” Maha Periva Establishes Supremacy of Gayathri …. Gayathri establishes Supremacy of Maha Periva! What a complimentary Divine gesture!! “

Gayathri Rajagopal  thro periva.proboards.com
“Maha Periva 
Establishes Supremacy of Gayathri 
Gayathri establishes Supremacy of Maha Periva! 
What a complimentary Divine gesture!! “

I have narrated many of my miracles of Maha Periva through my weekly post through Periva Forum. Some of them are breath taking and many of them are beyond science and perception. I narrate below one such miracle of Maha Periva, which will definitely make you feel, out of the world. The miracle happened on 23 November 2015.

Periva instructed me, to start chanting Gayathri Mantram of 108 per day. Subsequently, Periva instructed me to increase 300 per day. Again, after few days, Periva ordered me to chant 500 per day. Though, I found it difficult to comply the instructions of Maha Periva, I was sure that Periva’s instructions will have some pregnant meaning and definite purpose and hence, I used to follow the instructions, without any second thought. I started chanting 500 Gayathri Mantram per day.

I could understand that Periva was definitely having a specific purpose for his instructions to me, which I realized at the end of this post. Again, Maha Periva instructed me, to chant Gayathri Mantram 1000 per day. I was not worried about this impossible task of chanting 1000 per day. This, I am mentioning because I have to manage the entire house in spite of my ailment of paralytic stoke. Even, recovery from stoke is because of Maha Periva only. The regular readers of my articles know the entire divine clinical process of Maha Periva and how Periva executed his divine treatment in my recovery.

A week gone and Maha Periva very gently and softly gave me the assignment to chant 2000 Gayathri Mantram per day. You all know how I pleaded Periva by expressing my difficulties and how my plea was handled by Periva and made me to chant successfully 2000 Gayathri Mantram per day. My blind perception of chanting so much per day was disproved by Maha Periva by making me to focus my thoughts, concentration, and conviction only on Gayathri chanting.

Yes! I was successful in chanting 2000 per day within my manageable time schedule. I was comfortable, till Maha Periva gave me further instruction to chant 3500/-Gayathri Mantram per day. I never allowed a stone unturned and was towards this Himalayan task of Chanting Gayathri Mantram 3500/- per day starting from 4.30 in the morning. It continues even today.

O.K. but what is the connection between Gayathri Mantram and cancer?

As I was chanting 3500 Gayathri Mantram every day, one day I, could not chant comfortably because on my left cheek there was a boil inside the wall of the cheek which gave me trouble in chanting Gayathri. Immediately, my wife took me to a dentist for treatment. Doctor was of the opinion that sample of the boil should be sent for biopsy test for suspected cancer detection. However doctor with the help of another dental surgeon removed the boil and put multiple stitches to close the wound.

Myself and my wife were shocked and unmoved for some time. We have returned home and maintained absolute silence for some time. With eyes full of tears, I started chanting Gayathri Mantram without interruption, with pain. Night, before retiring for bed, I went to Maha Periva and cried by asking him why these things are happening only to me? I asked further that if you know that I am going to get cancer then

Why did you call me and bless me with an apple and kumkum, when there was such a huge crowd in 1993?

 Why did you recover me from my paralytic stoke?

 Why did you make me a busy man from the status of “vegetable on the cot?

 Why did you bring back and restore all my lost respect and reputation?

 Why you should save me from severe paralytic stroke by giving treatment at Uttarakhand by make me paying just a paltry money of Rs.5/- against the assumed bill of     Rs.5, 00,000/-.

 Why you should make me to feel that I am travelling safely in your laps though I was travelling in an ambulance during midnight at an altitude of 10000 feet plus at     Himalayas?

 Why did you make me to chant 3500 Gayathri per day in spite of my stoke, which is an impossible task even for a healthy person.

 I asked “Maha Periva”, what is the answer for all my above questions? Even if I have to be affected by cancer because of my karma, please give me peaceful soul     departure because I am prepared for any eventuality. As long as you are with me, I am not worried even for my death.”

As I was very tired because of extreme shock of cancer clubbed with continuous crying with pond of tears, I slept at the feet of Maha Periva without my conscious.

At about 4 ‘o clock in the morning, I could realize that Maha Periva was communicating with me as usual which I give below in his own words.”

Periva “You asked me so much of questions. Understand one thing that every person is facing some problem in the world. You are not the only person who is suffering. However I did so much for you as you listed, but at same time are you not confident that you will be saved by me from this cancer threat also. You go to doctor and you will know, why I was constantly insisting for Gayathri chanting. Even if the report confirms your cancer, I will take care of you in such a way that the cancer does not grow further”

The communication stopped.

On 23rd November 2015, I went to Doctor to receive the report and doctor’s opinion on the report .I was waiting in the waiting hall for my turn to come.

Finally, at about 7.00 P.M. we were called and doctor said that the report confirms cancer. I had my shock of my life and my blood was running cold.

But doctor continued further that the cancer was detected at very early stage and I give below the doctor’s points one by one for your kind reference:

Cancer was detected very early.

 The boils with inner tissues were removed without any traces.

 Type of cancer is “Verrucous Carcinoma”

 I am really lucky enough because this type of cancer does not grow further hence no need for any radio therapy or chemo therapy is required.

 This type of cancer is called “lucky cancer” which affects one in few lakhs.

 Finally doctor confirmed that this is a benign type of cancer and it will not grow further.
“Confirmation,

I am no more a cancer patient  
I am just like a normal person,  

I can lead my life. “

 

How, Maha Periva is Right?

1. Maha Periva insisted me to chant Gayathri Mantram which enabled me to detect pain while chanting and led to cancer detection at an early stage.

2. Periva said even it is cancer it will not grow further and you can be as usual. Doctor’s report and opinion proved that Periva translated his own statement as reality.

