Daddy’s Little Girl Interrupts Military Ceremony to Welcome Him Home…..

Daddy's Little Girl Interrupts Military Ceremony to Welcome Him Home

 

Screengrab taken from video posted on Facebook by KKTV 11 News

Military protocol be damned, this two-year-old hasn’t seen her daddy in a long time and isn’t going to wait a second longer to give him a proper welcome.

In a video that’s now touching a million hearts, little Karis Oglesby, dressed in an ensemble inspired by the US flag with sparkling gold boots to match, can be seen darting towards her dad Lt Daniel Ogelsby at the formal homecoming ceremony in Fort Carson, Colorado. With outstretched arms (and not a care in the world), she rushes to daddy to give him a warm hug. Cue in the aaawwws now…

Lt Ogelsby was among 300 Fort Carson soldiers who were welcomed back home after a nine-month deployment in the Middle East, according to The Gazette. US military protocol dictates that homecoming soldiers have to be given a formal welcome by their commander. After that they are allowed to meet their families.

“She was excited. She spotted me from a couple rows back and she couldn’t contain herself. I wasn’t gonna tell her no,” the happy father told KKTV 11 News.

Luckily for us, the adorable moment was captured on camera for posterity.

Source….www.ndtv.com
Natarajan

இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்….

இருக்கும் வரை இருமிவிட்டு, இறந்தபின்னே இடுகாட்டுக் கரையான்களுக்கு இரையாகி மறையும் மனிதர்களுக்கு மத்தியில், வரலாறாகவே வாழ்ந்து விட்டுப் போகிற மனிதர்கள்
உன்னதமானவர்களாய் உலகத்தாரால் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் விழிகள் வழிகாட்டும் மொழிகளாய் மற்றவர்களுக்கு அனுதினமும் அறிவுரைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன. சங்கடங்கள் சாமரம் வீசினாலும் அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
காந்தியும், காமராஜரும் சிரமத்தின் மீதேறி சிகரத்தை அடைந்த மகத்தான வாழ்ந்துகாட்டிகள். எளிமையான, பயன்மிகுந்த வாழ்க்கையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு அகிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில் வாழ்ந்து, காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும் இன்றைய இளையோரின் இணையற்ற வழிகாட்டிகள்.


மனித ஆத்மாக்களுக்கு மத்தியிலே மகாத்மாவாக மாற அவர் என்ன செய்தார்? கர்மமே கண் என்று லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் இன்றும் துாயஆட்சியாளராய் நினைத்துப் பார்க்கப்படுகிறாரென்றால் காரணம் என்ன?

