வாரம் ஒரு கவிதை….” ஜன்னல் நிலா ” !!!

 

My Tamil Kavithai in Dinamani Kavithaimani  on 24th oct 2016
 

வாரம் ஒரு கவிதை … “மனம் என்னும் மாயப் பேய் !!!”

 

மனம் என்னும் மாயப் பேய் !!!
……………………
மனம் ஒரு குரங்குதான் …இல்லை என்று சொல்லவில்லை  நான் !
இங்கும்  அங்கும் அலையும் மனக் குரங்கை அடக்கி வைக்கும் ஒரு
குரங்காட்டியாக  நீ இருக்கலாம்… தவறில்லை !
மனக் குரங்கு தறி கெட்டு நெறி தவறி அடங்கா குரங்காட்டம்
போடும் நேரம் உன் மனமே ஒரு பேயாக மாறும் ,உன்னை தன்
மாய வலையில்  சிக்கவைத்து ..! உன்னையும்  மாற்றும்
அந்த மாயப் பேய்  தன் கூட்டத்தின்  ஒரு அங்கமாக !
சிக்கவும்   வேண்டாம் அந்த  மாய வலையில் …மாயாவியாக
நீ மாறவும் வேண்டாம் !…  ஒரு நல்ல குரங்காட்டியாக மட்டும்
நீ இருந்தால்!   உன் மனக் குரங்கும்  ஒரு குரங்காக மட்டுமே
அலையும்  என்றைக்கும்…  நீ போடும் “கோட்டை”  தாண்டாமல் !
நல்லன ஏற்று  அல்லன ஒதுக்கி உன் மன சிற்பம்  நீ செதுக்கினால்
அல்லல் என்றும் இல்லை உனக்கு  தம்பி !  உன்
மனம் என்றும் நல்ல மனமாக மணக்கும் …உன் வாழ்வும் இனிக்கும் !
இந்த ஊரும்  நாடும் உன்னைப்  போற்றி  வணங்கும் !
Natarajan
http://www.dinamani.com  on 17th oct 2016

வாரம் ஒரு கவிதை …” பொம்மைகள் “…!!!

 

பொம்மைகள்
…………
மண் பொம்மை  மர பொம்மை  நாங்க எல்லாம் இன்று
உங்க   வீட்டு கொலு படியில் … எந்த படியாய் இருந்தாலும்
எப்படியும் ஒரு இடம் உண்டு எங்களுக்கு உங்க வீட்டு கொலு
படியில்…பேசா  பொம்மை நாங்க என்று நீங்க  நினைத்தாலும்  நாங்க
பேசிக்கொண்டேதான்   இருப்போம்  எங்களுக்குள் கொலு படியில்!
பேசும் மனிதர் நீங்கதான் இப்போ பொம்மை மாதிரி !
அலை பேசியும் கையுமாய் அலையும் நீங்க பேசுவது அதனுடன் மட்டுமே !
உங்க குழந்தை கையில் கூட   ஒரு அலை பேசி இப்போ !
கையில் அலை பேசி இல்லாத நேரம் உங்களுக்கு மௌன விரதம்
உங்க மடிக்கணினியுடன் மணிக் கணக்காக !
பொம்மை எங்களை “ரோபோ “வாக  பேசவைத்து  வேலையும் செய்ய வைக்கும்
சாதனை செய்யும்  நீங்க உங்க வீட்டில் உங்களுக்குள் பேச்சை
குறைத்து சொந்த பந்தம் தொலைப்பது ஒரு  பெரும்  வேதனை !
பொம்மைகள்  நாங்க காத்திருக்கிறோம்  உங்களை எல்லாம்
கொலு படியில் பொம்மைகளாக உட்காரவைக்கும் ஒரு காலத்துக்கு !
காலம் மாறும் நிச்சயம் !…காட்சியும் மாறும் அச்சமயம் !
Natarajan
My Tamil Kavithai appeared in http://www.dinamani.com  on 10th Oct 2016

வாரம் ஒரு கவிதை …” எழுத்து “…!

