Message for the Day…” True Living consists in the Realisation of God …”

Education and other things that make one grow and become big are of no use for spiritual progress; they bring about only spiritual downfall. That is why the world is called the ‘illusory universe’ (maya-prapancha). Truth, in whatever illusion it is immersed, will only shine more effulgently, for such is the nature of truth. How can we say that the objective world, which undergoes modifications every minute, waning and waxing with the waywardness of appearing and disappearing, is eternal truth? The characteristic of a spiritual aspirant is the attainment of Truth, not the search of the unreal in this evanescent world. In this false world, there can be no true living(satya-achara). There can be only false living (mithya-achara). True living consists in the realisation of the Lord. This must be borne in mind by everyone every moment of one’s life.

Sathya Sai Baba

வாரம் ஒரு கவிதை …” இழப்புகள் தரும் வலி ” …

இழப்புகள் தரும் வலி
………………..
இருப்பதை  இழந்தால் உறுத்தும் மனசு …வலிக்கும்   இதயம்
பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்றால்
இருப்புக்கும் இழப்புக்கும் அதே நியதிதானே…பின்னர் ஏன்
 இருப்பதை இழக்கும் நேரம் வலிக்குது இதயம் ?
விடை இதுதான் …நம்மிடை ஒன்று இருக்கும் சமயம் தெரிவதில்லை
நம்முடன் இருப்பதன் அருமையும் பெருமையும் !
இழந்தது பொருளானால்  மீட்கலாம் அதை  கடும்  உழைப்பால்!
இழந்தது நட்பானாலும் மீண்டும் மலர்ந்து தொடரும் அதே நட்பு
நடந்ததை நண்பர்கள் மறந்தால் !
இழந்தது நெருங்கிய உறவானால் நிச்சயம் நொறுங்கும் இதயம் !
இந்த இழப்பினால் வரும்  வலி, ” நான் ”  ” எனது ” என்னும் நம்
குறுகிய உணர்வை  துறக்க ஒரு  வழியையும் திறக்கும் !
இழப்புகள் தரும் வலியால் பிறக்கும் ஒரு நல் வழியும்  இதுவே !
Natarajan

Message for the Day…” Only God’s Love is totally Free from the taint of Selfishness …”

Embodiments of Love! The hallmark of love is selfless sacrifice(thyaga). Love seeks nothing from anyone. It bears no ill-will towards anyone. It is utterly selfless and pure. Failing to understand the true nature of love, people yearn for it in various ways. Love must be cherished with feelings of selflessness and sacrifice. In what is deemed as love in the world – whether it be maternal love, brotherly love, or friendship – there is an element of selfishness. Only God’s love is totally free from the taint of selfishness. Divine love reaches out even to the remotest being. It brings together those who are separate. It raises man from animality to Divinity. It transforms gradually all forms of worldly love to Divine love. Even the feeling of universal brotherliness is not the same as the experience of ekatvam(oneness). Even in such a fraternal feeling there is an element of self-interest. Those who really wish to promote universal brotherhood too should develop the consciousness of the one Spirit dwelling in all beings.

