” Could you please tell me what is the english word for this situation ….” ?

Periyava_sitting

A family went to have the darshan of Maha Periyavaal. Along with them, they took one of their family friends who lived in the USA for some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron; he went along with him with utterly non-interested to meet Him. He was under the impression that Maha Periyavaal was a fundamentalist, an uneducated monk. This NRI had no great respect at all for Him. Not only that, he uttered such inauspicious things about Him, ‘what does He know? Does He know English?’.

There was a big throng of devotees at the Mutt and the family was standing in a decent distance from Him. As usual, Maha Periyavaal saw this family with His graceful eyes, and called all of them near to Him.

They all went near Him, the friend too.

After all the usual courteous enquiry towards the family, the Master looked at the NRI friend and asked about his details, including his name, whereabouts, his predecessors, where he is working etc etc.

Then He asked, ‘you are born in India, and you know Tamil; your wife was also born in India and should know the mother tongue. When you two converse will it be in Tamil or English?’

The friend replied ‘We never use Tamil at home, we use only English. The same goes for the kids also.’

Then Maha Periyavaal asked, ‘before speaking, you may have to think and conceive the sentence. Is the thought process in Tamil or English?’

The friend replied, ‘That too in English only’.

Some minutes later, an old lady came to have Maha Periyavaal Darshan.

Maha Periyavaal looked at the NRI person and said, ‘This old lady is now very poor, but once upon a time she was very rich. But even after she lost all the materialistic wealth her devotion towards the Mutt, Acharya and me has never changed even a bit. Could you please tell me what is the English word which will describe this unflinching devotion, which can’t be changed by external situations? I would like to know.’

The man was flummoxed. He thought and thought for a while but did not know that word.

Maha Periyaval smiled and told him, ‘please take your time and let me know’.

Even after some time, he could not come up with the required word.

Then Swamiji said, ‘Can I suggest one word? Could you please confirm whether the same can convey this meaning? EQUIPOISED’.

The man was spellbound and fell on Maha Periyavaal’s Feet to Pardon him for his ego..

source….www.mahaperiavaa.wordpress.com

Natarajan

” “சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.”…..

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.”

முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

10644833_1507509169535627_450003012155475782_n.jpg

யதா ஸந்திதாநம் கதா மாநவா மே

பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ

இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம்

(கிழக்கு தாம்பரத்தில் 30-09-2015 அன்று திரு சுந்தர் குமார் தன் உபன்யாஸத்தில் (சுப்ரமண்ய புஜங்கம்) அற்புதமாக விளக்கிக் கூறினார்-மேற்படி ஸ்லோகத்தின் நாலாவது வரியில் உள்ள

பராஸக்தி புத்ரம் என்பற்கான விளக்கம்)

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய்

.

இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம்

ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.

ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.

பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்

ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.

‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.

“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.

ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.

இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.

இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.

இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.

ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.

ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.

யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.

ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.

வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.

அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள்.

யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.

பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.

அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.

அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.

இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.

ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்;

அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.

இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது

Source…www.periva.proboards.com

Natarajan

 

 

 

 

 

 

” நான் இருக்கேன் ……..”


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

Read more: http://periva.proboards.com/thread/6421/#ixzz3mmmTHWe0

Source…www.periva.proboards.com

natarajan

” ஓ ….சுவாமிநாதா …நீயா ….எனக்கு என்ன உத்தரவு சொல்லு …”

ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில்

யாத்திரை செய்யும்போது இரவு நேரத்தில் அடுத்த
1234201_315112848661397_4724600860700186658_n.jpg
கிராமத்துக்குக் கால்நடைப் பயணமாகப் போக நேர்ந்தது.

அங்கே இரு பிரிவினரிடையே ஜாதிச்சண்டை நடந்து

கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் போவதற்குப்

பயப்பட்டார்கள்.

“ஒன்றும் நடக்காது.போகலாம் வாருங்கள்” என்று

கிளம்பி விட்டார் சுவாமிகள். சீடர்கள் பயத்தினால்

நடுங்கியபடி தொடர்ந்து போனார்கள்.

அடுத்த கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு

கூட்டம் அரிவாள்,குண்டாந்தடியுடன் அவர்களைத்

தாக்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களை

அமர்த்திவிட்டு மகா சுவாமிகளை நோக்கி வந்தான்.

