“படித்தேன் , பகர்கிறேன் உங்களுடன்… பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு…! “

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு…!
மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள்.
அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’
என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார்.
மேலும் அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்று சொல்கிறார்.
அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம்.
அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம்.
‘பீடு’ என்றால் ‘பெருமை’ என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி ‘பீடை’ என்றானது.
அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.
மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள்.
இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.
விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும்.
அதுபோலவே பல ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.
மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
பூ வைப்பது ஏன் ?
அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை – பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது.
எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ,
அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.
ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.
மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும்.
விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள்.
இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.
அது போலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.
மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ,
{ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம்}
என்னும் சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான்.
இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.
சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த
{மார்கழி மாதத்தில்} இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்…..
அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்…..
மார்கழி மாதம் அதிகாலை எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான்.
அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும்,
ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான்.
சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது,
பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.
இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன.
இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன.
யோக முறைகளிலும் பலவிதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள்.
அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில் தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம்.
எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது.
எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும்,
தேவையான { அறிவு, ஞானம் } இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
{ அதில் ஒன்று தான் கோலம் இடுவதும். }
குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.
இதனை நீங்கள் விஞ்ஞானப் பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்.
இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளது…

Source….input from a friend of mine…

Natarajan

Message For the Day… ” Good and Noble action is Authentic Worship{Pooja} …”

The inborn desires and mental impressions (samskaras) make or mar the individual (jivi); they are the steps that take all individual souls to the goal. Samskaras make the individual wade through loss and grief. Only through good mental tendencies you can attain the Lord. So every individual has to be wholly engaged in good actions (sath-karmas).Good and noble action is authentic worship (puja). It is the best form of remembering the Lord. It is the highest devotional song. It spreads love, without distinction and difference. It is service done as the duty of the individual. Be engaged in such noble actions (karmas). Revel uninterruptedly in the thought of the Lord. This is the royal road to the goal you have to reach.

Sathya Sai Baba

” The Chennai Flood Happened Due to a Complete Lack of Urban Planning…”

Views of an Urban Planner and Architect  …” My View ” Column in http://www.the better india .com

Natarajan


After Chennai’s recent catastrophic floods, the one question that looms large is – ‘could proper urban planning have prevented such a disaster?’ My answer to that question is certainly ‘yes’.

The way our cities are planned has got a lot to do with inviting or avoiding such disasters. Chennai floods underline the importance of adhering to the fundamental urban planning principles, when we design our cities. Being an architect and an urban planner, I can’t over-emphasise this point enough.

Anil  Bhaskaran , Urban Planner and Architect

But before discussing about the kind of planning that should have been done in a city like Chennai, we must understand what the architecture of any ideal city should be like.

Chennai city planning

Photo Credit: ReflectedSerendipity/Flickr

Let us first look at the birth and growth pattern of a city, which is almost like a living human body. It is born, lives for a certain period of time, and then dies. Like a group of cells come together to form a human body, a group of people come together to form a city. Thus, any city must grow to its limit, attain maturity, cease to grow and eventually perish. It can function to the peak of its efficiency only for a limited period of time, after which it should be allowed to die its natural death. Adding newer parts to an old city is almost like transplanting new organs in the body of an old living organism. It distorts the fundamental body mechanism.

This leads us to the question – ‘what can we do to prevent the distortion of our cities like Chennai, and to prevent disasters like the recent floods?’ Here are three basic points that must be kept in mind:

1. A city must be designed for a specific number of people.

Chennai city planning

Photo Credit: Jared Smith/Flickr

As and when the limit is attained, newer cities should be designed and built. And this should be a continuous process. This is quite similar to the situation of a living being, who on achieving maturity, allows the next generation to come into existence through the method of reproduction.

2. We need to limit the migration from villages to cities.

Chennai city planning

Photo Credit: snotch/Flickr

Chennai is a classic example of this problem. However, the solution cannot be achieved by promulgating any law. Instead, we need to enhance the quality of life in our villages. This will require a change in the existing mindsets and policies.