Sathya Sai Baba

கதை கதையாம் காரணமாம்……!!!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குச் செல்லும் போதெல்லாம், பெரும்பாறை ஒன்றின் மீது குறைந்த விளக்கொளியின் பரவலில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தைப் பார்க்கும் போதெல்லாம் ‘எப்படி சாத்தியமானது?’ என்ற கேள்வி என்னுள் எழுந்து நிற்கும்.இன்று, கரைக்கும் மண்டபத்திற்குமான துாரம் குறைந்து விட்டது. கடலில் மூன்றில் ஒரு பகுதி நடந்து செல்லும் பாதையாகி விட்டது. மீதப்பகுதியை சிறிய கப்பல் போன்ற படகில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து ஐந்து நிமிடத்திற்குள் கடந்து விடலாம். ஆனால் பயணம் செய்யும் அந்த சின்னப் பொழுதில், கடல் அலைகளின் எழுச்சியும், காற்றின் வீச்சும் நம்மைப் பயமுறுத்தத்தான் செய்கிறது.
ஆனால் 113 வருடங்களுக்கு முன்னால், அதிக ஆள் அரவமற்ற இந்தக் கடற்கரையில், இருள் கவிழும் பொழுதில், ஆரவாரத்துடன் அலைகள் எழுந்து குமுறும் கடலில், இக்கரையில் இருந்து அப்பால் உள்ள பாறைக்கு சுவாமி விவேகானந்தர் தன்னந்தனியாக நீந்திச் சென்றிருக்கிறார்!
வானமே கூரையாக அமைந்த அப்பாறை மீது மூன்று நாட்கள் தனிமையில் அமர்ந்து, தாகத்திற்கும் பசிக்கும் ஆதாரமின்றி, தன்னைப் பிழிந்த தவத்தால் ஞான வெளிச்சம் பெற்றிருக்கிறார்! மீண்டும் இக்கரைக்கு நீந்தி வந்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது?
இதற்கான வீரமும் துணிச்சலும் அவருக்கு எப்படி கிடைத்தது?
கதைகள் தந்த வீரம்!
சுவாமி விவேகானந்தரின் பால்ய பருவம். நரேந்திரனாய் ஓடியாடி விளையாடிய சின்ன வயசு. நரேந்திரனுக்கு தாய் புவனேஸ்வரியிடம் கதை கேட்பதில் அதிக ஆர்வம். புராண, இதிகாச கதைகளையே தாய் அதிகம் கூறுவார். மகாபாரத பீமன், ராமாயண அனுமன் இருவரது பராக்கிரமங்களைக் கூறும்போது நரேந்திரன் அதிக ஆர்வமாகி விடுவான். திரும்பத் திரும்ப பீமனையும், அனுமனையும் அவனுக்குச் சொல்லியாக வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பர். ஆனால் நரேந்திரனோ பெரிய மரத்தில் ஏறி, அதன் கிளையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பான். எச்சரிப்பவர்களிடம், “நான் அனுமனாகப் போகிறேன்” என்பான்.

வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?” என்று யாராவது கேட்டால், “நான் பீமன் ஆகப்போகிறேன்! பயில்வானாகப் போகிறேன்!” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு பதில் சொல்லி இருக்கிறான். தீரத்தோடு அவர் தனிமையில் குமரி கடலில் நீந்தியதற்கு காரணம், சின்ன வயதில் தாயிடம் கதை கேட்டு வளர்ந்த அனுபவம் வளர்த்த துணிச்சல்!
கதை சொல்லிகள்!
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மூத்தோர் என வீடுகளில், வீட்டுத் திண்ணைகளில் அன்று நிறைய கதை சொல்லிகள் இருந்தனர். படிப்பு, விளையாட்டு என ஓடியாடி ஓய்ந்த பொழுதுகளில் குழந்தைகளை அவர்கள் கதை உலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
கதைகள் மூலம் குழந்தைகளுக்கு புராண, இதிகாசங்கள் அறிமுகமாயின. ராஜாக்களும், வீரர்களும் வீரம் தந்தனர். வள்ளல்களும், நல்லவர்களும் மனவிலாசம் தந்தனர். நீதிகளும், நல்ல விஷயங்களும் இளம் சிந்தை வயலில் விதைகளாயின.
அதுமட்டுமல்ல, மூத்த தலைமுறை மூலம்தான் வளரும் தலைமுறைக்கு ஊர்ப் பெருமைகளும், குடும்பப் பாரம்பரியமும், உறவின் உன்னதங்களும் போய்ச் சேர்ந்தது. ஆனால் இன்று வீடுகளில் கதை சொல்லிகள் இல்லை. முதியோர் இருந்தாலும் அவர்களோடு ஒட்ட, உறவாட பிள்ளைகளுக்கு நேரமில்லை. நேரமிருந்தால், தாத்தா பாட்டிகளும், பேரக் குழந்தைகளும் தொலைக்காட்சி முன் கிடக்கிறார்கள்.
முன்பெல்லாம் தொடக்க வகுப்புகளில் ஆசிரியர்கள் நிறைய கதை சொல்வார்கள். ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியை வகுப்புகளில் கலையோடு கதைகளும் நிறைந்திருக்கும். ஆனால் இன்று எல்.கே.ஜி. படிக்கும் குழந்தையின் முதுகில் 10 கே.ஜி! படிப்பு, மதிப்பெண், ரேங்க் என்ற ஓட்டத்தில் வகுப்பறைகளிலும் கதைகள் காணாமல் போயின. இதில் பெரிய இழப்பு எதுவென்றால், கலை இலக்கியப் படைப்பாளிகள் குறைந்து வருவதுதான். கதை கேட்கும் போது கற்பனைத் திறன் அதிகரிக்கும். இந்தக் கற்பனைத் திறன்தான் படைப்பாற்றலை வளர்க்கும்.
பால்ய கதைகள்.  என் பால்ய வயதில் எங்கள் வீட்டுக்கு (கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு சூரன்குடி கிராமம்) ஒரு பாட்டி வருவார்.வீட்டு வாசலுக்கு வரும்போதே “வெத்தல தட்ட எடுத்துட்டு வாங்க மக்களே!” என்று அறிவிப்பு. பாட்டியின் குரல் சின்னப்பிள்ளைகளான எங்களைப் பரவசப்படுத்தும். காரணம், பாட்டி அற்புதமாகக் கதை சொல்வாள்.