3. Periva’s answers to all my questions were proved right.

It is once again confirmed that ,

Periva is Omnipresent 
Omni potent and 
Omniscient 
**** 

I have translated Periva’s communication in my own words, within my limited knowledge and capacity. Every letter and words are a well woven fabric of my feelings. I am sure the fabric of Rajagopal and the fragrance of Maha Periva will give you enormous confidence in leading your life and facing the problem.

Hara Hara Shankara Jaya Jaya Shankara 

 

Source…..Gayathri Rajagopal in http://www.periva.proboards.com

Natarajan

 

 

” கலிபோர்னியா ….பெயர் வந்த காரணம் ….”

கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்”

“கலிஃபோர்னியா” என்ற இடத்துக்குப் பெயர்க் காரணம்

சொல்கிறார் பெரியவா

246400_479182102136836_1433845875_n.jpg

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்

கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால்,முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்..

ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்

கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான்.

அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு

பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.

Read more: http://periva.proboards.com/thread/10771/#ixzz3u924MPSd

Source………..www.periva.proboards.com

Natarajan

வெள்ளத்தில் போன புத்தகங்கள் – அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்….

வெள்ளத்தில் போன அரிய நூல்கள்

வெள்ளத்தில் போன அரிய நூல்கள்                                                       bbc

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிவரும் ரெங்கய்யா முருகன், தாம்பரத்தில் உள்ள முடிச்சூர் பகுதியில் வசித்துவருகிறார்.

மானுடவியல் தொடர்பாகவும் தமிழகத்தில் அமைந்துள்ள பிராமணர் அல்லாத மடங்கள் தொடர்பாகவும் 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை தரைத்தளத்தில் அமைந்திருக்கும் தன் வீட்டில் சேமித்துவைத்திருந்தார் ரெங்கைய்யா முருகன்.

நூல்களை இழந்த ரெங்கையா முருகன்

ஏற்கனவே வட இந்தியப் பழங்குடிகளைப் பற்றிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற புத்தகத்தை எழுதியிருந்த அவர், தன் சேகரிப்பில் உள்ள புத்தகங்களை வைத்து தமிழக மடங்கள் தொடர்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது என்கிறார் ரெங்கய்யா முருகன்.

டிசம்பர் 2ஆம் தேதி காலையில், தெருவில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓட ஆரம்பித்ததும் தன் வீட்டின் புத்தக அலமாரியில் கீழ் பகுதியில் இருந்த புத்தகங்களை மேல் பகுதிக்கு மாற்றினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே நீர்மட்டம் இடுப்பளவுக்கு உயரவும் வீட்டை விட்டு வெளியேறினார் அவர்.

வெள்ள நீர் வடிந்த பிறகு வந்து பார்த்தபோது, அவரது பல ஆண்டு சேகரிப்பு தண்ணீரில் ஊறிப்போய் கிடந்தது. பல புத்தகங்களின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கிடந்தன.

தற்போது வேறு யாரிடமும் கிடைக்க வாய்ப்பில்லாத பல புத்தகங்கள் தன் சேகரிப்பில் இருந்ததாகக் கூறுகிறார் அவர்.

மடாலயங்கள் பற்றிய புத்தகங்கள்

1998ல் புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்த அவர், தமிழகத்தில் உள்ள பிராமணரல்லாத மடங்களில் இருந்த புத்தகங்களைத் தேடித் தேடி சேகரித்துவந்தார். நூற்றுக்கணக்கான புத்தகங்களை படியெடுத்தும் வைத்திருந்தார்.

பல மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், திராவிட இயக்க சித்தாந்திகளின் வரலாற்று நூல்கள் – இவற்றில் பல 70-80 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டவை – இவரது சேகரிப்பில் குறிப்பிடத்தக்கவை.

டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளம் வடிந்த பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவருடைய அரிய சேகரிப்புகளில் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. எல்லாமே தண்ணீரில் ஊறிப் போயிருந்தன. அவற்றைப்பார்த்து நிலைகுலைந்துபோன அவர், வேறு வழியின்றி அவற்றைத் தூக்கியெறிய முடிவுசெய்தார்.

நீரில் ஊறிய புத்தகங்களைத் தெருவில் தூக்கியெறிந்துவிட்டபோது, அவற்றை அகற்றவந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், தன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சொன்னதாகச் சொல்கிறார் அவர். அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்தவர்களும் புத்தகங்களை காய வைத்துத் தர முன்வந்ததாகவும் கூறுகிறார் முருகன்.

ஆனால், பல புத்தகங்களின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஓட்டிப்போன நிலையில், புத்தகங்களைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என முடிவுசெய்ததாகக் கூறுகிறார் அவர்.

இவ்வளவு அரிய புத்தகங்களை இத்தனை ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்தது தவறு என தற்போது வருந்துகிறார் ரெங்கய்யா முருகன். முன்பே அவற்றை டிஜிட்டல் வடிவில் படியெடுத்திருக்க வேண்டும் எனவும் அரிய புத்தகங்களைச் சேகரிப்பவர்களுக்கு அதுவே தன் அறிவுரை என்றும் கூறுகிறார் ரெங்கய்யா முருகன்.

Source…..www.bbc.com

Natarajan

 

செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்….

அடுத்தடுத்து விமர்சனங்கள்.. அடுக்கடுக்காய் கேள்விகள்..

*

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது அதிக அளவில் உபரி நீரை வெளியேற்றுவது என்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதுவே சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை அதிகமாக்கி விட்டது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி இரவு வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று காலை நிலவரப்படி வெறும் 900 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது.

நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் கனமழை பெய்யக் கூடும் என உள்நாட்டு வானிலை ஆய்வு மையங் களும், சர்வதேச வானிலை நிறுவனங் களும் எச்சரிக்கை செய்தன. எனினும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தால் செம்பரம்பாக்கம் அணையின் நீர் அளவை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அணை நீர்மட்ட நிலவரம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அடுத்த பத்து நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து, நவம்பர் 10-ம் தேதி 791 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது.

