” ‘யோகாசன சக்கரவர்த்தி’ பி.கே.எஸ் ஐய்யங்கார் “….

வாழும்போது சந்தோஷமாக வாழுங்கள். கம்பீரமாக மரணத்தைத் தழுவுங்கள்’

                    – யோகா குரு பி.கே.எஸ் ஐய்யங்கார்

குருஜி என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள யோகா கற்றவர்களால் அன்புடனும், மரியாதையுடனும், அழைக்கப்பட்ட பெல்லூரு கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐய்யங்கார் என்கிற பி.கே.எஸ். ஐய்யங்கார் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் (20.8.2014) தனது 95-வது வயதில் பூனாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்தபோது மிகவும் நெருங்கிய ஒருவரை இழந்ததுபோல நான் மிகவும் வருத்தப்பட்டேன். காரணம் நான் இப்போது கற்றுவரும் யோகா அவர் வடிவமைத்துக் கொடுத்ததுதான். எனது ஆசிரியை அவரது சிஷ்யை. எங்கள் வகுப்பில் அடிக்கடி தனது ‘குருஜி’யை அளவில்லா மரியாதையுடன் நினைவு கூர்வார். ஒவ்வொரு ஆசனத்தையும் மிக நிதானமாக மிக எளிதாக செய்யும்படி அவர் வடிவமைத்ததையும் சொல்லி சொல்லி வியப்பார்.

குருஜி இளம் வயதில் மிகவும் சீக்காளிக் குழந்தையாக இருந்தவர். இவர் பிறந்த 1918-ம் ஆண்டு உலகெங்கும் ஃப்ளூ தொற்று பரவியிருந்தது. இவரது பெற்றோருக்கு 11-வது குழந்தை இவர். இளம் வயதில் மலேரியா, டைபாய்ட், காச நோய் இவற்றால் பாதிக்கப்பட்டு இவர் பிழைப்பாரா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்ததாம். பார்க்கவே பரிதாபமாக, எலும்பும் தோலுமாக இருப்பாராம். ‘அப்போது என்னைப் பார்த்திருந்தால் யாரும் என்னிடம் யோகா கற்றுக் கொள்ளவே வந்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் வெளியே விளையாடிவிட்டு வந்தால் 9 நாட்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன்’ என்று அந்த நாள்களைப் பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.

இவரது அக்காவின் கணவரும், புகழ் பெற்ற யோகா ஆசிரியரும் ஆன டி. கிருஷ்ணமாச்சார் (இவர் நவீன யோகாவின் தந்தை என்று பெயர் பெற்றவர்) மைசூரில் தாம் நடத்தி வந்த யோகா பாடசாலையில் இவரை சேரும்படி யோசனை சொன்னதுதான் இவரது வாழ்வை திசை திருப்பியது. இந்த யோகபாடசாலை அரச குடும்பத்தினருக்காக என்றே நடத்தப்பட்டு வந்தது. வெளியாள்கள் சேரமுடியாத இந்தப் பாடசாலையில் சேர்ந்து யோகப் பயிற்சி செய்யுமாறு கூற ஐயங்காரின் வாழ்க்கை மாற ஆரம்பித்தது.

தனது 14-வது வயதில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்து 18-வது வயதில் ஆசிரியர் ஆனார். ‘பத்து அல்லது பதினைந்து தினங்கள் கற்றுக் கொண்டேன். அந்தத் தினங்கள்தான் நான் இப்போதிருக்கும் நிலைமையைத் தீர்மானம் செய்தன’ என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ஐய்யங்கார். பூனாவுக்கு வந்து தனது சொந்த யோகபாடசாலையை ஆரம்பித்தார். அங்கு ஒரு யோகாச்சார்யராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் கஷ்டப்பட வேண்டி வந்தது.