வெற்றிலையை மென்றவாறு பாட்டி கதையை ஆரம்பிப்பாள். ”ஒரு ஊர்ல ஒரு மகாராசா இருந்தாரா! அந்த மகாராசாவுக்கு வடிவான ஒரு பொண்ணு… அந்தப் பொண்ணுக்கு கல்யாணம். மகாராசா வீட்டுக் கல்யாணமாச்சே! அதனால, ஏழு ஊருக்கு பந்தல் போட்டு, பெரிய விருந்து வைக்கணும். விருந்து சமைக்க விறகு சேகரிக்க ரெண்டாயிரம் மாட்டு வண்டிகளை மந்திரி அனுப்புனாரு. அந்த வண்டிக ரெண்டு ஊரு நீளத்துக்கு ஜல்ஜல்லுணு ஊர்வலமா போச்சு…” என்று பாட்டியின் கதை நீளும்.
அந்த பாட்டி காவிப் பற்கள் தெரிய வாய்விட்டுச் சிரிக்க… நாங்களும் ஓ.. என்று கத்தியவாறு சிரிக்க…. அங்கு மகிழ்ச்சி சூழும். இன்பம் நிறையும். ஒற்றுமையுணர்வு ஓங்கும்.
கற்பனை வளர்த்த கதை உலகம் பாட்டி சொன்னது வெறும் கதையா? இல்லை! கதை சொல்லியான அந்த பாட்டி, எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு கற்பனை உலகத்துக்கு அழைத்துச் சென்றாள்.
‘ஜல் ஜல் என்ற மணி ஓசையுடன் இரண்டாயிரம் மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு’- எங்கள் கற்பனைக் காட்சியில் விரிந்தது. ‘வெள்ளை வெளேர்னு யானை போன்ற குச்சிவீட்டுப் பூனை’- என்று அவர் சொன்னது எங்கள் கற்பனைக்குள் எழுந்து வியப்பைத் தந்தது. கதையின் பூதங்கள் எங்கள் கற்பனையில் தோன்றி மிரட்டியது. இந்த கற்பனை உருவாக்கம்தான் கதை கேட்டல் ஏற்படுத்தும் மகத்துவம்.
இன்று டைனோசர், பூதம் எல்லாவற்றையும் கார்ட்டூன் சேனல்களில், திரைப்படங்களில் கிராபிக்சில் கொண்டு வந்து காட்டி, குழந்தைகள் கற்பனை செய்து பார்ப்பதற்கு வாய்ப்பு தராமல் செய்து
விடுகின்றனர்.கதை கேட்கும் போது குழந்தைகளிடம் ஏற்படும் கற்பனைச் சித்திரங்களும், மனம் உருவகிக்கும் காட்சிகளும் தான் பிற்காலத்தில் அவர்களை ஒரு ஓவியனாகவோ, கலைஞனாகவோ,
கவிஞனாகவோ, கதை ஆசிரியனாகவோ உருவாக்குகிறது. கதைகள் உருவாக்கும் படைப்பாற்றல், குழந்தைகளிடம் புதியன உருவாக்குவதற்கான சிந்தனைப் புலத்தை வளர்க்கிறது.
எனவே பெற்றோர்களே! பிள்ளைகளுக்கு நிறைய கதைகளைச் சொல்லுங்கள். தாத்தா, பாட்டிகளுடன் நேரம் செலவிட பிள்ளைகளை அனுமதியுங்கள். அவர்களிடம் கதைகள் கேட்கும் சுந்தரப் பொழுதுகளை தொலைகாட்சி உலகமும், ஆன்ட்ராய்டு உலகமும் அபகரித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு படைப்பாளி
உருவாகட்டும்

