிருக்கும் நம் மதம் புண்ணியம் ,பாவத்தை பற்றியும் சொல்லியுள்ளது. அட்சய திருதி அன்று எத்தனை கிராம் தங்கம் வாங்கினோம் என்பதை அளவுகோலாக வைத்து இறைவன் நம்மை எடை போட போவதில்லை.

அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல நோக்கம்..

தங்கம் ,வைரம் போன்றவைக்கு விலை என்று ஒன்று உண்டு.ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்று இவ்வுலகில் சில விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் விலை மதிப்பில்லாதவை அவைகள் தாம். அவையெல்லாம் என்னவென்று யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.

ஆகவே……. இனி அடுத்த அட்சய திருதியில் இருந்தாவது ………வாங்காதீர்கள், கொடுங்கள். (வாங்கியே தீருவேன் என்றால் வாங்குவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாதீர்கள் ——- கொடுங்கள்)

ஏழை மாணவர்கள் கல்வி கற்க உங்களால் முடிந்ததை கொடுங்கள். பசித்திருப்போருக்கு அன்னதானம் செய்யுங்கள். முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. அன்று செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒன்றுக்கு பத்தாக பலன் உண்டு. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி???

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

source::::input from a friend of mine…

Natarajan