ஐய்யங்கார் தன்னுடைய உடலையே சோதனைக் களமாகக் கொண்டு விடாமுயற்சியுடன், வைராக்கிய மனத்துடன், இடைவிடாத பயிற்சி மூலம் ‘ஆரோக்கியத்துக்கு யோகா’ என்ற தனது கோட்பாடை நிறுவினார். அடுத்து அவருக்கு இன்னொரு எண்ணம் வந்தது. நாற்பது வயது வரை ஒருவர் இந்த ஆசனங்களை சிரமமின்றிச் செய்யமுடியும்; அதற்குப் பிறகு? அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ன செய்யமுடியும்? அவர்களுக்கு யோகா என்பதே கிடையாதா? ஏற்கெனவே இருந்த யோகா முறைகளை மிகுந்த கவனத்துடன் சீர்திருத்த ஆரம்பித்தார். ஹட யோகா என்பதில் இருக்கும் ஆசனங்களை எல்லா வயதினரும் செய்யும்படி மாற்றி அமைத்தார்.

உடல், புலன்கள், மனது, அறிவு, உள்ளுணர்வு இவற்றை வெற்றி கண்டுவிட்டால் ஒருவருக்கு நன்னெறியுடன் கூடிய முறைசார் மனநலம் கிடைக்கிறது என்பார் ஐய்யங்கார். இத்தகைய நிலைக்கு அப்பால் சென்றுவிட்டால் ஒருவருக்கு தெய்வீகத்துடன் கூடிய ஆரோக்கியம் அதாவது நோய்கள் இல்லாத ஆரோக்கியம் கிடைக்கிறது. இது உள்ளிருந்து வாழும் வாழ்க்கை.

வயலின் மேதை யாஹுதி மெனுஹின் அவர்களை 1952-ம் ஆண்டு சந்தித்தது ஐய்யங்கார் வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புமுனை. வயலின் மேதை இந்த ஆசனங்களின் சக்கரவர்த்தியை மேலைநாடுகளுக்கு அறிமுகம் செய்தார்.

‘50 வருடங்களுக்கு முன் நாங்கள் யோகா சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தபோது யோகா என்பது பலரும் அறியாத ஒரு விஷயமாக இருந்தது. நான் யோகா சொல்லிக்கொடுக்கிறேன்’ என்று சொன்னால் நான் ஏதோ யோகர்ட் (yogurt) பற்றிப் பேசுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள். நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்றே புரியாது அவர்களுக்கு!’ என்று தனது மேலைநாட்டு ஆரம்ப அனுபவங்களை வேடிக்கையாகக் குறிப்பிடுவார் ஐய்யங்கார்.

வெகு சீக்கிரமே ஐய்யங்கார் தனது யோகா வகுப்புகளை ஐரோப்பிய அமெரிக்க நகரங்களில் நடத்த ஆரம்பித்தார். இவரது மேலைநாட்டு பெருமையின் மூலமே இந்தியாவுக்கு மறுபடியும் யோகக்கலையின் அருமை தெரிய வந்தது. ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் என்று பல விஐபி-க்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் ஐய்யங்கார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி, நாகரிக உடை வடிவமைப்பாளர் டோனா கரன் ஆகியோர் ஐய்யங்காரிடம் யோகா பயிற்சி பெற்றவர்கள்.

இவரது பெயர் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம் பெற்றிருக்கிறது. டைம் பத்திரிகையின் பெரும் செல்வாக்கு படைத்த 100 பேர்களில் இவர் பெயரும் உண்டு. 1966-ல் இவர் எழுதிய ‘லைட் ஆன் யோகா’ என்ற புத்தகம்தான் யோகப்பயிற்சி செய்பவர்களின் பகவத்கீதை! இந்தப் புத்தகம் இதுவரை 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.

