கம்பனும் மதுவிலக்கும்…..

மது அருந்துவது தீய பழக்கம் என்று கம்பராமாயணத்தில் பல இடங்களில் பதிவுசெய்கிறான் கம்பன்

ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மது விலக்குக்காக 1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும். ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.

1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது. இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக்கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன. கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போலவும், கோயிற்பசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயிற் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும், நம் நாட்டின் மதுவிலக்குக் கொள்கை அமைந்துவிட்டது.

 

கம்பன் கண்ட கோசல நாடு, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை கூட, இந்தக் குழப்பத்துக்கு விதிவிலக்குகளாக அமையவில்லை போலும். எனவே, கம்பன் பல இடங்களில் கோசல நாட்டு மக்கள், கிஷ்கிந்தை மற்றும் இலங்கை மக்கள் கொண்டிருந்த குடிப் பழக்கத்தை ஆங்காங்கே காட்டிவிட்டு, அதேசமயம், பல இடங்களில் இப்பழக்கத்தைக் கண்டிக்கவும் செய்கிறான்.

யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலத்தில், இந்திரஜித்தனின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் கீழே விழுந்து கிடக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட ராவணன், ஒரு வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இந்தக் கொண்டாட்டங்களைக் களியாட்டுப் படலத்தில், கம்பன் கற்பனை வளத்தோடு விவரிக்கிறான். அந்தக் கொண்டாட்டத்தில், அரம்பையர்கள், அரக்கியர்கள், அசுரப் பெண்கள், நாக கன்னியர்கள் ஆகியோரை ராவணன் ஆடவைக்கிறான். அப்போது, கள்ளுண்டு ஆடியவர்களுடைய நிலை எப்படி இருந்தது என்பதைக் கம்பன் சொல்கிறான் :

நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,

முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,

பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த

கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம்.

அதாவது, நல்ல கல்விச் செல்வத்தால் பெரியோர் களது உபதேச மொழிகளை அறிந்து அவற்றால் வரும் பயனைத் துய்க்க வேண்டிய தருணத்தில், ஒரு மூடன் மனதில் ஒரு வஞ்சகன் வைத்த கற்பனை எப்படிப் பரவி நிற்குமோ அப்படிக் கள்ளின் வேகம், மகளிர் கூட்டத்தில் பரவியது என்பது இப்பாடலின் பொருள். கல்வியால் பெறும் தெளிவைக் கள்ளினால் வரும் மயக்கம் அழித்துவிடும் என்னும் உறுதியை இப்பாடலில் கம்பன் காட்டுகிறான். இதில் பின்னால் வரும் இன்னொரு பாடலில் கள்ளுண்டு ஆடிய காரணத்தால் தாளமும், காலமும் தவறி ஆடிய பெண்களைக் கம்பன்,

‘பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர்’

என்று விவரித்தான். கள்ளுண்ணுதல் பெரும் பாவம் என்னும் கருத்தையும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறான்.

யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலத்தில், தன்னை இகழ்ந்து பேசும் இந்திரஜித்தனுக்கு மறுமொழி உரைக்கும் வீடணன், தான் குற்றமற்றவன் என்பதற்கு அத்தாட்சியாக

‘உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென், யாரும் குற்றம் கண்டிலர் என்பால்;

என்று உரைக்கிறான். எனவே, மது அருந்துவது என்பது, பொய் சொல்வதற்கும், பிறர் பொருளைக் கவர்வதற்கும், வஞ்சம் செய்வதற்கும் இணையான குற்றம் என்பதையும் கம்பன் பதிவு செய்கிறான்.

‘ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?

“தாய் இவள், மனைவி” என்னும் தெளிவின்றேல், தருமம் என் ஆம்?

தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும், திருக்கு நீங்கா

மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்!

‘கள்ளுண்ணல் ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று. தாயையும் மனைவியையும் வேறுபடுத்தி அறியும் அறிவைக் கள் அழிக்கும். மற்ற எல்லா அறங்களைப் பின்பற்றி வாழ்ந்தாலும், கள் அருந்துபவனுக்குப் பிற அறங்களால் என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தவன் ஏற்கெனவே மாயையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது, அந்த மயக்கத்தின் மேல் இன்னொரு மயக்கத்தை ஊட்டுவது எஎவ்வளவு விந்தை’ என்று ஒரு மாயையின் தத்துவத்தை இப்பாடலில் சுக்ரீவன் பேசுகிறான்.

‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்

கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால் அருந்தினாரை

நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே?

விஷம்கூட அருந்தியவரைக் கொல்லுமே தவிர, நரகத்தில் தள்ளி விடாது. ஆனால், மது அருந்துவதால் வஞ்சனை, திருட்டு, பொய், அறியாமை, தொன்று தொட்டு வந்த மரபுக்கு மாறான கொள்கை, அடைக் கலமாக வந்தவரைக் காப்பாற்றாத தன்மை, ஆணவம் ஆகியவை வந்து சேர்ந்து நரகத்தில் கொண்டு விட்டுவிடும் என்கிறான் சுக்ரீவன்.

இப்படி சுக்ரீவன் மூலமாக மது ஒழிப்புக்கு ஒரு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த கம்பன், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 47-ல் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மது விலக்கு, நடைமுறையில் காற்றில் பறக்க விடப்பட்டதை நமக்கு நினைவுபடுத்திக் காட்டுகிறான்.

– உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் எழுதிய ‘கம்பனில் சட்டமும் நீதியும்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் (வெளியீடு: வானதி பதிப்பகம்).

source….வெ.இராமசுப்பிரமணியன் in http://www.tamil.thehindu.com

Natarajan

படித்து ரசித்த கவிதை …” காலத்தை வென்ற கலாம் …”

காலத்தை வென்ற கலாம்!

மலர்களுக்கு சிரிப்பைத் தந்தாய்
மாணவர்களுக்கு கனவு தந்தாய்
குழந்தைகட்கு அன்பைத் தந்தாய்
இளைஞருக்கு எழுச்சி தந்தாய்
மதம் மொழி இனம் கடந்து
மக்களை நேசித்தாய்!

தலைமுறை தாண்டி
மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
அக்னிச்சிறகுகளை அனைவருக்கும்
அணிவித்தாய்!

உனக்கென எதையும் எண்ணாமல்
விண்ணையும் மண்ணையும்
உயிராய் கருதினாய்
அதனால்தானோ என்னவோ
உனதுடல் மண்ணுக்கு
உயிர் விண்ணுக்கு!

பூக்கள் சிரிக்கும் போது
பூமி சிரிக்கிற தென்றலாய்
உன் அஞ்சலிக்கு வந்த
மண்ணில் மலர்ந்த மலர்கள் எல்லாம்
புண்ணியம் பெற்றதாய் பேசிக்கொண்டன
துக்கத்துடன்!