 

எழுத்து
……….
எண்ணங்களின் பிரதி பலிப்பே
ஒருவன்  எழுதும் கவிதையும்  , கதையும் !
உறங்கும் மக்களையும்  நாட்டையும் உலுக்கி
அவர்தம்  உரிமைக்கு குரல் கொடுக்க வைப்பதும்
அந்த  எழுத்தின் சக்தியே !
ஒருவன் தலை எழுத்தை மாற்றும் சக்தியும் உண்டு
அந்த எண்ணுக்கும் எழுத்துக்கும் !
ஒரு கையெழுத்தின் மதிப்பைக் கூட்டுவதும்
அதே எண் , எழுத்தின் சக்திதான் !
எழுத்தாணி காலம் முதல் இன்றைய மின்னஞ்சல்
யுகம் வரை எண்ணும்  எழுத்தும், இமையும்
விழியுமே  ஒரு  மனிதனுக்கு !
Natarajan  in http://www.dinamani.com dated 3rd Oct 2016
Natarajan

வாரம் ஒரு கவிதை…” நீதியைத் தேடி …”

 

நீதியைத்  தேடி …
…………..
அன்றைய அரசன்  சொன்னது நீதி ..செய்தது நீதி !.அவன் நடந்து காட்டிய வழியும்
நீதி வழியே !  …அரசனும் அவனே …நீதிமானும் அவனே !
நீதி தேடி அவன் மக்கள் வேறு எங்கும் சென்றது இல்லை
மன்னன் அவன் தீர்ப்புக்கு   மறு  கேள்வி இல்லை !
இன்று அரசே நீதி தேடி ,ஓடி , அலையும் அவலம்  …ஒரு நதி நீருக்காக !
ஒரு  அரசுக்கே கதி இது என்றால் , எனக்கும் உனக்கும்
விடிவு காலம் எப்போது ? தேசிய  நதி நீர் பங்கீட்டு விதி என்று ஒன்று உதித்து
அதை அரசும் மக்களும் மதிக்கும்  அந்த நாள் எந்த  நாள் ?
Natarajan
http://www.dinamani.com  dated 26th sep 2016

வாரம் ஒரு கவிதை…” தண்ணீருக்கு இரத்தம் ” …

 

தண்ணீருக்கு  இரத்தம் ….
………………..
என் நதி ஓட்டம் ! … இந்த மண்ணுக்கே  உயிர் ஓட்டம் ! …என்
நீர்  இந்த மண்ணுக்கும்  மண்ணில் உள்ள எல்லா உயிருக்கும்
சொந்தம் ! இந்த பால பாடம் தெரியாதா உனக்கு ?
நீர் இது “எனக்கு”  மட்டும் சொந்தம் என்று உரிமைக்குரல்
எழுப்பும் உனக்கு ஒரு  நதி மூலம் என்னவென்று தெரியுமா ?
இந்த மண்ணுக்கும் மண்ணில் உள்ள நீருக்கும் சொந்தம்
கொண்டாடும் நீ … விண்ணுக்கும்,  விண்ணில் உள்ள
நிலவுக்கும்,  பகலவனுக்கும் ,மழை மேகத்துக்கும்  தனி உரிமை
கோர முடியுமா சொல்லு ?
விதி விலக்கு எதுவும் இல்லை நதி எனக்கு இந்த மண்ணில்
என் வழி நான்  செல்ல !  நான் ஒரு விலை கேட்டேனா உன்னை
நான் கொடுக்கும் நீருக்கு ?  பதில் சொல்லு நீ! …வைத்து
விட்டாயே நீ  என் நீருக்கு ஒரு விலை …தண்ணீருக்கு
விலை  செந்நீரா ?… எல்லையே இல்லையா உன் மமதைக்கு ?
அன்று உன் முன்னோர் சிந்திய ரத்தத்தால் நீ சுவாசிப்பது இன்று சுதந்திர
காற்றை !..மறந்து விடாதே அதை ! இன்று தண்ணீருக்கு  நீ சிந்த வைக்கும் இரத்தம்
உன் சந்ததியர் , சகோதரர் , நல்லிணக்க நல் வாழ்வைக் குலைத்து தொலைத்திட
நீ போட்டிருக்கும் ஒரு சிவப்புக் கோடு !.. விவரம் அறியா பிஞ்சு நெஞ்சில்  நீ விதைத்து
விட்டிருக்கும் ஒரு நஞ்சு வித்து ! …நீ  போட்ட சிவப்புக் கோட்டை அழித்து விடு நீயே !
பிஞ்சு நெஞ்சில் நீ விதைத்திருக்கும் வித்தையும் களை எடுத்து நசுக்கி விடு நீயே..அந்த
வித்து ஒரு நச்சு மரமாக வளரும் முன்னே !
இதை நீ கட்டாயம் செய்ய வேண்டும் மனிதா …  நதி என் கண்ணீர்
செந்நீராக  உருமாறும்  முன்னே !
Natarajan
20th sep 2016