நூறு வயது வரை வாழ்ந்த இவரது குருவிடமிருந்து இவர் கற்ற பாடம்: ‘அவரவருக்கு ஏற்ற வகையில் ஆசனங்களைக் கற்றுக்கொடு’ என்பதுதான். குருவின் சொல்படியே ஒருவரின் தேவைக்கேற்ப ஆசனங்களை வடிவமைத்தார். ‘யோகாசனங்களில் அலைன்மென்ட் என்று சொல்லப்படும் சீரமைப்பு அதாவது நேர்படுத்துதல் மிகவும் முக்கியம். அது இல்லாமல் போனால் மன அமைதி கிட்டாது’ என்பார் ஐய்யங்கார். பதஞ்சலி முனிவரின் யோகாசனங்களை சாதாரண மக்களும் சுலபமாகச் செய்யும் வகையில் எளிமைப்படுத்தினார்.

இவரது தாக்கம் சீன தேசத்தையும் எட்டியது. குருஜிக்கு அங்கும் ஏகப்பட்ட மாணவர்கள். இவரது பெருமையைக் குறிக்க எட்டு தபால்தலைகளை வெளியிட்டது சீனா. ‘யோகா நம் இரு தேசங்களையும் ஒன்று சேர்க்கிறது. யோகா மூலம் நான் ஒரு நட்புணர்வை இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தியிருக்கிறேன். நீங்கள் யோகா பயிற்சி செய்தால் உங்கள் எண்ணங்களே வித்தியாசமாக இருக்கும். உங்கள் கால்களில் நீங்கள் நின்றால் உலகம் ஒன்று என்பதைப் பார்க்கமுடியும். நீங்கள் தலைகீழாக நின்றால் உலகமும் அப்படித்தான் தெரியும்’ என்று சீனத் தலைநகர் பீஜிங்-ல் பேசும்போது சொன்னார் குருஜி.

தனது பெயரில் ஐய்யங்கார் யோகா என்று யோகக்கலைக்கு பெயர் குத்தப்படுவதை இவர் விரும்பவே இல்லை. ‘யோகா என்பது தீடீர் காப்பி இல்லை. ஒரு பிராண்ட் பெயர் கொடுக்க. மனதையும் உடலையும் சிரத்தையுடன் பண்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முதலில் தேவை ஒழுங்கும், மன உறுதியும்’ என்பது அவரது கருத்து.

இவரது சாதனைப் பட்டியல் மிகவும் நீண்டது. கர்நாடக அரசு இவருக்கு ராஜ்யோத்சவ விருதும், இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதும் கொடுத்து கௌரவித்தன. அமெரிக்க ஃபெடரல் ஸ்டார் ரெஜிஸ்ட்ரேஷன் அமைச்சரகம் வடபாதியில் இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு யோகாச்சார்யரான இவரது பெயரை சூட்டியிருக்கிறது. புண்ய பூஷண், பதஞ்சலி விருது, வசிஷ்ட விருது என்ற பல பட்டங்களும் விருதுகளும் இவரை நாடி வந்தன. இவரைப் பற்றி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 22 நிமிட ‘சமாதி’ என்கிற திரைப்படம் வெள்ளித் தாமரை விருது பெற்றது.

என்னைப்போல இந்த யோகப் பயிற்சியினால் பலன் அடைந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் உள்ளார்கள். கற்றவர்கள் பலர் ஆசிரியர்களாகி, அவர்களின் மூலம் மேலும் பல தலைமுறைகளுக்கு இந்த யோகப்பயிற்சி பரவும். இந்த உலகம் உள்ளவரை ஐய்யங்காரின் புகழும், யோகாவும் இணைந்து இருக்கும்.

ஒருவரின் ஆரோக்கியம் என்பது அந்தச் சமுதாயத்துக்கே நன்மை செய்யும். இத்தகைய சமுதாய நன்மைக்கு பெரும் தொண்டு செய்த ஐய்யங்காருக்கு இந்த சர்வதேச யோகா தினத்தில் என்னால் சொல்ல முடிவது இது தான்: ‘நன்றி குருஜி!’

source….ரஞ்சனி நாராயணன்  in http://www.dinamani.com

Natarajan

” 57 Storey Skyscrapper in 19 Days…!!!

