” ” அச்சு இற்று முறிந்த இடம் … அச்சரப்பாக்கம்…” !!!

“இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே

தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்

முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்பெரியவா”

(கைலாஸ சங்கரனின் மறு அவதாரமோ!)

734324_514749501889171_935875765_n.jpg

ராமேச்வரத்தில் அப்போது நிர்மாணமாகி வந்த

ஸ்ரீ சங்கரமடத்துக்குச் சென்னையிலிருந்து சிலர்

விக்கிரகங்களுடன் சென்ற லாரி வழியே ‘ஆக்ஸில்’

உடைந்து நின்று விட்டது. இளையாத்தங்குடியிலிருந்த

பெரியவாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“எந்த இடத்தில் நின்று விட்டது” என்று வினவுகிறார்.

“அச்சரப்பாக்கத்தில்” என்று பதில் வருகிறது.

பெரியவாள் முகத்தில் புன்னகை விரிகிறது.

இடுக்கண் வருங்கால் நகைக்கிறார்.

இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே

தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்

முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்.

ராமேச்ர விஷயம் விக்கினமின்றி நடைபெறவே

விக்னேஸ்வர வழிபாடு என்பது வெளிப்படை.

மூர்த்தி வழிபாட்டுக்கு மேம்பட்ட முற்றிய அருள்

நிலையில் இருந்து இவரே இடையூற்றைத்

தீர்த்துவிடலாம்.ஆயினும் விக்கினம் தீர்க்கவே

ஏற்பட்ட தெய்வத்தை, மானுடருக்கு முன்னுதாரணமாகத்

தாமே வழிபட்டுக் காட்டுகிறார்.அதைச் சொல்லாமல்

சொல்லுகிறார்.

“பரமசிவன் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளாமலே

திரிபுர தகனத்துக்குப் புறப்பட்டார். ‘எந்தக் காரியம்

ஆரம்பித்தாலும் பிள்ளையாரை முதலில் பூஜிக்க வேண்டும்

என்று லோகத்துக்கு ஏற்பட்ட சம்பிரதாயத்தை ஈஸ்வரனே

செய்து காட்டினால்தானே, மற்ற ஜனங்களும் அப்படிச்

செய்வார்கள்? அதனால், ஈஸ்வரன் இப்படிப் பண்ணாத போது

அவர் புறப்பட்ட ரதத்தின் அச்சு முறிந்து போயிற்று.அப்புறம்

அவர் விக்னேஸ்வரரைப் பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு

தான் அது புறப்பட்டது.

அச்சு இற்று முறிந்த போன இடம்தான் ‘அச்சரப்பாக்கம்’ என்று

இப்போது சொல்லும் அச்சிறுப்பாக்கமான ஊர்.அங்கேயேதான்

நம் லாரியும் அச்சு முறிந்து நின்றிருக்கிறது.!”

எப்பேர்ப்பட்ட பொருத்தம்! பொருந்தாமல் இடையூறு

ஏற்பட்டதிலேயே ஒரு பொருத்தம் கண்டுவிட்டார்.

“கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு

முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்

போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்

அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!”

என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்

Read more: http://periva.proboards.com/thread/8611/#ixzz3RUElITvx

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Message For the Day…” Learn From SUN God about Selfless and Tireless Service …”

Today the Sun-God begins his northward journey, the auspicious Uttarayana. Let this Sankranthi bring about a change in your attitude, so you sanctify your life. Ability to Change (Kraanthi) and Peace(Shanthi) both reside within your heart. Do not search for them in the outside world. Discover them within. Today is another pointer to the path to realise God. The Sun is the supreme example of selfless and tireless service. Life on earth is possible only because of the Sun. The Sun teaches everyone the lesson of humble devotion to duty, without any conceit. Sun God is a shining example and reminder for everyone that they should do their duty with devotion and dedication. Selflessly doing one’s duty is the greatest Yoga, says Lord Krishna in the Gita. Serve your parents and society, and lead a godly life! Hence let your actions and thoughts be good. You will certainly experience the Bliss Divine.

