ஒரு பிடி அவல் …. அது திருப்புகழ் …

ஒரு பிடி அவல்
ஒரு முனிவர் தன்  சீடனிடம் கடைசி வார்த்தையாக, “நான் சொல்வது   ஞாபகத்தில்  வை” என்று கூறி உயிர் நீத்தார்.  ஆழ்ந்து சிந்தித்தபோது சீடனுக்கு அதன் பொருள் விளங்கியது. “ஞா” (ஞானம்) + “ப” (பக்தி) + “வை” (வைராக்கியம்). ஞானமும் பக்தியும், அகத்தில் (உள்ளத்தில் /இல்லறத்தில் / உலகில்) வைராக்யமுமே நான் சொல்வது (நான்  சொல்லும் உபதேசம்)!

தமிழின் அழகு இதுவே! சூசகமான (மறைபொருள்) பொதிந்த இம்மொழியின் தலைவனே முருகன். நம் உள்ள குகையில் மறைந்திருப்பான். எனவே  குகன் என்ற பெயர் ஒரு காரணப்பெயர். காரணமும் காரியமும் பிரிக்கமுடியாததது. ஒரு காரணமாகவே நம்முள் மறைந்துள்ள குகன் செய்யும் காரியம் என்ன?  காருண்யம். மறைந்திருந்து தனிப்பெரும் கருணையால் தடுத்தாட்க்கொள்வது.

இது அவனது நான்காவது, ஐந்தாவது தொழில்கள்.  ஐம்பெரும் தொழில்களில் நான்காவது திரோதானம்(திரோபாவம்) அதாவது மறைத்தல். கடைசியாவது அனுக்கிரகம். நான்காவது தொழில் அவனது பண்பு. ஐந்தாவது அந்தப் பண்பின் பயன். எங்குமே பண்பும் பயனும் பிரிக்க முடியாதது.

முத்தீ
ஒரு கரும்பலகையின் பண்பு கருமை. பயன் எழுதப்பயன்படுவது. அதுபோல மறைத்தல்/மறைந்திருத்தல் என்ற அவனது பண்பினால் நாம் பெறும்  பயன் அவன் அருள். அதைப் பெற நாம் செய்யவேண்டியது என்ன? ஞானம், பக்தி, வைராக்கியம் இம்மூன்றையும் வளர்த்தல். அதைத்தான் சூசகமாக அந்த முனிவர் சொல்லி மறைந்தார். மறைந்து நிற்கும் முருகனுள்ளே  நாமும் மறைவதே முக்தி எனும் முடிவு நிலை.  முத்தீ (முக்தி) என்பது மூன்று “தீ” (நெருப்பு) சேர்க்கை.

ஞானத்தீ, பக்தீ, வைராக்யத் தீ! மூன்றும் சேர்ந்தால் அந்த பெரும் தீயில் நம் தீய வினை யாவும் பொசுங்கி முக்தி பெறலாம். ஞானமும், பக்தியும், வைராக்கியமும் வளர நாம் சில பயிற்சிகளை மேற்கொண்டு பழக வேண்டும். அவைகளே பூசை, தியானம், மௌனம், யோகப்பயிற்சி, பிராணாயாமம், ஏகாதசி விரதம், தீர்த்த யாத்திரை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு முதலியன. இந்தப் பட்டியலில் கடைசி இரண்டை மட்டும் சற்று விளக்குவோம்.

உள்ளமெனும் குகையில் ஒளிந்திருப்பவன் Child Krishna stealing butter
தீர்த்த யாத்திரை செல்லும்போது மிகவும் எளிதான, கொண்டு செல்ல வசதியான, நெடு நாட்கள் கெடாது இருக்கும்படியான, நம் உடலுக்குத் தேவையான சத்து நிறைந்த பொருளே ‘பிடி அவல்”.  அவ்வப்போது அதை வெந்நீரில் வெந்து உப்பு சேர்த்து உண்ணலாம் அல்லது வெல்லம்  சேர்த்து உண்ணலாம். கண்ணனைப் பார்க்க நெடுதூரம் நடந்த சுதாமா என்ற குசேலரும் அதைத்தான் எடுத்துச் சென்றார்.  அய்யப்ப பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்லுவதில் முன் முடி அய்யனுக்காக, பின் முடி தனக்காக என்றிருப்பதுபோல் குசேலரும் பிடி அவலை இரு பகுதியாக கொண்டு சென்றிருக்கலாம். தெரியவில்லை!

கண்ணன் மாளிகையும் சூழ்நிலையையும் பார்த்தபின் போயும் போயும் அழுக்குத்துணியில் சுற்றிக்கொண்டு வந்த ஆறிய உலர்ந்த அவலைப்போய் அவனுக்குத் தருவதா என்று அவர் சங்கோசப்பட்டது நியாயமே! அதைப் பிடுங்கி உண்டு அவர் வினை அறுத்த வள்ளல் கண்ணன்! கோகுலத்திலும் அதையே செய்தான்! ஒளித்து வைத்த வெண்ணையைத் திருடியாவது   கோகுலவாசிகளைக் காக்க சிரமப்பட்டவன் கண்ணன்! நம் வினைகளின் திரட்டே அந்த வெண்ணை. அறியாமையால் அதைக் கட்டிக்காத்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம். நம்மைவிட அவனுக்குத்தான் அக்கறை அதிகம்! முருகனும் அதையே செய்கிறான். வேலும் மயிலும் எதற்கு?

வெறும் அலங்கார வேஷமா? இல்லை.  கிரௌஞ்ச மலையைக் காட்டிலும் அதிகமாகவே இறுகி நிற்பது நமது உள்ளம் எனும் பாறாங்கல். அதை கூர்வேல் கொண்டு துளைத்து, மயில் மீது விரைந்து வந்து உள்ளே புகுந்து உள்ளக்குகையில் மறைந்து அருளும்  குகன் அவன். உள்ளேயிருக்கும் அவனை வெளியே காணவே நாம் குன்றுதோறாடி தீர்த்த யாத்திரை செல்கிறோம். செல்ல உதவுவது இந்தப் பிடி அவல். அவலை அவனுக்குத் தந்து, கவலை நீங்கி  நம் அவல நிலையிலிருந்து மீள்வோம். வள்ளி தந்த தினைமாவு உண்ட வாயனுக்கு நாம் தரும் அவல் கசக்குமா?

