” எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ …. ”

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக – முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம்.

தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும்.

அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள். இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான். அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.

பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். (வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.
ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான். கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”
அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர். எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை. ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ? எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான். செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.

தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

Read more: http://periva.proboards.com/

Natarajan

” உன் ரெண்டாவது மகன் தில்லியிலா வேலை பாக்கறான் …? “

ஆகாயத்தில் ஆரத்தி காட்டி……

அஞ்சலை துப்புறவு தொழில் செய்பவள். அவளை வறுமை கடுமையாக வாட்டியது. அவளுக்கு இரண்டு செல்வங்கள். 1984ம் வருடம், நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹான் பாரதமெங்கும் தமது புனித யாத்திரையை மேற்கொண்ட போது இந்தப் பெண் வசிக்கும் கிராமத்திற்கும் விஜயம் செய்தருளினார்.

மஹானைப் பற்றி தெரிந்து கொள்ளும் சூழ்நிலையில் அவள் இருக்கவில்லை. ”நம்ம ஊருக்கு ஒரு சாமியார் வந்து தங்கி இருக்காரே, அவரைப் பார்த்துவிட்டு வரலாம்” என்று நடமாடும் தெய்வம் முகாமிட்டு இருந்த இடத்திற்கு வந்தாள்.

தன்னுடன், தன் இரு பாலகர்களையும் அழைத்துச் சென்றிருந்தாள்.

பக்தை என்று குறிப்பட முடியாத அந்த நிலையில் ஏதோ பார்வையாளராய் வந்தவள், மஹானைப் பார்த்து வணங்கிவிட்டு தன் பிள்ளைகளோடு நகர எத்தனித்தாள். “பேர் என்ன கேளு” மஹான் உத்தரவு. “அஞ்சலைங்க” என்று சொன்ன அவள், தான் செய்யும் தொழிலையும் சொல்லி, தனக்கு இரு பிள்ளைகள் என்று ஒப்புவித்து விட்டு நகரும் நிலையில்தான் அப்போதும் அவள் மனநிலை இருந்தது.

“அவளைக் கூப்பிடு” சென்றவளை தெய்வம் அழைத்தது. அவள் வந்தாள் – பயம் ஒரு பக்கம்.

“உன் பேரு அஞ்சலைன்னு சொன்னியே……. நீ எதுக்கும் பயப்படமாட்டாயோ?” என்று அன்பும் குறும்பும் கலந்து காருண்ய மூர்த்தியின் வினா எழுந்தது.

அஞ்சலை மஹானின் தீட்சண்ய பார்வையால் ஆட் கொள்ளப்பட்டு அப்போது பரம பக்தையின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

விளையாட்டாக மஹான் இன்னொரு கேள்வியைக் கேட்க பக்தைக்கு வறுமையின் வேதனையிலும் சிரிப்புதான் வந்தது.

அந்தக் கேள்வி..

“உன் இரண்டாவது மகன் டில்லியிலா வேலை பார்க்கறதா சொன்னே?”

அந்த இரண்டாவது பையன், அஞ்சலையின் பக்கத்தில் புடைவைத் தலைப்பை விடாமல் பிடித்தபடி கிழிந்த நிக்கரும், அழுக்கான சட்டையும் மூக்கில் ஒழுகலுமாக பாலகனாகக் காட்சி தந்து கொண்டிருந்தான்.

இந்தக் கேள்வியைக் கேட்டு அஞ்சலை பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

மஹான் அவளுக்குப் பூரண அனுக்கிரகம் பொழிந்து அனுப்பினார்.