விழிமடை உடைப்பெடுக்க
விடை கொடுத்தோம் இப்போது
ராமேஸ்வரம் கடலில் கரிப்பது
உப்பல்ல…
எங்களின் கண்ணீர்!

தீபகற்ப இந்தியத்தாய் ஏங்குகிறாள்
மீண்டும் உன்னை
தன் கர்ப்பத்தில் தாங்கிக் கொள்ள!

அணு ஆயுத சோதனையால்
அகிலத்தையே வியக்க வைத்த நீ
இறுதி வரை ஆராயவேயில்லை
அன்பு கொள்பவருக்காய்
ஆயுளை பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை
கண்டிருந்தால்
தந்திருப்போம் எங்கள் ஆயுளை
இன்னும் வாழ்ந்திருப்பாய்
பல கோடி ஆண்டு!

அப்துல் கலாம்… நீ
ஒற்றை வார்த்தையில்
உருவான இந்தியக் கவிதை!

எழுத எழுத முடிவில்லாமல் நீளும்
உன்னைப் பற்றி
தற்காலிகமாய் முடிக்கிறேன்
வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்!

ஜோதி பெருமாள்,
புதுடில்லி.

Source….www.dinamalar.com

Natarajan

 

 

 

” தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை …”

இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டு வருவது உடன்பாட்டுச் சிந்தனை. இந்த நேர்மறை சிந்தனையை புலப்படுத்தும் விதத்தில் ஆங்கிலத்தில் பல நுால்கள் வெளிவந்துள்ளன. எதையும்

உடன்பாட்டு நோக்கில் பார்ப்பது, நம்பிக்கையோடு அணுகுவது என்பது தமிழ் மண்ணுக்குப் புதியது அல்ல.

தொல்காப்பியர் முதல் இன்றைய ஹைகூ கவிஞர் வரை தமிழைப் பொறுத்த வரையில் பெரும்

பாலானோர் உடன்பாட்டுச் சிந்தனையாளர்களாகவே விளங்குகின்றனர்.தொல்காப்பியமே தமிழில் முழுமையாகக் கிடைக்கும் பழைய இலக்கண நுால். இந்நுாலில் கூட உடன்பாட்டுச் சிந்தனையின் பதிவை ஆங்காங்கே காணமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் தமிழில் தொன்மையான இலக்கியம் சங்க இலக்கியம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பதினெட்டு நுால்களின் தொகுப்பு அது.பக்குடுக்கை நன்கணியார் என்ற புறநானுாற்றுப் புலவரின் உலகப் பார்வை இங்கே கவனிக்கதக்கது.

இன்னாது அம்ம, இவ் வுலகம்;இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே”என்பது அவரது வாக்கு.’இந்த உலகம் கொடியது தான்’ எனினும் இதன் இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது அருமையான உடன்பாட்டுச் சிந்தனையின் எதிரொலி ஆகும்.

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!’ என்றனர் சங்கச் சான்றோர். திருக்குறளில்

ஆல்பர்ட் சுவைட்சரில் இருந்து அப்துல் கலாம் வரை திருவள்ளுவரை வானளாவப் போற்றிப் புகழ்வதற்குக் காரணம் அவரது உடன்பாட்டுச் சிந்தனையே. வள்ளுவர் எங்கும் உலகையோ, வாழ்க்கையையோ, இல்லறத்தையோ, பெண்மையையோ மருந்துக்குக் கூட இழித்தோ பழித்தோ பேசவில்லை; எதிர்மறையான சிந்தனைகளை மொழியவில்லை; உயர்த்தியும் போற்றியுமே உரைத்துள்ளார். ‘அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை’, ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’ என்கிறது குறள்.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”என வள்ளுவர் ஊழ்வினையைப் புறந்தள்ளி, மனித முயற்சிக்கு மகுடம் சூட்டியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில்

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அவலக் காப்பியமான சிலப்பதிகாரம் மங்கல நிகழ்ச்சியான கோவலன்-கண்ணகி திருமணத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இது, இளங்கோவடிகளின் உடன்பாட்டுச் சிந்தனையை காட்டுகிறது.

கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவிக்குக் காப்பியத்தில் கண்ணகிக்கு நிகரான ஓர் இடத்தி னைத் தந்திருப்பதும், இல்லறத்தைப் புகழ்ந்து கண்ணகியின் கற்பு வாழ்வை உயர்த்திக் கூறி

யிருப்பதும், கொடியவன் என எவரும் இல்லாமலே காப்பியத்தைச் சுவையாக நடத்திச் சென்றிருப்பதும் ஒரு வகையில் பார்த்தால் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கமே எனலாம்.

பக்தி இயக்கக் காலத்தில் :பக்தி இயக்கத்தின் முன்னோடியான திருமூலர் திருமந்திரத்தில் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தாயுள்ளத்தோடு பாடியுள்ளார். உடம்பினை இழித்தும் பழித்தும் பாடாமல்- ‘உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்’ என்றும், ‘உடம்பினை யான் இருந்து ஓம்புகிறேன்’ என்றும் உடம்பின் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் பாடியிருக்கிறார்.

ஆதிசங்கரரால் ‘திராவிட சிசு’ எனப் பாராட்டப் பெற்றவர் திருஞானசம்பந்தர். குழந்தை

ஞானியான அவருடைய பாடல்களில் சோர்வையோ, கலக்கத்தையோ, துயரத்தையோ

காண்பது அரிது; ஊக்கமும் நம்பிக்கையும் எழுச்சியுமே ததும்பி நிற்கும்.உதாரணமாக

“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என பாடினார்.

“ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

என்னும் அப்பர் பெருமானின் வாக்கு.

ஏழாம் நுாற்றாண்டில் பிறந்த அழகிய உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

பாரதியாரின் சிந்தனை :இருபதாம் நுாற்றாண்டின் விடியலில் தமிழால் தகுதி பெற்று, தமிழுக்குத் தகுதி சேர்த்த தனிப்பெருங் கவிஞர் பாரதியார். வாழ்ந்த காலமெல்லாம் வறுமைத் துன்பத்தில் வாடினாலும், ‘ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி’ என்றே நம்பிக்கையுடன் முழங்கினார் அவர்; ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள் இறைவா! இறைவா! இறைவா!’ என்றே மூன்று முறை இறைவனை விளித்துப் பாடினார் அவர்;

‘நம்பினார் கெடுவதில்லை, நான்குமறைத் தீர்ப்பு; அம்பிகையைச் சரண் புகுந்தால், அதிக வரம் பெறலாம்’ என்று தன்னம்பிக்கை சிந்தனையை வெளிப்படுத்தினார்.

“ இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!”

‘காட்சி’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய வசன கவிதையிலும் அவரது உடன்பாட்டுச் சிந்தனை அழகுற வெளிப்பட்டிருக்கிறது.

“இவ்வுலகம் இனியது… மனிதர் மிகவும் இனியர்.

ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. சாதல் இனிது”இவ்வுலகில் பிறப்புத் தொடங்கி மனிதனுடைய மூச்சுத் தொடரின் முற்றுப் புள்ளியான மரணம் வரைக்கும் அனைத்திலும் இனிமையைக் காணும், -நன்மையை நாடும் – அற்புதமான மனநிலையின் ஆற்றல் மிக்க வெளிப்பாடு இக்கவிதை.

புதிய தமிழ்க் கவிதையில் இருபதாம் நுாற்றாண்டுக் கவிதை வடிவங்களான புதுக்கவிதை, ஹைகூ ஆகியவற்றிலும் ஆங்காங்கே உடன்பாட்டுச் சிந்தனைகள் தலைகாட்டுகின்றன. படிப்பவர் நெஞ்சில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்ச வல்ல இத்தகைய கவிதைகள் ஒன்றிரண்டை இங்கே காண்போம்.

“இளம்பிறையே! உனது ஏழைமையை

நினைத்து வருந்தாதே! ஏனென்றால்

உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன்

புதைந்து கிடக்கிறான்”

என்பது இக்பால் படைத்துள்ள புதுக்கவிதை.

ஈரோடு தமிழன்பனின் கவிதையில்

“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு

முத்தமிட்டுச் சொன்னது பூமி:

ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?”

‘ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தவறி விழுவது என்பது அவ்வளவு முக்கியம் அன்று; விழும் போதெல்லாம் அவன் விடாமல் எழ நினைப்பதும், முயல்வதும் தான் முக்கியம்’ என்று தன்னம்பிக்கை விதை துாவுகிறார் கவிஞர்.

இங்ஙனம் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கத்தினைக் காண முடிகிறது.

– முனைவர் நிர்மலா மோகன்

தகைசால் பேராசிரியர்

காந்திகிராமம் கிராமியப்

பல்கலைக்கழகம்

காந்திகிராமம்

Source….www.dinamalar.com

Natarajan

” சொன்னது நீதானா …விசுவே …” !!!

மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

Source….www.tamil.thehindu.com
Natarajan

” The Chaos “…A Classic English Poem Illustrating How English Language Became such a Mess!!!

The Chaos by Gerard Nolst Trenité

This is a classic English poem containing about 800 of the worst irregularities in English spelling and pronunciation.Will Snellen wrote a PDF version using the phonetic alphabet. You can hear some of it pronounced mostly correctly by “JimmyJams” in the video The Chaos Of English Pronunciation by Gerard Nolst Trenité on YouTube.

Dearest creature in creation
Studying English pronunciation,
   I will teach you in my verse
   Sounds like corpse, corps, horse and worse.

I will keep you, Susy, busy,
Make your head with heat grow dizzy;
   Tear in eye, your dress you’ll tear;
   Queer, fair seer, hear my prayer.

Pray, console your loving poet,
Make my coat look new, dear, sew it!
   Just compare heart, hear and heard,
   Dies and diet, lord and word.

Sword and sward, retain and Britain
(Mind the latter how it’s written).
   Made has not the sound of bade,
   Saysaid, paypaid, laid but plaid.

Now I surely will not plague you
With such words as vague and ague,
   But be careful how you speak,
   Say: gush, bush, steak, streak, break, bleak ,

Previous, precious, fuchsia, via
Recipe, pipe, studding-sail, choir;
   Woven, oven, how and low,
   Script, receipt, shoe, poem, toe.

Say, expecting fraud and trickery:
Daughter, laughter and Terpsichore,
   Branch, ranch, measles, topsails, aisles,
   Missiles, similes, reviles.

Wholly, holly, signal, signing,
Same, examining, but mining,
   Scholar, vicar, and cigar,
   Solar, mica, war and far.

From “desire”: desirableadmirable from “admire”,
Lumber, plumber, bier, but brier,
   Topsham, brougham, renown, but known,
   Knowledge, done, lone, gone, none, tone,

One, anemone, Balmoral,
Kitchen, lichen, laundry, laurel.
   Gertrude, German, wind and wind,
   Beau, kind, kindred, queue, mankind,

Tortoise, turquoise, chamois-leather,
Reading, Reading, heathen, heather.
   This phonetic labyrinth
   Gives moss, gross, brook, brooch, ninth, plinth.

Have you ever yet endeavoured
To pronounce revered and severed,
   Demon, lemon, ghoul, foul, soul,
   Peter, petrol and patrol?

Billet does not end like ballet;
Bouquet, wallet, mallet, chalet.
   Blood and flood are not like food,
   Nor is mould like should and would.

Banquet is not nearly parquet,
Which exactly rhymes with khaki.
   Discount, viscount, load and broad,
   Toward, to forward, to reward,

Ricocheted and crocheting, croquet?
Right! Your pronunciation’s OK.
   Rounded, wounded, grieve and sieve,
   Friend and fiend, alive and live.

Is your r correct in higher?
Keats asserts it rhymes Thalia.
   Hugh, but hug, and hood, but hoot,
   Buoyant, minute, but minute.

Say abscission with precision,
Now: position and transition;
   Would it tally with my rhyme
   If I mentioned paradigm?

Twopence, threepence, tease are easy,
But cease, crease, grease and greasy?
   Cornice, nice, valise, revise,
   Rabies, but lullabies.

Of such puzzling words as nauseous,
Rhyming well with cautious, tortious,
   You’ll envelop lists, I hope,
   In a linen envelope.

Would you like some more? You’ll have it!
Affidavit, David, davit.
   To abjure, to perjure. Sheik
   Does not sound like Czech but ache.

Liberty, library, heave and heaven,
Rachel, loch, moustache, eleven.
   We say hallowed, but allowed,
   People, leopard, towed but vowed.

Mark the difference, moreover,
Between mover, plover, Dover.
   Leeches, breeches, wise, precise,
   Chalice, but police and lice,

Camel, constable, unstable,
Principle, disciple, label.
   Petal, penal, and canal,
   Wait, surmise, plait, promise, pal,

Suit, suite, ruin. Circuit, conduit
Rhyme with “shirk it” and “beyond it”,
   But it is not hard to tell
   Why it’s pall, mall, but Pall Mall.

Muscle, muscular, gaol, iron,
Timber, climber, bullion, lion,
   Worm and storm, chaise, chaos, chair,
   Senator, spectator, mayor,

Ivy, privy, famous; clamour
Has the a of drachm and hammer.
   Pussy, hussy and possess,
   Desert, but desert, address.