சொல் அவல்
இருப்பவல்  என்ற சொல்லை நாம் திருப்புகழில் காண்கிறோம்.  பயந்த தனிவழிக்குத்துணை திருப்புகழே.! எனவே  திருப்புகழும் பிடி அவலும் பிரிக்கமுடியாதது. இரண்டுமே நாம் தனிவழிப் போகையிலே துணையாக நிற்பது. நெல் அவலைவிட சொல் அவலாக விளங்குவது.நமது நீண்ட பயணத்தின் கடைசி கட்டம் முருகனின் திருவடிகளைப் பார்ப்பது. அதை ‘பல்லவி” என்பர்.  இன்னும் நெருங்கிய நிலை “அனு பல்லவி”. அதனுடன் ஐக்கியமாகும் நிலை “சரணம்’.

நாம் பாடும் இசைப் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. ஆனால் திருப்புகழ் பாடல்களில் அந்த பிரிவுகள் கிடையாது. ஏனெனில் திருப்புகழ் முழுவதுமே ஐக்கிய நிலையிலிருந்து (மனோலயத்திலிருந்து) தோன்றியவை. ஆகவே சற்று தள்ளி, அருகே என்ற பேச்சுக்கே இடமில்லை! அரைநிமிஷ நேரமட்டில் சரணகமலாலயத்தில் நிலைக்கும் அனுபூதியைத் தருவது திருப்புகழ். என்றும் கை இருப்பு அவலே திருப்புகழ்! ஒரு பிடி அவல் உண்டு, பல படிவிழாக்களில் பாடிப் பெறும் பயனில் பேசா அநுபூதி பிறக்கும்.  கந்தரநுபூதி தரும் செய்தி இதுவே.
நான், எனது எனும் இருகுண சேர்க்கையில் எழுந்தது சூரன் எனும் மாமரம். வேற்படை அதை இரு கூறாக்கியாதே தவிர அழிக்கவில்லை. மற்ற புராணக் கதைகளிலிருந்து கந்த புராணம் இங்கு வேறுபடுகிறது. சூரன் இருகூறாகி அடங்கினான். அதுபோலவே நமது உள்ளத்தில் ஆட்டம் போடும் சூரனான அகங்காரமும் மமகாரமும் அடங்கி ஒடுங்கி முறையே மயில், சேவலாகி அமரும். மயில் முருகனின் காலடியிலும், சேவல் மேலே திருக் கொடியிலும் அமர்ந்தன. சேவல் எப்படி கூவிற்று? “கொக்கறு கோ கோ” என்றால் என்ன பொருள்? கொக்கு= மாமரத்தை; அறு= அறுத்த; கோ = வேந்தன், கந்தன், என் சொந்தன் இவன் என்று பறைசாற்றுகிறது!

நாதவிந்து கலாதீ நமோ நமோ
பூதங்களின் பதி இறைவன். “அனு” என்றால் சமீபம். ஆக, அநுபூதி  என்றால் இறைவனருகே கொண்டு செல்வது என்று பொருள். அது மௌன நிலையில் பிறக்கும் என்பதை “பேசா அநுபூதி பிறந்ததுவே” என்கிறார் அருணகிரியார். அகரம் முதல் க்ஷகரம் வரை 51 விந்து எழுத்துக்கள் (பீஜாக்ஷரங்கள்) தரும் சக்தியை திருமூலர் திருமந்திரத்தில் விளக்கியதைப்போல் அமைந்தது 51 பாடல்கள் கொண்ட கந்தர் அநுபூதி. அந்த அநுபூதியைப் பெறும் நமது நீண்ட ஆன்மீகப் பயணத்தில் துணையாக வருவது பிடி அவலும்  இருப்பவலான திருப்புகழும். அதைப் பெற்று, ப்ரணவ நாதமும் விந்துவும் (பீஜமும்) சேர்ந்த அரும் பெரும் நிலையை வணங்குவோம்! நாதவிந்து கலாதீ நமோ நமோ!

SOURCE:::: Dr.K.Rajaram in murugan bhakthi.org
Natarajan

” இப்போ போட்டோ எடுத்துக்கோ…” !!!

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.

(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)

”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”

பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

***********

வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.

பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.

“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”

அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).

பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.

மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.
SOURCE:::: http://www.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer#ixzz3T79zOjwl

“இடிக்கும் மேகமே இன்மழையும் பொழியும் ….”

1507603_10202994818654217_40352395530888678....jpg

“எங்கே, அந்த பெல்காம்….இருக்கானா?”

என்கிறது நெய்-மிளகாய்க் குரல்.

மிளகாயை விட்டு விட்டு!.

“இதோ இருக்கேன்” என்று தண்டம்

ஸமர்ப்பிக்கிறார் பெல்காம்…..

“நான் இந்த மஹாராஷ்ட்வாவிலே சுத்த

ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை

என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”

மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே

வர்ஷிப்பதாக உணர்ந்த பெல்காம்….தான் அடிக்கடி

பெரியவாள் தர்ஸனத்துக்கு வந்திருப்பதை இன்று

அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில்

உற்ற பெருமிதம். அவர் ‘இத்தனாம் தடவை’ என்று

சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.

“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை

வர முடியறது?”

“எனக்கு ரயில்வே உத்யோகமோல்லியோ?

‘பாஸ்’லே வரேன்.

“ஓஹோ! ஸரி! உன் பாஸை இங்கே வை”

என்று தமக்கு முன் தரையைத் தட்டிக்

காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.

பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.

இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின்

திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச்

அந்த ரயில்வே பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.

பெரியவர் பாஸை உன்னிப்பாகக் கவனிக்கிறார். பேசத்

தொடங்குகிறார். நெய்யிலே மிளகாய் வறுபடுகிறது.

“பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே.

எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ்

இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு

உண்டுன்னு. இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக்

கணக்கா ஒரு கையெழுத்துக்கூட காணும்! நீ என்ன

பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக்

கொண்டு போய் ‘ஸரன்டர்’ பண்ணணும். இனிமேல் உன்

கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே

என்னைப் பாக்க வரணும்.!”

ஹர ஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு

அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.

இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச்

சேர்ந்த சிஷ்ய பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய்

காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன் வருகிறார்.

