Message for the Day…” Even if you fail to be Helpful to others, Do not cause harm to others…’

Sathya Sai Baba

Engage yourselves in pure activities with pure hearts and earn a good name. What you have to offer to Me is the good name earned by you. This is the highest expression of your gratitude. In no circumstances should you bring a bad name. Even if you fail to be helpful to others, do not cause harm to others. Students and all spiritual aspirants should cherish in their hearts with gratitude the good done to them by others and always remember the help rendered to them, in whatever form it may be. Only those who lead such grateful lives will be able to find peace and happiness in their lives. I desire that all of you should constantly think of God, continue to render social service, lead ideal family lives and enjoy peace and happiness. This is My benediction for all of you.

 

” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” ….

periyava_vikatan_cover_73.jpg
(மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை.)

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஃபேஸ்புக் மலரும் நினைவுகள் 29-10-2012

“எல்லோரும் ‘ஈகோ’வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம் அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு’சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா?

அதுதான் ‘மோர்’ அந்த நிலை சாஸ்வதமானது.

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகுமேலே தொடர எதுவுமில்லை.

மோர் சாதம் முடிந்த பின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

Read more: http://periva.proboards.com/thread/10459#ixzz3qBb7H9Lc

Source…..www.periva.proboards.com

natarajan

29 வருடங்களாக சம்பளம் வாங்காமல் சேவை செய்த சென்னை டாக்டர் டி.வி.தேவராஜன்…

டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,

நாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர்
அப்துல்கலாம் கையால் பிசிராய் விருது வாங்கியவர்.

சமீபத்தில் கூட எப்ஐசிபி எனப்படும் மருத்துவர்களுக்கு தரப்படும் மிக உயர்ந்த விருதை பெற்றவர்.
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவகுழுமத்தில் அட்வான்ஸ் பீவர் கிளினிக் பிரிவின் தலைவராக இருப்பவர்.

பத்திற்கும் அதிகமான மருத்துவ புத்தகங்கள் எழுதியவர் இவர் எழுதிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.
இவர் நாற்பது வருடமாக சம்பளம் வாங்காமல் மருத்துவக்கல்லுாரி பேராசிரியராக வேலை பார்த்தார் என்று ஒரு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்காக எங்கெங்கோ தேடி அவரது மொபைல் எண்ணைக்கண்டு பிடித்தேன். அவரிடம் இதுவரை அறிமுகம் இல்லை என்பதால் நான் உங்களிடம் பேசவேண்டும் என குறுஞ்செய்தி(sms) கொடுத்தேன்.சிறிது நேரத்தில் அவரே போன் செய்தார்.மிகவும் அன்புடனும் நட்புடனும் தனக்கான தகவலை பகிர்ந்து கொண்டார்.
நாற்பது வருடம் என்பது தவறு, சரியாக சொல்வதானால் 29 வருடம் நான் சம்பளம் வாங்காமல் பணியாற்றினேன்.சம்பளம் வாங்காமல் பணியாற்றியதால் நான் பணக்காரனோ என எண்ணிவிடவேண்டாம் நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிரமப்பட்டு படித்தவன்தான்.

வெறுமனே எம்பிபிஎஸ் மட்டும் படிக்காமல் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படித்துவிடுவது என படித்தேன் அதனால்தான் என் பெயருக்கு பின்னால் அத்தனை ஆங்கில எழுத்துக்கள்.
படித்த படிப்புக்கு உடனடியாக சென்னை மருத்துவக்கல்லுாரியில் உதவி பேராசிரியர் வேலை கிடைத்தது.காலையில் பேராசிரியர் மாலையில் சொந்த கிளினிக்கில் மருத்துவம்.