Golf, wolf, countenance, lieutenants
Hoist in lieu of flags left pennants.
   Courier, courtier, tomb, bomb, comb,
   Cow, but Cowper, some and home.

Solder, soldier! Blood is thicker“,
Quoth he, “than liqueur or liquor“,
   Making, it is sad but true,
   In bravado, much ado.

Stranger does not rhyme with anger,
Neither does devour with clangour.
   Pilot, pivot, gaunt, but aunt,
   Font, front, wont, want, grand and grant.

Arsenic, specific, scenic,
Relic, rhetoric, hygienic.
   Gooseberry, goose, and close, but close,
   Paradise, rise, rose, and dose.

Say inveigh, neigh, but inveigle,
Make the latter rhyme with eagle.
   Mind! Meandering but mean,
   Valentine and magazine.

And I bet you, dear, a penny,
You say mani-(fold) like many,
   Which is wrong. Say rapier, pier,
   Tier (one who ties), but tier.

Arch, archangel; pray, does erring
Rhyme with herring or with stirring?
   Prison, bison, treasure trove,
   Treason, hover, cover, cove,

Perseverance, severance. Ribald
Rhymes (but piebald doesn’t) with nibbled.
   Phaeton, paean, gnat, ghat, gnaw,
   Lien, psychic, shone, bone, pshaw.

Don’t be down, my own, but rough it,
And distinguish buffet, buffet;
   Brood, stood, roof, rook, school, wool, boon,
   Worcester, Boleyn, to impugn.

Say in sounds correct and sterling
Hearse, hear, hearken, year and yearling.
   Evil, devil, mezzotint,
   Mind the z! (A gentle hint.)

Now you need not pay attention
To such sounds as I don’t mention,
   Sounds like pores, pause, pours and paws,
   Rhyming with the pronoun yours;

Nor are proper names included,
Though I often heard, as you did,
   Funny rhymes to unicorn,
   Yes, you know them, Vaughan and Strachan.

No, my maiden, coy and comely,
I don’t want to speak of Cholmondeley.
   No. Yet Froude compared with proud
   Is no better than McLeod.

But mind trivial and vial,
Tripod, menial, denial,
   Troll and trolley, realm and ream,
   Schedule, mischief, schism, and scheme.

Argil, gill, Argyll, gill. Surely
May be made to rhyme with Raleigh,
   But you’re not supposed to say
   Piquet rhymes with sobriquet.

Had this invalid invalid
Worthless documents? How pallid,
   How uncouth he, couchant, looked,
   When for Portsmouth I had booked!

Zeus, Thebes, Thales, Aphrodite,
Paramour, enamoured, flighty,
   Episodes, antipodes,
   Acquiesce, and obsequies.

Please don’t monkey with the geyser,
Don’t peel ‘taters with my razor,
   Rather say in accents pure:
   Nature, stature and mature.

Pious, impious, limb, climb, glumly,
Worsted, worsted, crumbly, dumbly,
   Conquer, conquest, vase, phase, fan,
   Wan, sedan and artisan.

The th will surely trouble you
More than r, ch or w.
   Say then these phonetic gems:
   Thomas, thyme, Theresa, Thames.

Thompson, Chatham, Waltham, Streatham,
There are more but I forget ’em
   Wait! I’ve got it: Anthony,
   Lighten your anxiety.

The archaic word albeit
Does not rhyme with eight-you see it;
   With and forthwith, one has voice,
   One has not, you make your choice.

Shoes, goes, does *. Now first say: finger;
Then say: singer, ginger, linger.
   Real, zeal, mauve, gauze and gauge,
   Marriage, foliage, mirage, age,

Hero, heron, query, very,
Parry, tarry fury, bury,
   Dost, lost, post, and doth, cloth, loth,
   Job, Job, blossom, bosom, oath.

Faugh, oppugnant, keen oppugners,
Bowing, bowing, banjo-tuners
   Holm you know, but noes, canoes,
   Puisne, truism, use, to use?

Though the difference seems little,
We say actual, but victual,
   Seat, sweat, chaste, caste, Leigh, eight, height,
   Put, nut, granite, and unite.

Reefer does not rhyme with deafer,
Feoffer does, and zephyr, heifer.
   Dull, bull, Geoffrey, George, ate, late,
   Hint, pint, senate, but sedate.

Gaelic, Arabic, pacific,
Science, conscience, scientific;
   Tour, but our, dour, succour, four,
   Gas, alas, and Arkansas.

Say manoeuvre, yacht and vomit,
Next omit, which differs from it
   Bona fide, alibi
   Gyrate, dowry and awry.

Sea, idea, guinea, area,
Psalm, Maria, but malaria.
   Youth, south, southern, cleanse and clean,
   Doctrine, turpentine, marine.

Compare alien with Italian,
Dandelion with battalion,
   Rally with ally; yea, ye,
   Eye, I, ay, aye, whey, key, quay!

Say aver, but ever, fever,
Neither, leisure, skein, receiver.
   Never guess-it is not safe,
   We say calves, valves, half, but Ralf.

Starry, granary, canary,
Crevice, but device, and eyrie,
   Face, but preface, then grimace,
   Phlegm, phlegmatic, ass, glass, bass.

Bass, large, target, gin, give, verging,
Ought, oust, joust, and scour, but scourging;
   Ear, but earn; and ere and tear
   Do not rhyme with here but heir.

Mind the o of off and often
Which may be pronounced as orphan,
   With the sound of saw and sauce;
   Also soft, lost, cloth and cross.

Pudding, puddle, putting. Putting?
Yes: at golf it rhymes with shutting.
   Respite, spite, consent, resent.
   Liable, but Parliament.

Seven is right, but so is even,
Hyphen, roughen, nephew, Stephen,
   Monkey, donkey, clerk and jerk,
   Asp, grasp, wasp, demesne, cork, work.

A of valour, vapid vapour,
S of news (compare newspaper),
   G of gibbet, gibbon, gist,
   I of antichrist and grist,

Differ like diverse and divers,
Rivers, strivers, shivers, fivers.
   Once, but nonce, toll, doll, but roll,
   Polish, Polish, poll and poll.

Pronunciation-think of Psyche!-
Is a paling, stout and spiky.
   Won’t it make you lose your wits
   Writing groats and saying “grits”?

It’s a dark abyss or tunnel
Strewn with stones like rowlock, gunwale,
   Islington, and Isle of Wight,
   Housewife, verdict and indict.

Don’t you think so, reader, rather,
Saying lather, bather, father?
   Finally, which rhymes with enough,
   Though, through, bough, cough, hough, sough, tough??

Hiccough has the sound of sup
My advice is: GIVE IT UP!