இதற்குப் பதினோராண்டுகளுக்கு முன் முனிவர்

ஸ்ரீ மடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து

பணக்காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை

என்று இவர் நன்கு அறிந்தவர்தான்.ஆயினும் பெரியவாளின்

திருவுளக்கருத்தின்படியே செலவழிக்கப்பட வேண்டுமென்று

அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே

இந்த ஆயிரத்தைச் செலுத்துகிறார்.

பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?

“எங்கே பெல்காம்…….?” என்கிறார்.

திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.

நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!

பெல்காமில்……நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்

திட்டங்களைப் பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார் பெரியவர்.

இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.

அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்

பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.

“பணத்தை எப்படிக் கொண்டுபோவே?”

“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் பெல்காம்…

பொறுப்புணர்ச்சியின் நிறைவுடனும் அபார உலகியல்

அறிவுடனும் முனிவர் சொல்கிறார்;

“அதெல்லாம் ஸரியில்லை. தொலைஞ்சு போச்சுன்னா

நீயோ அவனோ (கொடுத்தவரோ) ஜவாப் இல்லை.

நான்தான் ஜவாப். (கொடுத்த பிரமுகரைப் பார்த்து)

நீ இந்தத் தொகைக்கு அவன் பேரிலே ‘டிராஃப்ட்’

வாங்கிக் குடுத்துடு.”

அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன,

ஸமயோசிதம் என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும்

இப்படி அற்புத முன்னுதாரணம் தருவதே முனிவரின்

இயல்பாயிருக்கிறது.

SOURCE::::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8685/#ixzz3Sq964Nh5

படித்து ரசித்தது … ” உடல் எழுத்து…. வைரமுத்துவின் வரிகள் “

உடல் எழுத்து

அதிகாலை எழு

ஆகாயம் தொழு

இருதயம் துடிக்கவிடு

ஈறழுந்தப் பல் தேய்

உடல்வேர்வை கழி

ஊளைச்சதை ஒழி

எருதுபோல் உழை

ஏழைபோல் உண்

ஐம்புலன் புதுக்கு

ஒழித்துவிடு புகைமதுவை

ஓட்டம் போல் நட

ஔடதம் பசி

அஃதாற்றின் எஃகாவாய்.

SOURCE::::: http://www.leninkarky .wordpress.com

Natarajan

கூந்தலூர் குமர குருபரன் …சனி பகவானிடம் இருந்து நம்மை காக்கும் கடவுள் ….

கூந்தலூர் குமரகுருபரன்
b113d-shankarimurugavan
குன்று தோறாடும் குமரன் தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கூந்தலூரில் வள்ளி, தெய்வயானையுடன் குமரகுருபரனாக, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக கோவில் கொண்டுள்ளான். கூந்தலூர் ஆனந்தவல்லி உடனுறை ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற வைப்புத் தலமாக இருந்தாலும் .முருகன் ஆலயமாகவே புகழ் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை “தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை” என்ற திருப்புகழால் சிறப்பித்துள்ளார்.இந்த ஆலயம் 1600 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் முருகப் பெருமான் தேவமயிலுடன் ஈசான்ய பாகத்தில் எழுந்தருளியுள்ளது தனிச் சிறப்பாகும். மேலும் தன்னை வணங்கி நிற்கும் சனி பகவானுக்கு எதிரில் முருகப் பெருமான் கோயில் கொண்டு அருள் செய்வது வேறு எங்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.

“நாள் என் செயும், வினைதான் என் செயும்,
எனை நாடி வந்த கோள் என் செயும்,
கொடும் கூற்று என் செயும், குமரேசர் இரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும், தோளும்,
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
ரோம ரிஷி

என்று அருணகிரிநாதர் அருளியபடி, கர்ம வினைப்பயனாக நமக்கு சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கூந்தலூர் குமரகுருபரன் நம்மைக் காக்கிறார்.திருக்கூந்தலூரில் உரோம மகரிஷி பல ஆண்டுகள் தவம் இயற்றி இத்தலத்து சிவனை வழிபட்டு வந்தார். இப்பகுதியில் உள்ள மக்களின் வறுமை நீங்க தன் தாடியிலிருந்து பொன் வரவழைத்து அளித்து வந்தார். ஒரு நாள் சிவன் திருவிளையாடலால் தாடியிலிருந்து பொன் வரவழைக்க முடியவில்லை.இதனால் மனம் வருந்திய சித்தர் தன் தாடியை நீக்கிவிட்டு நீராட மறந்து ஈசனை வணங்க ஆலயம் சென்றடைந்தார்.

  ரோம ரிஷி
நீராடாமல் ஆலயம் புகத்துணிந்த சித்தரை விநாயகரும், குமரப் பெருமானும் தடுத்து நிறுத்தியதாகவும், புறத்தூமையை விட அகத்தூய்மையே சிறந்தது என்ற உண்மையை நிலைநாட்ட, பிறகு சிவனே ஆலயத்துக்கு வெளியே வந்து காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒரு சனி,செவ்வாய் பரிகார ஸ்தலமாக விள்ங்குகிறது.இவ்வாலயம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இனி இத்தலத்துத் திருப்புகழையும் அதன் பொருளையும் காண்போம்.

தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன …… தனதான

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை …… மிகுகேள்வி

மண்ணுலகில் பல (தீய) வழிகளிலும் போய் கெடுகின்ற அறிவில்லாதவனை, குடி வெறி கொண்டவன் போன்ற பித்தனை, நீதி, பொறுமை முதலிய நற்குணங்களை விரும்பாத (மத) செருக்குக் கொண்ட அறிவிலாப் பொருள் போன்றவனை, ஒரு மகிமையும் இல்லாத தாழ் நிலையில் இருக்கும் வீணனை, மிகுந்த நல்ல கேள்வியையும்

தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய …… தமியேனை

தவநெறியையும் விட்டுக் கண்ட வழியில் திரிபவனை, கெட்ட புத்தியால் கேடு, தீமை செய்கின்ற குணங்கெட்டவனை, மிக ஒழுங்கீனமுடைய துணையற்றவனை,

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய …… வினையேனை

நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவர், பிடிவாதமுள்ள மாதர், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தை எழுப்பும் காம மயக்கிகள், கண் என்னும் வலையை வீசும் மகளிர்- இத்தகையோருடன் அவ்வச் சமயங்களில் கூடிய தொழில் உடையவனாகிய தீவினை மிகுந்தவனை,

வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ …… அருள்வாயே

நிரம்ப மலர் கொண்டு விரும்பிப் பூசித்தாகிலும், அல்லது ஒரு பூவோ ஒரு இலையோ கொண்டாகிலும், உன்னை நினைந்து, நல்ல வகையான அன்புடன் கீழே வீழ்ந்து உனது திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக.

ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் …… மருகோனே

பத்துத் தலைகளுடன் போருக்கு வந்த ராவணன், இருபது கரங்களுடன் ஏந்தின வாளானது, ஒரே பாணத்தால் அற்று விழும்படி (பாணத்தைச்) செலுத்தின திருமாலின் மருகனே!

உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி …… லுறைவோனே

உன்னுடைய அடியார்களும், உனது திருப்புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முனிவர்களும், கொடையால் ரக்ஷிப்போர்களும் உயர்ந்த நற்கதியைப் பெற அருள் விளங்கும் அழகிய மயிலில் வீற்றிருப்பவனே!

குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ …… முனிவோனே

ஒலிக்கின்ற கழல் அணிந்த உனது திருவடியை தாழ்மையுடன் கும்பிடாதவர்களும், சண்டை செய்யும் போர்க்களத்தே தரும நெறியைக் கை விட்டவர்களுமான சூராதி அவுணர்களது குல முழுமையும் மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே!

கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை …… பெருமாளே.

கொடிய விடத்தைக் ‘கொடு’ என வாங்கி, அழகிய கழுத்தினில் இரு என்று அதை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்கவைத்த சிவபெருமானுக்குக் குருமூர்த்தி என வந்து கூந்தலூரில் குடி கொண்டுள்ள பெருமாளே!

[பொருள் ஆதாரம்- திரு செங்கல்வராயப் பிள்ளை, திரு முருக கிருபானந்த வாரியார்]
மாலதி ஜெயராமன்,
குடந்தை.

SOURCE:::: http://www.muruganbhakathi.org

Natarajan

Jan 24 2015

” அவ்வையாரின் ‘மூதுரை முப்பது “… இன்றைய தலைமுறைக்கு …ஆங்கிலத்திலும்

 For the Benefit of our Children … AND also for our Information as  Recap of our School Days  !!!!
1.      நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1
Helping someone should never be done expecting it be reciprocated.
Like the Coconut palm that offers through its head (from coconut) the water that it drank at its feet, the roots.
2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2
The help rendered to the good people is like letters written on a rock.
Help rendered to the heartless is like the letters written on water.
3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3
Misery during youth is poverty whereas during old age even good things may not be enjoyable.
A woman without a man is like a flower that blooms out of season
4. அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4
Taste of milk does not diminish even when boiled.
Some people even after knowing step by step would never become friends.
The good will always retain their character even during bad times,
The conch roasted in fire will still retain whiteness.
5. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா . 5
Hard work will not give immediate results like the trees that are big which will not bear fruits until the fruiting season.
6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6
Will the People who would give their life for others cow down when faced with enemies?
Would a stone pillar that carries weight will ever bend?
7. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் . 7
A water lily rises to the height of water
Wisdom rises to the limits of learning
Wealth rises to the limits of austerity
Character rises to the limit of the family’s.
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8
It is good to see good people.
It is good to listen to the words of learned.
It is good to praise qualities of virtuous people.
It is good to associate with all of these
9. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9
It is bad to even see evil people.
It is bad to listen to the words of the wicked.
It is bad to speak about the character of the wicked.
It is bad to associate with wicked.
10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10
The water meant for rice fields also irrigates the grass.
Like that, even if there is one good man in a place, the rains will pour on his behalf and benefit all around.
11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11
Even if rice is used to grow rice, once the husk comes off it will not be able to grow.
Similarly even if the most skilled are able to do work, a work beyond their limit should not be undertaken.
12. மடல் பெரிது தாழை (😉 மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12
Leaves of Thazhampoo flower may be long
But the leaves of the Makizam flowers which are small are fragrant.
Even if the ocean is big, only a small fresh water stream nearby is suitable for drinking
So do not judge a person by their physical size.
13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். 13
(sarcasm) The tress with branches and twigs in the forest are not the good trees but the ones who cannot read or cannot take a cue from others are the better trees.
14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14
An uneducated person attempting to write poetry is like a wild turkey imitating the dance after seeing a peacock spread its plumage and dance.
15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம். 15
Like a doctor who went to treat a tiger and became its food, helping people who do not know its value is the same as breaking a pot over a stone.
16. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16
Do not ignore and proceed past people who are humble and patient thinking they are not wise. Such people are like the crane that waits patiently watching all the fish pass by until the right fish passes by.
17. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17
A real relative is not like the birds that leave a lake when it dries.
One who is like the blooming of water lilies and katti plants in a dry lake, is the real relative.
18. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18
When the wise, the good have bad times they still retain their character.
For the others when they have bad times, what will happen?
When a Gold pot breaks, it still retains its value but
What happens if an earthenware pot breaks?
19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19
Even if you immerse a one measure container inside a deep sea, it will not bring four measures of water.
Even if a woman has a husband and wealth, what is destiny will not change.
20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. 20
There can be siblings and relatives who are like a disease that kills one from inside.
Just like a herbal medicine from a mountain outside can cure the disease, there are outsiders who can be like medicine that are antidotes to such siblings and relatives.
21. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21
If the wife is at home and is consonance (with everyone), there is nothing else needed for the house.
If the wife is harsh tongued, then the house will be changed to a small jungle with a tigress.
22. எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22
When you are looking for the Karpagam tree for your wishes, if you get only the useless Ettikkai nuts then know that it is due to the deeds of the previous birth.
23. கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23
The anger of the scoundrels will be like breaking a slab of stone or ( ).
The anger of the righteous/noble will be like an arrow shot through water and the hurt/wound will disappear quickly.
24. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24
Like the swan is attracted to a pond where Lotus blooms, the learned will be attracted to the company of the learned.
Like the crow is attracted to the dead body in a cremation ground, the idiots will be attracted to other idiots.
25. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25
The cobra with its venom will be found hiding whereas the water snake without any venom can be found slithering fearlessly.
Those who are deceitful will hide from others while those who are not walk fearlessly.
26. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26
If you compare a King and a Scholar, the scholar is better than the King because for the King the glory is in his Kingdom whereas for the Scholar the glory is wherever the scholar goes.
27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27
For the uneducated the words of the educated is the enemy.
For the wayward people, righteousness is the enemy.
For the plantain tree, its fruiting is the enemy.
For a household, an uncooperative woman is the enemy.
28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து😉 ஆதலால் – தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. 28
Even when a plank of sandalwood has diminished in size due to age, its fragrance is undiminished.
Even when a benevolent King has lost his wealth, his generosity never diminishes.
29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம். 29
With the lady of the house comes pleasant relatives, wealth, culture;
When she leaves all these will be gone with her.
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
Even in the company of enemies who are out to harm, the wise ones will do their best to protect the enemies from danger.
Like the trees that provide shade for the people even if the people are the ones who cut the trees down. 
SOURCE::: Unknown… Input from a friend of mine for the benefit of all of us.
Natarajan
Jan 18 2015