அப்போதே மஹானை மனதில் இருத்திக் கொண்ட அந்த பக்தை, தன் இரண்டாவது பிள்ளையைப் பற்றிக் கேட்பதன் உட்பொருள் என்னவாக இருக்கும் என்கிற சிந்தனை துளியும் இல்லாமல் ‘மஹா பெரியவா பக்தி’ என்னும் அருள் மட்டுமே அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

தினமும் குளித்து முடித்துவிட்டு கற்பூரத்தை வெளியே சூரியனுக்குக் காட்டுவாள். மனம் நிறைய மஹான் இடம் பெற்றிருந்தார். அவர் படம் கூட அவள் வீட்டில் இல்லை. தனக்கு அந்த அருகதை இல்லை என்று தன்னை சமாதானம் செய்து கொண்ட அவள், எந்த பக்தருக்கும் தோன்றாத எண்ணமாய் எங்கும் வியாபித்திருக்கும் மஹானை, ஆகாயத்தில் ஆரத்தி காட்டி ஆராதிக்கும் மனப் பக்குவத்தில் இருந்தாள்.

வாழ்க்கையில் படிப்படியாக வந்த சிரமங்களை பயமில்லாமல் எதிர்கொண்ட அஞ்சலை, சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு திரும்பவும் அந்த ஊருக்கு ரதயாத்திரையாக மஹானின் உற்சவ மூர்த்தி வந்தடைந்தபோது பேரானந்தம் அடைந்தாள்.

“பெரியவர் நம்மை விட்டுப் போகவே இல்லை; அப்படி நினைக்கிறவங்க அந்த தெய்வத்தைப் புரியாதவங்க. இந்த ரதத்திலே மெய்யாலுமே அவரு வந்திருக்காருன்னு நான் நிச்சயமா சொல்வேன்” என்று ரதயாத்திரையோடு சென்றவர்களிடம் தனது பக்தியை அஞ்சலை சொன்னாள்.

அவளுக்குப் பக்கத்தில் இருபத்தியேழு வயது நிரம்பிய அவளது இளைய மகன் – கிராமத்திற்கு வந்திருக்கிறான் – மஹான் ஆசி வழங்கிய பாலகன் இவன் தான். மஹான் சொன்னபடி அவன் தலைநகர் தில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக இருக்கிறான். இப்போது அவனது மகனுக்கு முடி இறக்க கிராமத்திற்கு வந்திருக்கிறான். இதை அவள் விபரமாகச் சொன்னபோது அன்றே அவன் டெல்லியில் வேலை பார்ப்பதாகச் சொன்ன மஹானின் அருளாசியை நினைத்து ஊர்வலத்தில் சென்ற பக்தர்கள் பரவசமடைந்தனர்.

மஹானே நேரில் வந்துவிட்டார் என்று ரதத்தை நோக்கிக் கை கூப்பிய அஞ்சலையைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள். இன்று இந்த அஞ்சலையைப் போன்ற பக்தர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

sOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/7573/sarvajna-sarva-vyapi-mahaperiyavaa-venkatasaamy#ixzz37UAL20Hi

நேற்று தொழிலாளி; இன்று தொழிலாளர் ஆணையர்…

 

மெஸ்ஸில் அம்மாவுக்கு உதவியாக தொழிலாளி போல் இருந்த ஒருவர், மத்திய அரசின் தொழிலாளர் உதவி ஆணையராக இன்tறைக்கு உயர்ந்திருப்பது வழக்கமான ஒரு வெற்றிக் கதையல்ல.

மணிகண்டனின் (32) ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு. அவரது தாய் ஓட்டல் சரஸ்வதி மெஸ் என்ற பெயரில் சிறிய உணவகத்தை நடத்தி வந்தார். தாய் நடத்திய ஓட்டலில் அவருக்கு ஒத்தாசையாக இருந்துவந்தார். மளிகைப் பொருட்களையும் காய் கறிகளையும் வாங்கி வருவது, ஓட்டலில் சப்ளை செய்வது எனப் பம்பரமாகச் சுழன்ற அவர் ஒரு தொழிலாளியாகவே தனது நாள்களை நகர்த்தினார். கணவனால் கைவிடப்பட்ட தாய்க்கு உதவிவந்த அவருக்கு ஒருநாள் தான் தொழிலாளர் கமிஷனர் ஆவோம் என்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் அவர் மேலே வந்தார். அவரை உயர்த்தியது அவரது கல்வியும் தளராத முயற்சியும்.

