Norwegian has launched the world’s longest low-cost flight — and it’ll get you to Singapore for less than £150….London to Singapore !

 

Norwegian has launched the world’s longest low-cost flight — and it’ll only cost you £149.90.

The route runs from London Gatwick to Singapore Changi Airport, and departs for the first time on Thursday.

The route takes 12 hours and 45 minutes and will cover 6,764 miles (10,885 km) — making it the longest non-stop flight operated by a low-cost carrier.

The route — announced in April — is scheduled to run four times per week.

Thursday’s flight is due to depart at 10.30 a.m. and land in Singapore at 6.15 a.m Friday morning local time.

The flights use brand new Boeing 787-9 Dreamliner aircraft, and start at £149.90 for a one-way ticket.

All seats on the Dreamliner have personal 11-inch seat-back screens and USB ports.

A higher price of £699.90 one way will get passengers “Premium” status. That means “spacious cradle seating” with more than a metre of legroom, and free lounge access at Gatwick.

The Singapore route is part of the airline’s continued global expansion.

In February, it announced that it will launch flights from the US Northeast to Europe for as little as $65 (£50). Then, in July, it announced direct flights from London to Chicago and Austin from £179.

In February 2018, Norwegian will also start flying to Buenos Aires.

Bjørn Kjos, CEO of Norwegian, said in a press release: “I’m delighted to build upon our popular USA flights and give leisure and business customers more affordable access to Singapore and the Asia-Pacific like never before.

“The 787 Dreamliner has the range to allow us to expand our long-haul services to other parts of the world while keeping fares affordable for all.

“This is just the start of Norwegian’s UK expansion into new markets as we will continue connecting destinations where fares have been too high for too long.”

Source….www.businessinsider.com

Natarajan

 

வாரம் ஒரு கவிதை….” பறவையின் மனசு “

 

பறவையின் மனசு
——————–
பறவைக்கும் உண்டு மனசு ..
சிறகு கட்டிப் பறக்கும் அதன்
மனசும்… ஆசையும் பாசமும்
பறவைக்கும் சொந்தமே !
ஆனால் இலக்கு  ஒன்று மட்டுமே
பறவைக்கு குறி ! விதி விலக்கு
இல்லையே இதில் எந்த ஒரு பறவைக்கும் !
கண்டம் விட்டு கண்டம் பறக்கும்
பறவை எந்த பள்ளியில் படித்தது ?
எங்கே பாடம் கற்றது விண் வெளியில்
தன் பயண  வழி தேட ?
மனிதன் கற்க வேண்டும் பாடம்
ஒரு பறவையிடம் இன்று
தன்  இலக்கு நோக்கி சரியான
வழியில் பயணிக்க !
இங்கும் அங்கும் அலையாமல்
ஒரு  வழி அதுவும் நேர் வழியில்
பயணித்து  தன் வாழ்வின்  சிகரம்
தொட  இன்று மனிதனுக்கு  தேவை
பறவை சொல்லும் பாடம் !
Natarajan
in http://www.dinamani.com dated 25th Sep 2017

“மிகவும் தொன்மை வாய்ந்த வாய்ஸ் ரெக்கார்டர் எது தெரியுமா …? “

 

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார்.

திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், ”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பி த்தார்

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர்.

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம்.

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார்.

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார்.

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார்.

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார்.

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர்.

ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான்.

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும்.

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை.

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர்.

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

Source….FB input from Mohan Krishnaswamy and Subramanian Thanappa

Natarajan

” நவராத்திரி கொலு வைக்கணுமாம் ……”

 

நவராத்திரி கொலு

(Thanks to the Original Uploader. சம்பவத்தின் கடைசிப் பகுதியை படித்து அழாதவர்கள் இருக்க முடியாது)

காவேரிக் கரையில் உள்ள மண், மக்கள், ஆடு மாடு அத்தனையுமே செழிப்புதான் !

கும்பகோணம், திருச்சி அதைச் சுற்றிய க்ராமங்கள்…..பசுமையை வாரித் தெளித்திருக்கும்.

இந்த மாதிரி ஒரு அழகான, ப சுமையான க்ராமம்தான் களத்தூர் !