3. A city should be walkable.

Chennai city planning

Photo Credit: Andrea/Flickr

On further analysis, one comes across another important element of city planning – Every city should be walkable, horizontally and vertically. This leads to the reduction in the amount of energy spent while commuting. Ideally, one should be able to walk from the outermost ring, to the centre of a city within twenty minutes.

Traditionally, cities were planned and built based on the principles mentioned above. Cities like Rome, Paris, Florence, Jaipur and Jaisalmer are all good examples of how well the city planners of the past understood these fundamentals and applied them prudently in the creation of their cities. But on comparing those with present-day cities like New York, Tokyo, Mumbai or Chennai — there is clearly a striking contrast.

But then, what is wrong with Indian cities like Chennai, which is a mix of the old and contemporary? Fundamentally, it is the unlimited growth that destroys the order in such cities beyond repair. In a human body, unlimited growth is considered cancerous. A city is no exception to this rule.

Chennai must accommodate the natural contours, slopes and drains, in its plan. One of the best ways of planning a water front city is to ensure that all the main streets are running perpendicular to the coast line. This will allow easy passage of excess rain water into the sea. A good example of such planning is the city of Minneapolis that sits on the banks of the Mississippi river.

Looking at the enormity of the problem in Chennai, the solutions have to be implemented at a large scale too! We need to take some hard steps here, such as:

Chennai city planning

1. Gravity drains should be created, taking into account the natural slopes of the terrain and quantum of water to be handled.
2. Existing natural drains and rivers should be de-silted and widened.
3. Low-lying areas should be spared of construction (have some mercy!). In some cases, dikes have to be built around them to protect such areas from flooding.

But in the end, we must remember that prevention is better than cure. We must plan, form and take care of our cities like we do our homes.

Netherlands, a country that has more than sixty percent of its land below sea level, has been taking some pioneering steps in the direction of water management and hydrology. The country has taught itself how to live with water, rather than fight it. In the recent years, it has been consistently voted as one of the top ten happiest countries in the world to live in. If they can top in happiness quotient, in spite of their problems with water management, so can we. What is needed is the will to face the challenges and solve the problems objectively and scientifically.

– Anil Bhaskaran

Anil Bhaskaran is an Urban Planner and Architect, and the MD of IDEA Centre Architects, Bangalore.

Source….www.the betterindia.com

Natarajan

Message for the Day….” God is your Protector…”

While struggling in the spiritual field, take on the Lord Himself as your protector. To instill courage in the child, the mother persuades it to walk a few steps and turns about, but she will never allow it to fall. If the child falters and is about to lose balance, she hurries from behind and catches it before it falls. The Lord too has His eyes fixed on the individual (jivi). He has in His hand the string of the kite, which is humanity. Sometimes He may give it a pull or push to loosen the hold; but whatever He does, be confident and carefree, for He is holding that string. This faith will harden into an innate desire (samskara) and will fill you with the essence of love (prema-rasa). The string is the bond of love and grace. You are the kite, bound to the Lord. Earn auspicious merit so the bond of love and grace is firm and grows.

Sathya Sai Baba

” நிமிடக் கட்டுரை – சென்னையைப் பாதுகாத்த பக்கிங்காம்…”

சென்னையின் கால்வாய்களையும் ஆறுகளையும் இணைத்துச் சமன்படுத்திவந்த பக்கிங்காம் கால்வாய் மட்டும் உயிர்ப் போடு இருந்திருந்தால் சென்னை இன்று நீரில் தத்தளித்திருக்காது.

1801-ல் வெளிவந்த மெட்ராஸ் கெஜட் அறிவிப்பின்படி சென்னையைச் சுற்றியுள்ள ஓடைகளை இணைக்க எண்ணூரிலிருந்து சென்னை வரை ஒரு கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டது. பிறகு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை பறந்து விரிந்த மிக நீண்ட கால்வாயாக அது கட்டப்பட்டது. இன்று சென்னையை முட்டித்தள்ளும் ஆறுகளும் ஏரிகளும் அன்று பக்கிங்காம் கால்வாய்க்குக் கட்டுப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு, கூவத்தையும் அடையாறையும் இணைக்கும் ஆற்று வழிப்பாதை இருந்தது.