இரண்டு நிமிடங்கள் ஒரே அமைதி. யாருக்கும்

பயத்தால் வாய் திறந்து பேசக்கூடத் தைரியம்

வரவில்லை. மகா சுவாமிகள் ஒரு புன்னகையுடன்

அவனைப் பார்த்தார்.

“ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும்

நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்” என்று

அங்கேயே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான் அவன்.

மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்! கூட வந்த கலகக்

கூட்டம் குண்டாந்தடி,அரிவாள் எல்லாவற்றையும்

கீழே போட்டுவிட்டு அந்தந்த இடத்திலேயே

நமஸ்காரம் செய்து வணங்கி நின்றது.

மற்றவர்களிடம் மகா சுவாமிகள் அமைதியாக

“நானும் அவனும் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகப்

படித்தோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம் அந்தத்

தலைவன் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவன்.

அவர்களுடைய இமாமை சந்திக்க விரும்பினார்

மகா பெரியவர்கள்.அவர் வந்ததும் குர் ஆனிலிருந்து

சில வரிகளை எடுத்துச் சொல்லி அன்பையும்

சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய மதம் எவ்வளவு

முக்கியமாகக் கருதுகிறது என்று விளக்கினார்.

அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.

அன்று கிராமத்தில் சுவாமிகளை ஊர்வலமாக

அழைத்துக் கொண்டு போனார்கள் கிராம மக்கள்.

அவர்களை அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று

விட்டு விட்டு, விடை பெற்றுத் திரும்பினார்கள்.

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

” சங்கத்தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா …” !!!

பிள்ளையார் சுழி!

விநாயகர் சதுர்த்தி-செப்டம்பர் 17-09-2015

மகா சுவாமிகளுடன்…

பரணீதரன்

1922458_1501314900155054_79277391464543733_n.jpg
காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

(பெரியவா சொன்ன கவிதை)

தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.

”ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்… தெரியுமோ?”

”மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே…”

”அது இருக்கட்டும்… என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது”.

”பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே”.

”நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?”

”அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..”

”காலேஜ்லே என்ன படிச்சே?”

”பி.காம்”

”மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்… பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!”

சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.

பெரியவா பேசத் தொடங்கினார்: ”ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?”

”கேள்விப்பட்டிருக்கேன்”

”அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா… ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, ‘நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். ‘சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, ‘கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், ‘கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். ‘இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.

போஜராஜா நெசவாளியைப் பார்த்து, ‘நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, ‘கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, ‘கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, ‘மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!

நாலாவது அடிலே, ‘நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்” என்று சொன்ன பெரியவா, ”நீயும் போயிட்டு வா!” என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

பெரியவா சொன்ன கவிதை இதுதான்…

காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.

அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், ‘ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.

அது போகட்டும்… வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?

இது ஒருபுறம் இருக்கட்டும், ”நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ‘பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.

ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’

என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).

இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.

ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் ‘Six Mystics of India’ என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது

Source….Expeience of Bharanidharan  in http://www.periva.proboards.com

Natarajan

கடவுளைவிட மேலானது நம்பிக்கை! ……

image1.JPG

பெரியவாளோட பரம பக்தர் ஒருவருடைய அனுபவம்…..

டெல்லியில் ஸென்ட்ரல் கவர்ன்மென்ட் உத்யோகம். 1974 ல் காலை ஆபிஸுக்கு வந்து அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடப் போனபோது ….எங்கே போடுவது? என்றுகூட தெரியாத அளவு திடீரென்று பார்வை போய்விட்டது! பகவானே!  உடனேயே ஸப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு போய் காண்பித்தார். டாக்டர்களோ கண்ணாடி போட்டால்கூட பார்வை வருவது ஸந்தேஹம் என்று சொல்லிவிட்டனர். உடனே மெட்ராஸுக்கு வந்து அப்போதுதான் ப்ரபலமாகிக் கொண்டிருந்த டாக்டர் பத்ரிநாத்திடம் காண்பித்தார். 
அவர் எல்லா டெஸ்டும் பண்ணிவிட்டு  இது “போட்டோ கொவாகுலேஷன் ” என்று சொல்லிவிட்டார். அதாவது ரெடினாவை ஒரு திரவம்  மறைப்பதால்,உண்டாகும் ஒரு வ்யாதி. ஆபேரஷன் மூலம் அந்த திரவத்தை வற்றச் செய்யலாம். அதோடு ஒரு கண்ணாடியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

என்ன ஆனாலும் பெரியவா தர்ஶனத்துக்கு அப்பறந்தான்! என்று மனஸை திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார் டெல்லி பக்தர். நல்ல கூட்டம். அங்கே போனதும் இவர் மனஸில் ஒரு ஸங்கல்பம். “பெரியவாளா கூப்டு கேட்டாலொழிய அவர்கிட்ட எதுவும் சொல்லப் போறதில்லே” என்பதே! கிணத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவா இவரையும் இவர் குடும்பத்தாரையும் எதுவும் கேட்காமல் ஆஸிர்வாதம் மட்டும் பண்ணினார்.