மணிகண்டன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் வெற்றிபெற்று மத்திய தொழிலாளர் உதவி கமிஷனர் பணிக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பணிக்கு இந்திய அளவில் மொத்தம் 57 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஐந்து பேரில் மணிகண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மணிகண்டன் செய்யாறு ஆர்.சி.எம். பள்ளியிலும், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். முடித்தார். சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தபோதே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானார். குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றார்; பணி கிடைத்தது. ஆனால் அப்பணியில் சேர அவர் விரும்பவில்லை, அதைவிடப் பெரிய பணி அவரது கனவாக இருந்தது.

கடந்த 2013-ல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வில் அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்தார். டி.என்.பி.எஸ்.சி. கைநழுவிய வேளையில் மத்திய உதவி தொழிலாளர் கமிஷனர் காலிப் பணியிடத்தை நிரப்ப யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவித்ததை அறிந்து விண்ணப்பித்தார்.

காலை முதல் மாலைவரை கன்னிமாரா நூலகமே கதி எனக் கிடந்தார். அயராத உழைப்பு அவரை அகில இந்திய அளவில் 10-ம் இடம் பிடிக்கச் செய்தது.

வெற்றிபெற்ற மணிகண்டனிடம் பேசியபோது, பள்ளியில் படிக்கும் பருவத்தில் தாய்க்கு உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை ஆர்வத்துடன் படித்துள்ளார் மணிகண்டன்.

“சிறு வயதில் இருந்தே தினமும் காலையில் தியானம், யோகா, பிராணாயாமம் செய்து வருகிறேன், எனது வெற்றியில் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு” என்று சொல்லும் மணிகண்டன், படிப்பிற்கு உறுதுணையாக இருந்த தன் அண்ணன் செந்தில்குமாரை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்கிறார் நன்றிப் பெருக்குடன்.

நேரடியாக மத்திய உதவி தொழிலாளர் கமிஷனர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மணிகண்டன், மண்டல தொழிலாளர் கமிஷனர், துணை தொழிலாளர் கமிஷனர் என அடுத்தடுத்து உயர் பதவிக்குச் செல்ல முடியும். பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளை மத்திய தொழிலாளர் அதிகாரிகள் கவனிக்கிறார்கள்.

“திட்டமிட்ட கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்” என்று சொல்லும் மணிகண்டன், “எந்தப் போட்டித் தேர்வு என்றாலும், படிக்க வேண்டிய பாடங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் காலஅட்டவணை போட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்” என்று அடித்துக் கூறுகிறார். “நேர்முகத்தேர்வில் நமது ஆளுமைத் திறனைப் பார்க்கிறார்களே தவிர நமது தோற்றத்தையோ கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்கிறோமா என்பதையோ அல்ல” என்று சொல்லும் மணிகண்டன் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

“ஆன்மீக ஆளுமை …திருமலையில் ஒலிக்கும் சிம்ம குரல் …”

ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள். ஆனால் கலந்து கொள்பவர்களைப்போலப் பல மடங்கு பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்ப்பது நேரடி வர்ணனையும் நேரலையும்தான். குரலின் மூலம் செய்யப்படும் இந்த ஆன்மிகச் சேவையைக் கடந்த 40 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் பாதூர் புராணம் ஸ்ரீ உ.வே. ரங்கராஜாசாரியார்.

லட்சோப லட்சம் பக்தர்களைச் சென்றடையும் சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர், திருமலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கல்யாண உற்சவத்தை நேரடி வர்ணனை செய்துவருகிறார். புராண, இதிகாசக் கதைகள், திருமலை பெருமாள் குறித்த தகவல்கள், கலைகள் குறித்த அறிவு, விழாவுக்கு வந்திருக்கும் பிரபலம் குறித்த அறிமுகம், கல்யாண நிகழ்ச்சிகளை வரிசை பிசகாமல் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுதல் என்று பன்முகத் திறன் இருந்தால் மட்டுமே இத்துறையில் பரிமளிக்க முடியும். இதில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார் இந்தப் பெரியவர்.

திருமலை பிரம்மோற்சவத்தை முதன் முதலில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியபோது குறிப்பிட்ட நிறுவனங்கள் இவரையே அணுகின.