Notes on The Chaos

“The Chaos” is a poem which demonstrates the irregularity of English spelling and pronunciation, written by Gerard Nolst Trenité (1870-1946), also known under the pseudonym Charivarius. It first appeared in an appendix to the author’s 1920 textbook Drop Your Foreign Accent: engelsche uitspraakoefeningen. (From Wikipedia: http://en.wikipedia.org/wiki/The_Chaos

Source….www.bbc.com  and  http://ncf.idallen.com/

Natarajan

படித்து ரசித்தது ….” இரண்டரை வயது முதல் இப்படி ஒரு ஓட்டம் தேவையா …” ?

விளையாட விடுங்கள்!

பால் மணம்
மாறா வயதில்
பள்ளிக்கு
படை எடுக்கிறோம்!

சாட் பூட் த்ரீ
விளையாடும் நேரத்தில்
ஏக், தோ, தீனை
நெட்டுரு செய்கிறோம்!

மணல் வீடு கட்டி
விளையாட முடியவில்லை…
‘மவுஸ்’ பிடித்து
மனதை திசை திருப்புகிறோம்!

ஒளிந்து பிடித்து விளையாட
ஆசையாய் இருக்கிறது
உடனிருந்து விளையாட
தம்பி, தங்கை இல்லை
தனிமைச் சிறையில்
தத்தளிக்கிறோம்!

கல்லா, மண்ணா
விளையாட ஆசை தான்
டவுன்லோடு செய்வதற்கே
நேரம் போதவில்லையே!

பாரதி சொன்னதை போல்
மாலை முழுவதும் விளையாட
ஏங்குகிறோம்!
ஆனால்,
‘எக்ஸ்ட்ரா கரிகுலரில்’
எங்களை இழக்கிறோம்!

அடுத்த வீட்டு பிள்ளைகளை கூட
அறியவில்லை நாங்கள்
பூட்டிய வீட்டிற்குள்,
‘பத்திரமாக’ இருப்பதால்!

கண்ணை விற்று
சித்திரம் வாங்கச் சொல்கிறீர்
சிலந்தி வலையில்
மாட்டிக் கொண்ட
சிறு பூச்சிகளாய்
சிக்கித் தவிக்கிறோம்!

இரண்டரை வயது முதல்
இப்படி ஒரு ஓட்டம்
எங்களுக்கு தேவை தானா!

உங்களைப் போலவே
உரிய வயதில்
அனைத்தையும் கற்போம்
அதுவரையில்
எங்களைக் கொஞ்சம்
விளையாட விடுங்களேன்!

 

Source…. எஸ்.ஆர்.சாந்தி, மதுரை. in http://www.dinamalar.com

Natarajan

” அகரத்தில் ஒரு ராமாயணம் …” !!!

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா? அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. ” இதுவே தமிழின் சிறப்பு..” ++++++++++++++++++++++++++++++ அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருளஅயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் .அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான். அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னைஅனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன்அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் . அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே. Source…..input from a friend of mine Natarajan

” பணப் பறவைகளோடு வேறு இனப் பறவைகள் …”

 

இடி இறங்கும் காலம்!

பணம் சேரச்சேர
அது தன்னை
தானே தின்றுவிடுமா?

என்ன வந்தாலும்
நிரம்ப மறுக்கிறது
எப்போதும்
இதய கஜானா!

பணம் நிறைவைப் பிரசவிப்பதில்லை…
அது, ஆசை முட்டையிட்டு
அடைகாக்கிறது!

அன்பை ஆகுதியாக்கி
பெற்ற பிள்ளைகள்
பட்டம் பெற்ற கையோடு
பறந்து விடுகின்றனர்
தூர தேசங்களுக்கு

கடல் தாண்டி
அவர்கள் சிறகடிப்பது
கவுரவம் சம்பாதிக்க!

விமானங்களில் பயணிக்கையிலேயே
பண்பையும், பாசத்தையும்
உச்சியிலிருந்து உதிர்த்து
இதயத்தை மயானமாக்கி
கண் மறைகின்றனர்!

மேல்நாடுகளின்
மேகம் தொடும்
அபார்ட்மென்டுகளில்
அல்லும் பகலும்
கணினிகளோடு கரைந்து
புதையல் வேட்டையில்
புகுந்து விடுகின்றன
இளந்தளிர்கள்!

கண்டம் விட்டு
கண்டம் கடந்துவந்த
பெயர்தெரியாப் பறவைகள்
குளிர்காலத்தின்
கூதல் முடிந்தவுடன்
தாய்நாடு திரும்புகின்றன
‘தங்கள் துணையோடு!’

இந்த
பணப்பறவைகளோ
வேறு இனப்பறவைகளோடு
ஜோடி சேர்ந்து
வந்து இறங்குகின்றன
பெற்றோர்களின் எதிர்பார்ப்பில்
இடியைப் பொழிந்தபடி!
சுவாதி, நெல்லை. 

source…..www.dinamalar.com

Natarajan

படித்து ரசித்தது …”காலம் படைத்த கவியும் – காலத்தைப் படைத்த கவியும்…”

 

 

 

Bharathidhaasan

 

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது விஞ்ஞானம். காலத்தின் வெற்றிடத்தை ஒரு கவிஞனைக் கட்டமைத்து நிரப்பும் சமூக இயங்கியல்.

அப்படிக் காலத்தின் வெற்றிடத்தை நிரப்ப வந்த கவியாகத்தான் பாவேந்தர் என்ற பேராளுமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் வெளிவந்த காலத்தின் வெளிச்சத்தைக் கொண்டு காண வேண்டும் அவரது பெருமையின் திருமுகத்தை.

தமிழனுக்குத் தேசியமென்றால் இந்தி; அனைத்துலக மொழியென்றால் ஆங்கிலம்; இசையென்றால் தெலுங்கு; வழிபாடு என்றால் வடமொழி; அடுக்களையில் கூட அருந்தமிழ் ஆட்சி செலுத்துமா என்பது கேள்விக்குறி? – இது ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் அற்றை நாள் படப்பிடிப்பு.

மொழியென்பது வெறும் கருவிதானே; பொருள் சுட்டும் ஒலிக்கூட்டம்தானே; இதில் என்ன இருக்கிறது என்று கேட்டாரும் கேட்பாரும் உளர்.

அது சரியில்லை.

மொழி அளாவிய எல்லை வரையில்தான் நிலமிருக்கிறது. நிலம் அளாவிய எல்லை வரையில்தான் இனமிருக்கிறது. மொழி முடியுமிடத்தில் இனம் முடிந்துபோகிறது. ஆகவே, மொழிதான் இனம், மொழிதான் நிலம்.