கோதாவரி ஆற்றோடும் கிருஷ்ணா நதியோடும் கைகோத்த இந்த பக்கிங்காம் கால்வாயில் 1890-களில் வணிகப்பொருட்களை உற்சாகமாகப் பல படகுகள் சுமந்து சென்றன என்று ‘இந்தியன் பால்ம்’ என்னும் புத்தகத்தில் பால் ஹைலாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னாளில் எதிர்பாராத வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பக்கிங்காம் கால்வாய் வழி வணிகம் தடைபட்டுப்போனது என்பது தெரியவருகிறது.

இதேபோன்று, சென்னையின் மழை நிலவரம் குறித்து 64 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்களை 1832-ல் வெளியிட்டார் ஆர்தர் காட்டன். இதன்படி சென்னையில் மழை வரத்து சீராக இல்லாமல் ஏற்றம் இறக்கத்தோடு மாறி மாறிப் பொழிவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1827-ல் 88.41 அங்குலம் வரை சென்னையில் மழை பொழிந்திருக்கிறது. ஆனால் 1831-ல் 44.35 அங்குலமாக அது குறைந்திருக்கிறது. 1832-ல் வெறும் 18.45 அங்குலம் மட்டுமே பொழிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் 37.11 அங்குலமாகத் திடீரெனப் பெருகியிருக்கிறது.

இவ்வாறாகச் சென்னையின் மழை நிலவரம் ஏற்ற இறக்கத்தோடு இருப்பதால் இப்பகுதிக்கான நீர் மேலாண்மை கண்ணும் கருத்துமாகத் திட்டமிடப்பட வேண்டும் என தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையின் நீர் மேலாண்மையில் பக்கிங்காம் கால்வாய் முக்கியப் பங்குவகித்தது என்பதற்கான பதிவுகளும் காணப்படுகின்றன. பழுதடையாமல் இருந்தவரை கொள்திறன் ஒரு நொடிக்கு 5,600 கன அடி நீரைக் கொள்திறனாகக் கொண்டிருந்தது.

ஆனால் சென்னையின் ஏரிகளுக்கும் பிற நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பக்கிங்காம் கால்வாய்க் கான முக்கியத்துவமும் மறைந்துபோனது. 1900 மே 10-ல் வெளியான

`தி இந்து’ ஆங்கில நாளிதழின் கட்டுரை ஒன்றில் இது துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு பக்கிங்காமின் அருமை அறிந்து மீண்டும் காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை அதன் நீர் படுகையைச் செப்பனிட்டு தேசிய நீர்வழிப் பாதையை அமைக்க 2008-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்தக் கனவுத் திட்டம் மெய்ப்படவில்லை. சென்னையின் இன்றைய அவல நிலையைப் பார்த்த பிறகாவது விடிவு காலம் பிறக்குமா?

– ‘தி பிஸினஸ் லைன்’
தமிழில் சுருக்கமாக: ம. சுசித்ரா

Source….ஜி. நாகா ஸ்ரீதர்….www.tamil.thehindu.com

Natarajan

” இப்போது சொல்லுங்கள், அடையாறு ஆறா, சாக்கடையா?…”

சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”

சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.

ஆறு அமைதியாக ஓடும்போது ஆறாக அதை நாம் பார்ப்பதில்லை. அது தன் இயல்பைக் கொஞ்சம் ஆவே சமாக வெளிப்படுத்தும்போது அதன் பெயரைச் சரியாக உச்சரிக்கிறோம்: ஆறு.

வெள்ளத்துக்கான அடிப்படைக் காரணம்

பத்து நாட்கள் கழித்தும் சென்னை வெள்ளத்துக்கான அடிப்படைக் காரணம் தொடர்பான விவாதங்கள் முடிந்த பாடில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் நொடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதைப் பற்றியும் ஆற்றங் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளைச் சுட்டியுமே பெரும்பாலான விவாதங்கள் போகின்றன.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியே நதிக்கரையை ஒட்டி அமைந்ததுதான். ஆற்றங்கரையோரத்தில் வீடுகள் இருப் பதைப் பிரச்சினை என்று கூறுவது, கடற்கரையோரத்தில் கடலோடிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசுவதற்குச் சமமானது. நீர் எங்கேயோ பிழைப்பு அங்கே, வாழ்வும் அங்கே.