இவர், தொலைபேசி உபன்யாசமும் செய்கிறார். ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு அமெரிக்காவின் டெக்சாசில் இருந்து இவரது இல்லத்துக்குத் தொலைபேசி அழைப்பு வரும். காலை நான்கு மணிக்கே எழுந்து தயாராக இருக்கும் பாதூர் மாமா, தொலைபேசி மணி ஒலித்தவுடன், ஒலி வாங்கியை எடுத்து உபன்யாசத்தை ஆரம்பித்துவிடுவாராம். இதைத் துல்லியமாக ஒரு மணி நேரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சில ஆன்மிகச் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

இந்நிகழ்ச்சி டெக்சாசில் மட்டுமல்லாமல் வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்களில் ஒளிபரப்பாகிறது. ஆன்மிகப் பணியில் இடைவிடாது ஈடுபட்டுள்ள இவருக்கு அண்மையில் திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மஹாமஹோபாத்யாய என்ற உயரிய விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.

திருப்பதியில் குடியிருக்கும் இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர். இவரது முன்னோர்கள் ராமாயண உபன்யாசங்கள் செய்துவந்ததால் `புராணம்` என்ற சிறப்புப் பட்டப் பெயர் தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறார்.

பண்டிதர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த இவருக்கு வீட்டிலேயே குருமார்கள் அமைந்துவிட்டார்கள் என்று தன் குருவாக அமைந்த தந்தையைப் பற்றி நினைவுகூர்கிறார் ரங்கராஜாசாரியார். சென்னை பல்கலைக்கழகத்தில் வியாகரண சிரோண்மணி என்ற பட்டப் படிப்பை முடித்து திருச்சி அருகேயுள்ள திருப்பராய்துறை சுவாமி சித்பவானந்தாவின் ராமகிருஷ்ண தபோவனத்தில் சமஸ்கிருத பண்டிதராகச் வேலைக்குச் சேர்ந்தார் பாதூர். அந்தச் சமயத்தில் சித்பவானந்தர் திருவாசகத்தையும், பத்து உபநிஷத்துக்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பதிப்பித்தார். அதைப் பிழைதிருத்தும் பணி இவருக்குக் கிடைத்தது.

இந்தப் பணியின் மூலம் அந்தச் சிறிய வயதிலேயே இவ்விஷயங்களில் ஆழமான அறிவு கிடைத்தது என்பதையும் மறக்காமல் பதிவுசெய்கிறார். இவர் திருவாசகத்தை முழுவதும் படித்துப் புரிந்துகொண்டது அப்போதுதான்.

“திருமலைப் பெருமாள் உற்சவத்தின்போது முன்னால் கோஷ்டியாக திவ்யப் பிரபந்தம் சொல்லிக்கொண்டு போவார்கள். சுவாமிக்குப் பின்னால் வேதம் சொல்லிக்கொண்டு போவார்கள். அப்போது இரண்டுமே எனக்குத் தெரியாது. திவ்யப் பிரபந்தம் கற்றுக்கொள்ளத் தொடங்கி 1974-லிலேயே முடித்துவிட்டேன். அது முதல் இன்று வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக அனைத்து உற்சவங்களுக்கும் திவ்யப் பிரபந்தம் சொல்லும் கோஷ்டியில் இருக்கிறேன்” பிரபந்தத்தின் மீது பற்று வந்த பிறகு உரைகளையும் படித்திருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தொடங்கியபொழுது தமிழ் வர்ணனைக்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். அது முதல் பெருமாளின் நித்ய கல்யாண உற்சவத்திற்கும், திருமலை மற்றும் திருச்சானூர் பிரம்மோற்சவத்திற்கும் தமிழில் நேரடி வர்ணனை சொல்லிக்கொண்டிருக்கிறார் பாதூரார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு. நாற்பது ஆண்டுகளாக இது தொடர்கிறது. “காலையில் ஒரு கோவில் என்றால் மாலை நான்கு மணிக்கு மற்றொரு கோவில், மீண்டும் மாலை ஆறு மணிக்கு வேறு ஒரு கோவில் என்ற வகையில் மார்கழி மாதத்தில் ஒரு நாளுக்கு மூன்று முறை கூட திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு” என்கிறார் பாதூரார்.