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது எனக்கு பிடித்துப்போனது எந்த வகுப்பை மிஸ் பண்ணினாலும் என்னுடைய வகுப்பை மிஸ் பண்ணமாட்டார்கள் நானும் எதை வேண்டுமானாலும் விட்டுவிடுவேன் ஆனால் கல்லுாரிக்கு சென்று பாடம் நடத்துவதை விடமாட்டேன்.
சென்னை மருத்துவக்கல்லுாரியும் அதன் மாணவர்களும் எனக்கு மிகவும் பிடித்துப்போன காலகட்டத்தில்தான் ஒரு சிக்கல் எழுந்தது.சம்பளம் வாங்கக்கூடிய உதவி பேராசிரியர்களுக்கு இடமாற்றம் உண்டு, சம்பளம் வேண்டாம் கவுரவ பேராசிரியராக இருந்து கொள்கிறேன் என்றால் இடமாற்றம் கிடையாது என்று ஒரு விதி இருந்தது, எனக்கு கிளினிக் வருமானமே போதுமானதாக இருந்ததது என்பதைவிட என் மாணவர்களைவிட்டு வேறு இடத்திற்கு செல்ல விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை என்பதால் சம்பளம் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டேன்.
நான் எழுதிக்கொடுக்கும் போதே பல ஆயிரம் ரூபாய் சம்பளம் அதன்பிறகு 29 வருடங்களில் எத்தனை எத்தனை ஆயிரமோ உயர்ந்தது அதை எல்லாம் கணக்கு பார்த்தால் பல லட்சம் இருக்கும் ஆனால் அதை எப்போதுமே நினைத்ததும் இல்லை வருத்தப்பட்டதும் இல்லை. நான் எடுத்த முடிவும் எடுத்துக்கொண்ட காரியமும் சரியானதே என்பதை இப்போதும் என் மனதும் சொல்கிறது. என்னிடம் படித்ததை பெருமையாக என் மாணவர்களும் சொல்கிறார்கள் எனக்கு அது போதும். இன்று பல மருத்துவர்கள் என் பெயரை சொல்லி என் ஆசிரியர் என்று சொல்லும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

ஒய்வு பெற்ற பிறகு பல பல்கலைக்கழகங்களுக்கு கெளரவப் பேராசிரியராக இருந்துள்ளார். இதே போல் பல கல்லூரிகளுக்கு எக்சாமினராக சென்று வந்துள்ளார். இந்திய மருத்துவரில் சிறந்தவர் யார் என்ற பிஎம்ஜே விருதுக் குழுவில் ஒரு நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

இப்போது 71 வயதாகிறது கொஞ்சமும் சுறுசுறுப்பு குறையாமல் ஒரு பக்கம் மருத்துவத்தையும், இன்னோரு பக்கம் ‘டெக்ஸ்ட் புக் ஆப் மெடிசின்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதி முடித்துள்ளார். நவீன மருத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த புத்தகம் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மகத்தான பொக்கிஷமாக விளங்கப்போகிறது.

இது ஒரு பிரம்மாண்டமான புத்தகம்தான் இருந்தாலும் இதில் இருந்து ஒரு பைசா கூட தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு முழுக்க முழுக்க அதன் பலன் அனைத்தும் வாங்கும் மாணவர்களுக்கு போய் சேரட்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சந்தேகம் இல்லாம் டாக்டர் டி.வி.தேவராஜன் மகத்தான மருத்துவர்தான்.

இவரது மெயில் முகவரி:drtvd1944@gmail.com

Source….
—எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Message For the Day…” How to Remove the Barrier of ‘ego’ From our Mind …” ?

The means of getting Divine grace are: Bhakti (devotion),Prapathi (surrender), Niyama (ethical discipline), Vicharana(enquiry) and Deeksha (determination). When you succeed in these tests, you will experience the grace of the Divine. Devotion should manifest itself in every action. Everything done out of love for God and as an offering to God becomes devotion. The devotee is filled with love and shares the love with all the others. The nine different forms of worship are only means to cultivate devotion. But the goal of all of them is to experience oneness with the Divine.Prapathi means total surrender – offering everything to the Divine. The sense of ego separates the individual from the Divine. When the individual offers everything to God, the barrier of ego is removed. Of all diseases to which man is prone, the disease arising from ahamkara (ego) is the most deadly. The only panacea for this disease is surrender to the Will of the Divine.