அகண்ட காவிரி முக்கொம்புக்கு வரும்போது கடல்போலக் காட்சி தரும். சர்வ சாதாரணமாக ஆற்றில் நொடிக்கு 4 லட்சம் கன அடிகள் போகும். இருபுறங்களிலும் குடியிருப்புகள் உண்டு. மன்னார்குடியில் காவிரியின் கிளைநதியான பாமணியாற்றங்கரையில் வரிசையாக வீடுகள் அமைந்த தெரு சஞ்சீவிராயன்கோயில் தெரு. வீடுகளின் கொல்லைப்புற வாசலைக் கடந்து பத்தடி எடுத்துவைத்தால், ஆறு. எவ்வளவு வெள்ளம் போனாலும் கொல்லை வாசலை நீர் தொட்டதில்லை. பிரச்சினை ஆற்றை ஒட்டி வாழ்தலில் அல்ல. ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவிலும் அல்ல. ஆறு ஆறாக இருக்கிறதா என்பதில் இருக்கிறது; நீளம், அகலம், ஆழம் எல்லாவற்றிலும். குறிப்பாக, கரைகள் எப்படி இருக்கின்றன என்பதில் இருக்கிறது.

கரை என்று ஒன்று இருக்கிறதா?

மழை நாட்களில் காவிரிக் கரையோரக் கிராமங்களைக் கதிகலங்க வைக்கும் சொல் கரையுடைப்பு. ஆறு தூர்வாரப்பட்டு, இரு மருங்கிலும் குவிக்கப்படும் மண்தான் கரை. இது பிற்காலத்தில் உருவான முறை என்று சொல்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். “அந்தக் காலத்துல ஆறு-குளங்களைத் தோண்டினா மண்ணை எடுத்து ஊருக்குள்ள போடுவாங்க. ஊருங்கிறதே அப்படிதான் உருவானுச்சு. ஒருகட்டத்துக்கு மேல ஊருக்குள்ள மண்ணு போடுற பழக்கம் போயி கரையை ஒட்டியே குவிக்குற பழக்கமாயிடுச்சு” என்பார்.

இப்படி உருவான மேடு-பள்ளம்தான் புதிய வார்த்தைகளை உருவாக்கின என்பார் பேராசிரியர் தங்க.ஜெயராமன். “ஊரில் மேடாகப்பட்ட பகுதியில் மேட்டுக்குடிகள் வசிக்கும் இடம் நத்தம். மேடாக்கப்படாத இடம், இன்னும் சொல்லப்போனால், ஒருபுறம் மேடாக்கப்பட்டதால், மறுபுறம் பள்ளமாகும் பகுதி பள்ளக்கால்; ஊரில் இடம் கிடைக்காத, சாதி/பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான வசிப்பிடமாக அது மாறிவிட்டது” என்பார் ஜெயராமன்.

வெள்ளம் பொங்கும்போது இயல்பாகவே பள்ளத்தை யொட்டிய கரையில் அழுத்தம் அதிகம் இருக்கும். போதாக் குறைக்கு, இந்தப் பக்கமுள்ளவர்கள் எங்கே தம் பக்கக் கரை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், அந்தப் பக்கக் கரையைத் தட்டிவிடும்போது அங்கே கரையுடைப்பு நடக்கும்.

இயற்கையாகவோ, செயற்கையாகவோ இப்படிக் கரை உடைத்துக்கொள்ளாமல் இருக்க, ராக்கண் விழித்து கண் காணிப்பதும் ஆயிரக் கணக்கில் மண் மூட்டைகள் தயாரித்து கரையைப் பலப்படுத்துவதும் கிராமங்களில் இன்றைக்கும் நடைமுறையில் உள்ள வழக்கங்களில் ஒன்று.