முனைவர்.மு.அப்துல் சமது,தமிழ்த்துறைப் பேராசிரியர்ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி,உத்தமபாளையம்

Source…….www.dinamalar.com

Natarajan

Message for the Day……” The Present Precious Life is not meant for throwing away just like that …”

Sathya Sai Baba

Those who are agitated by doubts about what to accept and what to reject, those who are blinded by illusion, and those who cannot distinguish between darkness and light, death and immortality — all these should approach great people who can show the path to understand the eternal truth – the self-illumined basis of all creation. Then both this world and heaven will be merged in the same effulgence! For the sake of this realisation, one should have deep yearning and hard, disciplined practice. This human birth is the consequence of countless good deeds, and it should not be cast aside; the chance must be fully exploited. As the Kenopanishad says, “This present precious life should not be thrown away.” When there are so many chances of saving oneself, isn’t it a big loss to waste them all? For all those who are slaves of pride and animal traits, this awareness in time is most important. Delay is fruitless; it is as silly as starting to dig a well when the house catches fire.

Message for the Day…” As you think that you become “…Develop Good thoughts …

While doing Kundalini Yoga, people practice breath control. In the breathing exercises, inhalation is described as Purakam, exhalation as Rechakam and holding the breath as Kumbhakam. These alone do not constitute the means to achieve yogic power. To breathe in all that is good is Purakam. To give up all that is bad isRechakam. To retain in the heart what is good isKumbhakam. Every human being must practice this divine type of yoga; in fact this must become your primary goal. Puttaparthi is a small hamlet. How has this village attained this eminent state? You can find the answer for yourself. It was not merely a great piece of good fortune or a lucky accident. It is due to the power of thought. Every sacred thought has the power to find fulfilment. Hence scriptures declared: “As you think, that you become (Yad bhavam tad bhavati)”. Develop good thoughts and naturally you will be entitled to the right of its fruits.

Sathya Sai Baba

படித்து ரசித்தது ….பூவிலே சிறந்த பூ ‘ சிரிப்பூ ‘ …!

இலக்கியச் சுவைகளுள் மோனையைப் போல் முதலில் நிற்பது நகைச்சுவை. “அது மனித குலத்திற்கு வாய்த்த வரம், அந்தரங்கத்தைப் புலப்படுத்தும் ஒளிச்சரம்” என்பார் தெலுங்குக் கவிஞர் சி.நாராயண ரெட்டி.“பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர் புன்னகை” என்று கவிக்கோ அப்துல் ரகுமானும், “பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்” எனக் காவியக் கவிஞர் வாலியும் புன்னகையைச் சொல்லோவியமாக வடிப்பர். “ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் இதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது” எனச் சிரிப்புக்குப் புகழாரம் சூட்டுவார் கவிப்பேரரசு வைரமுத்து.

“என்னைப் பொறுத்த வரை பிரார்த்தனை எவ்வளவு புனிதமானதோ அதே போல் சிரிப்பும் புனிதமானதாகும்” எனச் சிரிப்பின் சிறப்பினைப் பறைசாற்றுவார் ஓஷோ.

“பொதுவாகவே, அறிவைத் துலக்க, ஆன்மாவை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள, உடம்பில் வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ள நகைத்தல் நல்லது” என மூதறிஞர் வெ.சாமிநாத சர்மா கூறியிருக்கிறார். நகைச்சுவையின் தனிச்சிறப்பு ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொல்லும் போது அந்தக் கருத்து கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு அது.