Sathya Sai Baba

” சாமிக்கு முன்னால் வயலின் வாசிக்கணும் …”

10600402_692002067556343_6810811369719414739_n.jpg

மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும்

பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும்

கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும்

இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் ஏராளம்.

1989-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர்,தன்னுடைய மகனை-

குலாம் தஸ்தகீர் – கையைப் பிடித்து

அழைத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீ மடத்துக்கு.

சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை

நமஸ்கரித்தார்கள்.

‘என்னோட மகன்,வயலின் வாசிக்கிறான்.

ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான்.

பெரியவங்க ஆசி வேணும்…சாமிக்கு

முன்னாலே வயலின் வாசிக்கணும்….’

அனுமதி கிடைத்ததும், பார்வையில்லாத

குலாம் தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான்.

பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து,

‘பையனுக்கு யாரிடம் சிட்சை’ என்றும்

கேட்டறிந்தார்கள்.

தஸ்தகீரின் தகப்பனார்க்கு உணர்ச்சிபூர்வமான

தவிப்பு, நெஞ்சு,கெஞ்சியது.

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக்

கொடுக்கணும்..’ என்று சொல்லியே விட்டார்!.

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இது என்ன பிரார்த்தனை?

ஆசீர்வாதம் கேட்டால் போதாதோ?…

முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது.

பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடைகாட்டி,

அந்த வயலினை வாங்கிக்கொண்டு வரச் சொல்லி

தன் அருட்கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய்

உருகிப் போனார்கள்.

இரண்டு வேஷ்டிகளும்,மாம்பழங்களும்

பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8439/#ixzz3NnKx0mQe

Message for the Day…” If You adhere to Truth, Righteousness will Follow…”

God permeates the entire universe. God is present in every human being, nay in every living being. The entire creation is the manifestation of Divinity. It is not enough to simply have a human body. As God is present everywhere, in every being, practising human values are considered to be so sacred and important. Hence, you must cultivate the human values of truth (Sathya),righteousness (Dharma), peace (Santhi), love (Prema) and non-violence (ahimsa). Never tell a lie under any circumstances. If you adhere to truth, righteousness will follow. Where truth and righteousness go together, there peace will be. Where there is peace, there will be love too. There can be no place for violence when there is love. First and foremost, one has to develop love. ‘Love is God, God is Love. Truth is God, God is Truth.’ Truth and Love are verily the embodiments of Divinity.

Sathya Sai Baba

மார்கழியின் மஹிமை …மஹாபெரியவா சொன்னது …

மார்கழி மாதத்தின் சிறப்புகள் பற்றி காஞ்சி மகாபெரியவர் சொல்வதைக் கேட்போமா!

மிருகசீரிடம் என்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதற்கு அடுத்த நட்சத்திரம் ஆருத்ரா எனப்படும் திருவாதிரை. “ஆருத்ரா’ என்றால் “நனைந்து’ என்று பொருள். மிருகசீரிஷத்திற்கும், திருவாதிரைக்கும் இடையில் பவுர்ணமி சந்திரன் இம்மாதத்தில் வருகிறார். ஆதலால் தான், இந்த மாதத்தை சமஸ்கிருதத்தில் “மார்க்கசீர்ஷம்’ என்று அழைக்கிறார்கள். மார்க்கசீர்ஷி என்றும் சொல்வர்.

இம்மாதத்தில் திருவாதிரை அன்று பவுர்ணமி சந்திரன் சேரும் போது, பனியுடன் கூடிய மதியின் கிரணங்களால் பூமி குளிர்கிறது. இம்மாதத்தில் தான் மேகங்கள் கருவுறுகின்றன. கோடைகாலத்தில் காய்ந்த உலகம், மார்கழியில் தாபத்தை எல்லாம் போக்கிக் கொள்கிறது.