அந்த ஊரில் உள்ள துர்க்கா பரமேஶ்வரியின் கோவில் மிகவும் அழகானது. சிறிய கோவில் என்றாலும், பூஜைக்கு குறைவில்லாமல் இருந்தது.

அந்தக் கோவிலின் தர்மகர்த்தா அம்பாளின் கைங்கர்யமே வாழ்வாகக் கொண்டவர். மிக மிக நல்ல மனுஷ்யன். நவராத்ரி வந்துவிட்டால், கோவிலா, வீடா என்று போட்டி போட்டுக் கொண்டு அம்பாளுக்கு ஒன்பது நாளும் அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழித்து அப்படிக் கொண்டாடுவார்.

அண்டா அண்டாவாக சுண்டலும், இனிப்பும் ஒரு பக்கம் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அக்கம்பக்கம் இருக்கும் க்ராமங்களில் இருந்தெல்லாம் பசியோடு வருபவர்களுடைய குக்ஷியில் போய்ச் சேரும்.

தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். நாம் எல்லாருமே பிறக்கும் போதே, பிடரியில் மஹிஷவாஹனனை உட்கார வைத்துக் கொண்டுதானே பிறக்கிறோம்?
அந்த ஜன்மத்தில் வந்த பந்தபாஶங்களை அறுத்து, இருப்போர், போனவர் எல்லாரையும் நிலைகுலையச் செய்து, அடுத்த பிறவியில் தள்ளும், பாஶக் கயிற்றை, எந்த க்ஷணத்தில் நம் கழுத்தில் இறுக்குவான் என்பதே தெரியாதே !

மஹிஷாஸுர மர்த்தினியான லலிதாம்பிகையின் அம்புஜ ஶரணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அவளுடைய இடது கரத்தில் உள்ள பாஶமானது, மஹிஷவாஹனனின் பாஶக் கயிற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவா பெருநிலையை அனாயாஸமாக அளித்துவிடுமே !

தர்மகர்த்தா இப்படித்தான் ‘பட்’டென்று ஒரு க்ஷணத்தில் காலமாகிவிட்டார் ! கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது ! ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள்.

தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, “ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்” என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு ! என்பதாக காணாமல் போனார்கள்.
கொஞ்சமும் மனஸை தளரவிடாமல், வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்சமிருந்த தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்றுக் காஸாக்கி, தன்னுடைய ஶக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.

பையன்களில் மூத்தவன் காலேஜ் முடித்ததும், “அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு !…” என்று சொல்லுவதாக
கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது !

படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, ‘நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !’ என்று ‘டாடா’ காட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டான் ! தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொண்டான்.

அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக, தர்மத்தை கடைப்பிடித்தது ஸ்ரீராமனின் தம்பிகள்தான் !
இப்போது, கலியில், அண்ணாவைப் போல் ‘அதர்மத்தை’ கடைப்பிடித்து, அவன் போன மாதிரியே, அம்மாவையும், கடைசி தம்பி ரமணியையும் அதோகதியாக்கிவிட்டு, மற்ற மூன்று பிள்ளைகளும் நடையைக் கட்டினர்!

ரமணி அப்போது ஒன்பதாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது ! வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே! மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள்.

சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் ! இவர்கள் குடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடையக்கூடியதாக இல்லை!

கடன்காரர்கள் வாயில் வந்ததைப் பேசும்போது, தன்னுடைய அம்மாவின் நல்லகுணத்துக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே ! என்று தாங்காமல், அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழுதான், குழந்தை ரமணி.
அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா !

கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்…..அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம்,

” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே.
அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணிய ஒடனே எங்கிட்ட அனுப்பு…” என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.

“ரமணி….கண்ணு…..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நவராத்ரி கொலு வெக்கணுமாம்….. ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!..”

“அம்மா…பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?….”

இருவருமே இது வெறும் கனவுதான்! என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே ! விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே?

“பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்…”

விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.

“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்……இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம்
எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் ! செரியா?….” சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட,
“மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார் !… எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடியை நோக்கி..”வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..” என்றதும் “இதோ வரேன் சித்தப்பா!…” என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

“அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல
கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா…ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”
அம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர் !
இது பெரியவா போட்ட அடுத்த “ஆனந்த குண்டு” !

“அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து…..”அதான் பெரியவா…!” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் !

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி ! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே…எனக்கு உள்ள வேலையிருக்கு…..பெரியவாளை
தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா….வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், “இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நா…பெரியவாளைப் பாக்கறது!” என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!

“செரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்” என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு
“ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்…..

“நீதானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…..”

முழித்தான்!”

இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.. ”

ரமணிக்கு இது “மூணாவது ஆனந்த குண்டு”

“என்னடா? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..” என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்,
ஒரு பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.

இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும்,
“பெரியவா!……ஓ!….என்னோட பெரியவா!” என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்…..

“ரமணி!….அழாதேப்பா…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…”

தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

“பெரியவா……எங்கப்பா தர்மகர்த்தா…. அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்…..என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா….. மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா…..

……பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு பேசறா! நா…..படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்….. அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா……”

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான் !
பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா…..

“அழாதே……கண்ணைத் தொடச்சுக்கோ! நா…..சொல்றதக் கேளு…..

நாலாவது “ஆனந்த குண்டு”……

“….இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ;
நவராத்ரி பூஜையும்பண்றதில்ல…அப்டித்தானே?”

“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம்’-னு நிரூபிச்சுட்டாரே!” அதிர்ந்து போனான் ரமணி.

“ஆமா…….பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”

“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”
என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை
விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.

“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா…காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…”
என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார்.

அவரும் ரமணியிடம்,
“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!…” என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம், “என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா….இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…” அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்
“கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? ‘இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?’-ன்னு கேட்டியாமே !
அந்த “இதுக்குத்தானா” குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப…..செரி செரி ….ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு….பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! ”

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்
“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ! [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான் … பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு !

“என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?…..” இப்படியாக ஒரே கேள்வி மயம்!

” அம்மா…அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது…ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு
போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு
நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்’-ம்மா!”

“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு….அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு… வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?…

“பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல….இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்…நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா! அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா!
கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”

ஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், ‘போறாது, போறாது’ என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை!

பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

காரணம்?

“நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே……”
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.

அதோ…..மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!”

அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்….எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்”
அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்……
அதில் பொம்மை இல்லை! ஆனால்…..இதென்ன?

ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது!
பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப் பார்த்தாலே புரிந்தது.

“என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா….இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”

“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”

“உங்கள் பாரம் எனதே! ” என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால்
, “ஓடு! பெரியவாளிடம்!..” என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்!

முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை! அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி? தெளிவு?

” நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான், மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்!”

“என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை? பயம்?……ஆனந்தமோ ஆனந்தம் மட்டுமே!”

இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்! வேறு எதுவுமே இல்லை!

பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்…?

ரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார்.சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!

பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம்
ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.
“ஸரஸ்வதி மஹால்…அங்கெல்லாம் விஜாரிச்சியோ?..”

“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட
விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா…..அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு…. எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா!
ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது…. இதான் என்னோட ப்ரார்த்தனை!….”
கண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,
“வாடா! கொழந்தே! வா….வா” என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான்.

தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா… “என்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும், “ம்ம்….நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு! ”

இது ஐந்தாம் ஆனந்த குண்டு!

” இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா…… நீங்க படிக்க வேணாமா?…” என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.”

“நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்…..அது! ”
என்னது! அவரோ வாய்விட்டு அழுதேவிட்டார்!

“ஓ ….பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா? இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல பெரியவா…!” இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……” என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்….. அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்…”

அழகாக சிரித்துக் கொண்டே….” ஏது? ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே!…” என்று சொல்லிவிட்டு, ரமணியிடம், “இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!…. இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப்
போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!…”

“ஹா……!! பெரியவா…! நா…ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?…”

கூடவே ரமணியும் கபடில்லாமல் “அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?…”
பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

“செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!…”

அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், “ப்பூ!…” என்று ஊதித் தள்ளப்பட்டது !
நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான “ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர” ஸரஸ்வதி !

ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் “ஶங்கரா” என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி!

அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்! நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்!

வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக்
கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும்
இருந்தார்.

Source….Ramjee .N in FB input ….Forum for World’s Brahmin Unity & Welfare

Natarajan

திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?

 

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.
எப்படி..?

பெருமாள்

திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான ‘கோகர்ப்ப ஜலபாகம்’ என்னும் குளத்தைத் தோண்ட  பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது. திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வான்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அனந்தாழ்வான்?

வாருங்கள் திருவரங்கத்துக்குச் செல்வோம்…

திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. ‘நாம் திருவரங்கத்தில் நந்தவனமும், தபோவனமும் அமைத்துக்கொண்டு பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக் கிறோம். ஆனால்,  ‘சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்’ என சதா சர்வகாலமும் பாடிப் புகழும் வேங்கடமுடையானுக்கு இப்படி ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே’ என்பதுதான் அவருடைய ஆதங்கம்.

அதை ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தும்விட்டார். தெரிவித்ததோடு நில்லாமல், ‘உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக்கொள்ளப் போகிறீர் ?’ எனக் கேட்கவும் செய்தார். ஆனால், பசுஞ்சோலைகளும் மருதாணிப் பூக்களும் செழித்துக் கிடக்கும் காவிரிக்கரையில் நீராடிவிட்டு, அரங்கனைத் தொழும்போது கிடைக்கும் சுகானுபவம் வேறெங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எவரும் வாய் திறக்கவில்லை.

‘குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?’ என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான், கண்களில் வைராக்கியம். உதட்டில் புன்முறுவல். அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு ‘திருமாலை சேவை’ செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.

‘அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். முதல் காரியமாக பெருமாளை வணங்கிவிட்டு வந்து உணவு அருந்துங்கள். களைப்பு தீர ஓய்வு எடுங்கள். நாளை முதல் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம்’ என்றார். அனந்தாழ்வானும் அவரது மனைவியும் அப்படியே செய்தனர்.

திருமலையில்  குடிசை ஒன்றைக் கட்டினார்.  அதனருகே நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி ‘ராமாநுஜ நந்தவனம்’ என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் செடிகள் பூத்துக் குலுங்கின. தண்ணீர் பிரச்னை எழவில்லை. கோடைக் காலத்தின்  தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே சிறுபள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்இட்டு உயரமாக நிரப்பி, பள்ளத்தை ஆழப்படுத்தினார். ‘நானும் உங்களுக்கு உதவுகிறேன்’ என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.

மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, ‘நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக, அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘உன் வேலை எதுவோ அதைப் போய் செய்’  என்று அனுப்பிவிட்டார்.

தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான்.
எனவே, ‘வேலை செய்ய கூலியே வேண்டாம். நான் மண் சுமக்கிறேன். மண் சுமந்த புண்ணியம் தங்கள் மனைவிக்கே கிடைக்கட்டும்’ என்றான் சிறுவன்.  ‘பாவ புண்ணிய விஷயங்களில் சிறுபையனான இவன் தனக்கு புத்திமதி சொல்கிறானே என ஆத்திரமுற்ற அவர் ‘அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாமல் போய்விடு. கண்டிப்பாக இவ்விஷயத்தில் நீ தலையிடாதே’ என்று சிறுவனைக்  கடிந்துகொண்டு அங்கிருந்து அனுப்பினார்.

சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட  வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார்.  அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. என்ன ஆச்சர்யம்… அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

” தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் ”என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.

‘சரி, தம்பி’ என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது.  திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. ‘மண்ணைக்  கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே’ என்று மனைவியைக் கேட்க, ”சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை”என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான்  கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான். இதனால், கோபம் தலைக்கேற கடப்பாறையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார்.  சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.

 

 

 

அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும் தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ‘அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்’ என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.

”சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க” என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.

‘அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.  ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்”என்று அசரீரியாகக் கேட்டார்.

”கருணைக் கடலே! உன் அருளே வேதனை போக்கும். கஷ்டம் துடைக்கும். என்னை மன்னியுங்கள் சுவாமி” என்றார். பெருமாளோ மோகனமாக தனக்கே உரிய புன்னகையை உதித்தார்.