Sathya Sai Baba

Message for the Day…Woman ‘Lakshmi of the Home ‘ often Lead Men on the Godward Path and the Practice of Holy Virtues …”

Sathya Sai Baba

Heaping respect and honour upon a person who does not followAtmic dharma (righteousness driven by the Self) is like heaping decorations on a body that has no life in it. The soul that left the body cannot enjoy the respect shown to the corpse. So too is the case with the person who is unaware of the Reality and the purpose of life but is crowned with fame and glory. A modest woman will not care for such meaningless trash and tinsel. This characteristic is what confers on her the title ‘The Lakshmi of the home’. The woman is the prop of the home as well as of the practice of religion. She plants and fosters religious faith. Women have natural aptitude for faith and spiritual endeavour. Women with devotion, faith, and humility often lead men on the Godward path and the practice of holy virtues.

Message for the Day…” You Need Determination to Face the Challenges in your Life with Utmost Faith in God…”

Sathya Sai Baba

Have high aims in life. Set before yourselves the examples of great men and women who have figured in the history of our country and the world. Take a lesson from their life of sacrifice and heroism. You need determination to face the challenges of life which is filled with ups and downs, successes and failures, and joys and sorrows. These challenges have to be faced with faith in God. The mind should not be allowed to waver and hop from one thing to the other. A steady mind is the mark of a truly educated person. Life should be governed by definite regulations. Self-control is essential for leading a righteous life. Our culture has always laid stress on the well-being of all. You should not be overwhelmed by difficulties that you may encounter in life. They are all transient; they come and go. The source of enduring bliss is within you. Do not give way to weakness of will.

“க்ரகங்களைத் திட்ட வேண்டாமே …”

18698_10153209347029244_3030028360467212073_n.jpg

ஐயோ…சனியன் புடிச்சு போனவனே…இந்த பாவி என்றைக்கு விலகுறது… இவனுக்கு படிப்பு மண்டையிலே ஏறப்போவுது…!”

“இந்த குரு நீசமாகி கிடக்கிறாராமே! இவளுக்கு எப்ப தான் கல்யாண யோகம் வந்து தொலையப் போகுதே…”

“ராகுவைப் போல கொடுப்பாருமில்லை… கெடுப்பாருமில்லையாம்…இவர் என்னத்த கொடுத்தாரு… கெடுக்கிறதுக்குனே என்னை தேர்ந்தெடுத்திருக்கிறானே…”

இப்படி ஒவ்வொரு கிரகத்தையும் திட்டித் தீர்ப்பவர்கள் ஏராளம். இப்படி கிரகங்களைத் திட்டக்கூடாது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.

ஒருமுறை, பெரியவரைத் தரிசனம் செய்ய ஜோதிடர் ஒருவர் வந்தார். அவரது குடும்பம் மிகவும் பெரியது. ஜோதிடம் கணித்துச் சொல்வதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. செலவுக்கு ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

பெரியவரை தரிசனம் செய்த அவர், “பெரியவா… எனக்கு வருமானம் போறலே! ரொம்ப சிரமப்படறேன்… நீங்க தான், எனக்கு அனுக்கிரகம் செய்து, வருமானம் உயர அருளாசி தரணும்,” என்று வேண்டிக் கொண்டார்.

பெரியவர் அவரிடம், “நீ உன்னோட அப்பா வசித்த பூர்வீக வீட்டில் தானே இருக்கே…?” என்று கேட்டார்.

அதற்கு ஜோதிடர், “இல்லை பெரியவா… அங்கே என் அண்ணா இருக்கான். அதற்கு மேலண்டை இருக்கிற ஒரு வீட்டில் நான் குடியிருக்கேன்…” என்று பதிலளித்தார்.