அதன் பிறகு பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. குறிப்பாக நவம்பர் 16-ம் தேதி வினாடிக்கு 9 ஆயிரத்து 717 கனஅடி, மறுநாள் 17-ம் தேதி 12 ஆயிரத்து 31 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. நவம்பர் 1-ம் தேதி 228 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நீர் இருப்பு 17-ம் தேதி 3 ஆயிரத்து 197 மில்லியன் கன அடி என்ற அளவுக்குத் தண்ணீர் பெருகியது.

இதன் காரணமாக முதல் நாள் வரை வினாடிக்கு வெறும் 64 கன அடி வரை மட்டுமே வெளியேற்றப்பட்ட உபரி நீர் 17-ம் தேதி திடீரென 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அதன் பிறகு அணையின் நீர் இருப்பை 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் இருக்குமாறு பொதுப் பணித் துறையினர் பராமரித்து வந்தனர். நவம்பர் 25-ம் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 629 கனஅடி நீர்வரத்து இருந்த போது 5 ஆயிரம் கன அடியும், நவம்பர் 28-ம் தேதி 610 கன அடி நீர் வந்தபோது, 500 கன அடியும் வெளியேற்றினர். அதாவது ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப வெளியேற்றும் நீரின் அளவையும் பராமரித்தனர்.

இதற்கிடையே நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மிகக் கனத்த மழை பெய்யக் கூடும் என்ற வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகள் முழுவதும் நிரம்பி இருந்தன. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைப் போலவே மழை பொழிந்தால் அந்த ஏரிகளில் இருந்து வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான கனஅடி வீதத்தில் உபரி நீர் வெளியேறும் என்பதும், அவை யாவும் சென்னைக்குள்தான் புகும் என்பதும் எதார்த்தம். ஆகவே, அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பெரிய அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டால் பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பதும் நிச்சயம்.

ஆனால் இந்த ஆபத்தைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர் என்பதே இப்போது பிரதான விமர்சனமாகக் கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய இணையதளத் தகவல்களின்படி, நவம்பர் 29-ம் தேதி வினாடிக்கு 570 கன அடி, நவம்பர் 30-ம் தேதி வினாடிக்கு 600 கன அடி என்ற அளவிலேயே நீர் வெளியேற்றம் இருந்துள்ளது.

பெரும் மழை பெய்த டிசம்பர் 1-ம் தேதி கூட முதலில் வினாடிக்கு 900 கன அடி என்ற அளவில் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கவே, அதன் பிறகு வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி அதிகபட்சமாக 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

நவம்பர் 30-ம் தேதியே மழை தொடங்கிவிட்ட போதிலும் செம்பரம் பாக்கம் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீரை வெளியேற்றாததன் காரணம் என்ன என்பதுதான் இப்போது விவாதத்துக்குரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்துப் பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

ஓர் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் அல்லது எவ்வளவு வரை நீரை தேக்கி வைத்திருக்கலாம் என்பதைத் துறைத் தலைவர்களாக இருக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளால் கணிக்க இயலாது. பல ஆண்டு காலம் தொடர்ந்து அந்தந்தப் பகுதியிலேயே பணியாற்றி வரும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களால்தான் அதனைத் தீர்மானிக்க முடியும். அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, அன்றைய நீர்மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு நீரை அணையில் வைத்திருக்கலாம் மற்றும் எவ்வளவு உபரி நீரை வெளியேற்றலாம் என்பதை அவர்களால் தெளிவாகக் கணிக்க முடியும். இவ்வாறு அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தும் நடைமுறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்தப்போக்கு மாறியுள்ளது. சிறிய அணைகளில் கூட எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மக்களுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க நேர்ந்ததாலேயே முன்னதாகவே அதிக அளவில் உபரி நீரைத் திறக்காமல், திடீரெனப் பெருமளவு உபரி நீர் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருப்பின், சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு இவைதான் முக்கிய காரணம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

குடிநீருக்காக தேக்கப்பட்டதா?.

சென்னையில் கடந்த ஜூன், ஜூலை தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. டிசம்பர் 1-ம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் மேல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. இதிலிருந்தே நவம்பர் முதல் வாரம் வரை எந்த அளவுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒருகட்டத்தில் மழை வேண்டிப் பல கோயில்களில் வருணப் பகவானுக்குப் பூஜைகள் கூடச் செய்தனர்.

இந்தச் சூழலில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் தரும் ஏரிகளில் இருந்து அதிக அளவுக்கு உபரி நீரை வெளியேற்ற வேண்டாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலக் கனமழை பெய்யாமல் போய்விட்டால், குடிநீருக் காகத் தேக்கி வைத்திருக்கும் பெருமளவு தண்ணீரை வீணாக்கி விடக் கூடாதே என்ற அச்சத்துடன் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அடுத்த நான்கைந்து மாதங்களில் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது எனக் கருதி, அதிக அளவு உபரி நீரைத் தக்க சமயத்தில் வெளியேற்ற அதிகாரிகள் தயங்கினார்களா என்ற கேள்வியும் உள்ளது.

ஆக, காரணங்கள் எதுவாயினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகி விட்டது.

நவம்பர் 17-ம் தேதி செம்பரம்பாக்கத் திலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது அடையாற்றில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் டிசம்பர் 1-ம் தேதி இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து அடையாற்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வந்து கொண்டிருந்த நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட 29 ஆயிரம் கன அடி உபரி நீரும் அதனுடன் சேர்ந்து கொண்டதால் பாதிப்புகள் அதிகமாயின.

ஆகவே, இனியாவது துல்லியமான நீர் மேலாண்மை என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Source…..வி.தேவதாசன் ….www.tamil.thehindu.com

Natarajan

Wuzhen: The Ancient Chinese Water Town….