 

” பொங்கல் திருநாளில் நம் உழவர்கள் நிலைமை என்ன …”

ஒரு மாதத்துக்கு முன்பே பல பேருடைய மனதில் பொங்கல் பண்டிகைக் குடிகொண்டுவிட்டது. சூரிய வெளிச்சத்தைக் கண்டால் ஓடி மறைபவர்கள், சூரியனைக் கண் டால் தொப்பியையும் கருப்புக் கண்ணாடி யையும் போட்டுக் கொள்பவர்கள், குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாத வர்கள், ஒரு நொடி வியர்வைக்கே மின்சார வாரியத்தை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிப்பவர்கள், குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என பொங்கல் பண்டிகைக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, பரபரப்பாக… வாழ்த் துச் சொல்ல, மகிழ்விக்க, நடிகர் – நடிகைகளைத் தேடி ஓடிக் கொண் டிருக்கும் ஊடகக்காரர்களும், எந்தப் படத்தைப் போடலாம் என காத் திருக்கும் திரைப்படத் துறையினரும், விண்வெளிக் கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு பதைபதைப்புடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் போல், திரைப் படத்தின் வெற்றி – தோல்விக்காகக் காத் திருக்கும் ரசிகர்களும்தான்… பொங்கல் திருநாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

பொங்கல் திருநாள் வந்தால் யார் முகத்தில் மகிழ்ச்சி உருவாக வேண் டுமோ… யாரெல்லாம் கொண்டாடி மகிழ வேண்டுமோ… அந்த உழவர்கள் எல்லாம் கடன்காரனுக்கு எந்த பதிலைச் சொல்வது… பொங்கல் செலவுகளை எப்படி சமாளிப்பது… குழந்தை குட்டி களுக்கு துணி எடுக்க யாரிடம் கையேந்துவது என கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால், மிகச் சிறப்பாக அதாவது ஊடகத்தினர் மொழியில் ‘கோலாகலமாக’ பொங்கலை தமிழ் நாட்டு உழவர்கள் கொண்டாடி மகிழ்ந்த தாக செய்திகள் வெளியாகத்தான் போகிறது, ஊடகங்களில்!

அதேபோல் மழை பெய்தாலும், காய்ந்தாலும் உழவன் கொத்துக் கொத் தாகத் தற்கொலை செய்துகொண்டு செத்தாலும், எப்போதும் போல் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துச் செய்திகளை அச்சடித்து வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.

உழவனுடைய நிலை எப்படியிருந்தா லும், உழவர்கள் பெருவாழ்வு வாழ்வதா கச் சொல்லி ஆள்பவர்கள் வாழ்த்துவதில் ஒரு பொருள் இருக்கிறது. எதிர்க்கட்சியும் மற்ற இதரக் கட்சித் தலைவர்களும்கூட சிறிதும் சிந்திக்காமல் அதே போன்ற வாழ்த்துகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது?

கரும்பு வெட்டத் தொடங்கி ஆறு வாரமாகிவிட்டது. கத்தியை வைத்து கரும்பை சாய்த்துவிட்டால், அது உடனே ஆலைக்கு ஏற்றப்பட்டு எடை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் தாமதிக் கிற ஒவ்வொரு நொடியும் வெய்யி லில் காய்ந்து எடைகுறைந்து கொண்டே யிருக்கும். வெட்டாமல் விட்டு வைத்திருந் தாலும் முற்றிப்போய், பூ பூத்து, சாற்றை இழந்து கரும்பு தக்கையாகிவிடும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தச் சொல்லி போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.

நடுவண் அரசு 2012-ம் ஆண்டு அறிவித்த 1,700 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அளித்துவந்த 550 ரூபாயை 450 ரூபாயாக குறைத்து அறிவித்திருக் கிறது. உற்பத்திவிலை கூடிப் போனதால் தங்களின் வேதனையை யாரிடத்தில் சொல்வதென நமக்கெல்லாம் இனிக்கும் சர்க்கரையை தரும் உழவன் கசந்து போய் கிடக்கிறான்.

இதுபோக ஏற்கெனவே தனியார் ஆலை நிறுவனங்கள் இவர்களிடம் வைத் திருக்கிற நிலுவைத் தொகையைக் கொடுக்காததால் அத்தனைப்பேரும் வேதனையில் வெந்து கொண்டிருக் கிறார்கள் .

திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம் எனச் சொல்லி வள்ளுவர் கோட்டத் தின் முன் உட்கார்ந்தால், எல்லா தொலைக்காட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே வருகின்ற ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு ஒலிவாங்கியைக் கொடுத்து நேரலை ஒளிபரப்பைச் செய்கின்றன.

ஆனால், உழவருடைய போராட் டத்தை ஒரு போராட்டமாகவே எவருமே பார்ப்பதில்லை. சென்ற மாதம் டெல்லி வரைக்கும் சென்று நாடாளுமன்றத்தின் முன் இந்தக் கடுங்குளிர் பருவத்திலும் வேட்டி – சட்டையுடன் கிடந்து கத்திப் பார்த்தார்கள். ‘இவர்கள்’ செத்துத் தொலைந்தால்… தங்கள் கட்சிக்குத் தான் இழுக்கு என நினைத்த அமைச் சர்கள், பழச்சாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள்.