‘சரி ‘ ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?’ என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.

‘சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்’ என்றார்.

அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும்விதமாகவே திருப்பதிப் பெருமாளின்தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

Source…

 எஸ்.கதிரேசன் in http://www.vikatan.com
Natarajan

“உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்… மீறினால் கொல்லப்படுவீர்கள்”! – திகில் தீவு செண்டினல்..

 

அந்தமான் பக்கத்தில் இருக்கிற குட்டித் தீவு செண்டினல். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் இருக்கிற மனிதர்கள் பற்றிய குறிப்புகளைப் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் வலை வீசித் தேடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்கள் பற்றிய ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது ஒட்டு மொத்த உலகமும். அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்புகளும்தான். தப்பிப் பிழைத்தவர்கள் வெளி உலகத்துக்குச் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் திகில் ரகம். செண்டினல் தீவு மக்கள் இந்த உலகத்துக்குச் சொல்வதெல்லாம் ஒன்றேயொன்றுதான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்.”

சம்பவம் ஒன்று:

ஆவணப்படக் குழு ஒன்று படப்பிடிப்புக்காக செண்டினல் தீவுக்குப் படகில் செல்கிறது. போகும் பொழுது சில பரிசுப் பொருள்களைக் குழு கொண்டு செல்கிறது. தீவில் கரை இறங்கிய இரண்டொரு வினாடிகளில் நான்கு புறமிருந்து ஈட்டிகளும் அம்புகளும் வந்து விழுகின்றன. பதறிப் போன மொத்த குழுவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். திரும்பி கரையைப் பார்க்கும்போது  ஒரு அம்பு படகில் வந்து குத்துகிறது. திரும்பி வரக் கூடாது என்பதற்கு எச்சரிக்கைதான் அந்த அம்பு. சம்பவம் நடந்த ஆண்டு 1974

சம்பவம் இரண்டு:

கப்பல் ஒன்று செண்டினல் தீவின் பவளப்பாறைகளில் மோதிக் கரை தட்டி நிற்கிறது. கப்பல் கேப்டன் உதவிக் கேட்டு காத்திருக்கிறார். இரண்டாவது நாள் அதிகாலையில் கரையை நோக்கி சிலர் வருகிறார்கள். உற்றுக் கவனித்ததில் வந்தவர்கள் எல்லோர் கையிலும் வில் அம்பு ஈட்டி என வைத்திருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் எல்லோரும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள். ஏதோ ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த கேப்டன் பதறிப்போய் வயர்லெஸ்ஸில் கடற்படைக்குத் தகவல் சொல்ல ஹெலிகாப்டரில் வந்து எல்லோரையும் மீட்டு வந்திருக்கிறது இந்திய கடற்படை. சம்பவம் நடந்த ஆண்டு 1981. கப்பலின் பெயர் ப்ரைம்ரோஸ். கூகுள் மேப்பில் இப்போதும் இந்த சிதிலமடைந்த கப்பலின் உருவம் தென்படுகிறது.

சம்பவம் மூன்று:

2006 ஜனவரி மாதம் இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு தீவின் கரையில் ஒதுங்குகிறார்கள். இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் இறந்துபோன உடல்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன. உடலெங்கும் ஈட்டி குத்திய தடயங்களுடன் கிடந்திருக்கின்றன. உடல்களை மீட்கச் சென்ற கடலோர காவல்படையினரை நோக்கி அம்புகளும் ஈட்டிகளும் வர உடல்களை மீட்காமலே திரும்பி இருக்கிறது கடற்படை.