பக்தரும் குத்து மதிப்பாக பெரியவா இருந்த திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் சொல்லாமல் வந்துவிட்டார். மறுநாள் கண்ணாடியுடன் டாக்டரை பார்க்கப் போனபோது கடைசி பொடி  எழுத்து வரை ஈஸியாக படித்துவிட்டார். டாக்டர் பத்ரிநாத்துக்கோ ஆச்சர்யம்!

“என்  மெடிக்கல் நாலெட்ஜை தாண்டி ஏதோ அதிஸயம் நடந்திருக்கு. ரெட்டினால நேத்திக்கு கசிஞ்சுண்டு இருந்த liquid இன்னிக்கு எப்டியோ ஒங்க ஸிஸ்டத்துக்குள்ள absorb ஆயிருக்கு” என்றார்.

“நேத்திக்கி பெரியவாளை தர்ஶனம் பண்ணினேன்….அவ்வளவுதான்!”

“என்னது? அவ்ளோவ்தானா! அதானே பாத்தேன்! மஹாவைத்யநாதன் ஒங்களுக்கு அனுக்ரஹம் பண்ணினதுக்கப்பறம் வேற யார் treatment குடுக்கணும்?…..” டாக்டர் பத்ரிநாத் பெரியவாளின் பரம பக்தராச்சே! 

அவ்வளவுதான்! பெரியவா என்ற தெய்வத்திடம் நாம் எதுவுமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதில்லை, என்ற பேருண்மையை  டெல்லி பக்தர் அன்றே அப்போதே ப்ரத்யக்ஷமாக உணர்ந்தார். ஆனாலும், நம் மனித மனம் ‘குரங்கு’ இல்லையா? பக்தருக்கும் ஒரு ஸந்தேஹம் வந்தது….. “கண் பார்வை வந்தது…ஒருவேளை ரொம்ப நாளானதால, automaticஆ, மங்கின பார்வை தானாவே  சரியாப் போய்டுத்தோ? இது இயற்கையா நடந்ததுதானோ?இதுல, நாமளா பெரியவாளோட கருணை…ன்னு, நடுவுல சொருகிட்டோமோ?” என்று அலைபாய்ந்தது.

‘கல்கி’ இதழில் அவருடைய கண் பார்வை கிடைத்த அனுபவம் வெளியாகியிருந்தது.  அதை படித்துக் கொண்டிருக்கும் ஸமயத்தில்தான் இந்த பாழாப் போன ஸந்தேஹம். இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, மேலே எதையுமே படிக்க முடியாதபடி பார்வை மங்கிவிட்டது! 
“ஈஶ்வரா! என்னை மன்னிச்சுடுங்கோ!பெரியவா! ஸாக்ஷாத் சந்த்ரமௌலீஶ்வரனோட க்ருபையை ஸந்தேஹப்பட்டுட்டேனே! மஹாப்ரபோ! அடியேனோட பார்வையை பிச்சையா போடுங்கோ!” கண்ணீர் வழிய வாய் விட்டு அலறினார்.

அடுத்த க்ஷணம்…….இதோ…..மந்தஹாஸமான புன்னகையோடு தண்ட கமண்டலுவோடு  இவருடைய  அனுபவத்தோடு வெளிவந்த பெரியவாளின் ஜோதிப்  பிழம்பான திவ்யமங்கள ரூபம் இவர் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது.

 
JAYA JAYA SHANKARA  HARA HARA SHANKARA
Source….Input from a friend of mine
Natarajan

” என்னால் பேச முடியுமா …எழுதுவது வேறு ..பேசுவது வேறு….”

எத்தனையோ விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் – பத்திரிகைகளில் பணி புரியும்போதும், சொற்பொழிவு துறைக்கு வந்த பிறகும் மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் நடந்திருக்கின்றன… நடந்து வருகின்றன… எல்லாம் நம்மையும் தாண்டிய ஒரு சக்தியின் அருள்தான்!