Located in the center of the six ancient water towns south of Yangtze River, in the Chinese province of Zhejiang, Wuzhen is the most beautiful with over thirteen hundred years of history displayed through its ancient stone bridges, stone pathways and delicate wood carvings. The town lies on the Hangzhou-Jiaxing-Huzhou Alluvial Plain on the banks of the Beijing-Hangzhou Grand Canal, an elaborate waterway built and expanded over a thousand years to facilitate exchange of produced goods and culture between the northern and southern regions of eastern China, before the invention of railroads. The river and canals that crisscross across the town are flanked with ancient residential houses, workshops and shops, built on raised platforms of wood and stone pillars. Most of these riverside houses were built during the 14th century Ming dynasties.

wuzhen-water-town-15

Photo credit: http://www.news.cn

A UNESCO World Heritage Site, Wuzhen was established in the late 9th century, although the first settlers here were the New Stone Age people, 7,000 years ago. Over more than 1,000 years, Wuzhen has never changed its name, water system or lifestyle. The traditional buildings, railings and arch bridges, arched gates across the street, imposing dwellings and spacious courtyards, river banks and verandas are all well preserved. Within the town, there are now more than 40 hectares of late 19th century buildings, and more than 100 ancient stone bridges of different shapes.

The numerous canals that run across Wuzhen divide the town into four scenic sections, which are respectively called as Dongzha, Nanzha, Xizha, and Beizha by the locals. Tourists prefer to visit Dongzha and Xizha because they are relatively developed. Dongzha maintains the basic original layout while Xizha has been reconstructed to reproduce the ancient appearance of the water town. Xizha has few local residents and has instead given over to accommodation for tourists.

Wuzhen came recently in the limelight when it was chosen to host the World Internet Conference. The second edition of the conference will also be held here and is scheduled to begin on December 16.

wuzhen-water-town-16

Photo credit: http://www.news.cn

wuzhen-water-town-17

Photo credit: http://www.news.cn

wuzhen-water-town-18

Photo credit: http://www.news.cn

wuzhen-water-town-19

Photo credit: http://www.news.cn

wuzhen-water-town-20

Photo credit: http://www.news.cn

wuzhen-water-town-21

Photo credit: P Bibler/Flickr

wuzhen-water-town-7

wuzhen-water-town-8

Photo credit: Carsten Ullrich/Flickr

wuzhen-water-town-9

Photo credit: llee_wu/Flickr

wuzhen-water-town-6

Photo credit: Guo Qi/Flickr

wuzhen-water-town-5

Photo credit: Guo Qi/Flickr

wuzhen-water-town-11

Photo credit: llee_wu/Flickr

 

wuzhen-water-town-13

Photo credit: setiadi/Flickr\

Sources: China Travel / www.wtmlondon.com

http://www.amusingplanet.com

Natarajan

” ஈஸ்வர், அல்லா தேரே நாம்…” ” இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?”

நான்கு நாள்களாக கழுத்தளவு வெள்ளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கால்களில் சேற்றுப் புண்களுடனும், கண்களில் கெஞ்சும் தூக்கத்துடனும், புரசைவாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவாபாரதி தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் ஜீவானந்தம், “ஸ்வயம் சேவக்’ எனப்படும் லட்சக்கணக்காண ஆர்.எஸ்.எஸ்-ஸின் தன்னார்வலர்களில் ஒருவர்.
“சில மணிநேரமாவது தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாமே…?’ என அவரைப் பார்த்துப் பரிவுடன் கேட்கிறார் அந்த அமைப்பின் மருத்துவ உதவி ஒருங்கிணைப்பாளர் கே.சீனிவாசன். தான் அணிந்திருக்கும் சட்டையில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை சுட்டிக்காட்டி, “சேவை மூலமாக பண்பாடு, அதன் மூலமாக சமத்துவம். அதற்குப் பிறகுதான் தூக்கம். எனது சகோதர, சகோதரிகள் பேரழிவில் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, என்னால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும்?’ – அமைதியாகக் கேட்கிறார் ஜீவானந்தம்.
ஆர்.எஸ்.எஸ். என்றால் மதத் தீவிரவாத அமைப்பாகத்தான் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், இரவு பகலாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள், சேவைகளைத் தொடர்கிறார்கள்.
“காவித் தீவிரவாதிகள் என்றார்கள், கொடியவர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள்தான் வெள்ளத்திலிருந்து என்னை மீட்டார்கள்’ – சொல்லும்போதே மன்சூரா பேகத்துக்கு குரல் தழுதழுக்கிறது. “அம்மா, உதவி செய்யும் வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ எனக் கையெடுத்து வணங்குகிறார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பசுபதி.
நாங்கள் விளம்பரத்தை நாடி ஓடுவதில்லை. ஏதாவது ஒரு பத்திரிகையிலாவது எங்கள் மீட்புப் பணிகள் சம்பந்தமான தகவல்கள் இடம் பெற்றனவா…?’ – கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் எனப்படும் முழுநேர ஊழியர் முருகன்.