கைதவறி கீழே விழுந்த பாதரசம் எப்படி எந்த அழுக்கோடும் ஒட்டாமல் உருண்டோடுமோ, அதுபோல் இந்த இரு தலைவர்களும் உலகியல் வாழ்க்கையோடு ஒட்டிஒட்டாமல் வாழ்ந்தவர்கள். மனத்துக்கண் மாசுஇல்லாமல் வாழ்தலையே அனைத்து அறமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். இருவரும் அனுபவங்களால், வாழ்வை ஆராதனை செய்தவர்கள். இந்திய நாட்டின் விடுத்தலைக்காகப் பல நாட்கள் சிறையிலேயே கழித்தவர்கள் இருவரும்.
எளிமையான தலைவர்கள் விளம்பரத்திற்கு ஆசைப்படாத எளிமையான தலைவர்களாக இருவரும் திகழ்ந்தார்கள். 1901ல் ஒரு மாநாட்டிற்காக காந்தி, கல்கத்தா வந்திருந்தார். மாலையில் மாநாடு தொடங்க இருந்த இடத்தைக் காலையில் பார்வையிடச் சென்றார்.
அந்த மைதானம் குப்பையும் கூளமுமாயிருந்தது. ஒன்றும் பேசாமல் காந்திஜி துடைப்பத்தைக் கையில் ஏந்தி மைதானத்தைத் துாய்மைசெய்யத்தொடங்கினார்.
தஞ்சை மாவட்டச் சுற்றுப்
பயணம் மேற்கொண்ட காமராஜர் ஒரு பழைய கோவிலுக்குள் சென்றார், உடன் இருந்தவர்களிடம் “ இதை யார் கட்டுனான்னு கேட்டேன்” என்றார். யாருக்கும் தெரியவில்லை, சட்டென்று மேலே எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கைக் காட்டி, ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்தக்கோயிலே கட்டுன மவராசன் யாருன்னு தெரியல… அதுல டியூப் லைட் போட்ட மவராசன் பேரு பெயிண்டுல எழுதியிருக்குன்னேன்” என்று சிரித்தபடிச் சொல்லியவாறே காமராஜர் வெளியே வந்துவிட்டார்.
பதவியை விரும்பா பண்பாளர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க மறுத்தார் காந்தி. இரண்டு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோதும் ஏற்காமல் சாஸ்திரியையும், இந்திராகாந்தியையும் பிரதமராக்கி அழகுபார்த்த தலைவர் காமராஜர். “பதவியைத் தேடி நாம் போனால் பதவிக்குப் பெருமை, பதவி நம்மைத் தேடிவந்தால் நமக்குப்பெருமை” என்று அடிக்கடிக் கூறியவர் கர்மவீரர் காமராஜர்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி கறுப்பர் என்ற காரணத்தால் டர்பன் நீதிமன்றத்தில் தலைப்பாகையோடு வாதாட அனுமதி மறுக்கப்பட்டது. அதைக் கடுமையாக எதிர்த்து, அந்த நீதிமன்றத்தை விட்டுவெளியேறினார். முதல் வகுப்புப் பயணச் சீட்டோடு பிரிட்டோரியாவுக்குப் பயணித்தவரை நிறவெறியோடு வெள்ளையர்கள் துாக்கி எறிந்தபோது பட்ட ரணத்தை இந்தியநாட்டின் சுதந்திரத்திற்காகப் பயன்படுத்தினார். ராட்டையையே சாட்டையாக்கி அந்நியரை நாட்டைவிட்டு ஓடச்செய்த மகாத்மா, மதுரையில் தன் ஆடைகளை மாற்றித் தமிழ்நாட்டு விவசாயிகள் உடுத்தும் மிக எளிய உடைக்கு மாறினார். மகாத்மாவின் கொள்கைகளில் கவரப்பட்டு காமராஜர் வாழ்நாள் முழுக்க கதராடையையே உடுத்தினார்.
மனிதநேயச் செல்வர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் மனிதநேயநெறியை இருவரும் தம் வாழ்வின் அறமாகக் கொண்டவர்கள். பள்ளிக்குச் செல்லும் வயதில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், காமராஜரைப் பெரிதும் பாதித்ததன் விளைவாக, உலகம் போற்றும் மதியஉணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
சம்பரானில் கஸ்துாரிபாவோடு பயணித்துக்கொண்டிருந்தபோது அழுக்கு உடையோடு குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை காந்திஜி பார்க்கிறார். “கஸ்துாரிபா… இவர்கள் அழுக்கோடு மாற்று உடை இல்லாமல் இருப்பது உனக்கு உறுத்தவில்லையா?
நீ ஏன் இவர்களை நீராடவைத்து துாய்மையான உடையணிவித்து பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று கேட்டார். காந்திஜி சொன்னபடி வாழ்க்கை முழுக்க கஸ்துாரிபா செய்தார்.
சத்தியசோதனை மேற்கொண்டவர்கள் மகாத்மாவுக்கு முகஸ்துதி பிடிக்காது. “நாம் சேவை செய்யத்தானே பிறந்திருக்கிறோம் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்று அடிக்கடி சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வருவோரிடம் கூறுவார்.
காமராஜரும் அப்படியே வாழ்ந்தார். யாரேனும் தன்னைப் பாராட்டிப் பேசினால், “நிறுத்துனேன்… என்னைப் புகழ்ந்து பேசும் நேரத்திலே நல்ல காரியம் எதையாவது செய்யலாமேனேன்” என்பார். முதலமைச்சரானதும் பாதுகாப்புக்கு தன் காருக்கு முன் சைரன் வைத்த கார் சென்றதை விரும்பாதவர்.
இருவரும் சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அன்பில் வளர்ந்தவர்கள். இருவரும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். அந்நிய ஆடைகளை மறுத்து காலம் முழுக்க கதராடை அணிந்தவர்கள். எளிமையானவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள், நேர்மையானவர்கள். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, தன் அன்னை தேசம் பாழ்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தங்களையே சுதந்திர வேள்வியில் உருக்கி ஊற்றியவர்கள். அவர்கள் வழியை நம் விழிகள் நோக்கட்டும். இந்த தேசத்தை நேசித்த அவர்கள் வழியில் நம் இளையோர் பயணம் நடக்கட்டும்.