எந்தப் பொருளை யார் உருவாக்கி னாலும், அதற்கான விலையை அவன் குறித்துக்கொள்ள முடியும். உழவ னுக்கு மட்டும்தான் அந்த உரிமை இல்லை. வணிகர்கள் கேட்கிற விலைக் குக் கொடுத்துவிட்டு எப்போது பணம் கொடுப்பார்கள் என காத்திருக்க வேண் டும். பல நேரங்களில் விலையில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவதால், வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான். அப்போதுகூட உழவனின் நிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஓடிப் போய் போட்டிப் போட்டு அள்ளிக் கொள்பவர்களும் நம் மதிப்புக்குரிய மக்கள்தான்.

வேலை செய்கிற நாட்களுக்கும், விடுமுறை நாட்கள் எனச் சொல்லி வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து ஊதிய மும்; அதுபோக, ஊக்கத் தொகை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிற பல்வேறு அலுவலக ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாள்தான். தலைமுறைத் தலைமுறையாக கடனி லேயே உழன்று, வறுமையிலேயே செத்து மடிகிற உழவனுக்கும் பொங்கல் தான். அனைவருடைய வயிற்றுக்கும் உணவளித்துவிட்டு யார் கையையும் எதிர்பார்த்து வாழாத உழவன், அரசாங் கம் கொடுத்த 100 ரூபாயை வாங்குவதற் காக வெய்யிலில் வரிசையில் காத்துக் கிடந்த காட்சிகளையும் கண்டுகொண்டு தான் இருந்தோம்.

உழவனின் குரல் ஓங்கி ஒலித்த காலங்களும் உண்டு. இறுதிவரைப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் உழவர் சங்கத் தலைவரை சந்திக்க, புதுடெல்லியில் இருந்து அப்போது தலைமை அமைச்ச ராக இருந்த இந்திரா காந்தியும், சென்னையில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருடைய கிராமத்துக்கேச் சென்று பேசித் தீர்த்ததெல்லாம் அன்று நடந்தன.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் குறை தீர்ந்தபாடில்லை. அவனது சிக்க லின் அடிவேரை ஆராய்ந்து பார்க்கத் தெரியாததாலும், விரும்பாததாலும் வெறும் இலவசங்களையும், மானியங் களையும் கொடுத்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

உழவனின் மரபுக் குடிகளெல்லாம் உடம்பில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் தன் கிராமத்தை விட்டும், தன் நிலத்தை விட்டும் வெளியூருக்கும், வெளி நாட்டுக் கும் ஓடிவிட்டன. மீதமுள்ளவர்களும் ஓடிப் போக நெடுங்காலமாகாது. அப் போது இன்று கொண்டாடுவதுபோல் உழவனின் பெயரைச் சொல்லி பொங் கல் திருநாளைக் கொண்டாட முடியாது.

ஏற்கெனவே உழவன் இல்லாத பொங்கலும், கால்நடைகள் இல்லாத மாட்டுப் பொங்கலும் நம்மவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. ‘இல்லை… நாங்கள் பொங்கல் கொண்டாடியே தீருவோம். உழவன் அழிந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் தமிழர்கள்’ எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா? அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார்? உணவளிக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் என்றால் அப்படி ஒன்றை நாம் எல்லோரும் கொண்டாடுவதுதானே சரி?

உலகத்தில் எந்த மொழியிலாவது ‘ஓர் அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப் பார்களா?

‘வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயரும்!’

– என ஒளவை பாடியது போல நடந்தால் அப்போதுதான் அது அரசாட்சியாக இருக்கும். ஆனால், இங்கே எதெல்லாம் உயர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.

திருக்குறளையும், திருவள்ளுவன் புகழையும் பரப்பி அவனுக்கு சிலை வைத்துவிட்டால் தமிழன் வாழ்ந்துவிடு வான் என நினைப்பவர்களுக்கு, ஒளவையின் இந்தப் பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவனை ஒருவேளை ஆட்சி யாளர்கள் மதித்தால் (நடுவண் அரசையும் சேர்த்துதான்) வள்ளுவன் பாடியிருக்கிற ஒரு குறளின்படியாவது உழவுத் தொழிலை முன்னேற்றும் காரியத்தை முதலில் செய்து காட்டுங்கள்.

SOURCE::::  தங்கர் பச்சான்  in  www.tamil.thehindu.com

Natarajan

Jan 11 2015

” இனிக்கும் பொங்கல் இருக்கிறதா அடுத்த தலை முறைக்கு … ” ?

அடுத்த தலைமுறை பொங்கல்!

இரண்டொரு நாட்களுக்கு முன்
தேரில் வருவாள் என எதிர்பார்த்த
என் தைமகள்
காரில் வந்திறங்கி, ஒரு கவிஞனின்
கைபற்றி கதறி அழுததை, கனவில் கண்டேன்!

அடுத்த தலைமுறையின், ‘அபாக்கஸ்’
ஆதிக்கத்தில் அழிந்து போன தமிழனின்
தைத்திருநாள் கொண்டாட்டம்தான் அவள்
அழுகையின் அர்த்தம் எனப் புரிந்தது!

ஏ போக்கத்த அடுத்த தலைமுறையே
கொஞ்சம் போகியை பற்றி கேள்…

வாசலில் மாக்கோலம்… நடுவிலே பூசணிப்பூ
வீடு சுற்றி மா, வேம்பு, ஆவாரம் பூ என
கட்டிய பின், ஊர் திரளும் ஓரிடத்தில்
சொக்கபானை கொளுத்தி,
சொக்கி போய் கொண்டாடிய
அந்த போகிப் பொங்கல் எங்கே?
அது மட்கி மண்ணாகி போனது இங்கே!

ஏ…பர்கர் தின்னும் அடுத்த தலைமுறையே
கொஞ்சம் பொங்கலை பற்றி கேள்…

காப்பு கட்டிய முற்றம்;
திரண்டிருக்கும் குடும்ப சுற்றம்
மூன்று கல் கூட்டி, கரும்பு சோகை கட்டி
மஞ்சள் மாலை இட்டு,
கோலமிட்ட பானை வைத்து,
பொங்கி வரும் பொங்கலை, சிறார்கள்
பொங்கலோ பொங்கல் என கூவி
கும்மாளமிட்ட சர்க்கரை பொங்கல் எங்கே?
வெறும் பர்கர் தான் இங்கே!