தெய்வமாகட்டும்; மகான் ஆகட்டும். நமக்கு ஒரு அனுக்ரஹம் இருந்தால்தான், சில நல்லதுகளைப் பண்ண விடும். இல்லாவிட்டால், நாம்பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையைப் பண்ணிக் கொண்டிருப்போம் – எதைப் பற்றியும் சிந்திக்காமல்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தியோகம்.

கணக்கு எழுதிக் கொண்டிருப்போம். கம்ப்யூட்டர் தட்டிக் கொண்டிருப்போம். ஆட்களை மேய்த்துக் கொண்டிருப்போம். இல்லை நம்மை யாராவது மேய்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பகவானுக்கே சேவை செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு உத்தியோகம்.

பகவான் பேரையே சொல்லிக் கொண்டு வாழ்வது, பிழைப்பு நடத்துவது எப்பேர்ப்பட்ட உத்தமமான பணி..

விகடனிலும், திரிசக்தியிலும் சில காலம் இது எனக்கு வாய்த்தது. அதைத் தொடர்ந்து சொற்பொழிவு துறையில்…

திடீரென்று பழைய சம்பவம் ஒன்று என் மனதில் ஏதோ ஒரு ஃப்ளாஷ் பேக் போல் தோன்றும். என் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை மீண்டும் அசை போட்டால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படி நிறைய இருக்கு.

‘எப்படியும் இந்த விஷயத்தை இன்று இரவு பதிவு செய்து விட வேண்டும்’ என்று வெளியில் எங்கோ ஒரு ஷூட்டிங்கிலோ, சபாவிலோ இருக்கும்போது தீர்மானம் செய்வேன். வீட்டுக்கு வந்ததும், ஒரு ஆகாரத்தை உள்ளே தள்ளி விட்டு, முகநூல் மற்றும் ஜிமெயிலை கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு, ஒரு சில தொடர்களுக்கும், உபன்யாசத்துக்கும் தகவல்களை சேகரித்து வைத்து விட்டுப் படுக்கப் போய் விடுவேன்.

இதை சோம்பேறித்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். 24 மணி நேரத்தில் என்னால் பலதுகளை பண்ண முடியவில்லை.

இருந்தாலும், அவ்வப்போது சில வேளைகளில் பதிவிடுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இன்று மதியம் பெங்களூர் நண்பரும் மகா பெரியவா பக்தருமான திரு கார்த்தி நாகரத்தினம் அவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்.

நான் கிட்டத்தட்ட மறந்து விட்டேன். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அப்படியே நினைவுக்கு வந்தது.

எப்படி நினைவுபடுத்தினார் தெரியுமா?

மகா பெரியவா சொன்ன பொன்னான ஒரு செய்தியை எனக்கு இன்பாக்ஸில் மெஸேஜ் பண்ணி விட்டு, ‘அண்ணா… நினைவிருக்கா… 2012 அக்டோபர்ல பெங்களூர் வந்தேள்… அப்ப, இந்த உபன்யாசத் துறைக்கு எப்படி வந்தேள்னு சொன்னேளே… இப்ப நான் உங்களுக்கு அனுச்சிருக்கற இந்த பெரியவா வாக்கியத்தையும் படிச்சுப் பாருங்கோ… பெரியவா கருணை புரியும்’ என்றார்.

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

கார்த்தி எனக்கு அனுப்பிய மகா பெரியவா திருவாக்கை இங்கே அப்படியே போட்டிருக்கிறேன். இதைப் படித்து விட்டு, அதன் பின் தொடருங்கள்…

…………………………

“அநுஷ்டானமில்லாதபோது இந்திரியம் ஓடுகிறபடி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது. ‘ஜனங்கள் இப்படிப்பட்ட சரக்குதான் கேட்கிறார்கள்’ என்று அவர்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு, கன்னா பின்னாப் பாட்டுப் பாடுகிறார்கள், புலன் வெறியைத் தூண்டிவிடுகிற ரீதியிலேயே எழுதுகிறார்கள், ஸினிமா எடுக்கிறார்கள், சித்திரம் போடுகிறார்கள். ஜனங்களும் அவர்கள் தலையில் பழியைத் திருப்பிப் போட்டு அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளைத்தான் தருவதால் தாங்கள் அதையே எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது என்கிறார்கள்.