Source……-முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி,
in http://www.dinamalar.com

Natarajan

 

” We Are not Special…But Limited Edition …”

We, the people born between 1940-1970…are the  blessed ones…We are the awesome people… Our life  is a living proof……….
>
>
> 👉We were never treated like  a pack of animals to carry  our books to school.
>
> 👉While playing and riding bicycle, we never bothered to  wear helmets.
>
>  👉After school time we played until its dusk but never  watched t-world (TV) by locking up ourselves in a room.
>
> 👉We played only with our real friends, not  with NET friends.
> 👉 If we ever felt thirsty, we used to drink tap water but  never searched for bottled water.
>
> 👉We never got ill even after sharing the same juice with  four friends.
>
> 👉We were never put on weight even after eating plate full > of sweets and rice everyday.
>  👉Nothing happened to our feet even after roaming bare  foot.
>
> 👉We never used any health supplements to keep ourselves  healthy.
>
>  👉We used to create our own toys and play with them.
>
>  👉Our parents were not rich, they never ran behind money  and wealth. They just searched for and gave only love.. not  any worldly materials.
>
>  👉We stayed nearby to them so that they can communicate  with us. Just one word by them was enough to communicate.  hence we never required any mobile phones to communicate.
>
>  👉We never visited doctor when we got ill but the doctor  visited us during our illness.
>
>  👉We never used to share our emotions just by  emoticons inmobile phones.
>
>  👉We used to listen to the truth and voice of our  conscience and used to write those things only in the  letters, hence we never used to change our words.
>
>
>  👉We never had cellphones, DVDs, Play stations, XBoxes,  video games, Personal computers, internet, chat but we had  many real friends.

👉We used to visit our friend’s home uncalled and  enjoyed food with them. We never had to call them and ask  their permission to visit their home.
>
>  👉Relatives were near to us so our hearts and souls were  happy. Hence we never required any insurance policy.
>
>  👉We may have been in Black and White photos  but you can find good colourful memories in those  photos……..
>
>  🌹🌹🌹🌹Last is the  ultimate🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
>  👉  We are a unique and the most understanding  generation, because we are the last generation who listened  to their parents….  and also the first which have to listen to their children.
>  We are not special, but  LIMITED EDITION

Source…. Input from a friend of mine….

Natarajan

 

” நான் இருக்கேன் ……..”


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

Read more: http://periva.proboards.com/thread/6421/#ixzz3mmmTHWe0

Source…www.periva.proboards.com

natarajan

The Origin of the Term ” Conman ” ….!!!

The Original “Conman”

“Have you confidence in me to trust me with your watch until tomorrow?”

With these 13 words politely expressed, as often as not William Thompson would acquire another watch. Of course, Thompson wasn’t even close to the first to run such a daringly simple scheme, but his bold method of gaining his mark’s trust led a writer in the June 8, 1849 edition of the New York Herald to pen a piece “Arrest of the Confidence Man,” giving us the first known documented instance of the term “confidence man.”

Within a decade, Herman Melville published his novel The Confidence-Man, which further popularized the phrase. Over time, this has been shortened to the familiar “con man” or “conman” and the derivative “con artist.”

Schemes like Thompson’s have been around for seemingly as long as humans have had assets to swindle, with various names for the scammers popping up over the centuries. As for early-on in the United States, before Thompson, con men were commonly called diddlers, after a character, Jeremy Diddler, from the 1803 play Raising the Wind, by James Kenney.

Analyzed in depth by none other than Edgar Allan Poe in an 1840 essay,Diddling, Considered as One of the Exact Sciences, Poe noted the qualities necessary to succeed at diddling: audacity, minuteness (focusing on the small crime), self-interest, ingenuity, perseverance, impertinence, nonchalance, originality, and a grin.