ஏ… இன்டர் – நெட்டில் மாட்டி தவிக்கும் அடுத்த தலைமுறையே கொஞ்சம்
மாட்டுப் பொங்கலை பற்றி கேள்…

கண்மாய் கரையில் வைத்து,
கஷ்டப்பட்டு வயலில் உழைத்து
களைத்து போன காளைகளை
குளிப்பாட்டி, கொம்பு சீவி, வர்ணமிழைத்து,
பட்டி கட்டி, பாட்டுப்பாடி கொண்டாடிய
மாட்டுப் பொங்கல் எங்கே?
வெறும் பணநோட்டு மட்டும்தான் இங்கே!

ஏ… தேனும், தினை மாவும் மறந்த அடுத்த தலைமுறையே கொஞ்சம்
காணும் பொங்கலை பற்றி கேள்…

மாட்டை பூட்டி, கூட்டு வண்டி கட்டி, காப்பு தீட்டு
தீர்ந்ததென, தித்திக்கும் பொங்கல் தின்று
மாலை கோவில் சென்று, மனதார வழிபட்டு,
தாவணி கன்னியர் நந்தவனம் சென்று,
பூ பறித்து நடந்து வந்து
மஞ்சள் தண்ணீரை மற்றவர் மேல் ஊற்றி விளையாடிய காணும் பொங்கல் எங்கே?
வெறும் கனவு மட்டும்தான் இங்கே!

விளை நிலத்தை, ‘விலை’ நிலங்களாக்கி
விற்று விட்டு, வீடு மாறி போய் விட்ட
கிராமத்து விவசாயிகளின் ஆங்கிலப் பள்ளியில்
படிக்கும் அடுத்த தலைமுறைக்கு
அந்த பொங்கல் எப்படி தெரியும்
எப்படி விளங்கும்?

தேரில் வரும் தைமகளே காரில் வரும்போது
அடுத்த தலைமுறைக்கு பொங்கல், ‘கல்’லாகி
கொண்டிருப்பதை நினைக்கும் போது
நெஞ்சு கனக்கிறது!

பிஞ்சுகள், பின்னணி தெரியாமல்,
பின்புலத்தை இழந்து,
பிறப்பிடத்தை மறந்து, வேறிடம் குடி பெயர்ந்து,
சிறப்பிடத்தை பெறாமல்
தவிக்கும் இன்னாளில் இனிமை
பொங்கல் இங்கு எங்கிருக்கிறது?

இருந்தாலும் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து கூறி மகிழ்வோம்!

இளமுகில் அமுதவன், மஸ்கட்.   in  www.dinamalar.com

Natarajan

Jan 11 2015

” சொல்லத் தோணுது….வாய்கள் பேசாது… காதுகள் கேட்காது!…

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு...

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு…

முன்பெல்லாம் பண்டிகைக் காலங் களில் மட்டும்தான் நகரங்கள் மக்கள் நெருக்கடியில் திணறி மூழ்கும். இப்போது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் புத்தாடை, தங்க நகை கள் வாங்குவது என்றில்லாமல், நினைத்த நாளில் வாங்கி விடுகிறபடி வாழ்க்கைமுறை மாறிவிட்டது. கிராமத் துக்கும் நகரத்துக்குமான இடைவெளி குறையக் குறைய எல்லாத் தேவை களுக்குமே சிறு நகரத்துக்கும் பெரு நகரத்துக்கும் தேடிப் போவது வழக்க மாகிவிட்டது.

நகரங்களில் இப்போதே இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி என்றால், மிச்ச காலத்தும் என்ன ஆகப் போகி றதோ தெரியவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பது மாறிப் போய், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. அத் துடன், ஒன்றுக்கு இரண்டு வாகனங்கள் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதை நிறுத்தி வைக்கவோ, ஓட்டிச் செல் லவோதான் இடமில்லை.

100 அடி சாலைகளை 60 அடிகளா கவும், 60 அடி சாலைகளை 40 அடி சாலைகளாகவும் மாற்றுவதில் உலகத்திலேயே நம்மவர்களை யாரும் மிஞ்ச முடியாது. சாலைகளில் நடந்து செல்வதற்கு என்று தனிப் பாதைகள் வேண்டும் என்பதை, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் உணராமல் இருக்கப் போகிறோம்?

சாலைகளில் நான் அதிகமாக கவனிப்பது நடந்து செல்லும் மக் களைத்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இவர்கள் நடக்க வேண்டியிருக்கிறது. நடந்து செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பயந்து பயந்து அவசர அவசரமாகக் சாலையைக் கடப்பவர்களை வசை மொழியில் திட்டுவதும் நம் ஊரில்தான் பார்க்க முடியும். அதிலும் வேகமாக நடக்க இயலாதவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என இவர்களுக்கெல்லாம் சாலையைக் கடந்து போகக்கூடிய நேரத்தை ஒதுக்கி நாம் முன்னுரிமைத் தருவதில்லை.

விதியை உருவாக்கக் காரணமாக இருப்பவர்களும் நாம்தான். அதை மீறும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டு குற்றம் சொல்பவர்களும் நாம் தான். மக்கள் குடியேறுவதற்கு முன் பாகவே, நகரங்கள் உருவாக்கப் படும்போதே… அடிப்படைத் தேவை களையும், நெடுங்காலத் தேவைகளை யும், தொலைநோக்கில் உணர்ந்து திட்டங் களை வரைபவர்கள் வெளிநாட்டினர். அதனால் நடந்து செல்பவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள், பெரிய வாகனங்களில் செல்பவர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பாதை அமைக்கவும், இது குடியிருப்புப் பகுதி, இது வணிக வளாகப் பகுதி என ஒவ்வொன்றையும் முறையாக தனித் தனியாக உருவாக்கவும் அவர்கள் பழகி யிருக்கிறார்கள். இதனால் யாருக்கும் நேரம் விரையமில்லை; விபத்துகள் இல்லை; விரைவாகச் செல்வதால் வெளியேறும் எரிபொருள் மாசுவின் பாதிப்பும் குறைவாக இருக்கிறது. எரிபொருளும் மிச்சமாகிறது.