இந்த மாதத்தில் சிவபெருமான், அம்பாள், திருமால் என்ற மூன்று ஜோதிகளாய் பிரிந்த பரம்பொருளை வழிபட வேண்டும். அதிகாலையில் இவர்களுக்கு பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் மனசுத்தம் ஏற்படும்.

கேரளாவில், இளம்பெண்கள் தினமும் காலை 3 மணிக்குள் எழுந்து, கையில் குருத்துகளை ஏந்தி கூட்டம் கூட்டமாக குளிரில் நடுங்கியபடியே, ஆறு குளங்களை அடைந்து நீராடி, கண்ணனின் திருஅவதாரப் பாடல்களை உயர்ந்த குரலில் பாடுவார்கள்.

இந்த மாதத்திற்கு “ஆக்ரஹாயணீயம்’ என்று நிகண்டு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால், இதுவே வருடத்தின் முதல்மாதம் என்று ஆகிறது.

“ஹாயணீயம்’ என்றால் “வருடம்’. அக்ரம் என்றால் என்றால் “முதல்’ என்று பொருள். ஆங்கிலப் புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியும், இந்த மார்கழியிலேயே பிறக்கிறது.
தேவர்களுக்கு ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு. பகல்பொழுதின் முதல் மாதமே மார்கழி. அதுவே அவர்களுக்கு விடியற்காலை. தை மாதம் அவர்களுக்கு சூரிய உதயம். இதனால் தான் நம்முடைய மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும், தேவர்களுக்குரிய மார்கழி மாதமும் மிகுந்த சிறப்பு பெறுகிறது.

இதன் அடிப்படையிலேயே, “”மாஸானாம் மார்க சீர்ஷோஸ்மி’ என்று பகவான் கண்ணனும் கீதையில் கூறுகிறான். அதாவது மாதங்களில் நான் மார்கழி என்றும், அதுவே சிறந்த மாதம் என்றும் பொருள்படுகிறது. இதனால் தான் தோழியருடன் ஆண்டாள் திருப்பாவை பாடி, இந்த மாதத்தில் நோன்பிருந்தாள். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இந்த மாதத்தில் பாடப்படுகிறது.

இந்த மாதத்தின் புனித நாட்கள் திருவாதிரையும், மகாவியதிபாதமும் ஆகும். இந்நாட்களில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனை நடக்கும். அன்று தீர்த்தக்கரைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த அனுஷ்டானத்தால், நமது பித்ருக்களுக்கு (முன்னோர்) விசேஷ திருப்தி ஏற்படுகிறது. மேலும், அகம்பாவ தோஷம் அழிவதுடன், பேராசையால் ஏற்பட்ட தோஷமும் போய்விடுகிறது.

Read more: http://periva.proboards.com/thread/8404/#ixzz3NGs3c36i

SOURCE:::: http://www.periva proboards.com

Natarajan

Pencil Sketch Of Mahaperiavaa … on this ” Anusham ” Day …

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாராய த்ரிகாக்னி-காலாய
காலாக்னி-ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய
ஸர்வேச்வராய ஸதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

SOURCE:::: http://www.perivaproboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8255/pencil-sketch-maha-periva-narayanan#ixzz3MPI9brXh

” திருப்பாவை , திருவெம்பாவை தெரியுமா …” ?

திருப்பாவை- திருவெம்பாவை பத்தி தெரியுமா?”

நன்றி-சக்தி விகடன் & பால ஹனுமான்.

ஒருநாள், பிரதோஷம் மாமா மடத்துக்குச் செல்லும்போது, திருவரத ஓதுவார் என்பவரும் தெருவில் தன் பரிவாரங்கள் புடைசூழ வந்தாராம். வழிநெடுக, தேவார- திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ என்று கோஷம் இட்டுக்கொண்டும் ஓதுவாரும் அவருடன் வந்தவர்களும் வர, பிரதோஷம் மாமாவுக்குச் சின்னதாக ஒரு வருத்தம். அவர், ‘அருணாசல சிவ’ எனும் நாமத்தைச் சொல்லியபடியே வருவது வழக்கம். ஆனால், அன்றைக்கு ஓதுவார் பாடியதால், அவர் சொல்வது தடைப்பட்டது.