60000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழங்குடியினர் வசிக்கிற தீவு செண்டினல். வங்காள விரிகுடா கடலில் இருக்கிறது. உலகம் இத்தீவில் இருக்கிற மக்களை செண்டினலீஸ் என அழைத்துக்கொண்டிருக்கிறது. அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கும் இந்தத் தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பசுமை சூழ்ந்த காடுகள் அழகிய மணல் பரப்புகளைக் கொண்ட தீவின் மொத்த பரப்பளவு 72 சதுர கிலோ மீட்டர்கள். தீவில் எத்தனைப்  பேர் இருக்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கம் என்ன என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இதுவரை இல்லை. மரங்களும் செடிகளும் சூழ்ந்திருப்பதால் ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. விலங்குகள், மீன்களை வேட்டையாடுவதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகின் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிற தீவில் 50ல் இருந்து 250 வரை மக்கள் தொகை இருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்தத் தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்திருக்கின்றன. ஆழிப்பேரலையில் எந்தப் பாதிப்பும் நிகழாமல் இருந்திருக்கிறது. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்த தீவு மக்கள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுனாமிக்கு பிறகான நாள்களில் செஞ்சிலுவைச் சங்கம் சென்டினல் தீவு மக்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை விமானத்தில் இருந்தபடியே போட்டிருக்கிறது. ஆனால், தீவு மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ஈட்டிகளையும் அம்புகளையும் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். விமானத்தை ஈட்டி பதம் பார்க்க, போன வழியிலேயே திரும்பி இருக்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

இந்தத் தீவுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியவர்களும் இருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் திருலோகிநாத் பண்டிட் என்கிறவரின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்கிறது. பல ஆண்டுகளாக அவர்களைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டு பயணித்திருக்கிறார். பல தடைகளுக்குப் பிறகு ஒரு முறை அம்மக்களை சந்தித்திருக்கிறார்கள். குழுவினர் கொடுத்த தேங்காய்களைப் பழங்குடியினர் பெற்றுக்கொண்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் குழுவினரை திரும்பிப் போகச் சொல்லி சைகை செய்திருக்கிறார்கள். குழு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறது.

அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டு மொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஜாரவா இன மக்கள் நவீன மக்களுடன் இணைந்து வாழும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஜாரவா மக்களிடம் சில வெளிநாட்டுப் பயணிகள் பழங்களைக் கொடுத்து ஆடச் சொல்கிற காணொளி ஒன்றை யூடியூபில் காணமுடிகிறது. பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் கொண்ட ஒர் இன மக்களை ஆடச் சொல்லி வேதனைப் பட வைத்திருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். செண்டினல் தீவு மக்கள் வெளி நபர்களை அனுமதிக்காமல் இருப்பதால்தான் இன்னமும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அனுமதித்திருந்தால் ஜாரவா இன மக்களுக்கு நேர்ந்ததைப் போல நடப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தீவுக்கு யாரும் போக கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது. தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது  இந்தியக் கடற்படை. அந்தமான் அரசு 2005-ம் ஆண்டு செண்டினல் மக்களின் வாழ்வியல் மீதும் வாழ்விடங்கள் மீதும் ஒரு போதும் தலையிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.

இறுதியாக ஒரு விஷயம். செண்டினல் என்கிறப்  பெயருக்கு “காவலாளி” என்று பொருள்.

Source:George Anthony in http://www.vikatan.com

Natarajan

 

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?…

 

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது. இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப் பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால் பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது.

சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால், நோய் வரும் முன் விரட்டலாம்.

வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும் வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள், நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.

நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது, நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான், நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக, ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும். பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு.

நான்கு வகை நவராத்திரி

ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வராஹி நவராத்திரி

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் – சாரதா நவராத்திரி

தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி – சியாமளா நவராத்திரி

பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வசந்த நவராத்திரி

இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும், பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.

அரிசி மாவு கோலம்

சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண் கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை, பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.

ஒன்பது நாட்களின் மகிமை

இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில், ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும்

குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா
என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், ‘பொம்மை கொலு’ வைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில், 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார். அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுவதும் உண்டு.