Having his fair share of each of these, good manners and being well dressed, Thompson was remarkably successful with his scheme… that is, until he was finally caught, as described in the aforementioned 1849 edition of the New York Herald:

“Arrest of the Confidence Man—For the last few months a man has been traveling about the city, known as the “Confidence Man,” that is, he would go up to a perfect stranger in the street, and being a man of genteel appearance, would easily command an interview. Upon this interview he would say after some little conversation, “have you confidence in me to trust me with your watch until to-morrow;” the stranger at this novel request, supposing him to be some old acquaintance not at that moment recollected, allows him to take the watch, thus placing “confidence” in the honesty of the stranger, who walks off laughing and the other supposing it to be a joke allows him so to do.

In this way many have been duped, and the last that we recollect was a Mr. Thomas McDonald, of No. 276 Madison street, who, on the 12th of May last, was met by this “Confidence Man” in William Street, who, in the manner as above described, took from him a gold lever watch valued at $110; and yesterday, singularly enough, Mr. McDonald was passing along Liberty street, when who should he meet but the “Confidence Man” who had stolen his watch.

Officer Swayse, of the Third Ward, being near at hand, took the accused into custody on the charge made by Mr. McDonald. The accused at first refused to go with the officer; but after finding the officer determined to take him, he walked along for a short distance, when he showed desperate fight, and it was not until the officer had tied his hands together that he was able to convey him to the police office. On the prisoner being taken before Justice McGrath, he was recognized as an old offender by the name of Wm. Thompson, and is said to be a graduate of the college at Sing Sing.

The magistrate committed him to prison for a further hearing. It will be well for all those persons who have been defrauded by the “Confidence Man” to call at the police court Tombs and take a view of him.”

Bonus Fact:

  • While Moby Dick is now considered a great classic of literature, in its day, it wasn’t very successful and only earned Herman Melville $556.37, with less than 3000 copies sold over the four decades or so from when it was published to when Melville died.

Source…….www.today i foundout.com

Natarajan

” சங்கத்தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா …” !!!

பிள்ளையார் சுழி!

விநாயகர் சதுர்த்தி-செப்டம்பர் 17-09-2015

மகா சுவாமிகளுடன்…

பரணீதரன்

1922458_1501314900155054_79277391464543733_n.jpg
காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

(பெரியவா சொன்ன கவிதை)

தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.

”ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்… தெரியுமோ?”

”மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே…”

”அது இருக்கட்டும்… என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது”.

”பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே”.

”நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?”

”அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..”

”காலேஜ்லே என்ன படிச்சே?”

”பி.காம்”

”மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்… பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!”

சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.

பெரியவா பேசத் தொடங்கினார்: ”ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?”

”கேள்விப்பட்டிருக்கேன்”

”அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா… ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, ‘நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். ‘சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, ‘கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், ‘கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். ‘இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.

போஜராஜா நெசவாளியைப் பார்த்து, ‘நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, ‘கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, ‘கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, ‘மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!

நாலாவது அடிலே, ‘நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்” என்று சொன்ன பெரியவா, ”நீயும் போயிட்டு வா!” என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

பெரியவா சொன்ன கவிதை இதுதான்…

காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.

அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், ‘ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.

அது போகட்டும்… வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?

இது ஒருபுறம் இருக்கட்டும், ”நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ‘பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.

ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’

என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).

இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.

ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் ‘Six Mystics of India’ என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது

Source….Expeience of Bharanidharan  in http://www.periva.proboards.com

Natarajan

Pepsi CEO Indra Nooyi explains how an unusual daily ritual her mum made her practice as a child changed her life….

In 2006, Indra Nooyi became PepsiCo’s first female CEO, as well as its first CEO not born in the US.

At a “Women in Leadership Panel” at 92Y in New York on Tuesday, Nooyi said she’s always pushed back against adversity and her confidence is built upon an unusual daily habit her mother made her and her older sister, Chandrika, practice when they were just 8 to 11 years old.

Nooyi grew up in the socially conservative city of Madras (now Chennai), India. Her motheradhered to some traditional beliefs — she stressed the importance of seeking a good husband early — but she also instilled in her two daughters the belief that they could grow up to become whoever they wanted.

“Every night at the dinner table, my mother would ask us to write a speech about what we would do if we were president, chief minister, or prime minister — every day would be a different world leader she’d ask us to play,” Nooyi said to the 92Y audience. “At the end of dinner, we had to give the speech, and she had to decide who she was going to vote for.”

The winner of the debate then signed a piece of paper that stated they had become whatever the world leader of the day was. The girls and their mum would laugh and have fun with it, but Nooyi said she and her sister came to appreciate it, even after they became too cool for the ritual when they hit adolescence.