ஸ்ரீரமணரிடம் அதீத ஈடுபாடுகொண்ட பிரதோஷம் மாமா, ஸ்ரீரமணர் அருளிய ‘அருணாசல சிவ’ எனும் திருநாமத்தை, எல்லோரையும் சொல்லச் சொல்வார். அதேபோல், ஓதுவார் உட்பட அங்கிருந்தவர்களிடம், ‘அருணாசல சிவ’ என்று சொல்லும்படி வலியுறுத்தினார். அதேநேரம் மனதுள் ஒரு எண்ணம்… ‘நமசிவாயமும் அருணாசல சிவமும் வேறு யார்? மகாபெரியவாள்தானே?!’

அனைவரும் மடத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசித்தனர். ஓதுவார் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில், ‘ஓதுவார் எங்கே?’ என்று கேட்டார் காஞ்சி மகான். அங்கிருந்தவர்கள், ஓதுவார் சென்றுவிட்டதைத் தெரிவித்தனர். உடனே, பிரதோஷம் மாமாவை அழைத்துப் புத்தகம் ஒன்றைக் கொடுத்த மகாபெரியவர், ”இந்தப் புத்தகம் எந்த வருஷம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா!” என்றார். அந்தப் புத்தகம், திருவாசகம்!

காஞ்சிபுரத்தைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை என்றிருந்த பிரதோஷம் மாமா,மகானின் கட்டளையை நிறைவேற்ற சென்னை செல்லவேண்டிய நிலை. சென்னையில் ஓதுவாரைத் தேட, ஒரு துணை தேவையாக இருந்தது. தன் மீது அன்பு கொண்டிருந்த அன்பர் ஒருவரை உதவிக்கு அழைக்க நினைத்தார். அன்ப ரைச் சந்திக்கும் பொருட்டு, தான் ஏற்கெனவே வேலை பார்த்த அலுவலகத்துக்குச் சென்றார்.ரிடையர்டு ஆனபிறகு இவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.

மாமாவைப் பார்த்ததும், அங்கிருந்த வேறொரு நண்பர், ”ஆச்சரியமா இருக்கு சார்! கடிதம் எழுதிப்போட்டு உங்களை வரச்சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன். உங்களுக்குச் சேர வேண் டிய அரியர்ஸ் பணம் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வந்திருக்கு. நீங்க இன்னிக்கு வரலேன்னா, திரும்பவும் அக்கவுன்ட்ஸ் செக்ஷனுக்கே போயிருக்கும். அப்புறம் வாங்கறது கொஞ்சம் கஷ்டம்தான்!” என்றார்.

அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. இந்தத் தொகை கிடைப்பதற்கு, மகாபெரியவா சிறிதாக விளையாடி, அருளியிருக்கிறார் எனச் சிலிர்த்தார் பிரதோஷம் மாமா.

ஆனால், இத்தோடு முடியவில்லை ஆச்சரியம்!

பிறகு, சென்னையில் அந்த ஓதுவாரைக் கண்டுபிடித்து, நூல் வெளியிடப்பட்ட விவரத்தைக் கேட்க, ‘தெரியாது’ என்று ஓதுவார் சொல்ல, வேறு சிலர் மூலமாக விவரங்களைச் சேகரித்துக்கொண்டு, மடத்துக்குச் சென்றார் பிரதோஷம் மாமா. அங்கே, இவர் கூறியதையெல்லாம் செவிமடுத்த மகாபெரியவா, திருவாசகப் புத்தகத்தை நீட்டி, ”முதல்லேருந்து சில பக்கங்களைப் படி” என்றார்.

புத்தகத்தை வாங்கிப் பிரித்ததும், ஆடிப் போனார் பிரதோஷம் மாமா. எடுத்ததும், ‘நமசிவாய வாழ்க!’ என்று துவங்கும் சிவ புராணம்தான் தென்பட்டது.