ராம.ராஜசேகர் – ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில “சேவா பிரமுக்’. அந்த அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சேவைப் பணிகளுக்கு இவர்தான் ஒருங்கிணைப்பாளர். “கடந்த மாதத்தில் மட்டுமே சென்னையில் மூன்று முறை பலத்த மழை பெய்தது. முதல் மழை பெய்தபோதே நிவாரணப் பணிகளை ஆரம்பித்து விட்டோம். டிசம்பர் மாதம் முதல் தேதி கனமழை, வெள்ள அபாயம் என சேதி வந்தபோது சேலத்தில் இருந்தேன். அன்றிரவே, ரயிலைப் பிடித்து, சென்னை வந்தேன். என்றாலும், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், நான் வருவதற்கு முன்னதாகவே குறைந்தபட்சம் நூறு இடங்களில் எங்கள் தொண்டர்கள் மீட்புப் பணிகளை ஆரம்பித்து விட்டனர். சக மனிதர்கள் பாதிக்கப்படுவதை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல், தாங்களாகவே பணிகளை ஆரம்பித்து விடுவார்கள். இதைத்தான் எங்கள் இயக்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது’ என்று பெருமையாகச் சொல்கிறார் ராம.ராஜசேகர்.
வில்லிவாக்கத்தில் தள்ளுவண்டிகளை வைத்துக் கொண்டு மார்பளவு வெள்ளத்தில் நின்றவாறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். வடபழனியில், இரண்டு டிரம்களை கயிற்றின் மூலமாக இணைத்து மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். வளசரவாக்கத்தில், லாரி டயர்களைக் கொண்டு மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் மக்களை வெள்ளத்திலிருந்து இவர்கள் மீட்டுள்ளனர் என்பது வெளியே தெரியவராத தகவல்.

புரசைவாக்கத்தில் முதல் மையத்தை அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2-ஆம் தேதி ஆரம்பித்தோம். அதற்கு முன்னதாகவே, சென்னையின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறு மையங்களை அமைத்து விட்டனர். குரோம்பேட்டை, மணலி, வில்லிவாக்கம், கே.கே.நகர் என 17 இடங்களில் சேவா மையங்களை அமைத்துள்ளோம். அவற்றின் கீழ் பல துணை சேவை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சேவா மையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குச் சொந்தமான பள்ளிகள், ஆதரவாளர்களின் மண்டபங்கள், வீடுகள் எல்லாமே ஏதோ வகையில் சேவா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படியாக சென்னையில் மட்டுமே 83 இடங்களில் சேவைகளை ஒருங்கிணைத்துள்ளோம். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை, இந்த மையங்களில் உள்ளவர்கள் புரசைவாக்கத்தில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்’ என்கிறார் ராம.ராஜசேகர்.
ஓட்டேரியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் தெருவில் மார்பளவு வெள்ளத்தில் மிதந்தபடி சென்று வீடு வீடாக உணவு கொடுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். மாடியில் இருந்து இறங்கிவரும் ஒரு மூதாட்டி, “வெள்ளத்திலும் வீடு தேடி வந்து உணவு கொடுக்கும் நீங்கள் நல்லா இருக்கோணும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்.
வில்லிவாக்கம், சிட்கோ நகரில் தள்ளுவண்டியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடம் தனது மனைவி, குழந்தைகளைக் கொடுத்து “இவர்களை பத்திரமாக மீட்டுத் தாருங்கள். நான் அடுத்த படகில் வருகிறேன்’ என்று ஒரு முஸ்லிம் சகோதரர் கூறுகிறார்.

மீட்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு கிடைப்பதையும் இவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். வெள்ள பாதிப்புக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 50 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முகாமிலும், ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெற்று வருகிறார்கள். சேற்றுப் புண்ணுக்கான மருந்தில் இருந்து, பிளீச்சிங் பவுடர் வரைக்கும், குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் இருந்து பெண்களுக்குத் தேவையான பிரத்யேக பொருள்கள் வரைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் மருத்துவ முகாம்களில் கிடைக்கின்றன. அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள் தாங்களாக முன்வந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதையும், நூற்றுக் கணக்கான மக்கள் முகாமுக்கு வந்து மருந்துகளை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.

சைதாப்பேட்டையில் இருக்கிறது செட்டித் தோட்டம் என்ற எளியவர்கள் வாழும் பிரதேசம். இயற்கையின் சீற்றத்தில் சிக்கிச் சின்னாபின்னமான இப்பகுதியில் நுழைபவர்களைக் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம்தான் வரவேற்கிறது. அங்கே, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த பல நூறு இளைஞர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 அடித்தட்டு மக்கள் வாழும் இங்கே, முழு நேர மீட்புப் பணிகளையும், துப்புரவுப் பணிகளையும் இவர்கள்தான் செய்கிறார்கள்.
“ஏழைகளின் பாதையில் குறுக்கிடும் எல்லாவற்றையும் களைவதுதான் எமது நோக்கம்’ எனச் சிரித்தவாறு சொல்கிறார் ரவூப். இவர் பெங்களூரில், பிரபல மென்பொருள் நிறுவனமொன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவரின் நண்பர் வசீம் அக்ரம், பல் மருத்துவர். இவர்கள் அனைவருமே, எந்த விதமான முகச்சுளிப்பும் இல்லாமல், குடலைப் புரட்டும் துர்நாற்றத்துக்குள்ளும் இறங்கி “தனி ஒருவ’னாக வேலை பார்க்கிறார்கள். வெள்ளம் அடித்துவிட்டுச் சென்ற குப்பைக் கூளங்களை, தொழில் முறை வழக்குரைஞரான முகமது யூசுப், தனது கைகளால் அள்ளிச் சுத்தம் செய்கிறார்.