கால்டுவெல்லும், பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், மறைமலையடிகளும் முன்னெடுத்தோடிய இந்த முதற்சுடரைத் தீப்பந்தமாய்க் கொளுத்திக்கொண்டது திராவிட இயக்கம். அந்தத் தீப்பந்தத்தின் இலக்கியக் கொழுந்தாய் எரிய வந்தவரே பாரதிதாசன்.

அரசு – ஆலயம் – அதிகார மையம் – அன்றாடம் எல்லாம் பிறமொழிவயப்பட்டதில் தமிழை இழந்து நின்றது மெட்ராஸ் பிரசிடென்ஸி.

 

தமிழே வடமொழியின் குழந்தைதான். அதனால் இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று எண்ணியாரும் இருந்தனர் அன்று. ஆனால், “தமிழ் என்பது பிற மொழியின் வார்ப்பன்று, திராவிடத்தின் மூலக்கூறு’ என்ற ஆராய்ச்சி முடிவுதான் தமிழ் தேசிய விடுதலைக்கே வித்திட்டது.

திராவிடத்திலிருந்தே தமிழ் பிறந்தது என்றார் கால்டுவெல்.

த்ரவிட – திரமிட – திரமிள – தமிள – தமிழ். இல்லை, தமிழிலிருந்தே திராவிடம் பிறந்தது என்றார் மறுசாரார். தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட. இவ்விரண்டில் ஏதொன்று ஏற்புடைத்தாயினும் தமிழ் வடமொழிச் சார்பில்லாதது என்பது பெறப்படும். பிறகு ஏன் தமிழ் தன் அதிகாரமிழந்து, அடையாளமிழந்து வடமொழி ஆதிக்கத்தில் வதைபட

வேண்டும்?

மொழியை மீட்டு மொழியிலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும் தமிழ் தேசியம். காலத்தின் இந்தக் குரலைத் தன் கவிதையில் வாங்கி ஓங்கி ஓதிய ஒரு தனிப்புலவர் பாவேந்தர் பாரதிதாசன்.

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்

முன்னேற்றம் ஒவ்வொன்றும்

உன்முன் னேற்றம்

கண்டறிவாய் எழுந்திரு நீ

இளந்தமிழா கண் விழிப்பாய்

இறந்தொ ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை

பழம்பெருமை அனைத்தையும் நீ

படைப்பாய் இந்நாள்

தொண்டுசெய்வாய் தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

 

துடித்தெ ழுந்தே

என்ன ஒரு யாப்புச் செப்பம் – நரம்புகளில் நாணேற்றும் சொற்கள் – பனிக்கட்டி மீது உருண்டோடும் ஆப்பிள் போன்ற தடையற்ற ஓட்டம் – காலத்தைத் தூக்கி நிறுத்தும் கருத்து – இதை வாய்விட்டு வாசிக்கும் போதெல்லாம் 12 வயதில் நான் உற்ற உணர்ச்சியை – பெற்ற எழுச்சியை இன்றும் அடைகிறேன்.

எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தக் கவிதையின் தேவை தீரவில்லை இன்னும்.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்று நெடுங்கணக்கில் பாரதிதாசனைப்போல் முரண்பட்ட இரு ஆசான்களைக் கொண்ட கவி அதற்குமுன் இல்லை.

ஓர் ஆத்திகப் பெருங்கவிஞனும், ஒரு நாத்திகப் பெருந்தலைவனும் உனக்கு ஆசான்களாகத் திகழ்வார்கள் என்று காலம் கவிஞனுக்குக் கட்டளையிட்டது.

“மகனே! எட்டயபுரத்தில் கவிதையெடுத்துக்கொள், ஈரோட்டில் கருத்தை எடுத்துக்கொள்’ என்று காலம் திரட்டிக் கொடுத்த திருப்பொருள்கொண்டு தமிழ் தேசியத்தைக் கட்டமைக்கப் பிறந்த கவிதா மேதைதான் பாவேந்தர் பாரதிதாசன்.

இந்திய தேசியத்தை பாரதி வடிவமைத்ததைப்போல் தமிழ் தேசியத்தை பாரதிதாசன் வடிவமைத்தார். பாரதி மீது அவர் வைத்திருந்த பற்று இறுதி மூச்சுவரை இற்றுப்போகாதது.

பக்கத்திலிருக்கும் வெளிச்சத்தில்தான் படிக்க முடியும் என்பதுபோல அருகிருக்கும் ஆளுமைகளே இன்னோர் ஆளுமையை உண்டாக்குகிறார்கள்.

இராமலிங்க அடிகளாரும், மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், கோபாலகிருஷ்ண பாரதியும் பாரதியாருக்கு உந்து சக்தியாய் வாய்த்ததுபோல் பாரதியாரும், பெரியாரும், மறைமலையடிகளும் பாரதிதாசனின் வார்ப்புக்குக் காரணமானார்கள்.

பாரதியாரைவிட இலக்கணம் கற்ற பாரதிதாசன், கவிதையைக் கற்றுக்கொண்டது பாரதியாரிடம்தான். இதை பாரதிதாசனின் கூற்றாகவே இங்கு பதிவுசெய்கிறேன்:

“”அவரெழுதிய கையெழுத்துப் படிகள் அங்குமிங்குமாகக் கிடக்கும். ஒருநாள் அவர் எழுதும் விசிப்பலகை டிராயரை இழுத்துப் பார்த்தபோது பாஞ்சாலி சபதம் என்ற கையெழுத்துப்படி இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன். பாடல்கள் மிக எளிமையாகவும் புரியும்படியும் இருந்தன. அதேசமயம் மிகச் சுவையாகவும் இருந்தன.

இப்படி எளிதில் புரியும்படியான கவிதையை நான் பார்த்ததில்லை. புரியும்படி எளிதாகக் கவிதை எழுத முடியும் என்றும் நான் நினைத்ததில்லை.

அக் கையெழுத்துப்படி என் கவிதைப்போக்கில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. சுப்பிரமணியர் துதியமுது எழுதிய சுப்பு ரத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது”.

பட்டுக்கோட்டையிலிருந்து ஒருகுரல் பாரதிதாசனைச் சாடியது. அது என்ன பாரதிதாசன்? பாரதி ஒரு பார்ப்பனர். தாசன் என்பது வடசொல். அதற்கு அடிமை என்று பொருள்.

அப்படியானால் பாரதிதாசன், பாரதி என்ற பார்ப்பனருக்கு அடிமையா? இது கேள்வி. “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்’ – இது பாரதிதாசனின் பதில். பாரதிதாசனின் இந்த நேர்மை எப்போதும் பிடிக்கும் எனக்கு.

விமர்சனங்களை ஒரு கவிஞன் எப்படி எதிர்கொள்கிறான் – ஏற்றுக்கொள்கிறான் என்பதே அவனது வளர்ச்சி.