‘அருணாசல சிவனும் நமசிவாயமும் வெவ்வேறல்ல’ என்பதைப் பிரதோஷம் மாமாவுக்கு சூசகமாக உணர்த்தி விட்டார் மகாபெரியவா!

திருப்பாவை- திருவெம்பாவை பற்றிய சம்பவம் ஒன்றையும் தெரிவித்தார் அகிலா கார்த்திகேயன்.

அது 1949-ஆம் வருடம். மகாபெரியவா திருவிடை மருதூரில் இருந்தார். ஆச்சி அம்மையார் ஒருவர், தினமும் புத்தகம் ஒன்றை எடுத்து வந்து,பெரியவாளுக்கு முன்னே பாடிவிட்டுச் செல்வார். ஒருநாள் ராமமூர்த்தி என்பவரிடம், ”அந்த அம்மையார் பாடற திருப்பாவை- திருவெம்பாவை பத்தி தெரியுமா?” என்று கேட்டார் பெரியவா.

அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. உடனே அவரை, தேவராஜ பாகவதர் என்பவரிடம் அனுப்பி, ‘திருப்பாவை- திருவெம்பாவைப் பாடல்களை வெளியில் பாடச் சொன் னால், எல்லாரும் பாடுவார்களா?’ என்று கேட்டு வரச் சொன்னார். ராமமூர்த்தியும் பாகவதரைச் சந்தித்தார். அவரோ, ”இந்தப் பாட்டுக்கள் யாருக்குத் தெரியும்? ஒருத்தரும் பாடமாட்டாங்க” என்று சொல்லிவிட்டார்.

இதை அப்படியே வந்து மகாபெரியவாளிடம் தெரிவித் தார் ராமமூர்த்தி. உடனடியாக திருப்பாவை- திருவெம்பாவை மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்காஞ்சி மகான்!

மார்கழி பிறந்ததும் ராமமூர்த்தி என்பவரையும் கண்ணன் எனும் அன்பரையும் அழைத்து, கையில் விளக்கும் புத்தகமுமாக யானையின் மீது உட்கார்ந்தபடி, ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலின் நான்கு வீதிகளிலும், திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடும்படி உத்தரவிட்டார். பிறகு, பெரியவாளின்ஆசியுடன், திருப்பாவை- திருவெம்பாவை மாநாடும் சிறப்புற நடைபெற்றது.

அதையடுத்து, சங்கீதக் கச்சேரிகளிலும் திருப்பாவை- திருவெம்பாவைப் பாடல்களையும் வித்வான்கள் பாடத் துவங்கினர். கி.வா.ஜ. போன்ற தமிழறிஞர்கள், இந்தப் பாடல்களை விளக்கிச் சொற்பொழிவாற்ற ஆரம்பித்தனர். அதுமட்டுமா? அப்போதைய இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இருந்த உத்தண்டராமன் என்பவரிடம், ”மார்கழியில், எல்லாக் கோயில்களிலும் திருப்பாவை- திருவெம்பாவை மாநாடு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்” என்று அருளினார்மகாபெரியவா.

அதே போல், சுவாமிகளின் உத்தரவை சிரமேற்கொண்ட டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றவர்கள், திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடிப் பரப்பினார்கள்!

சில காலம் கழித்து, ராமமூர்த்தியிடம்… ”அந்த ஆச்சி அம்மையார் பாடின பாட்டுக்களை, யாரும் பாடமாட்டானு சொன்னேளே… இப்ப யாராவது பாடறாளா?” என்று குறுஞ் சிரிப்புடன் கேட்டார் காஞ்சிப் பெரியவா. இதில் நெக்குருகிப் போன ராமமூர்த்தி, ”பெரியவா ஈஸ்வர ஸ்வரூபம். அவா நினைச்சா நடக்காததே இல்லை” என்று சொல்லிச் சிலாகித்தாராம்.