“எமது சக மனிதர்கள் துன்பப்படும்போது எப்படித்தான் வாய்மூடி மௌனியாகப் பார்த்துக் கொண்டிருப்பது?’ எனக் கேட்டு அமைதியாகப் புன்னகைக்கிறார் ஹாஜா கனி, த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர். வரலாறுகாணாத இந்த வெள்ளத்தில் த.மு.மு.க.வினர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
கடந்த மாதம் 15-ஆம் தேதி, முதல் கட்ட மழை தொடங்கியபோதே த.மு.மு.க. மாணவர் அணியினர் களத்தில் இறங்கி எந்தெந்த இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்பதை சர்வே எடுத்து அதை அறிக்கையாகத் தயார்செய்து, தாம்பரம் நகராட்சியிடம் கொடுத்ததுள்ளனர். 16-ஆம் தேதியன்றே சுமார் 30 பேர் வரைக்கும் பயணிக்கக் கூடிய படகொன்றை கோவளத்தில் இருந்து தருவித்து, இரவும் பகலுமாக ஓட்டி அன்று மட்டுமே சுமார் ஆயிரம் பேரை த.மு.மு.க. தொண்டர்கள் மீட்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல், இரவு பகலாக இவர்களின் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட முன் அனுபவங்களும், பயிற்சிகளும் இருந்ததால் இலகுவாக இயங்கக் கூடியதாக இருந்தது என்கிறார்கள் த.மு.மு.க. தொண்டர்கள்.
“முடிச்சூர் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்து முப்பதே நாளான பச்சிளம் குழந்தையுடன் ஒரு குடும்பம் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வந்தன. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அந்தப் பகுதிக்கு சென்றோம். பெருமழை. மின்சாரம் இல்லாமல், அந்தப் பிரதேசமே கும்மிருட்டாக இருந்தது. கரண்ட் கம்பிகளைப் பிடித்து எம்மை சமநிலைப்படுத்தியவாறு சென்று அவர்களை மீட்டோம். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகமும், அந்தத் தாயின் பரிதவிப்பும் இன்னும் கண்களில் நிற்கிறது. சக மனிதர்களுக்கு உதவுவதைத்தானே இஸ்லாம் போதிக்கிறது…’ – கண்களில் அமைதியுடன் பேசுகிறார் யாகூப்.
பெரியார் சமத்துவபுரம், முடிச்சூர் சாலை, கிஷ்கிந்தா ஆகிய பகுதிகளில் த.மு.மு.க.வினர் பெருமளவு மீட்புப் பணிகளை மேற்க்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களும், மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக பாரபட்சமின்றி திறந்து விடப்பட்டன. சாதி, மத பேதமின்றி அனைவருமே அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம் பகுதியில் மட்டுமே சுமார் 3,000 பேரை இவர்கள் மீட்டுள்ளனர் என்பது அதிசயிக்கவைக்கும் புள்ளி விபரம்தான்.

தாவூத் மியாகான். காயிதே மில்லத்தின் பேரன். இந்த வெள்ளக் காலத்தில் இவர் செய்தவை அளப்பரிய பணிகள்தான். மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியை மையமாக வைத்து இவர்கள் சுமார் 1,000 பேருக்கு உணவளித்து வருகிறனர். அந்தக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். கூடவே, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்களையும் வழங்கி வருகிறார்கள். பல இடங்களில் பிரதான வீதிகளில் மட்டுமே மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக செம்மஞ்சேரியின் உட்புறமாக, உணவில்லாமல், வெள்ளத்தில் தவித்த பல நூறு குடும்பங்களை மீட்டுள்ளனர். 2,500 லிட்டர் ஆரோ பிளாண்டை மக்களுக்காக திறந்துவிட்டு மக்களின் துயரைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முஸ்லிம் சகோதரர்களால் மீட்டு வரப்பட்டு, தாம்பரம் பேபி பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் பேருக்கு துறைமுகச்செல்வி என்பவர் மூன்று வேளையும் உணவு கொடுக்க முன்வந்தார். முஸ்லிம் அமைப்புகளுக்கும், துறைமுகச் செல்விக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் தாம்பரம் இன்ஸ்பெக்டர் ஆல்வின் ராஜ்.
சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜமியத் உலமாயே ஹிந்த் அமைப்பின் சார்பில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை 15,000 உணவுப் பொட்டலங்களும், வில்லிவாக்கம், திருநின்றவூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை 3,648 உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இது தவிர 10,000 குடும்பங்களுக்கு போர்வை, பாத்திரங்கள், உணவுப் பொருள்கள் கொண்ட பெரிய பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நந்தனம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, முத்தமிழ் நகர், பொழிச்சலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,800 பைகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோட்டூர்புரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. புரசைவாக்கம் பெரிய மசூதியின் சார்பில் 30,000 உணவுப் பொட்டலங்களும், பாத்திரங்கள், ஆடைகள் கொண்ட பெரிய பைகள் 3,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இருக்கிறதா? என்பது தொடர்பாக நாம் நடத்திவரும் வீண் விவாதங்களுக்கான பதில் இந்தச் சம்பவங்களிலேயே ஒளிந்துள்ளது. இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?

Source……..By -அருளினியன்  in http://www.dinamani.com

Natarajan

 

Message for the Day…” Our Mental tendencies [samskaras] are like Flowing Water …”

Have the Lord’s name within and the practice of your duty(swadharma) without. Even while engaging in selfless service, let your mind repeat the Lord’s Name. When rains pour on the mountain peaks and the water hurries down on all sides, no river emerges therefrom. However when the waters flow in a single direction, first a brook, then a stream, then a torrent, and finally a river is formed, and the rains reach the sea. Water that runs in one direction reaches the sea; water that flows in four directions soaks in and is lost. Mental tendencies (samskaras) are like this. Of what use are they if they merely come and go, this way today and that way tomorrow? The holy stream of good inborn desires must flow full and steady along the fields of holy thoughts and finally abide in the great ocean of bliss at the moment of death.

Sathya Sai Baba

” If you can keep it for a Day, then Why not Always ….” ?

The merry season comes and goes, and once the decorations are packed up, presents are opened and the celebrations draw to a close, so does the Christmas spirit, and all the love, thoughtfulness, and unity that it brings. But what is it that discourages us from celebrating this joyous feast all year round? This year, with all my kind greetings and wishes, I would like to send you a reminder about something that is better than the observance of Christmas day, and that is – keeping Christmas.

 

Are you willing…

 

…to forget what you have done for other people,
and to remember what other people have done for you?

 

…to ignore what the world owes you,
and to think what you owe the world?

 

…to put your rights in the background,
and your duties in the middle distance,
and your chances to do a little more than your duty
in the foreground?

Keeping Christmas

Are you willing…

 

…to see that men and women are just as real as you are,
and try to look behind their faces to their hearts,
hungry for joy?