ஆக, ஆதிக் கரைகளும் இன்றைய கரைகளும் ஒன்றல்ல. கிராமத்துக் கரைகளும், நகரத்துக் கரைகளும் ஒன்றல்ல. பொதுவாக, இன்றைய காலகட்டத்துக்கு, விவசாயம் இல்லாத பகுதிகளில் ஆற்றின் இருமருங்கிலும் வலுவான கான்கிரீட் சுவர்களை அமைத்து, வருஷா வருஷம் தூர்வாரி, அகழும் மண்ணை கான்கிரீட் கரைகளுக்கு அப்பால் போடுவதே உத்தமமான வழி.

கரையா, அப்படியென்றால்?

சென்னை வெள்ளம் தொடர்பான விவாதங்களில் ஒரு முக்கியமான விஷயம் விடுபடுவதாகத் தோன்றுகிறது. சென்னையில் ஆறுகளுக்குக் கரைகளே கிடையாது பல இடங்களில். அடையாற்றங்கரையோரத்தில் பல இடங்களில் கரையும் தரையும் ஒன்று. காவிரியில் வெள்ள நாட்களில் பொதுப்பணித் துறை லஸ்கர்கள் லட்சக் கணக்கில் மண் மூட்டைகளைத் தயாரித்து கரைகளை வலுப்படுத்துவது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. அடையாற்றில் வெள்ளத்தின்போது அப்படியான செயல்பாடுகளையெல்லாம் ஒரு இடத்தில்கூடக் காணோமே ஏன்? அடிப்படை ஒன்றுதான். அரசே சென்னையின் ஆறுகளை ஆறுகளாக மதிப்பதில்லை.

வெட்கக்கேடு அரசியல்

சுமார் 70 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சென்னையில் இதுவரை 5.87 லட்சம் குடியிருப்புகளுக்கே கழிவுநீர் வெளியேற்ற வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. இன்னும் 15% குடியிருப்புகளுக்கு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடியிருப்புகளுக்குக் கழிவுநீர் வெளியேற்றக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் இந்த ஒரு லட்சம் குடியிருப்புகளின் கழிவுநீரும் எங்கே போகிறது? சென்னை ஆறுகளில்!

சென்னையின் நீர்வழித்தடங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர், ஆறுகளில் திறந்துவிடப்படுவதை அரசே அனுமதிக்கிறது. சென்னையின் நீர்வழித்தடங்களில் கூவமாற்றில் 105 இடங்களிலும் பக்கிங்ஹாம் கால்வாயில் 183 இடங்களிலும் அடையாற்றில் 49 இடங்களிலும் கழிவுநீர் கலப்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதை அயோக்கியத்தனம் என்று எழுதினால் அந்த வார்த்தை வெட்கப்படும். ஆனால், இது குறித்த குற்றவுணர்வு ஏதும் இல்லாத அதிகார வர்க்கம்தான் மழையின் மீதும், வெள்ளம் மீதும், ஆற்றின் மீதும் பழியைப்போட்டு விவாதம் செய்கிறது!

எந்தத் துணிச்சலில் அவர்கள் பேசுகிறார்கள்? மக்களுக்கு எதுவும் தெரியாது; கேள்வி கேட்க ஆள் கிடையாது எனும் துணிச்சல். ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகராகக் கேள்வி கேட்கும் முன், நம் பக்கம் உள்ள ஒரு பெருந்தவறை நாம் திருத்திக்கொள்ள வேண்டும் என்பேன். சென்னையில், ஒரு நாளைக்கு 65 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது.

தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் ஊரில் இவ்வளவு நீர் பயன்படுத்தப்படுவதும் வெளியேற்றப்படுவதும் அநியாயம்.கழிவுநீர்க் குழாயில் கழிவுநீரோடு திடப்பொருட்களையும் சேர்த்து வெளியேற்றுவது அதைவிடவும் அக்கிரமம். சுமார் 3,650 கிமீ நீளத்துக்குச் சென்னையில் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் அவை அடைப்பைச் சந்திக்கின்றன.