A simple design innovation let a Chinese entrepreneur build a 57-storey skyscraper in 19 days…

Broad Sustainable Building, a Chinese architecture company, recently constructed a 57-story, 800 apartment building in 19 working days.

It’s called Mini Sky City. The man behind it is Zhang Yue, a Chinese entrepreneur with an Elon Musk-ian streak for launching revolutions.

As the BBC reports, Zhang wants to start a revolution in building.

Which you can see from Mini Sky City’s three-floors-per-day construction.

The full video is nuts.

But as the ‘mini’ in its name implies, Mini Sky City is just the beginning.

Broad Group wants to build the tallest building in the world, higher than the Burj Khalifa in Dubai.

It’ll be called Sky City, standing a full 220 stories high.

Founder Zhang Yue tells the BBC that Broad Group will build Sky City in a fraction of the time. While it took the Burj five years to be completed, Zhang says that Sky City will only take seven months.

It’ll come complete with everything you need to “live vertically,” like an indoor farm or a helipad.

The key? A little hack called modular construction.

The Modular Building Institute defines it like this:

Modular construction is a process in which a building is constructed off-site, under controlled plant conditions, using the same materials and designing to the same codes and standards as conventionally built facilities – but in about half the time. Buildings are produced in “modules” that when put together on site, reflect the identical design intent and specifications of the most sophisticated site-built facility – without compromise.

Modular design has been used at a smaller scale for a while now.

We probably know it most intimately through the work of Ikea, a company with a  furniture empire that has come to dominate the world.

Here’s how Ikea describes its sectional sofas:

The great thing with a modular sofa is that you can create your own combination, so you get exactly what you want. Then you can adapt or add on to what you have if your needs change. And with our big choice of styles and covers, it’s easy to get the look that suits you, too.

Broad Group’s skyscrapers are kind of like the Ikea sofas of construction

As BBC reports, the process for building is the same: steel comes into Broad Group’s factories, and it gets welded into modules like a column or cross beam.

Then those modules get trucked out.

Crane them up.

And snap them into place, Tetris-style.

“With the traditional method they have to build a skyscraper brick by brick, but with our method we just need to assemble the blocks,” company engineer Chen Xiangqian told the Guardian. “This is definitely the fastest speed in our industry.”

To read the full BBC feature on Broad Sustainable Building, go here.

Source….Drake Baer in http://www.businessinsider.in

Natarajan

Message for the Day…” Your Body is the Temple of God …”

Deho Devalaya – The body is the temple of the Lord. You are going about your daily journey with a temple where God is present in your innermost shrine. The body is not a mass of flesh and bone. It is a medium for sacred vibrations(mantras) which save you when they are meditated upon. The body is a sacred instrument earned after long ages of struggle. It is equipped with reason and emotion, and is capable of being used for deliverance from grief and evil. Honour it as such; keep it in good condition so that it might serve that high purpose. Maintain it even more carefully than the brick and mortar houses you live in, and always preserve the conviction that it is a divine instrument and nothing more. Use it for that pure purpose for which it has been designed and gifted to you. 

Sathya Sai Baba

 

” கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால், நம்முடைய குரு பரமாத்வாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கனமழையை வருவித்து விட்டார்.!”

1941—ஆம் ஆண்டு சாதுர்மாஸ்யத்தின் போது ஸ்ரீசரணாள் நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தார். அதனிடையில் ஆடிப்பூரம் வந்தது. வழக்கமாக அப்போது நீலாயதாக்ஷி அம்பாளுக்கு மிகவும் விமரிசையா உத்ஸவம் நடக்கும். ஆனால் அவ்வாண்டு? ஊர் மழை கண்டு எத்தனையோ காலமாகியிருந்த சமயம். சொல்லி முடியா தண்ணீர்ப் பஞ்சம். குளம், குட்டை, கிணறு யாவும் வறண்டு கிடந்தன.