மற்போரிலும் சொற்போரிலும் மிக்கவராய்த் திகழ்ந்த பாரதிதாசன் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை.

தமிழுக்காகப் போராடிய கவிஞனின் தொடக்க கால எழுத்துகளில் தனித்தமிழ் இல்லை. வந்து விழுந்த வடமொழிச் சொல்லாட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.

மயிலைப் பற்றிப்பாடும்போது –

சாயல் உன் தனிச்சொத்து

ஸபாஷ் கரகோஷம் – என்று எழுதினார்.

கோகிலம் – கஜராஜ் – ஸரோஜா – ஸம்பாத்தியம் – நிஜம் – விஷம் என்றெல்லாம் வடசொல் ஆதிக்கம் கவிதையில் மிகுந்திருந்தன.

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் பேசிக்கொண்டிருந்தபோது மறைமலையடிகள் சொன்னாராம்:

பாரதியும் கவிஞனில்லை; பாரதிதாசனும் கவிஞனில்லை ஏன்? இருவருமே வடமொழி சொற்களைக் கலந்து பாட்டெழுதுகிறார்கள்.

ஒருவன் கவிஞனா, இல்லையா என்பதற்கு மறைமலையடிகள் அன்று வைத்திருந்த அளவுகோல் அதுதான்.

மறைமலையடிகளின் கருத்தை அப்பாதுரையார் பாரதிதாசனுக்குத் தெரிவித்த பிறகு அவர் படைத்த தனித்தமிழ்ப் போர்ப் பாட்டுதான் தமிழியக்கம் என்று அறியக் கிடைக்கிறது.

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்

பாகிடை ஏறிய ருசியும்

என்று எழுதிப் பதிப்பித்தவர், இதில் ருசி வேண்டாமே சுவை என்றிருக்கலாமே என்ற பொன்னம்பலனார் கருத்தை ஏற்று அடுத்த பதிப்புகளில் “பாகிடை ஏறிய சுவையும்’ என்று மாற்றினாராம். இப்படிக் காலந்தோறும் தன்னைச் செதுக்கிச் செதுக்கி வளர்ந்திருக்கிறார் அந்தச் செம்மாந்த கவிஞர்.

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்தவர்கள் உற்றாய்ந்து கற்றால் ஒன்றைக் கண்டறியலாம். தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் தன்னிலை ஒருமையிலும் முன்னிலையிலுமாகவே இயங்கி வந்திருக்கின்றன. சங்க இலக்கியங்களும், சமய இலக்கியங்களும் கூட இவற்றுக்கு முற்றிலும் விதிவிலக்கல்ல.

நின் – என் – உன் என்றுதான் பல பாடல்கள் பேசுகின்றன. பாரதிக்குப் பிறகுதான் தமிழ்க் கவிதை எங்கள் – எம் – யாம் என்று பாட ஆரம்பித்தது.

பொழுதெலாம் எங்கள் செல்வம்

கொள்ளை கொண்டு போகவோ

எங்கள் பாரத தேசமென்று

தோள்கொட்டுவோம்

-என்று பாரதி குரல் ஒலித்தது.

அதைத் தொடர்ந்து –

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

-என்று பாவேந்தரின் பேரோசையாய் அதிர்ந்தது.

என் – நின் என்பன பெரும்பாலும் கடவுளோடு பேச. எங்கள் – யாம் என்பன மக்களோடு பேச. மக்களோடு பேசியவர், மக்களுக்காகப் பேசியவர் மாகவிஞர் பாவேந்தர்.

தாலாட்டு என்பது பழைய வடிவம்.

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு

நாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு

-என்று தொட்டிலுக்குள் பகுத்தறிவை விதைத்தது பாரதிதாசன் பாட்டு

தாமரைத் தடாகம் என்பது பழைய படிமம்.

தாமரைபூத்த தடாகங்களே – உமைத்

தந்தஅக் காலத்திலே – எங்கள்

தூய்மைச் சகோதரர் தூர்ந்து

மறைந்ததைச்

சொல்லவோ இந்த ஞாலத்திலே

-என்று தாமரைப் பூவில் உழைக்கும் மக்களின் உள்ளங்கைச் சிவப்பைச் சிந்தித்தது பாவேந்தர் பாட்டு.

பகுத்தறிவு, சீர்திருத்தம், காதல், குடும்பம், கலை, கல்வி, அரசியல், அறவியல், அறிவியல், அழகியல் என்று வாழ்வின் அத்தனை வெளிகளையும் அளாவித் துழாவியது பாவேந்தரின் படைப்பு விறல் அல்லது விரல்.

பாவேந்தர் அரசியல் அறிந்தவர், தேர்தலிலும் வென்றவர். ஆனால், அரசியலில் அவர் கரைந்துபோகவில்லை. பெருங்கவிஞர்கள் யாரும் அரசியலை வென்றெடுத்ததில்லை. காரணம், கவிதை என்பது மறைத்ததைப் புலப்படுத்துவது. அரசியல் என்பது பெரும்பாலும் புலப்பட்டதை மறைப்பது. பாவேந்தர் மறைக்கக் கற்றுக்கொள்ளவில்லை.

திரைப்படத் துறையிலும் தன்னை அவர் தோய்த்துக் கொண்டார். இறுதியில் தேய்த்துக் கொண்டார். அதில் பொருளீட்டுவது அவருக்கு இரண்டாம் நோக்கம். அந்த ஊடக வழியே தமிழ் பரப்புவதே முதல் நோக்கம்.

பராசக்தி படத்தின் தொடக்கப் பாடலாக “வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு’ இடம் பெற வேண்டுமென்று வேண்டியபோது, பணமே வேண்டாம். பாட்டு இடம்பெற்றால் போதும் என்று பெருமிதத்தோடு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர்.

அவர் கோபக்காரர் – பாயும் புலி – சீறும் சிங்கம் என்றெல்லாம் உருவகப்படுத்துவார்கள். பல நேரங்களில் அவர் குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பதற்குப் பல நிகழ்வுகளைப் படித்தறிகிறேன்.

மாடர்ன் தியேட்டர்ஸில் அவர் வசனமெழுதிய “சுலோச்சனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வருணன் – வாயு – இந்திரன் முதலியவர்களை இந்திரஜித் சிறைப்பிடிக்கிறான். பிரம்மதேவன் இலங்கை வந்து இராவணனை வேண்டுகிறான்.

“இராவணேஸ்வரா! என் பொருட்டாவது அமரேசனை விடுவித்து அளகாபுரியை அழியாமல் காப்பாற்ற வேண்டும்’ என்று பாவேந்தர் வசனமெழுதியிருக்கிறார்.