 

…to own up to the fact that probably the only good reason
for your existence is not what you are going to get out of life,
but what you are going to give to life?

 

…to close your book of complaints against the management of the universe, and look around you for a place where
you can sow a few seeds of happiness?

Are you willing to do these things even for a day?
Then you can keep Christmas.

 

Are you willing to stoop down and consider
the needs and desires of little children?

And to remember the weakness and loneliness of people growing old?

Keeping Christmas

Are you willing…

 

…to stop asking how much your friends love you,
and ask yourself whether you love them enough?

 

…to bear in mind the things that other people have to bear in their hearts to try to understand what those who live in the same home with you really want, without waiting
for them to tell you?

Keeping Christmas

Are you willing…

 

…to trim your lamp so that it will give more light and less smoke, and to carry it in front
so that your shadow will fall behind you?

 

…to make a grave for your ugly thoughts, and a garden with an open gate for your kind feelings ?

Keeping Christmas

Are you willing…
…to believe that love is the strongest thing in the world? Stronger than hate, stronger than evil,
stronger than death?
And that the blessed life which began in Bethlehem
1,900 years ago is the image and brightness
of the Eternal Love?

 

Are you willing to do these things, even for a day?

Keeping Christmas

Then you can keep Christmas.

 

And if you can keep it for a day,

why not always?


 

Share this reflection with your loved ones to wish them a happy Christmas, this year, and every day…

Source…….www.ba-bamail.com

Natarajan

“This Looks Like A Petri Dish Full Of Microorganisms, But It’s So Much Cooler”..

People often categorize others by describing them as being “left-brained” or “right-brained.” People who are more logical, strategic, and rational are placed in the former category, and those who are more creative, intuitive, and artistic are placed in the latter.

While it’s obvious that most people embody different combinations of the two, it’s fair to say that plenty of us fall further to one side than the other. One creator who appears to fall somewhere in the middle is Anglo-Irish artist Rogan Brown. His creations are aesthetically stunning, and they’re inspired by the building blocks of scientific study.

His latest collection is called Magic Circle Variations, and it’s designed to straddle the fence between what’s real and what’s imagined.

His latest collection is called <em>Magic Circle Variations</em>, and it's designed to straddle the fence between what's real and what's imagined.

In the artist’s words, “Reality is transformed and estranged through the creative process, which paradoxically makes the finished work more real and unique.”

In the artist's words, "Reality is transformed and estranged through the creative process, which paradoxically makes the finished work more real and unique."

He makes hundreds of these intricate paper cuttings for every single piece.

He makes hundreds of these intricate paper cuttings for every single piece.

Some of Brown’s earlier work was exclusively hand cut, but this collection combines hand-cut designs with others that were created with lasers.

 

Some of Brown's earlier work was exclusively hand cut, but this collection combines hand-cut designs with others that were created with lasers.

When coming up with the concept and direction of each piece, he studied the imagery of bacteria, coral, pathogens, and diatoms. Beyond that, the compositions are fictive, imagined, and totally original.

When coming up with the concept and direction of each piece, he studied the imagery of bacteria, coral, pathogens, and diatoms. Beyond that, the compositions are fictive, imagined, and totally original.

(via My Modern Met)

Although he cites model-making and scientific drawing as inspirations for this collection, “everything has to be refracted through the prism of the imagination.” It’s not often that an artist is able to steer vastly different worlds into such an incredible collision.

To see more of Rogan Brown’s work, be sure to check out his online portfolio and follow him on Facebook.

Source….Madeline Distasio   in.www.viralnova.com

Natarajan

” உலகம் அழிந்துபோகாததற்கு இவர்கள்தான் காரணம்…”

சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும் இந்தப் பேரிடருக்குள் சிக்கிக்கொண்டு தள்ளாடினோம்; தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்; தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறோம், முற்றிலும் வீழ்ந்துபோய்விடவில்லை. இதற்குக் காரணம் மழை, வெள்ளத் தாண்டவத்தின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயத்தைக் காட்டியவர்கள்தான்.

பெரிய பெரிய விஷயத்துக்கெல்லாம் போகத் தேவையில்லை. மழை ஓய்ந்த பிறகு, நீரின் முற்றுகையில் நான்கு நாட்கள் தவித்த பிறகு நண்பர் ஒருவர் மடிப்பாக்கத்தில் மூழ்கிய தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பி நடந்துவந்துகொண்டிருக்கிறார். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் ஒரு கார் வந்து நிற்பதுபோல் தோன்றியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் காரிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிச் செல்வது தெரிந்திருக்கிறது. நண்பர் மேற்கொண்டு தன் வழியைப் பார்த்து நடந்து சென்றிருக்கிறார். கார் ஹாரன் சத்தம் கேட்டிருக்கிறது. நண்பர் ஓரமாக நடக்க முயன்றிருக்கிறார். அவரைச் சற்றுக் கடந்து பக்கவாட்டில் வந்து நின்றிருக்கிறது கார்.

கார்காரர் காரின் ஜன்னலை இறக்கிவிட்டுப் பாதசாரி நண்பரை அழைத்து “எங்கே போகணும் சொல்லுங்க, இறக்கிவிடுகிறேன்” என்றிருக்கிறார். நண்பருக்கு பேச்சே வரவில்லை. காருக்குள் ஏறிப் பின்சீட்டில் அமர்ந்துகொள்கிறார். நம்மிடம் இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டபோது நண்பர் இப்படிச்சொன்னார், “இதுபோன்ற ஒரு உதவியை இதற்கு முன் செய்தது ஒரு மீன்பாடி வண்டிக்காரர்தான். நடு இரவில் குழந்தைகள் மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றுவிட, என்ன செய்வதென்று நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த மீன்பாடிக்காரர் தானாகவே வந்து, என்ன விஷயம் என்று கேட்டு உதவி செய்தார். அடித்தட்டு மக்கள் எப்போதும் அப்படித்தான். அதில் எந்த அதிசயமும் இல்லை.