நேர்காணல் ஒன்றில் இக்கருத்தினை விளக்க எழுத்தாளர் சாவி காட்டிய உதாரணம்

சாப்பிட வந்தவர் ஓட்டல் சர்வரிடம் கேட்கிறார். ‘இதோ பார்! நீ கொண்டு வந்து வைத்த கோழி பிரியாணியில் ஒரு ஈ செத்துக் கிடக்குது!”இவ்வளவு பெரிய கோழி செத்துக் கிடக்குதே, அது உங்க கண்ணில் படலே. சின்ன ஈ செத்துக் கிடப்பது மட்டும் பெரிசாத் தெரியுதாக்கும்!’ என்றார் சர்வர். ‘எப்போதோ படித்த இந்த நகைச்சுவையைத் துணுக்கை நினைத்துச் சிரிக்கும் போதெல்லாம் கூடவே அதில் பொதிந்துள்ள கருத்தும் என்னைச் சிந்திக்க வைக்கும்’ என்றார் சாவி. ஒரு தடவை திருக்குறளார் வீ.முனிசாமியும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு ரயில்வே ‘கேட்’டருகே டிரைவர் காரை நிறுத்தினார்.

கலைவாணர், “என்னப்பா ஆச்சு?” என்று கேட்டார். “’கேட்டு’ சாத்தியிருக்கிறான் ஐயா!” என்று டிரைவர் சொன்னார். உடனே கலைவாணர் திருக்குறளாரைப் பார்த்து, “பொய் சொல்லுகிறான்,

பார்த்தீர்களா? ‘கேட்டு’ சாத்தினான் என்று சொல்லுகிறானே, நம்மைக் கேட்டா சாத்தினான்?” இயல்பான நகைச்சுவை என்பது இது தான்! சொல் விளையாட்டின் மூலம் கலைவாணர் இங்கே நயமான நகைச்சுவையை தந்தார்.

மூவகை நகைச்சுவைகள் நகைச்சுவையில் முறுவலித்தல், அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என மூன்று வகைகள் உண்டு. முதலாவது புன்முறுவல்; அதாவது, குமிண் சிரிப்பு. இடைப்பட்டது அளவான சிரிப்பு; மூன்றாவது வெடிச் சிரிப்பு. 1925-ல் பெர்னார்ட் ஷாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதும் வழக்கமான நகைச்சுவை உணர்வோடு ஷா கூறினார்

“இந்த ஆண்டில் நான் நுால் ஒன்றும் எழுதவில்லை. உலகம் அதைக் கண்டு மகிழ்ந்து, எனக்கு நன்றி பாராட்டிச் செய்த செயல் இது.” படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத்

தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து சொற்பொழிவின் இடையே சொன்ன நகைச்சுவை“ஒருவன் ‘நான் என்ன பிராணி என்றே எனக்கு தெரியவில்லை’ என்று நண்பனிடம் கூறினான்.

‘ஏன்?’ என்று நண்பன் கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதில்… ‘பூனையைப் பார்த்து எலி பயப்படுகிறது; எலியைப் பார்த்து கரப்பான் பூச்சி பயப்படுகிறது; கரப்பான் பூச்சியைப் பார்த்து என் மனைவி பயப்படுகிறாள்; மனைவியைப் பார்த்து நான் பயப்படுகிறேன். நான் என்ன பிராணி என்றே தெரியவில்லை!’” கேட்பவர் இடையே அளவான சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. அறிஞர் அண்ணாதுரை பேசிய கூட்டத்தில் சில முரட்டு இளைஞர்கள் அவருக்கு முன் வந்து, “ஆணையிடுங்கள் அண்ணா, எங்கள் தலையையே உங்களுக்குத் தருகிறோம்” என்றார்கள். “தம்பிகளே! உங்கள் தலைகள் வேண்டாம்; இதயங்கள் தாருங்கள் போதும்!” என்றார் அண்ணாதுரை.

காரில் திரும்பி வரும் போது நண்பர்கள் கேட்டார்கள்: “இதயங்கள் தாருங்கள், தலைகள் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?” “ஆமாம், அவர்கள் தலைகளில் என்ன இருக்கிறது? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று அண்ணாதுரை சொன்னதும் நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வெடிச் சிரிப்பை எழுப்பும் அற்புதமான நகைச்சுவை இது! ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’- சிரிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம்.

-பேராசிரியர் இரா.மோகன்

எழுத்தாளர், -பேச்சாளர்

மதுரை.   

Source…….www.dinamalar.com

படித்தது ….மனதை தொட்டது …”வேர்களை இழந்து விட வேண்டாம்….”