எனவே உத்ஸவத்துக்கு யாத்ரீகர்கள் வரவேண்டாமென்றே அறிக்கை விடுவதற்குக் கோவிலதிகாரிகள் எண்ணினர். எனினும் அதற்கு முன் தங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள மஹானிடம் விண்ணப்பிக்க நினைத்து ஸ்ரீமட முகாமுக்கு ஒருநாள் காலை வேளையில் வந்தனர்.

அவர்கள் குறையிரந்ததை சோகம் என்றே கூறக்கூடிய ஆழுணர்ச்சியுடன் அருள்மூர்த்தி கேட்டுக் கொண்டார். வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை. சொல்ல அவசியமில்லாமல் அடியோடு முடி அவரது திருவுருவே இரக்கத்தின் உருக்கமாக இருந்தது. மௌனமாகவே பிரசாதம் ஸாதித்து அவர்களை அனுப்பிவிட்டு ஏகாந்தத்திற்குச் சென்று விட்டார்.

அரைமணி ஆனபின் ஆலயத் திருக்குளத்திற்குச் சென்றார். குளமாகவா அது இருந்தது? தள்ளித் தள்ளிச் சில இடங்களில் குளம்படி நீர் தேங்கியிருந்தது தவிர மற்ற இடமெல்லாம் காய்ந்த பூமியாகவோ, சேறாகவோதான் இருந்தது.

தேடித் தேடி ஒரு சிறிய குழியில் தமது சின்னஞ்சிறு ஸ்ரீ சரணங்களை ஸ்ரீசரணர் அழுத்த, சீரார் சேவடி அமிழும் அளவுக்கு—அந்த அளவுக்கே— நீர் சுரந்தது.

ஆச்சரியமாக, தனது அப்பாத நீரையே அவர் சிரஸில் புரோக்ஷித்துக்கொண்டார்!

முகாமுக்குத் திரும்பினார் முனிவர்.

அன்று பகலெல்லாம் கடும் வெயில் காய்ந்தது.

மறுநாள் மதியம் மறுபடி திருக்குளத்திற்குச் சென்றார்..

முன்தினம் கண்ட குளம்படித் தேங்கல்களும்கூட சேறாகவோ, காய்ந்த கட்டி மண்ணாகவேயோ சுவறிக்கிடந்தன!

இன்று திவ்ய ஹஸ்தத்தாலேயே அவற்றிலொரு சேற்றுத்திட்டைச் சுரண்டினார். ஒரு சில துளிகள் நீர் சுரந்தது.

வலப்பாதப் பெருவிரலை அதில் ஐயன் அமிழ்த்த அது போதும் போதாததாக முழுகியது..

திருவிரல் நீரில் நனைந்திருக்க, நனைந்த திருவுள்ளத்தோடு ஐயன் ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கினார்.

ஈரப்பசையே இல்லாத வெண்மேகங்கள் ஆங்காங்கு மூடியிருந்தாலும் பெரும்பாலும் தெள்ளிய ஒளி நீலமாகவே வானம் விளங்கியது.___கருணா சோக ( கருண ரஸம் என்பதே சோகந்தானே!) மேகம் மூடியுங்கூட, மூடவொண்ணா அகண்ட அமைதி வெளியாக!.

தண்டத்தை இறுகப் பிடித்தவாறே, வானை நோக்கி இரு கரங்களையும் தூக்கி அஞ்சலி செய்தார்.

அருளும் அமைதியும் இனம் பிரிக்க முடியாமல் செறிந்திருந்த மௌனத்துடன் மட முகாமுக்குத் திரும்பினார்.

பிற்பகல் நான்கு மணியளவில் ஈரமற்ற வெண்முகில்கள் குளிர் நீலமாக மாறத்தொடங்கின. வெப்பத்தைச் சமனம் செய்யும் சீதக் காற்றும் மெல்ல வீசலாயிற்று.