பிறகு ஒருமுறை, தஞ்சாவூரில் யாரிடமோ பேசிக் கொண் டிருக்கும்போது, ”இப்ப திருப்பாவை- திருவெம்பாவைப் பாடல்களை, எல்லா இடத்துலயும் எல்லாரும் பாடறான்னா, அது இவனாலதான்!” என ராமமூர்த்தியைச் சுட்டிக் காட்டிச் சிரித்தாராம்பெரியவா.!

நன்றி – சக்தி விகடன்

Attachments:

1380411_805270559515167_8265340876734836171_n.jpg

SOURCE::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8375/#ixzz3M4thYdDg

” ஹனுமனுக்கு வடை மாலை , ஜாங்கிரி மாலை ஏன்…? “

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹபெரியவாளைத தரிசிக்க வந்தார். மனம் குளிரும்வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா,

“என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.

அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.

இதுகுறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.

“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.

“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள்பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”
பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹபெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடிஇருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.

ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனைஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம்போல்‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ ,அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள்
அனைத்தும் நிவர்த்திஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்கவேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல்(பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆனவடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.

வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப்பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே —அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்
கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்துகொண்டே இருக்கின்றன.

அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்திவழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச்சிரித்தார் மஹபெரியவா.

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேகபக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/3209#ixzz3LwvrfFnE

” நீ கபட சந்நியாசி பற்றி கேட்டிருக்கியா …” ?

கபட சந்யாஸி”

“பெரியவா கேட்ட காளிதாஸன் கதை”

10446567_708688765887673_5573865802015963241_n.jpg

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர்

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும்

நிறைய உண்டு.

ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து

அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்.

வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர

சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து

கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள்,

உடன் சென்று கொண்டிருந்தோம்.

“நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப்

பார்த்திருக்கியா?”

“இல்லே”

“நாகராஜா….நீ”

“இல்லே..”

ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, ” நீ கபட சந்யாஸியைப்

பற்றிக் கேட்டிருக்கியா?” என்று கேட்டார்.

“கேட்டிருக்கேன்…ராவணன்,அர்ஜுனன்…” என்றேன்.

“அவ்வளவு தானா?”

நான் தயங்கியபடியே, “காளிதாஸன்…” என்றேன்.

“காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?..”

“பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா,

நாங்க கேட்டுண்டே..நடப்போம்.

“இல்லை..நீயே சொல்லு..”

போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த

காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான

சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி

கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது

போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப்

பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற

முரசறைவித்தான்.

ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி

எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி

செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி.

பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள் பெற்று,மாறுவேஷத்தில்

போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு

சந்யாஸியைப் பார்த்தபோது, ‘இவர் காளிதாஸனோ’

என்ற சந்தேகம் வந்தது.

பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று.

துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து

“நீங்கள் யார்?” என்று கேட்டார்.

“நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன்.

அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை.

வெளியே வந்து விட்டேன்…”

“ஆ!…. என் போஜன் இறந்துவிட்டானா?”

என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும்,

வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான்.

அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல்

தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி

சியாமளா தண்டகம் பாடி, “இதோ,போஜன்

எழுந்துவிட்டான்!” என்ற பொருள்பட

இன்னொரு சுலோகம் பாடினான்.

உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன்.

கடைசியில் “இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன்,

சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்…” என்றேன்.

பெரியவாள்,”ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.

நடந்து வந்த களைப்பே தெரியல்லே!” என்றார்.

அம்பத்தூர் வந்துவிட்டது.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/8339/#ixzz3LVWMPB7a

” Pencil Sketch of Maha Periavaa… “

Today is Guruvara Pradhosham. On this auspicious occasion, we are pleased to share a beautiful pencil sketch on Sri Maha Periva, by our respected moderator and artist Sri Narayanan Bala (anusham163)

Jaya Jaya Shankara, Hara Hara Shankara !

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/8344/guruvara-pradhosham-pencil-sketch-periva#ixzz3KuhMh8d8