காமராஜரின் இல்லத்தில் ஈ.வி.கே.சம்பத், குமரி அனந்தன் இருவரும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காமராஜர், “ஏம்பா…இந்த கோயில் கோபுரங்களை எல்லாம் ஏன் உசரமா கட்டியிருக்காங்க?” என்று கேட்டார். ஒருவர் சொல்லின் செல்வர், மற்றொருவர் இலக்கியச் செல்வர். கேட்கவா வேண்டும்…“அது நமது ஆன்மிக, கலை, கலாசாரப் பண்பாட்டுப் பெருமை, அழகு, அடையாளம்” என இருவரும் காரணங்களை அடுக்குகின்றனர்.
“அட… அதுக்கெல்லாம் இல்லைப்பா” என்று மறுத்த காமராஜர் கூறினார், “அந்த காலத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போகணும்னா நடந்துதான் போகணும், சாலை வசதி, வாகன வசதியெல்லாம் கிடையாது. அப்படி போகிறவர்கள் தாகத்தோடும், பசியோடும் போவார்கள். எங்காவது கோபுரம் கண்ணுல தென்பட்டதுண்ணா… கோபுரம் இருந்தா கோயில் இருக்கும், கோயில் இருந்தா மக்கள் இருப்பார்கள், மக்கள் இருந்தால் நம் பசியும், தாகமும் தீர்வதற்கு வழி பிறக்கும் என்பதை அடையாளப்படுத்தத்தான் கோயில் கோபுரத்தை உசரமா கட்டியிருக்காங்க!” என்று பதில் அளித்தாராம்.
எனக்கும், உங்களுக்கும் கோயில் கோபுரத்தைப் பார்க்கும் போது இந்த எண்ணம் தோன்றியதுண்டா? பெருந்தலைவருக்கு மட்டும் தோன்றியது என்றால் என்ன காரணம்? அவர் எப்பொழுதும் மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் என்பதால்தான்.
மேற்கண்ட தகவல், தமிழகப்பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. விருந்து முதலான நம் பாரம்பரிய மரபுகள் அனைத்தும் மனிதத்துவம் சார்ந்தவை. இத்தகைய நம் பாரம்பரிய பண்பாடுகள் பலவற்றை இன்று நாம் இழந்து வருவதோடு,
இலக்கிய வாசிப்பின்மையால் அது குறித்த சிந்தனைகளையும் இழந்து வருகிறோம்.கவிதை சொல்லும் சேதி பூதை தேசிகன் பாடிய கவிதை ஒன்று.
‘என் பாட்டியின் மாமியார்
என் பாட்டியிடம் சொன்னாளாம்…