வாரம் ஒரு கவிதை…” என் ஓட்டம் என் இலக்கு ” …

 

என் ஓட்டம் …என்  இலக்கு
………………………
என் ஓட்டம் …ஓடும் நதியோட்டம் ..  என்  உயிரோட்டம் … என் இலக்கு… நதி நீர்
இந்த  மண்ணுக்கும் …மண்ணில்  விளையும்  பயிருக்கும் !
விதி விலக்கு இதில் எதுவும் இல்லை எனக்கு … ஓடிக்கொண்டே   இருக்கும்
நதி எனக்கு , நீயும் பிள்ளைதான் , அவனும்  பிள்ளைதான் !
மதி கெட்டு   நதி நீர் “எனக்கு”  மட்டும்தான்  என்று ஆணவக்
கூக்குரல் எதற்கு மனிதா? மமதையுடன் மண்ணுக்கும் , தண்ணீருக்கும்
உரிமைக்  குரல்  எழுப்பும்  நீ அந்த விண்ணுக்கும் , விண்ணில் உள்ள
நிலவுக்கும் ,பகலவனுக்கும்   தனி  உரிமை கோர முடியுமா சொல்லு  ?
நதி மூலம் அறியாமல் உன் மதி மயங்கி  ஒரு நதியின்  ஓட்டத்தை
தடுக்க நினைக்காதே ! உன்   அரசியல் விளையாட்டுக்கு எல்லாம்
நதி என்னை பகடைக் காயாக்காதே !
நதி என்னை என் வழியில் ஓட விடு ..என் ஓட்டத்தையும்
இலக்கையும்  குலைக்க  நினைக்காதே !
Natarajan
13 sep 2016

வாரம் ஒரு கவிதை….” நெல்லுக்கு இறைத்த நீர் …” !!!

 

நெல்லுக்கிறைத்த  நீர்
…………………..
தண்ணீர் விட்டா வளர்த்தோம்  நம் சுதந்திர செடியை  ?
கண்ணீரும்  செந்நீரும் விட்டு வளர்த்த கொடி மரமல்லவா அது !
கேட்க  முடியுமா நம் முன்னோரிடம் அந்த கொடியின் விலை என்ன என்று ?
விலை மதிப்பில்லா சுதந்திரக் காற்று சுவாசிக்கும் நாம்  விலை வைத்து
விட்டோமே  குடிக்கும் நீருக்கும் , குழந்தைகள் படிக்கும் படிப்புக்கும் !
விலை இல்லா பொருள் கொடுத்து  எனக்கும், உனக்கும், எவருக்கும்
ஒரு விலை உண்டு என்று சொல்லிவிட்டதே  நம்  அரசியல்
கட்சிகள் !  விலை  மதிப்பில்லா நேர்மைக்கே ஒரு சோதனை காலம் இது !
நிலைமை கண்டு துவள வேண்டாம்  தம்பி …நீ ! சோதனை பல
கண்டாலும் சாதனை புரிய காத்திருக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று !
எடுக்க வேண்டும் ஒரு உறுதிப்பாடு  நீ  இன்று…
“என் முன்னோர் செய்த தியாகம்  விழலுக்கு இறைத்த நீர் அல்ல …
 அது நெல்லுக்கு இறைத்த நீரே   அன்றும் ,இன்றும், என்றும் ! …என் தேசம் என்
 சுவாசம் !
 எதற்கும் விலை போகாமல் நான் காண்பேன்  ஒரு புதிய பாரதம் “
தடைக் கற்கள் யாவும் உனக்கு படிக்கற்கள் ஆகும் …புதிய
பாரதமும்  பொலிவுடன் மலரும் ஒரு வல்லரசாக …!
நாளை உனதே தம்பி ! நாளைய பாரதமும் உன்னை நம்பிதான் தம்பி  !
Natarajan

படித்து நெகிழ்ந்தது …”திருவள்ளுவரின் நாலு அடி பாடல் …” !!!