ஆனால், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தானாக லிஃப்ட் கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்தியது இந்த மழை, வெள்ளம்தான். காரில் உட்கார்ந்த பிறகுதான் உணர்ந்தேன், எனக்கு முன்னாலும் அவர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து இறக்கி விட்டிருக்கிறார்.”

காரில் லிஃப்ட் கொடுப்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இந்த மழை, வெள்ளம் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாய்ந்து, அதன் உள்ளே புதைந்துபோயிருந்த பரிவுணர்வையெல்லாம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பருக்கை பதம் இது.

சிறிய அளவில் இப்படியென்றால் பெரிய அளவில் எத்தனையோ பேர் என்னவெல்லாமோ செய்து, ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களையெல்லாம் குற்றவுணர்வு கொள்ளவும் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் முகமற்றவர்கள். அதாவது, சமூகத்தால் அறியப்படாதவர்கள் என்பதுதான் மகத்தான செய்தி. உதவி செய்ய வந்தவர்களின் முகத்தில் மனிதம் என்ற ஸ்டிக்கரைத் தவிர வேறு ஏதும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் கவனித்தாக வேண்டும். முகம் தெரிந்த மனிதர்களுக்குச் சளைக்காமல் முகம்தெரியாத மனிதர்கள் எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளைச் செய்து தமிழக, இந்திய மக்களை மட்டுமல்ல உலகத்தினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

அடையாறுக்குப் பக்கத்தில் மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் பகுதியொன்றில் ஒருவர் தனது முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, பெரிய பாத்திரத்தில் சூடாகப் பால் காய்ச்சிக்கொண்டு, தண்ணீரில் கவனமாக நடந்துசென்று சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விநியோகித்திருக்கிறார். அவர் யார் என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் முக்கியமில்லாத விஷயம், நான் போய் இன்னும் பால் எடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மனிதத்துக்கு சாதி, மதம், மொழி மட்டுமல்ல முகமும் கிடையாது என்பதை அவர் நிரூபித்துவிட்டிருக்கிறார்.

இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. இன்னொரு நண்பர் சொன்ன தகவல். சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.

சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.

நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”

அந்தப் பெண்மணியின் வீட்டை வெள்ளம் முழுவதுமாக மூழ்கடித்துவிட்டது. கணவர், குழந்தைகளெல்லாம் எங்கெங்கோ தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அலுவலகம் ஒன்றில் துப்புரவுப் பணியைச் செய்துவருபவர் அவர். எல்லாவற்றையும் இழந்திருக்கும் நிலையில் அப்படியே சும்மா இருந்துவிட முடியுமா? பிழைப்பு நடத்தியாக வேண்டுமல்லவா! அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார்.

வேலை முடிந்த பின் எங்கே செல்வீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “வீட்டுக்குத்தான்” என்று பதில் வந்தது. இந்த நிலையில் வீட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டால், “பாவங்க, ஏழு தெருநாய்களுக்கு நான்தான் சோறு போட்டு வளக்குறேன். நான் இல்லாட்டி அதுங்க அவ்வளவுதான். அதுங்களுக்காக நான் அங்க போய்த்தானே ஆவணும்.”

அதே போல் ஹிப்ஹாப் தமிழன் பகிர்ந்துகொண்ட செய்தி இது: “வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம்-ஆர்.ஏ.புரம் பகுதிக்கு நடுவில்தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரமோ தொலைத்தொடர்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு.

சரி தப்பித்துவிட்டோமே, கிளம்பிவிடலாமா என நினைத்துத் தெருமுனைக்குச் சென்றால், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணிப்பெண் விஜயா அக்கா ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் சமைத்துக்கொண்டிருக்கிறார். “தம்பி ஏரியா பூரா தண்ணிபா, நம்ம ஸ்டூடியோல இருக்குற தண்ணி கேனை எடுத்துக் குடுத்துறலாமா” எனக் கேட்கிறார். இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைஃபாய்டு வேறு. செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்தச் சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? இதில் நாம் வேறு கோவை கிளம்பிவிடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சீ என்று தோன்றியது.’

இவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தாலும் தினசரி சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்வு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களுடையது. ஆனால், அந்த நிலையிலும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ஒரு நாள் பட்டினி கிடந்து சென்னைக்கு நிவாரணமாக ஒரு லட்சம் அனுப்பியிருக்கிறார்கள். சமூகத்தால் கொஞ்சம் கூட பொருட்படுத்தப்படாதவர்கள் நரிக்குறவர் இன மக்கள். இந்நிலையில் அவினாசியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வெள்ள நிவாரணத்துக்காக 100 பாய்களை வழங்கியிருக்கிறார்கள்.

இருப்பவர் கொடுப்பதைவிட இல்லாதவர்கள் கொடுப்பது அளவில் எவ்வளவு சிறிதானாலும் மதிப்பில் கோடி கோடி மடங்கு உயர்ந்தது என்பதைப் பாலியல் தொழிலாளிகளும் நரிக்குறவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ‘மகாத்மா’ குணம் உறைந்திருக்கிறது. ஆனால், அதை உசுப்பிவிட்டு உயிர் கொடுத்திருப்பது இவர்கள் மட்டும்தான். ஆகவே, இவர்களை ‘மகாத்மாக்கள்’ என்று அழைப்பதில் எந்தத் தவறுமில்லை.

சென்னை வீழ்ந்துபோகாததற்கு மட்டுமல்ல, உலகம் இன்னும் அழிந்துபோகாததற்கும் இந்த மகாத்மாக்கள்தான் காரணம். ஏனென்றால், இன்னொரு மகாத்மா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள், உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.”

Source…….www.tamil.thehindu.com

Natarajan