இந்தப் பானையில் அரிசி
இருக்கிறது
இந்தப் பானையில் உளுந்து இருக்கிறது
இந்தப் பானையில் புளி இருக்கிறது’
என்பாட்டி என் அம்மாவிடம் சொன்னாளாம்…
‘இது அரிசி இருந்த பானை
இது உளுந்து இருந்த பானை
இது புளி இருந்த பானை’
இப்போது என் அம்மா
என் மனைவியிடம் சொல்கிறாள்…
இது அரிசிப்பானை இருந்த இடம்
இது உளுந்துப் பானை இருந்த இடம்
இது புளிப்பானை இருந்த இடம்’
அரிசி போய், அரிசி பானை போய், அரிசி பானை இருந்த இடம் மட்டும் இன்று காலியாக இருக்கிறது. இந்தக் கவிதை, நமது பாரம்பரிய பண்பாட்டுச் சரிவை மிகச் சரியாக அடையாளப்படுத்தி உள்ளது.
விரிந்து கிடந்த திண்ணைகள்
ஒரு காலத்தில் திறந்த மனசு போல வீட்டு வாசல் கதவு திறந்திருக்க… வருகின்றவர்களை அரவணைப்பதற்கு விரியும் கரங்கள் போல வீட்டின் முன் இருபக்கமும் திண்ணைகள் விரிந்து கிடந்தன. ஒரு யாசகனோ, வழிப் போக்கனோ அதில் அமர்ந்தால் தாகமும், பசியும் நீங்கிச் செல்வதற்கு உத்தரவாதம் இருந்தது. இன்று கிராமங்களில் கூட வீடுகளின் முன் திண்ணைகளைக் காண முடியவில்லை.
அதனால்தான், “அன்றைக்குத் தமிழர்கள், முன்பின் தெரியாத மனுசாள உபசரிக்க, வீடுகளுக்கு முன்னால் திண்ணைகளைக் கட்டி வைத்தார்கள். இன்றைக்கோ நாய்களைக் கட்டி வைக்கிறார்கள்” என்றார் திருமுருக கிருபானந்த வாரியார்.
வேர்களை இழந்துவிட்டு விழுதுகளின் பலத்தில், நிழல் தேடும் சமூகமாக நாம் மாறிவருகிறோம். நமது பண்பாடு வளர்த்தெடுத்த அர்த்தமுள்ள வாழ்வியல் மரபுகளை, மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மாறிய காட்சிகள் அதிகாலையில் வீடுகளுக்கு முன்னால் சாணம் மெழுகி, தண்ணீர் தெளித்து, மாக்கோலம் இட்ட காட்சிகளை இன்று கிராமங்களில் மட்டுமே காணமுடிகிறது. நகரியப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைபட்டுக் கொண்ட தமிழர்கள் ஸ்டிக்கர் கோலம், பெயின்ட் கோலத்தில் திருப்தி அடைந்து விடுகின்றனர். மண் முற்றத்திற்கு எங்கே செல்வது?
வீடுகளுக்கு முன்னால் அடுப்பு கூட்டி, கரும்புகள் நட்டு, அறுவடை நெல்லின் புத்தரிசியை புதுப்பானையில் சர்க்கரையுடன் இட்டு, முந்திரி, ஏலம் மணக்கப் பொங்கலிட்டனர். பொங்கி வழியும் வெண்நுரையில் வாழ்வின் வசந்த அபிவிருத்தியைக் கண்டு, ‘பொங்கலோ! பொங்கல்!’ என்று ஆனந்தக் குரல் எழுப்பினர். இத்தகைய குடும்பங்களில் ஒருவராக இருக்கும் பேறு, இன்று எத்தனைத் தமிழர்களின் வாரிசுகளுக்கு வாய்த்திருக்கிறது?
எங்கள் வீட்டில் புது மண்பானையில் புது அரிசிப் பொங்கலிட்டது உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அவற்றை போசித்தது உண்டு. இன்று வீட்டில் மாடுகளும் இல்லை, பொங்கலைக் கொண்டாடிய மூத்த தலைமுறையின் மனசும் இல்லை.
இன்றும் பொங்கல் பானையின் தலையில் வெண்நுரை பொங்கி நிற்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், என் பாட்டன், தமிழ் அடையாளத்துடன் தலையில் தொப்பியோ, தலைப்பாகையோ அணிந்திருந்த கம்பீரத் தோற்றம்தான் நினைவிற்கு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழர்களை ஒருங்கிணைத்த கூடிக் குதுாகலிக்கச் செய்த பொங்கல் விளையாட்டுக்களும் அருகிவிட்டனவே. பொங்கலின் கொண்டாட்டங்களான உறி அடித்தல், சடுகுடு, மாடு பிடித்தல், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களை அரிதாகவே சில கிராமங்களில் நடந்ததை பார்க்க முடிந்தது. இந்த வீர விளையாட்டுக்கள் எல்லாம், கிராமங்களின் அசல் முகம் என்பதற்கு இனி திரைப்படங்களின் பதிவுகள் மட்டுமே சாட்சிகளாகி விடுமோ?
தேசபாதுகாப்பு என்னவாகும் ஜல்லிக்கட்டு கூட இன்று விமர்சனத்துக்கும், சட்ட ரீதியான தடைக்கும் உள்ளாகி நிற்கிறது. ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களைத் தடை செய்து விட்டால், தேசத்தின் வருங்காலப் பாதுகாப்பே கேள்விக் குறியாகி விடும்! தேசப் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு ஆள் எடுத்தால், நம் கிராமங்களில் இருந்து தான் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் செல்வார்கள். ஏனென்றால், இயல்பான ஆற்றலை, முனை முகத்து நிற்கும் துணிச்சலை வீர விளையாட்டுக்கள் மூலம் அவர்கள் பெற்றுள்ளதுதான் காரணம்.
ஜல்லிக்கட்டு போன்றவை தடை செய்யப்பட்டால், வீரம் சார்ந்த விளையாட்டுக்கள் முக்கியத்துவம் இழந்தால், அது தேசத்தின் பாதுகாப்பையே உறுதியில்லாமல் ஆக்கிவிடாதா?
எனவே இயற்கையைப் போற்றல்! வேளாண்மையைக் கொண்டாடுதல்! உழவுக்கும் தொழிலுக்கும் உடன் உழைக்கும் ஜீவன் மாடுகளைச் சிறப்பித்தல்! வீரத்தை விளையாட்டுக்கள் மூலம் வளர்த்தெடுத்து அதனை சமூகப் பாதுகாப்புக்கு உரியதாக்கல்! ஜாதி, சமய அடையாளங்களைக் கடந்து, பண்டிகைகள் மூலம் ஒன்றுபடுதல் என தமிழனது பண்பாட்டு மரபுகளைப் போற்றுவோம்!