சிறிது பொழுதில் சிறு தூறல்கள் சிதறலாயின.

அப்புறம் அது அடர்ந்து அடர்ந்து அப்படியே அடைமழையாகப் பொழியலாயிற்று!

இரவெல்லாம் பொழிந்தது.

மறுனாள் முழுதும் பொழிந்தது.

அதற்கு மறுநாளும்,ஏன், நான்காம் நாளும்கூட விடாமல் பொழிந்தது.

நிமலனின் அருள் வேண்டுதல் வடிவில் தூண்ட, நீலாயதாக்ஷி நீலவானையே கண்களாகக்கொண்டு கருணா கடாக்ஷப் பெருக்காகப் பொழிந்து தீர்த்தாள்!

நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையே!

என்ற வாதவூரார் வாசகம் மெய்யாயிற்று.

குளம், குட்டை, கிணறு எல்லாம் முட்ட முட்ட நிரம்பின.
ஊர் குளிர, ஊரார் உளம் குளிர உத்ஸவமும் வழக்கத்தைவிட விமரிசையாக நடந்தேறியது. வாடிய நெஞ்சங்களுக்கு வான் கருணை வழங்கிய உத்ஸாகத் தளிர்ப்பே உத்ஸவ விமரிசை வழக்கத்தைவிடக் கூடியதற்குக் காரணம்.

இந்த நிகழ்ச்சிக் கோவையை உடனிருந்து கண்டு உவகையோடு வர்ணிக்கும் செல்லம்மாள்( 1993—ல் பரம பதம் எய்திய நீண்ட காலப் பரம பக்தை) சொல்வாள்: “ கோவில்காரர்கள் யாத்ரிகர் வர வேண்டாமென்று அறிவிப்பு செய்ய நினைத்தார்கள். பெரியவாளோ ஆகாசராஜனையும், வருணபகவானையும் கொண்டு அம்பாள் உத்ஸவக் கல்யாணத்திற்கு அத்தனை பேரும் வருவதற்கு அழைப்பு அனுப்பி விட்டார்! கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால், நம்முடைய குரு பரமாத்வாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கனமழையை வருவித்து விட்டார்.!”

ஆயினும் கண்ணன் போலத் தெய்வீக மகிமையை வெளிக்காட்டாது ஸ்ரீராமனைப் போல் மானுடமாகவே எளிமை காட்டியவரன்றோ நம் பரம குருநாதன்? அதனால்தான் ஸ்ரீ சரண மஹிமையை மறைத்துக் கரங்களை எளிமையில் குவித்து வானை நோக்கி அஞ்சலி செய்தே மழை வருவித்ததாகக் காட்டினார்

Source….www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4475/#ixzz3dWiMWcSI

 

Message for the Day…” Resolve This day to engage only in Virtuous Deeds, Good Thoughts,&Good Company…”

God is All-pervading (Sarvavyapi). He loves His devotees (Bhakta-Vatsala). Make your heart the Seat of the Lord. Soil which has veins of mica is valuable, but that which has veins of gold is even more precious. The soil is valued according to the preciousness of the metal in its fold. So too, hearts are evaluated by its contents. Keep God in your hearts; then they will become precious possessions. If God is implanted in the heart, you will see only God everywhere. For,Sarvam Brahmamayam (All is Divine) is a fact. Resolve this day to engage only in virtuous deeds, good thoughts and good company. Let your mind dwell on elevating thoughts. Do not waste a single moment of your waking time in vain boasting or idle gossip or demeaning recreations. While life persists, do good things, speak softly and sweetly, never injure or insult another, serve those in need and keep the image of God ever before the mind’s eye.

Sathya Sai Baba

NASA’s Mission to Pluto …!!!

It’s been over 3,000 days and nearly three billion miles since NASA’s New Horizons spacecraft set out for Pluto.

It’s a mission that faced countless roadblocks and setbacks before it ever got off the ground. Now the spacecraft is closing in on Pluto and its moon system that sit at the very edge of our solar system.