“Even though my mother didn’t work and didn’t go to college, she lived a life vicariously through her daughters,” Nooyi said. “So she gave us that confidence to be whatever we wanted to be. That was an incredibly formative experience in my youth.”

That confidence was reinforced by her paternal grandfather, a charismatic judge. If he asked her to do a job as a child and she later told him that she was unable to do it the way he wanted, he would make her write “I will not make excuses” 200 times on a piece of paper. She became grateful for this punishment when she grew older.

Nooyi’s confidence and work ethic helped her achieve an MBA from the Yale School of Management in 1980 and to start building a successful career. Early on, she said men wouldn’t make eye contact with her in meetings and would consistently check her answers with one of her male colleagues. But rather than wilt under the pressure, she began to call men out on their actions, and it wouldn’t take long for them to realise she was highly adept at her job.

“In my heart I said, ‘I can do this better than anyone else can, and if everything else fails, they’re going to come to me and say, ‘Fix it,’ because I know I’m that good,” she said. “Remember, I could be president of India!”

Source….Richard Feloni  in  ….www.businessinsider.com

natarajan

” நான் அனுமனை சொல்கிறேன் …”

ராணி மைந்தன் எழுதிய, ‘சாவி – 85’ நூலிலிருந்து: பக்தவத்சலம் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். பதவியை துறந்து, கட்சி பணியாற்ற வேண்டும் என்ற, ‘காமராஜர் திட்ட’த்தின் கீழ், முதல்வர் பதவியில் இருந்து காமராஜர் விலகிய பின், முதல்வராக பொறுப்பேற்றார் பக்தவத்சலம். ‘தமிழக மக்களிடையே நல்ல பண்புகளும், பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால், நம் புராண இதிகாசக் கதைகளை கதாகாலட்சேபம், நாடகம் வாயிலாக, பட்டி தொட்டியெங்கும் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்…’ என்ற யோசனையை, திருவையாற்றில் வெளியிட்டார் முதல்வர் பக்தவத்சலம்.
டில்லியில், காமராஜருடன் தங்கியிருந்த போது, பக்தவத்சலம் கூறிய இந்த யோசனை பற்றி சாவி குறிப்பிட்டு, ‘இதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்…’ என்று கேட்டுக் கொண்டார். ‘என்ன செய்யலாங்கறீங்க?’ என்று கேட்டார் காமராஜர்.
‘நீங்க அனுமதி கொடுத்தால், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில், வாரியார் சுவாமிகளை வைத்து, ராமாயணக் கதை சொல்ல சொல்லலாம்; எஸ்.வி.சகஸ்ரநாமத்தை, அரிச்சந்திரா நாடகம் போடச் சொல்லலாம். அப்புறம், இதை தமிழகம் முழுவதும் கொண்டு போகலாம்…’ என்று, சாவி சொன்ன யோசனை, காமராஜருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று.
‘சரி, நீங்களே செய்யுங்க; ஒரு கமிட்டி போட்டுக்குங்க…’ என்று, கணமும் தாமதியாமல் அனுமதி வழங்கி விட்டார் காமராஜர்.
சென்னை வந்ததும், இதற்கென ஒரு கமிட்டியை அமைத்தார் சாவி. ‘சத்திய சபா’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைவராக இருக்கச் சம்மதித்தார் காமராஜர். செயலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் சாவி. வாசன் உபதலைவராகவும், ரத்னம் ஐயர், லிப்கோ சர்மா போன்றோர், கமிட்டி அங்கத்தினர்களாகவும் நியமிக்கப்பட்டு, அடுத்த நாளே வேலை வேகமாக ஆரம்பிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி, காங்கிரஸ் மைதானம் மேடு, பள்ளங்கள் திருத்தப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக் கோலம் பூண்டது. ஏ.வி.எம்.செட்டியார், முகப்பு வாயிலை, பிரபல ஓவியர் சேகரை கொண்டு, அலங்கரித்துக் கொடுத்தார். அவ்வையார் படத்துக்காக உருவாக்கப்பட்ட, மிகப்பெரிய பிள்ளையார் சிலையை, ராமாயணக் கதை நடக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார் வாசன்.
பக்தவத்சலம் கொடியேற்றி வைக்க, விழாவைத் துவக்கி வைத்தார், அப்போது சென்னை கவர்னராக இருந்த மைசூர் மகாராஜா. ராமாயணக் கதைகளை, கலகலப்பாக சொல்ல துவங்கினார் வாரியார். தொடர்ந்து, 40 நாட்கள்… இடையிடையே, சகஸ்ரநாமத்தின் நாடகங்கள், தினமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போய், மைதானம் நிரம்பி வழிந்தது. எவ்வளவு பேர் வந்தும் என்ன… கதை கேட்க, காமராஜர் வராமலிருக்கிறாரே என்ற குறை சாவிக்கும், வாரியாருக்கும், மற்ற கமிட்டி அங்கத்தினர்களுக்கும் இருந்தது.
ஒருநாள் திடீரென, ‘இன்று கதை கேட்க காமராஜர் வருகிறார்…’ என்று டெலிபோனில் தகவல் வந்தது.
இதை வாரியாரிடம், சாவி சொல்ல, வாரியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அன்று, அனுமன் ஆற்றல் பற்றி, விஸ்தாரமாகப் பேசினார் வாரியார்…
‘தன்னிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும், அதை வெற்றிகரமாகச் சாதிக்க கூடியவர் அனுமர். காரணம், அவர் ஒரு பிரம்மசாரி. பிரம்மசாரிகள் எப்போதுமே, தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை, வெற்றிகரமாக செய்யக் கூடிய ஆற்றலும், வல்லமையும் பெற்றவர்கள்…’ என்று, அவர் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில், அரங்கத்துக்குள் நுழைந்தார் காமராஜர்.
காமராஜர் வரும் திக்கு நோக்கி ஆவலோடு திரும்பிப் பார்த்து, ஆரவாரித்தனர் கூட்டத்தினர். ‘நான் அனுமனைச் சொல்கிறேன்… நீங்கள் யாரை எண்ணி மகிழ்கிறீர்களோ…’ என்று வாரியார், தமக்கே உரிய பாணியில் ஒரு போடு போடவும், கூட்டத்தினர் செய்த ஆரவாரமும், எழுப்பிய கரவொலியும் அடங்க வெகு நேரமாயிற்று!