இதிலே ஜனங்களைவிடக் கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாக இந்தக் கலைகளை அப்யஸித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பிருக்கிறது. இப்போது கண்டதை எழுதியும், பாடியும், நடித்தும், படம் பிடித்தும் கீர்த்தி, தனம் எல்லாம் ஸம்பாதித்து விடலாம். ஆனால், ‘இத்தனை ஜனங்களைக் கெடுத்ததற்கான தோஷத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு இதற்காக நாம் ஒருத்தனுக்குப் பதில் சொல்லியாக

வேண்டும்’என்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

மளிகை ஸாமானில் கலப்படம் பண்ணினால் குற்றம்;குடி தண்ணீரைக் கெடுத்தால் குற்றம் என்றால் நேரே மநுஷ்யனின் ஆத்மாவையே கெடுப்பது இவற்றைவிடக் குற்றம்தானே? கலப்படத்துக்காக தண்டிக்கிறவன் நம் மாதிரி ஒருத்தன்தான். அவனிடமிருந்து தப்பியும் விடலாம். அல்லது லஞ்சம் கொடுத்து ஸரிப்படுத்திடலாம். ஆனால் தன் ஆத்மாவையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்ததற்காக ஒருத்தனைச் சிக்ஷிக்கிறானே, அவனிடமிருந்து தப்பவே முடியாது! அவனை நாம் வசியம் பண்ணிக் கொள்ளவும் முடியாது! இந்த நினைப்பு இருந்து விட்டால் கலைகளில் ஈடுபட்டவர்கள் தப்பு வழிக்குப் போக மாட்டார்கள்.

தெய்வ நினைப்பு, பய பக்தி அநுஷ்டானம் இவை போனதில்தான் அடக்கம் போய்விட்டது; இந்திரியங்களின் வேகம் குறைவதால் ஏற்படுகிற பக்வம் வராமலே போகிறது. இதோடுகூடக் ‘கலைஞர்கள்’ என்று தாங்களாகவே தங்களுக்குக் கௌரவம் கொடுத்துக் கொண்டு பொதுஜனங்களும் அதில் மயங்கி இவர்களைக் கொண்டாடி முகஸ்துதி பண்ணுவதில் அஹம்பாவம் ஜாஸ்தியாகிவிடுகிறது.

பழைய காலத்தில் போல, வித்வான்களைக் கூட்டி ‘அரங்கேற்றம்’ என்று செய்து, அவர்கள் ஒப்புக் கொண்டால்தான் ஒரு புஸ்தகத்தையோ, நாடகத்தையோ பிரசாரம் பண்ணலாம் என்றுமில்லாமல், ‘கருத்து ஸ்வதந்திரம், எழுத்து ஸ்வதந்திரம், பேச்சு ஸ்வதந்திரம்’ என்று வேறு ஏற்பட்டிருப்பதால், எதை வேண்டுமானாலும் ஆடிப் பாடி ஊரை வளைக்கலாமென்று நடந்து வருகிறது.

சின்ன வயதிலிருந்தே மதக் கல்வி, மதாநுஷ்டானங்கள் இருந்தால் தான் ஸாத்விகம் ஏற்படும். அப்போதுதான் எத்தனை ஆட்டம், பாட்டம் இருந்தாலும் அதுகளும் முடிவில் உயர்ந்த ஸாத்விக லக்ஷ்யத்தில் சேர்ப்பதாக இருக்கும். முற்காலங்களில் இப்படித்தானிருந்தது. அநுஷ்டான ஸம்பந்தம் துண்டித்துப் போனபின்தான் ராஜஸ, தாமஸப் போக்குகளையே தூண்டிவிடுவதாக இந்தக் காந்தர்வ கலைகள் ஆகியிருக்கின்றன.”

……………..

கார்த்தி அனுப்பிய செய்தியைப் படித்து விட்டீர்களா?

2012 அக்டோபரில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதர் சுவாமிநாதன் என்னை பெங்களூருக்கு அழைத்தார்கள். அப்போதுதான் இந்தத் துறையில் நான் நுழைந்திருந்தேன்.

அப்போது நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதரிடம், ‘நான் இந்த உபன்யாசத் துறைக்கு வராவிட்டால், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதப் போயிருப்பேன்’ என்று சொன்னேன்.

ஆம்! 2012 ஏப்ரல் வாக்கில் பணியில் இருந்து வெளியே வந்தபோது அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

எழுத்தைத் தவிர, எதுவும் தெரியாது! மீண்டும் பத்திரிகைக்குத்தான் போக வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால், சரிவரவில்லை.