வெள்ளைக்காரனிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அவனிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் பின்பற்ற மறுக்கிறோம். மக்கள் குடி யேறிய பின்தான் இங்கு எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நகரங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறுபவர்கள் எவ் வளவு பேர்? அவசர அலுவல்கள் காரணமாக நகரத்துக்கு வந்துபோகிறவர் கள் எவ்வளவு பேர்… எனக் கணக் கெடுத்தால், அதிர்ச்சிதான் நேரிடும்!

சிக்கல்கள் உருவாவதற்கு முன்னே இம்மக்களுக்கானத் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டி, உருவாக்கித் தருவதற்குப் பெயர்தான் அரசாங்கம்! வணிக வளாகப் பகுதிகளாக இருந் தவை, மேலும் மேலும் அடுக்கடுக் கானக் கட்டிடங்களாக அதன் ஆபத் தைப் பற்றி கவலைப்படாமல் உயர்ந்து கொண்டே போவதும், குடியிருப்புப் பகுதிகள் அதன் காரணமாக வணிக வளாகப் பகுதிகளாக மாறிக்கொண்டே போவதும் இனி நிற்கப் போவதில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்பு நான் திரைப்படக் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னை தியாகராய நகர் பகுதியில்தான் 10 ஆண்டு காலம் தங்கியிருந்தேன். அப்போது இருந்த அந்தச் சாலைகளின் அகலங்களும் தெருக்களின் அகலங்களும் அப் படியே இருக்கின்றன. ஆனால், மக்கள் தொகை நெருக்கடியும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் 100 மடங்கு உயர்ந் திருக்கிறது. இதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் அரசுப் பேருந்து களும், 100 மடங்கு வாகனங்களும் அந்த சாலைகளில் சென்று கொண்டிருக் கின்றன. இந்த அளவுக்கு இங்கே நெருக்கடி உருவாக காரணம், அந்த இடம் முழுக்கவும் வணிகப் பகுதிகளாக மாறிக்கொண்டே இருப்பதுதான்.

இன்று நேரம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமானதாகிவிட்டது. தியாகராய நகரைக் கடக்காமல் சென்னையின் பிற பகுதிகளை அடைய முடியாது. இதே போல்தான் சென்னை நகரம் மட்டுமல்ல; இந்திய நகரங்களின் அனைத்துப் பகுதிகளும் மாறிக்கொண்டு வருகின்றன.

அதுவும் பண்டிகைக் காலங்கள் என்றால் போக்குவரத்தே முடங்கிவிடு கிறது. விபத்து என ஒன்று ஏற்பட்டால் தான் நடவடிக்கைகளும், திட்டங்கள் தீட்டுவதும் இங்கே நடைபெறுகிறது. அதைகூட நீதிமன்றம் செல்லாமல் பெற முடிவதில்லை. ஒருமுறை அங் கிருக்கின்ற கடைகளுக்கு இதுதொடர் பான அதிகாரிகள் சென்று பாருங்கள். ஒரு குண்டுமணி போட்டால்கூட கீழே விழாதபடி காலையிலிருந்து இரவு வரைக்கும் மக்கள் வெள்ளம் திணறிக்கொண்டேயிருக்கிறது. இந்த மக்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள்? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்கின்றதா… என கண்காணித்து செய்து தருபவர்கள் யார்?

இப்பகுதிகளில் கும்பகோணம் போன்ற தீ விபத்தோ, சென்னை மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் போன்ற கட்டிட விபத்தோ ஏற்படாது என யாராவது உறுதியாக சொல்லிவிட முடியுமா? அவ்வாறு நிகழாது என ஒருவேளை யாராவது சொன்னால்… நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்றைக்காவது அதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால், எவ்வாறு அம்மக் களைக் காப்பாற்றுவீர்கள்?

ரெங்கநாதன் தெரு போன்ற தெருக்களில் தீயணைப்பு வண்டி நினைத்த மாத்திரத்தில் சென்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களைக் காப்பாற்றிவிட முடியுமா? சென்று சேர்வதற்குள் தீ விபத்து ஒரு கடையோடு நின்றுவிடுமா?

ஏகப்பட்ட காவல்துறையினரை நிறுத்தி நகைத் திருட்டு, துணித் திருட்டு செய்பவர்களைத்தான் நம்மால் பிடிக்க முடியும். நகரத்தின் தொலை நோக்கு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு… எந்தெந்த வணிகப் பகுதி கள் போக்குவரத்துக்கும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்க ளின் பாதுகாப்புக்கும் தடையாக இருக் கின்றதோ, அவற்றை இப்போதே கணக்கெடுத்து அகற்றி இடம் மாற்று வதுதானே சரியானதாக இருக்கும். இந்த நகைகளையும், பாத்திரங்களையும், துணிகளையும் எங்கு வைத்தும் விற்கலாமே!

அயல்நாடுகளில் இருப்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விற்பனை பகுதியை உருவாக்கி, அவர் களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவைகளை இடம் மாற்று வது பற்றி முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.

சாலைகளை விரிவுபடுத்தி போக்கு வரத்து நெரிசலை சீராக்காமல், வருகின்ற எல்லா வெளிநாட்டு கார் கம்பெனிகளுக்கும் அனுமதி கொடுத்துக் கொண்டேயிருப்பதும் எந்த வகையில் சரியானது?

மக்கள் கேட்டால்தான் செய்வோம் என பொறுப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம். இந்த மக்கள் எந்தக் காலத்திலும் எதையும் வாய்த் திறந்து கேட்கவே மாட்டார்கள் என்பது எல்லோருக்குமேத் தெரியும். இருந்தும் எனக்கு சொல்லத் தோணுது!

– இன்னும் சொல்லத் தோணும்
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmailcom. 

SOURCE:::: தங்கர் பச்சான்  IN tamil.thehindu.com

Natarajan

Jan 4 2015

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்…

 
ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:-
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே….
                                                                       
                                                                                          – அகத்தியர்
 
 
மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.
 
ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-
 
1. சரஹணபவ – என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
 
2. ரஹணபவச – என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
 
3. ஹணபவசர – என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.
 
4. ணபவசரஹ – என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
 
5. பவசரஹண – என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
 
6. வசரஹணப – என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
 
அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.
 
90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.
 
ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் ஆறுக்கோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி ஆறுக்கோண நடுவில் ”றீங்” என்று எழுதி ஜெபம் செய்து அந்த விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும்.
SOURCE::::  www.swathiktv.com  and murugan bhakthi.org
Natarajan