Source…www.dinamalar.com

Natarajan

வணக்கம் ஆயிரம் என் அன்பு ஆசிரியருக்கு …

A Tribute to my Dear Teacher BRO.ANSELM  on TEACHERS DAY…5th September

Natarajan

Bro.Anselm ….My Teacher ….a Friend , Philosopher and Guide to me ….

Image

Dear Brother..

Every year , on this DAY..5 SEP….Teachers Day… i used to talk to you over Phone and seek your  Blessings …. For the third year in a row , I miss that call today .  I MISS YOU … Brother…

I send my Regards and Respests  to You on this TEACHERS DAY, …. thro ” this Blog Post .  I am sure  Your Blessings and Good Wishes are  always available in plenty to me  and my family  on this Day …and for many more days to come ….

with affectionate Regards,

Your “Raja’ ….Natarajan.

 

BRO.ANSELM … My Teacher

….In 1965 at my age of 15 he handed over my SSLC BOOK in person to me and wished me well….The bond between me and my teacher however  continued  further… I was so emotionally attached to him that we used to be in touch with each other till the  Christmas in 2012. …When i talked to him after receiving his affectionate Christmas card in DEC2012, he was telling me that he would be meeting me  in Feb 2013, at chennai when he  comes down to Chennai from Yercaud for his medical checkup.

 

Perhaps this is the first time , he was not able to keep up his words ….One of Santhome Montford Brothers called me on the night of 7 Jan2013  and told me that our affectionate BRO.ANSELM has  left all of us in lurch and merged with JESUS on 7th evening at Yearcud Montford School.

He was not only my Teacher….but a Good Friend, Philosopher and Guide at all times ….I am sure many of his students would miss him a lot like me.. on this DAY….

 

Here is a Poetical Tribute to that Great Personality.