Source…….
-பேராசிரியர்.மு.அப்துல்சமது,தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரி,உத்தமபாளையம்.93642 66001

http://www.dinamalar.com

Who do we Light a Lamp in our Home ?

Being A Proud Hindu, I always had many Questions regarding day to day Rituals followed in our Religion. And One Such Question is Why Do We Light a Diya in our Home Temples ?? And here’s An Answer which I Found from many Elder People:

WHY DO WE LIGHT A DIYA ?

Light  symbolizes  knowledgeand  Darkness,  ignorance.

And The  Lord  is  the “Knowledge  Principle”  (Chaitanya)  who  is  the source,  the  enlivener  and  the  illuminator of all knowledge.

Hence light is worshiped as the Lord himself.

Knowledge  removes  ignorance  just  as  light  removes  darkness.  Also  knowledge  is a  lasting  inner  wealth  by  which  all  outer  achievement  can  be  accomplished. Hence  we light the lamp to bow down to knowledge as the greatest of all forms of wealth.

In  almost  every  Indian  home  a  lamp  is  lit  daily  before  the  altar  of  the  Lord.  In some houses it is lit at dawn, in some, twice a day – at dawn and dusk – and in a few it is maintained  continuously  (Akhanda  Deepa).  All  auspicious  functions  commence  with  the lighting of the lamp, which is often maintained right through the occasion.

Well, you might be thinking Why not light a bulb or tubelight?

Well, That too would remove darkness. But the traditional oil lamp  has a further spiritual significance. The oil or ghee in the lamp symbolizes our vaasanas or negative tendencies and the wick, the ego. When lit by spiritual knowledge, the vaasanas get slowly exhausted  and  the  ego  too  finally perishes.
Adding to this, The flame of a lamp always burns upwards. Similarly we should acquire such knowledge as to take us towards higher ideals.

While Lighting the Diya, Normally the followinghymn is prayed:

 DeepaJyoti ParaBrahma
Deepa Sarva Tamopahaha
Deepena Saadhyate Saram
Sandhyaa Deepo Namostute

Meaning:
I prostrate to the dawn/dusk lamp; whose light is the Knowledge Principle (the Supreme  Lord), which  removes the darkness of ignorance and by which all can be achieved in life.  


So This was it. Now you can Proudly Say that you know the Reason behind Lighting the Diya as well as Now you can Light a Diya with More Stronger belief….!! Share it if you think your Friends to need to know the reason for lighting a diya..!

Source……http://fullnfenil7.blogspot.in/

Natarajan

Message for the Day…….” When purity and love come together, there is Ananda {Bliss}….”

Sathya Sai Baba

Develop the quality of love. Fill your entire life with love. This was the prayer which the Gopikas addressed to Krishna. A life without love is utterly barren. You are the embodiment of love. Love has to be directed towards what is true. Such love must be your life-breath. Embodiments of the Divine Atma! Esteeming love as the essence of Divinity, you must engage yourselves in loving service to society. Why is it that so many lakhs of people have gathered here today? There must be some compelling reason for it. You must be seeking something which you have not found in your native place. Here there is Divine Love. What has drawn all people here is the power of Divine Love – that is the bond uniting hearts. At the root of all this is purity. Where there is purity, there love grows. When purity and love come together, there is Ananda (bliss). Whatever work we do, whatever sacrifices we perform, they are not of much use in the absence of love.