 

இப்படியும் ஒரு மனைவி இருந்திருக்கிறாளா..?
பல நூறு ஆண்டுகளுக்கு முன்…ஒரு புலவரின் மனைவி… இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம் …
என்னவென்று கேட்டு , கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர…மனைவி தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம் …
“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும்..ஆனால்..ஒரே ஒரு கேள்வி ..என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு , என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.. அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை…இப்போதாவது கேட்கலாமா..?”
புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க…அந்த மனைவி கேட்டாளாம் இப்படி:
“இதுவரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு , இப்போதாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால்…நிம்மதியாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதியான மரணத்தை எனக்குத் தருவீர்களா.?”
கணவன் மௌனமாக தலையசைத்து சம்மதம் தெரிவிக்க …மனைவி தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்டு விட்டாளாம்..
“ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும்போது ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி , அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவீர்கள்…அப்படித்தானே..?”
கணவன் இதற்கும் மௌனமாக தலையசைக்க , மனைவி கேட்டாளாம் ..”இதுவரை அதற்கான காரணத்தை ஒருபோதும் நான் உங்களிடம் கேட்டதில்லை… காரணம்..கணவன் சொன்னதற்கு மறுபேச்சு பேசி , நான் அறிந்ததில்லை… இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக்கிறேன்…இப்போதாவது சொல்லுங்கள்.. அந்த கொட்டங்கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”
இதைக் கேட்டுவிட்டு , இதற்கான பதிலை எதிர்பார்த்து அந்த மனைவி , புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த்திருக்க , அந்தக் கணவன் சொன்னாராம்.. “ அது வேறொன்றும் இல்லை… பரிமாறும்போது தவறுதலாக சோற்றுப்பருக்கை கீழே சிந்தி விட்டால் , அதை அந்த ஊசியில் குத்தி , கொட்டாங்குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத்தான் அந்தக் கொட்டங்கச்சி நீரும்..ஊசியும்..”
கணவன் பதில் சொல்லியும் மனைவியின் குழப்பம் தீரவில்லை…அவள் கேட்டாள் .. “ஆனால் ஒருபோதும் நீங்கள் அந்த ஊசியையும் , கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”
மனைவி இப்படிக் கேட்டதும்…குரல் உடைந்து போன கணவன்…குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம்… “ உண்மைதான்…ஒரு நாளும் நான் அதைப் பயன்படுத்தவில்லை..!
ஏனென்றால் ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும்போது , ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே….!”
கணவன் பதில் அறிந்த மனைவி.. புன்னகை செய்தாளாம்…. அவ்வளவுதான்…! போய் விட்டாளாம்..!!
நெகிழ்ச்சியோடு நெடு நேரம் நின்ற கணவன் ..அந்தப் புலவன்…கண்ணீரோடு தன் அன்பு மனைவிக்காக உடனே ஒரு கவிதை எழுதினானாம் …
இதுநாள் வரை தன் வாழ்நாளில் அவன் எழுதியதெல்லாம் …இரண்டு வரிப் பாடல்கள்…அதில் ஏழே ஏழு வார்த்தைகள்..! அவ்வளவுதான்…அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படுத்திக் கொண்ட பார்முலா..விதி..!
இப்போது…. தனது செய்யுள் விதியை…தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன்… தன் வாழ்வில் முதன் முதலாக , நாலு வரிப் பாட்டு ஒன்றை எழுதினானாம்…அந்த நாலு வரிப் பாடல்:
“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”
# ஆம்… இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப் புலவர் ..திருவள்ளுவர்….!
கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி ..வாசுகி…!
அந்தப் பாடலின் பொருள் :
“அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!”
# இன்னொரு வள்ளுவன் எதிர்காலத்தில் பிறக்கலாம்…!


ஆனால்..இன்னொரு வாசுகி….?

Source…..Facebook post of Sridharan Sivaraman

Natarajan

வாரம் ஒரு கவிதை …” வான மழை நீ எனக்கு …” !!!

 

 
My Tamil kavithai in http://www.dinamani.com  on 29th august 2016
Natarajan