அன்பும்  அறிவும் பண்புடன் பாசமும்
 ஒன்றுக்கு  ஒன்று குறையாமல்
 என்றும்  எங்க வாழ்வில் இருக்க
 அன்றே வழி காட்டிய ஆசான்  அய்யா  நீ !!!
 பள்ளி கணக்கில் கூட்டலும் கழித்தலும் உண்டு
 ஆனால் வாழ்க்கையின் ஒழுக்க  கணக்கில் கூட்டலும்
  பெருக்கலும்  மட்டுமே என்று   சொன்னவன் அய்யா நீ !!!!
 உன் மாணவன் நான் …இன்றும் உன் மாணவன்தான் !!!!
 நீ சொல்லி கொடுத்த ஒழுக்க கணக்கில் இருந்து  சிறிதும்
 வழுக்காமல் நான் இருக்க நீதானே காரணம் அய்யா !!!!!
 அழகான உன் கையெழுத்து   எவ்வளவு  பேர்
  தலை எழுத்தை  மாற்றி இருக்கு …உனக்கு தெரியுமா அய்யா !!!
  எந்த வயசிலும் உன் கண்டிப்பும் கனிவும் உனக்கு ஒரு அடையாளம் !!!!
  வருடம் தப்பாமல் எனக்கு கிடைக்கும் உன்னுடைய கிறிஸ்துமஸ்
  வாழ்த்து அட்டை , எனக்கு ஆண்டவன்  பிரசாதம் !!!!
  ‘ராஜா  ..ராஜா ” என்று  நீ என்னை கூப்பிடும்போது  உன்
  அன்பு  சாம்ராஜ்யத்தின் ராஜாவாக  நான் இருப்பேனே அய்யா !!!!
   உன்னுடைய   Presence   எப்போதும்  இருக்கும் என்று நான்
   எண்ணிய  வேளையில்  காலத்தின் கரும்பலகை சொல்கிறது
   எண்ணிய  வேளையில்  காலத்தின் கரும்பலகை சொல்கிறது
   எனக்கு…   நீ    ABSENT     என்று   !!!!!
  நீ  இல்லாத இந்த உலகம்   வெறுமை  வெறுமை ..இது
  நிச்சயம்  கொடுமை  கொடுமை !!!!
  பளிச்சென்று  ஒரு பதில் வேண்டும்  எனக்கு ….நீ
  எப்போ மீண்டும்    PRESENT       ஆவாய்  அய்யா!!!!!
Natarajan

1947-ல் கூகிள், யூடியூப், ஃபேஸ் புக்……!!!

ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற சோஷியல் மீடியாவின் காலம் இது. ஏதாவது ஒண்ணு நடந்தா போதும் அடுத்த நொடியே அது தொடர்பான கலாய்ப்புகள் சமூக மீடியாவை நிறைத்துவிடுகின்றன. இப்பவே இப்படி இருந்தால் நாடு விடுதலை அடைவதற்கு முன்னதாகவே இந்த இணையம் வளர்ச்சி பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இப்போது முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஃபிளிப்கார்ட், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற பல தளங்கள் அந்தக் காலத்திலேயே அறிமுகமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? நினைக்கவே சுவாரசியமாக இருக்கிறதா?

இந்த எண்ணமே சுவாரசியம் தருவதால்தான் இந்த ஐடியாவை அடிப்படையாகக் கொண்டு, சுதந்திரத்துக்கு முன்னரே இணையம் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என யோசித்திருக்கிறது இன்1947 என்னும் விளம்பர நிறுவனம். அப்போது இந்த இணையங்களில் எல்லாம் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை மவுஸைத் தட்டி யோசித்திருக்கிறார்கள். கூகுளில் எதைத் தேடியிருப்பார்கள், யூடியூபில் எந்தப் படத்தை அதிகம் பார்த்திருப்பார்கள், அன்று ஐஆர்டிசி வெப்சைட்டில் நிலை எப்படி இருந்திருக்கும்… இப்படி ஒவ்வொன்று குறித்தும் சுவாரசியமான கிரியேடிவ் டிசைன்களை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம்.

அவற்றை வசீகரமான படங்களாகக் கொண்ட ஒரு ஆல்பத்தை உருவாக்கித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது இன்1947. இதற்கு பெருவாரியான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இந்தப் பக்கத்தை விரும்பியதுடன் சகட்டுமேனிக்கு ஷேர் செய்து தங்கள் சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அந்தப் படங்களில் சில இங்கே இடம்பெற்றிருக்கின்றன.

முழு ஆல்பத்தையும் காண: https://goo.gl/H0auG2

Source….www.tamil.thehindu.com

Natarajan