This will be the first time we’ve ever visited the distant dwarf planet.

The National Space Society put together an incredible video preview of the history-making moment. It has the vibe of a movie trailer, complete with epic narration and stunning visuals, and it perfectly captures why space enthusiasts are so psyched about the New Horizons mission.

The video sweeps you through a timeline of the last half century of space exploration using beautiful images of each planet we’ve explored, starting with Venus in 1962 and ending with Neptune in 1989.

New Horizons will reach Pluto and its moons on July 14, and they will be “the farthest worlds ever to be explored by humankind,” the video says.

So far that the sun appears as a faint dot:

And the moment we reach Pluto, we’ll get an up close look at a world no one has seen before. All we’ve glimpsed of Pluto are fuzzy, far-away images captured by the Hubble Space Telescope. New Horizons will send back images thousands of times closer.

“Who knows what wonders await us at these new horizons.”

We’ll have to wait and see.

NASA is already counting down the days, hours, minutes, and even seconds until the arrival.

You can watch the whole video below, which we definitely recommend:

Source….www.businessinsider .in and http://www.you tube.com

Natarajan

” When Pandit Nehru Stood on his Head …”

Ahead of International Yoga Day, it seems the entire world has been swept up by the yoga craze.

As the world gears up for this one-of-a-kind event, where people across the world will contort their bodies into various postures, here’s a rare image of the country’s first Prime Minister Pandit Jawaharlal Nehru practising the sirsasana (supported headstand).

This is what what the former PM wrote on the sirsasana. “Among my exercises one please me particularly — the shiorshasana, standing on the head with the palms of the hands, fingers interlocked, supporting the back of the head, elbows on the floor, body vertical, upside down. I suppose physically this exercise is very good; I liked it even more for its psychological effects on me. The slightly comic position increased my good humour and made me a little more tolerant of life’s vagaries.”

Source….www.rediff.com

Natarajan

This Ramzan , Hindu , Muslims to Fast Together in Uttar Pradesh Town…

 

At a time when controversy over performing yoga is on, a group of Hindus in Uttar Pradesh’s Mahoba district has decided to observe Roza with their Muslim neighbours during the holy month of Ramzan starting on Friday.

“We have decided to observe fast with our Muslim brothers from Friday at Udal Chowk crossing in Mahoba. We will be sitting in a group of about 60 persons including at least 25 Hindus and will attend ‘Sehri’ and ‘Iftar’…,” Tara Patkar, coordinator of Bundeli Samaj, said.

Patkar said that the move would serve dual purpose: On one hand it will spread the message of religious harmony and on the other it will boost their campaign for setting up of All India Institute of Medical Sciences in Mahoba.

“We want policy makers to acknowledge our unity and take a positive decision for setting up of AIIMS in the district as poor health services in this area affect all, irrespective of caste and creed,” he said.

“Though politics is going on over the issue of performing yoga on International Yoga Day (on June 21), we have invited politicians of all parties to show our unity for a cause,” he added.

He said that this would be part of their AIIMS-Mahoba campaign under which they wrote over one lakh letters to Prime Minister Narendra Modi in 18 languages.

“Under this campaign, Muslim youths and children wrote to the PM in Sanskrit while Hindus wrote in Urdu, besides in other languages like Sindhi, Punjabi and Malayalam.

“Camps were set up at many prominent places like railway stations, bus stops and hospitals to make the campaign a success. Even schools were involved in the campaign,” he said.

Explaining the logic behind the demand, Patkar said the district is situated at the heart of Bundelkhand and does not have proper health care facilities.

“Patients admitted to primary health centres are referred to Kanpur, Lucknow, Agra and to districts of neighbouring Madhya Pradesh. Setting up AIIMS will help the entire region spread over seven districts in UP and five of MP,” he said.

Patkar claimed that their voice had reached the Prime Minister’s Office, which sought details of their campaign.

Source….www.rediff.com

Natarajan