அப்போதுதான் என் பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர், ‘பத்திரிகைகள்ல வேலை செஞ்சது போதும் சுவாமீ… டிவி சீரியல்களுக்கு வசனம் எழுத வாங்க… மாசம் நல்லாவே சம்பாதிக்கலாம்’ என்று புள்ளிவிவரத்துடன் பேசினார்.

அவர் சொன்ன தொகையும், விவரித்த விதமும் என்னைக் கவர்ந்தது.

ஒரே ஒரு தர்மசங்கடம் – கடந்த பத்து வருடங்களாக பல கோயில்களுக்கும் மகான்களின் அதிஷ்டானங்களுக்கும் போய் தரிசித்து ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.

திடீரென சீரியல்களுக்கு வசனம் எழுதப் போனால்… என்னை பலவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமே என்று தயங்கினேன்.

ஆனாலும், ஜீவனம்தான் அவ்வப்போது கண்களை மறைத்தது.

அப்போது மகா பெரியவாளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். ‘பெரியவா… இத்தனை வருடமா ஆன்மிகத்துல இருந்துட்டேன். நிறைய எழுதிட்டேன். இனி தொடரப் போகிற எனது பணி ஆன்மிகத்துக்கா, டிவி. சீரியல்களுக்கா? நீங்களே முடிவு பண்ணுங்கோ’ என்று வேண்டினேன்.

பெரியவா கண் திறந்தார்.

அடுத்து ஒரு சில நாட்களிலேயே மகா பெரியவாளின் பரிபூரண அருளோடு என் வாழ்க்கைப் பாதை மாறியது.

எழுத்தில் இருந்து பேச்சுக்குப் பாதை திரும்பியது.

என்னால் பேச முடியுமா?

எழுதுவது வேறு. பேசுவது வேறு.

எழுத்து என்றால், திரும்பத் திரும்ப எடிட் செய்து ஒரு கட்டுரையை வெளியிடலாம். ஆனால், பேச்சு அப்படி இல்லை. பேசினால் அது ‘லைவ்’.

பெரியவாதான் இதை சாதித்துக் கொடுத்தார்.

கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த தெய்வம் சத்தியமாக இருந்து என்னைக் காப்பாற்றிய விதம் என் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

பேசவே தெரியாத ஒருவனை பேசவும் வைக்கிறார்.

கார்த்தி இன்று மதியம் இதைத்தான் சொன்னார்: ‘அண்ணா… சொற்பொழிவுத் துறைக்கு வந்து நேற்றோடு மூன்று வருடம் பூர்த்தி ஆகிறது. இந்த பெரியவா போஸ்ட்டிங்கைப் பார்த்ததும், மூன்று வருடங்களுக்கு முன் பெங்களூரில் நீங்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. எல்லாம் பெரியவா கருணை’

மகா பெரியவா சத்தியம்!

என்னைத் தடம் புரள விடவில்லை.

தன் பணிக்கே பயன்படுத்திக் கொண்டார்.

இன்று எத்தனையோ சேனல்கள், மேடைகள், வெளிநாடுகள் என்றெல்லாம் சென்றாலும், எல்லா புகழும் மகா பெரியவாளுக்கே!

வெகு சாதாரண மக்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுதான் எனக்குப் பெரும் பலம் – ‘சாமீ… எங்களுக்குப் புரியும்படியா எளிமையா சொல்றீங்க… நாங்களும் இப்ப காஞ்சிபுரம் போக ஆரம்பிச்சிருக்கோம்.’

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Source ….A Mail from my Friend Shri. Swaminathan  to me this Morning…

Natarajan

” ஷேமமா இரு…உன் கடமையை செய் …”

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். ‘எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்’.

பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர். ‘ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது’ என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள்.

பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.

பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் ‘பெரியவா சரியான முடிவு சொல்லலையே?’என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.

பெரியவா சொன்ன பதில்….

1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.

2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.

3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும். –

இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது. அந்த சீடர், பக்தரிடம் போய், ‘உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது’ என்று பக்குவமாக சொன்னார்.

பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார். ‘பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்’.

பெரியவாள் மனம் உருகி போய்விட்டது.

‘க்ஷேமமா இரு’.

அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?

ஸ்வாமியே சரணம்

Source….www.periva.proboards.com

Natarajan