ராமானுஜர் போல இவரும் திருமலையே பெருமாள் என்று எண்ணுவதால் திருமலையில் செருப்பே அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

” பலர் மனதில் இடம் பிடித்த படம் …”

நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை. புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.

‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.

சமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக அமைந்தது.

விலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை ‘அம்மா உணவகம்’ மூலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க ‘அம்மா பள்ளிக்கூடம்’ தொடங்குவாரா என ஒரு சிறுவன் கேட்பதுபோல இருந்தது அந்த படம்.

பதிவேற்றிய 3 மணி நேரத்தில், 7600 நேயர்கள் அதைப் பகிர்ந்தனர். 19,000 நேயர்கள் லைக் செய்தனர். தற்போது வரை மொத்தமாக 38,726 பேர் லைக் செய்துள்ளனர். 27,418 நேயர்கள் பகிர்ந்துள்ளனர். 1,324 பின்னூட்டங்களை அந்தப் புகைப்படம் கண்டுள்ளது. லைக், பின்னூட்டங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.

” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

” காலத்தின் தூண்கள் கோவில் தேர்கள்…”

 

பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள்.

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்க பாணி கோயில் தேர், வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் தேர் போன்ற பல தேர்களை வடகயிற்றால் இழுத்துச் செல்பவர்களின் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்!

பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமான தேர்களைப் பவனிவரச் செய்து இன்றும் அழகுபார்ப்பவர்கள் தமிழர்கள். கோயில் தேர்களுக்கென்றே படிகளுடன் கூடிய தேரேற்றுக் கூடங்களும் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

அலங்கரிக்கும் அதிசயங்கள்

தேரைச் சுற்றி நான்கு புறமும் ஆடும் அசைந்தாடிகள், நான்கு முகப்பிலும் வாச மாலைகள், சுவாமிக்கு மேல் விதான ஓவியங்கள், தேர்களின் எட்டுப் புறமும் பட்டங்கள், சிவ வைஷ்ணவக் கொடிகள், எல்லாவற்றுக்கும் மேலாகக் கூம்பிய வடிவில் கலசம் போன்ற துணிகளால் ஆன கலங்கரி ஓவியத் துணிகள், தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட குதிரைகள் என்று தேருக்குத் தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் பார்க்கத் திகட்டாதவை.

தேர்களின் நான்கு வெளிப்புறத்திலும் சித்திர வேலைப்பாடுகள் அழகு சேர்க்கும். வைணவத் தேராக இருந்தால் பெருமாளின் தசாவதாரங்களைக் காட்டும் மரச் சிற்பங்களும், சிவன் கோயில் தேர்களாக இருந்தால் சிவபுராணக் கதைகள், சிவத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காணும் வெளிநாட்டுப் பயணிகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்ப்பதே தனி அழகு.

பிரான்ஸைப் பின்பற்றலாமே!

தேரோட்டம் முடிந்த பிறகு, தேரின் அத்தனை அலங்காரங்களையும் பிரித்து, இரும்புத் தகடுகளால் தேரை முழுவதுமாக மறைத்துப் பயணிகள் பார்க்க இயலாமல் கோயில் அதிகாரிகள் மூடிவிடுகின்றனர். இதனால் தோ்த் திருவிழா முடிந்த மற்ற நாட்களில், இதனைப் பார்க்க வரும் பயணிகளால் அவற்றின் கலை அழகைக் காண இயலாமல் போய்விடுகிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கலைப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை பிரான்ஸ் நாட்டினர் திறந்தவெளி அருங் காட்சியகம் எனும் முறையில் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.

தமிழகத்திலோ 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 100-க்கும் மேற்பட்ட தேர்கள் சிதிலம் அடைந்தும், கேட்பாரற்றுக் கிடப்பதும் வேதனை யளிக்கிறது. இவற்றைப் புத்தாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அழகிய நிலையில் உள்ள தேர்களை, தேரோட்டத்துக்குப் பிறகு மக்கள் அவற்றின் கலை அழகைக் கண்டுகளிக்கும்படியாகத் திறந்தவெளி அருங்காட்சியமாக வைக்கலாம். ஏனெனில், தேர் ஓடினால் மட்டுமல்ல, நின்றாலும் அழகுதான்!

– தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

” கப்பி காரில் சவாரி …” மலரும் நினைவுகள் !!!

 

ஓவியம்: முத்து

ஓவியம்: முத்து

நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க” என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது – அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை நகர்த்திய நாட்கள் அவை.

உடைந்த பாதி பிளேடை வாயில் வைத்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவின் காதில் அப்பாகுண்டு ஏதோ கிசுகிசுக்க, அது மெல்ல நகர்ந்து எங்கள் காதுக்கு வந்தபோது எங்களால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை.

‘‘டேய்! நம்ம ரோட்டுக்கு கப்பி கார் வந்திருக் காம்…” என்பதுதான் அந்த ரகசிய சேதி.

சரியாக ஒரு மணிக்கு பள்ளியில் ஒரு மூலையில் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிக்கப்பட, நாங்கள் மு.ரா.சன்ஸ் மஞ்சப் பையை (அதுதான் அப்போது எங்களின் ‘ஸ்கூல் பேக்’) தோளில் சாய்த்துக்கொண்டு சாலையை நோக்கி ஓடினோம். அய்யனார் சிலை உயரத்துக்குச் சாலையை அடைத்துக்கொண்டு கப்பி கார் நின்றது.

முன்னும் பின்னும் ராட்சஸ இரும்பு ரோலர்களைக் கால்களாகக் கொண்டு பிரம் மாண்டமாக அது நின்றது. அதன் மேலே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் கப்பி காரின் பாகன். ஊரே அதை அதிசயமாகப் பார்த்தது. நாங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். யானையைத் தொட்ட சந்தோஷம்.

ரோடு ரோலரை எங்கள் ஊர்க்காரர்கள் கப்பி கார் என்றார்கள். ரோடு முழுக்க நிரவப்படும் கருங்கல் ஜல்லிகளுக்குக் கப்பிக் கல் என்று பெயர். கப்பிக் கல்லைத் தன் இரும்புப் பாதங்களால் நசுக்கி நகரும் ரோடு ரோலருக்கு கப்பி கார் என்கிற பெயர் எவ்வளவு பொருத்தம்!

கப்பி கார் வந்த நாளில் ஊருக்கே ஒரு திருவிழா முகம் வந்துவிட்டது. ஊரே சாலையில் திரண்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை மறந்தோம்.

‘‘டேய்! இது பத்து நாளைக்கு முன்னால திருவாரூர்ல கிளம்புச்சாம். இன்னிக்குத்தான் நம்மூருக்கு வந்திருக்கு” என்று கப்பி காரின் இயந்திரவியலைப் புட்டுப்புட்டு வைத்தான் மணிவண்ணன்.

“அப்படின்னா, இது டெல்லிக்குப் போக எத்தனை மாசம் ஆகும்” என்று நான் விரல் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.

‘‘எனக்கு கப்பி கார் ஓட்டுற வேலை கெடச்சா போக மாட்டேம்பா. எல்லா காரும் இத முந்திக்கிட்டுப் போயிடும். இது டொடக்கு டொடக்குனு நவுரும்” என்றான் அப்பாகுண்டு.

எங்கள் ரோட்டில் கப்பிக் கல்லை நிரப்பி தார் போட்டு முடிக்கப் பத்து நாட்கள் ஆயின. அங்குலம்அங்குலமாக நகர்ந்து சாலையைச் சமன்படுத்திக் கம்பீரமாக நின்றது கப்பி கார். ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கே அதை வேடிக்கை பார்ப்பதுதான். அது நின்ற இடத்தில் தற்காலிகமாகப் பட்சணக் கடையும், கடலைக் கடையும் முளைத்திருந்தன. யானையின் முதுகில் சுண்டெலிகள் துள்ளிக் குதிப்பதைப் போல மாலைவேளைகளில் அமைதியாக நிற்கும் கப்பி காரின் மேலே ஏறி நாங்கள் விளையாடுவோம்.

‘‘கப்பி காருக்கு நான்தான் டைவர்” என்றான் நட்டு.