அந்த வசனம் பேசி பிரம்மதேவனாக நடித்த தேவராஜ நாயுடு கொஞ்சம் தமிழறிந்தவர். நடிப்பதை நிறுத்திவிட்டு “அய்யோ, அளகாபுரி குபேரன் தலைநகரமாயிற்றே… அமராவதிதானே இந்திரன் தலைநகரம்’ என்று தயங்கி நின்றாராம்.

பாரதிதாசனை அவசரமாய் அழைத்துக்கேட்டதும் “ஆமய்யா… ஆமய்யா… நீ சொல்றது சரிய்யா…’ என்று குழந்தைபோல் திருத்திக் கொடுத்தாராம்.

விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு ஆண்மை வேண்டும்; அதை ஏற்றுக்கொள்வதற்குப் பேராண்மை வேண்டும்; அந்தப் பேராண்மை பெற்ற பெருங்கவிச் சிங்கம் பாரதிதாசன்.

அன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைமையில் அமைச்சர்களும் தமிழறிஞர்களுமாய் ஓர் ஆலோசனைக் கூட்டம், நானுமிருந்தேன்.

“பாவேந்தர் புதைக்கப்பட்ட இடத்தை நினைவுச்சின்னமாக மாற்ற இயலாதா?’ என்ற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது.

மிகுந்த சோகத்தோடு முதல்வர் உதடு பிதுக்கினார். பாரதிதாசனின் காதலர் அவர். பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியவரும் அவர்தான்.

“என்ன தயக்கம் என்று கேட்டேன்?’

பொது இடுகாட்டில் பத்தோடு பதினொன்றாய்ப் புதைக்கப்பட்டுவிட்டார் பாவேந்தர். அந்த இடத்தில் மண்டபத்திற்கு வசதியில்லை; அங்கு தூய்மையும் இல்லை’ என்றார் வருத்தத்தோடு.

பாவேந்தரின் இடுகுழி மட்டுமா தூய்மையாக இல்லை?

தமிழ்… தமிழ் உணர்வு… தமிழர் மேம்பாடு… எதில் இன்று தூய்மையிருக்கிறது?

அதிகார மையங்களில், ஆலயங்களில், நீதிமன்றங்களில், கல்விக் கூடங்களில், கலை ஊடகங்களில், பத்திரிகைகளில், வானொலிகளில், சமூக வலைத்தளங்களில் தமிழுக்கான இடம் தார்மீகமாகவும் அதிகாரபூர்வமாகவும் என்று உறுதிப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் பாரதிதாசன் மீண்டும் விழித்தெழுவார்.

கவிஞனுக்கேது மரணம் நீண்ட உறக்கம்தான்.

Source…..கவிஞர் வைரமுத்து in http://www.dinamani.com

Natarajan

படித்து ரசித்தது ….” அங்கே பாட்டு , இங்கே பட்டு …” !!!

மறைந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் எழுதுகிறார்: மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவிலில், ஒட்டக்கூத்தர் திருவிழா நடந்தது. அப்போதைய அறநிலைய துறை ஆணையர் நரசிம்மன் தலைமையில், நானும், சிலரும் பேசினோம்.
கூட்டம் துவங்குவதற்கு முன், கோவில் அறங்காவலர்கள், ஆணையர் நரசிம்மனுக்கு, ஒரு தட்டில் மாலை மற்றும் பட்டு வஸ்திரம் எடுத்து வந்தனர். சட்டென்று அந்தப் பட்டை எடுத்து எனக்குப் போட்டு, மாலையையும் அணிவித்தார் நரசிம்மன். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
சுவாமி தரிசனம் முடிந்த பின், கூட்டம் துவங்கியது. தலைவர் உரை முடிந்ததும், பேசத் துவங்கினேன்…
‘இன்று நாம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடுகிறோம். சிறிது நேரத்திற்கு முன், இறைவன் சன்னிதியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது, ஒட்டக்கூத்தர் காலத்து நிகழ்ச்சி ஒன்றை நினைக்கச் செய்தது.
‘ஒட்டக்கூத்தர் அடுத்தடுத்து, மூன்று சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இரண்டாம் குலோத்துங்கனுக்கு, அவர் ஆசிரியராகவும், அவை புலவராகவும் இருந்தார். ஒரு நாள், புலவர்களும், அறிஞர்களும் கூடியிருந்த அரசவையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான் குலோத்துங்கன். அப்போது ஒட்டக்கூத்தர், அவனைப் புகழ்ந்து பாடத் துவங்கினார்.
‘தன் அரண்மனை வாயிலில் தொங்கும் ஆராய்ச்சி மணியின் நா என்றும் அசையாதபடி, யாருக்கும் குறையில்லாமல் செய்து, இவ்வுலகமெல்லாம் பரந்த குடையைத் தரித்த பிரான்…’ என்ற பொருள் அமைய,
ஆடும் கடைமணி நா அசை
யாமல் அகிலமெல்லாம்
நீடும் குடையைத் தரித்த பிரான்…
– என, தொடர்ந்து பாட்டை அவர் சொல்வதற்குள், குலோத்துங்க சோழன், தானே அப்பாட்டின் பிற்பகுதியைச் பாடினான்.
‘தினந்தோறும் புதிய கவிதையைப் பாடும், கவிப் பெருமானாகிய ஒட்டக்கூத்தனுடைய பாதத் தாமரைகளை, தலையில் அணியும் குலோத்துங்க சோழனென்று என்னை உலகினர் சொல்வர்…’ என, பொருள் அமைத்து,
என்றும் நித்தம் நலம்
பாடும் கவிப்பெரு மான் ஒட்டக்
கூத்தன் பாதாம் புயத்தைச் சூடும் குலோத்துங்க சோழன் என்றே
எனைச் சொல்லுவரே!
என்று பாடி முடித்தான். அவையோர், குலோத்துங்கனின் குரு பக்தியை பாராட்டினர்.
‘தனக்கு வந்த புகழ் மாலையை ஏற்றுக் கொள்ளாமல், அதை ஒட்டக்கூத்தருக்கே அளித்து விட்டான் குலோத்துங்கன். இங்கே, ஆண்டவன் சன்னிதியில் தமக்குப் போட இருந்த பட்டையும், மாலையையும் எனக்குப் போட்டு விட்டார் ஆணையர் நரசிம்மன். அந்த நிகழ்ச்சியும், இந்த நிகழ்ச்சியும் ஒரு வகையில் ஒப்புமை உடையதாகத் தோன்றுகிறதல்லவா? அங்கே பாட்டு; இங்கே பட்டு…’ என்றேன்.
அவையோர் இதைக் கேட்டு, கைதட்டி ஆரவாரித்தனர்; எனக்கும், என் நன்றியை ஒரு விதமாக வெளிப்படுத்தி விட்ட மகிழ்ச்சி!

Source………www.dinamalar.com

Natarajan