“நீ அந்த வீட்டில் குடியிருக்க வேண்டாம். உன்னோட பூர்வீக வீட்டிற்கு கிழக்கு பக்கத்திலே இருக்கிற பழைய மாட்டுக்கொட்டகை இருக்குதே…அந்த இடத்திலே, ஒரு குடிசை போட்டுகிட்டு அங்கே போய் குடி இரு,” என்றார் பெரியவர்.

அவர் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இருந்தது. அந்த ஜோதிடரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாய் அம்பாளை உபாசனை (பூஜை) செய்த குடும்பம். அதனால், புனிதம் மிக்க பசு கொட்டிலில் குடியிருக்கச் சொன்னார் பெரியவர்.

அத்துடன், “நீ எல்லாருக்கும் பலன்கள் சொல்லும் போது, கிரகங்கள் சரியில்லேன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே…!

எதுக்காக, உங்க ஜாதகத்திலே குரு நீசன்… சனி பாபி, புதன் வக்ரம் என்றெல்லாம் சொல்றே…குரு என்பவர், தட்சிணாமூர்த்தி சொரூபம். சனி என்பவர் சூரியனின் புத்திரர். ஈஸ்வர பட்டம் பெற்றவர். அவரை பாபி என சொல்லலாமா!

திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களிடம் கூட, “”பொருத்தம் இல்லே…” என நிர்தாட்சண்யமாக சொல்லாமல், பெண்ணுக்கு விவாகம் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொல். புத்திர பாக்கியம் பற்றி கேட்டால், அதற்கு பாக்கியமில்லை என வெளிப்படையாகச் சொல்லாமல், கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே… என சமாளி,” என்று புத்திமதி கூறினார்.

“இனிமேல் நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்,” என்ற ஜோதிடர், பெரியவரிடம் ஆசி பெற்று கிளம்பினார்.

நாமும் இனி கிரகங்களைத் திட்டாமல், அவை தரும் சோதனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, நம் பணியைத் தொடர வேண்டும். அப்படி செய்தால், கிரகங்கள் மகிழ்ந்து நம்மை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்

Source….www.periva.proboards.com

Natarajan

 

Message for the Day…” When Honour is offered to undeserving it is tantamount to insult…”

Some might question, “Women who have swallowed all the compunctions of modesty are being honoured today! They strut about with heads erect, and the world honours them not a whit less. How is that so, if modesty is all important?” I have no need to acquaint Myself with these activities of the present-day world. I do not concern Myself with them. They may receive honour and respect of a sort, but the respect is not authorized or deserved. When honour is offered to the undeserving, it is tantamount to insult; to accept it when offered is to demean the very gift. It is not honour but flattery that is cast on the immodest by the selfish and the greedy. A modest woman will never crave honour or praise. Her attention will always be on the limits that she should not transgress. Honour and praise come to her unasked and unnoticed. The honey in the flower or lotus does not crave for bees; so too is the relationship with a cultured woman who knows her limits and the respect she evokes and deserves.

Sathya Sai Baba

Message for the Day…”Discipline is the soil on which Virtue Grows …”

Sathya Sai Baba

These days virtue is becoming rare at all levels – in the individual, family, society and community, and also in all fields of life – economic, political and even ‘spiritual’. Life must be spent in accumulating and safeguarding virtue, not riches. Listen and ruminate over the stories of the great moral heroes of the past, so that their ideals may be imprinted on your hearts. There is also a decline in discipline, which is the soil on which virtue grows. Each one must be respected, whatever be their status, economic condition or spiritual development; else there will be no peace and happiness in life. This respect can be aroused only by the conviction that the same Real Self (Atma) that is in you is playing the role of the other person. See that Divinity (Atma) in others; feel that they too have hunger, thirst, yearning and desires as you have, develop sympathy and the anxiety to serve and be useful to everyone.