Source….www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை… ” பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் “

 

பிஞ்சு மனங்களும்  செல்ல மழையும் 
…………………………………………………………………
 
என் பிஞ்சு கைகளை ஆட்டி  கொஞ்சும்
மழலையில் நான் சொல்லிவிடுவேன் என்ன
வேண்டும் எனக்கு என்று !
எந்த மொழி பேசினாலும்  என் மழலை
மொழி புரியனுமே    என் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் !
என் மழலை கேட்டு அம்மா  அப்பா கொட்டும்
செல்ல மழையில்  நனையனும் நான் எப்போதும் !
என் மழலை வயதில் உங்க செல்ல மழை
மட்டுமே  வேண்டும் எனக்கு அம்மா …. அது ஒரு
இனிய தூறல் மழை ! பாசத்தின் சாரல் மழை !
இடி  மழை  எனக்கு வேண்டவே வேண்டாமே
இந்த பிஞ்சு வயதில் …தாங்க முடியுமா நான்
ஒரு இடி முழக்கத்தை இந்த வயதில் ?
புரிஞ்சுக்கணும் ஒரு பிஞ்சின் மனதை நீங்க
செல்ல மழை  பெய்ய வேண்டிய நேரத்தில்
தப்பாமல் பெய்ய வேண்டும் செல்ல மழை !
உங்க மனசு நான் புரிஞ்சு நடக்கும் காலம்
மலரும் நேரம்…. சொல்லாமல்
கொள்ளாமல்  ஓய்ந்து விடும் செல்ல மழை !
My Kavithai in http://www.dinamani.com  on 17th Sep 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” சேர்த்து வைத்த கனவு “

 

சேர்த்து வைத்த கனவு…
———————–
காணலாம் கனவு …நீ ..தம்பி.! சேர்த்து வைக்க மட்டும் அல்ல
உன் கனவு ! கனவு நனவாக நீ கட்ட வேண்டும் ஒரு
படிக்கட்டு ..திட்டமிட்டு நீ தாண்டவேண்டும் படிகள் அத்தனையும் !
பெரிதாக யோசி என்று சும்மாவா சொன்னார்கள் நம்
ஆன்றோர்  சான்றோர் ! வானமே உனக்கு எல்லை !
விண்ணில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டிய  நீ
இந்த மண்ணில் ஒரு வட்டத்தில் மட்டும் சுழல வேண்டுமா ?
தன் கூடுதான் தன் உலகம் என்று ஒரு பறவை நினைத்தால்
இந்த மண்ணிலிருந்து விண்ணில்  அது பறப்பது எப்படி ?
சிறகடித்து பறக்கும் அந்த பறவையைப் பார்த்து நீ
கற்றுக்கொள்  தம்பி..இந்த மண்ணில் மட்டும் அல்ல
விண்ணிலும் வெற்றிக் கொடி நாட்டப் பிறந்தவன் நீ என்று !
உன் கனவு எல்லாம் நனவாக வேண்டுமே அல்லாமல்
சேர்த்து வைத்து மறக்க அல்ல  உன் கனவு !  பார்த்து
நடக்க வேண்டும் தம்பி நீ ! கடக்க வேண்டும் தடைக்
கற்களையும் உன் வெற்றிப் படிகளாக்கி !
வானமே உனக்கு எல்லை …இல்லை உனக்கு
எதுவும் தொல்லை என்று நடுவில் !
My Tamilkavithi in www. dinamani.com  dated 10th Sep 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” நிலைக்கும் என்றே ….”

 

நிலைக்கும் என்றே …
———————
மாற்றம்  ஒன்றே நிரந்தரம் …அது ஒன்றே
நிலைக்கும் என்றென்றும் என்ற ஆன்றோர்
வாக்கு பொய்க்காதே தம்பி …
ஆன்றோர் சான்றோர் சொல் மறந்து என்றும்
நிலைக்கும் என் பதவியும் பணமும் என்று
நீ நினைக்க வேண்டாம் தம்பி !
மாற்றம் கொடுக்கும் ஏற்றம் ஒருவனுக்கு !
அதே மாற்றம் ஒருவனுக்கு ஏமாற்றம் !
இது உலக நியதி !  விதி விலக்கு ஏதும்
இல்லையே இதில் !
வாழ்வில் சுகமும் துக்கமும் என்றும் உன் வாழ்வில்
நிலைக்கும் என்றே எண்ணி விடாதே தம்பி !
“இதுவும் எதுவும்  கடந்து போகும்” என்று சொல்லி
நீ நேர்  வழி நடந்தால் உன் பெயர் மற்றவர்
மனதில் நிலைத்து நிற்கும் இன்றும் என்றும்
என்றென்றும் !
My Kavithai in http://www.dinamani.com dated 3rd Sep 2017
Natarajan