‘‘நான்தான் கண்டக்டரு” என்றேன் நான்.

நாங்கள் கப்பி காருக்கு பக்கத்தில் நிற் பதையே பெருமையாக நினைத்து நின்று கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் மூணு வருஷமா எட்டாங்கிளாஸிலேயே இருக்கும் சுப்பிரமணி அங்கு வந்தான். மேலும் கீழும் அதைப் பார்த்தவன், அதன் பின்னால் சென்று தம்கட்டித் தள்ளினான். அதுவா நகரும்? என்ன நினைத்தானோ, கப்பி காரின் ரோதையை ஓங்கி உதைத்துவிட்டு, ‘‘இதுக்குத் திருட்டுப் பயலே வர மாட்டான்டா…” என்று சொல்லிவிட்டுப் போனான்.

தூரத்தில் கப்பி காரின் ஓட்டுநர் வருவதைப் பார்த்து நாங்கள் மிரண்டுபோனோம். அருகில் வந்த அவர், ‘‘பயல்களா… வர்றீங்களாடா… ஒரு ட்ரிப் அடிக்கலாம்” என்று அழைத்தார். அவருடன் தொற்றிக்கொண்டோம். எங்களைச் சுமந்தபடி மெல்ல நகர்ந்தது அந்தப் பேரதிசயம். சில நூறு சென்டிமீட்டர் தூரம் போன பிறகு எங்களைக் கப்பி காரிலிருந்து இறக்கிவிட்டார் பாகன்.

அதன் பிறகான காலங்களில் நான் பல நூறு மைல் தூரங்களைக் கடந்துவிட்டேன். என் நினைவின் சாலையில் அந்தக் கப்பி கார் இப்போதும் எங்கள் ஊரைவிட்டுத் தாண்டவே இல்லை!

– மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

மனதை தொட்ட வரிகள் …” புதிர் கன்னி நான் … “

புதிர்கன்னி!

மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்
விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்
முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்
முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்
யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்
கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்
பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்
யாரும் வாசிக்காத கவிதையாக நான்
திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்
ஆம்… நான் முதிர்கன்னி… வாழ்க்கை பயணத்தில் புதிர்கன்னி!

— பி.ராஜ்குமார், நெய்வேலி. in DINA MALAR… SUNDAY VARAMALAR…

Natarajan

படித்து ரசித்தது …” என்னை தெரியவில்லயா … ” ?

இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒருமுறை காந்திஜி சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தார். சுயராஜ்ய மந்திரத்தை கிராமம் கிராமமாகப் போய் சொல்ல வேண்டுமென்று, தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படி நானும், சில கிராமங்களுக்குப் போனேன். அப்படி, ஒரு கிராமத்தில், தண்டோரா அடித்து, ‘கிராம சாவடிக்கு முன் கூட்டம் நடைபெறும்’ என, அறிவித்த பின், குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு அரிக்கேன் லாந்தருடன் சாவடிக்குப் போய் சேர்ந்தேன்.
அங்கே, ஒரே ஒரு நபர் மட்டுமே வந்திருந்தார். அந்த ஒருவராவது வந்திருக்கிறாரே என்ற நன்றி உணர்ச்சியுடன், பிரிட்டிஷ் சர்க்கார், இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களைப் பற்றி, கேட்பவரின் ரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்னேகால் மணி நேரம் பிரசங்கம் செய்தேன். பின், நானே வணக்கம் செய்து, உட்கார்ந்திருந்த ஒரே நபரைப் பார்த்து, ‘ஐயா, தங்களின் தேச பக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ, எந்த ஊரோ…’ என்றேன்.
அதற்கு அந்த நபர், ‘என்னைத் தெரிய வில்லையா… நான் உம்மை, கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து, கரூர் வரையில் தொடர்ந்து வந்திருக்கிறேன். நான் சி.ஐ.டி.,காரன்; உம்மைக் கண்காணிப்பதற்காக என்னை அனுப்பியுள்ளனர்…’ என்றார் அவர்.

source:::::DinaMalar ….Sunday VARAMALAR.

Natarajan