மல-ஜலம் நீங்கலாகக் கழிவுநீரில் ஒரு சோற்றுப் பருக்கைகூடச் செல்லக் கூடாது. ஏனென்றால், ஒரு வீட்டிலிருந்து ஒரு பருக்கை எனக் கொண்டாலும் 7 லட்சம் குடியிருப்புகளிலிருந்து 7 லட்சம் பருக்கைகள் இந்தக் கழிவுநீர் குழாய்களில் வந்து சேரும். அனுதினமும் நாம் எவற்றை யெல்லாம் கொட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். எல்லாம் ஆறுகளை நோக்கியே செல்கின்றன.

சென்னையில் வெள்ளத்தின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்ட மறுநாள் அடையாற்றில் ஒரு பிடி நீரை அள்ளிப்பார்த்தேன். காவிரிக்கும் அடையாற்றுக்கும் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை. ஒருவாரம் கழித்து இப்போது பார்க்கும்போது தண்ணீர் மீண்டும் கருப்பாக ஆரம்பித்திருக்கிறது. வாழவைக்கும் ஊர் இதற்கு மேலும் நாசமாக விடக்கூடாது.

மாற்றத்தை நம்முடைய சமையலறைக்கும் கொண்டுவர வேண்டும். முதலில் நம் வீட்டுக் குழாய்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம். அடுத்து, ரிப்பன் மாளிகையை நோக்கிப் புறப்படுவோம்!

-சமஸ், in http://www.tamil.thehindu.com
தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

Natarajan”

Message for the Day…..” To eat and sleep is the fate of idlers and drones. “

As your day progresses, as one enters the field of daily work and toil, you are infused with the passionate quality (rajoguna). Before you take your lunch, meditate on the Lord again and dedicate the work, and the fruit derived from it to the Lord Himself. Start eating only after this act of devotion and grateful remembrance. This is the meaning of the noon (maadhyannika) worship. By observing this ritual, passion is kept in check and is overpowered by the satwic nature. During the day, people are possessed by a third nature, tamas or dullness. When evening descends, one hurries home, eats one’s fill, and is overpowered by sleep. But a duty still remains. To eat and sleep is the fate of idlers and drones. When the worst of the qualities, tamas threatens to rule, one must make a special effort to escape its coils by resorting to prayer in the company of those who extol the Lord, reading about the glory of God, the cultivation of good virtues, and the purposeful nursing of good rules of conduct. This is the prescribed evening worship (sandhyavandana).

Sathya Sai Baba

B.K.S.Iyengar…” Founder of Iyengar Yoga “… His 97th Birth Anniversary on 14 Dec 2015…

Today is the 97th birth anniversary of B.K.S. Iyengar, one of India’s most prominent Yoga teachers.

And Google is celebrating with a brilliant, animated doodle – featuring a series of Yoga positions.

google1

The founder of “Iyengar Yoga”, Bellur Krishnamachar Sundararaja Iyengar is known for popularising Yoga around the world. “Iyengar Yoga”, which is taught in more than 70 countries today, is a form of Yoga focusing on the correct alignment of the body with the help of straps, wooden blocks, etc. It is said that even at the age of 95, he could perform all the asanas – from headstands to vertical splits. He died on Aug. 20, 2014, from heart and renal failure.

Here are five things to know about this legend.

1. He was born in a very poor household:

Iyengar1

Source: Wikipedia

B.K.S. Iyengar was born in a poor family in Kolar District of Karnataka, on Dec 14, 1918. His father was a school teacher and he was the 11th of 13 children in the family. Only 10 of those children survived. Living through a very unhealthy childhood, Iyengar had to face many diseases like malaria, tuberculosis, typhoid fever, and also general malnutrition at a very young age.

2. But Yoga changed his Life:

Iyengar5

Source: www.judithjonesyoga.co.uk

He was only 15 when B.K.S. Iyengar’s brother-in-law, Tirumalai Krishnamacharya, asked him to move to Mysore to improve his health by practising Yoga. Tirumalai Krishnamacharya is often referred to as “the father of modern yoga”. That was the turning point for Iyengar, whose health steadily improved. At the age of 18, Krishnamacharya sent him to Pune to teach Yoga to people.

3. And then he went out to teach the world:

Iyengar2

Photo Credit: Wystan/Flickr

It was in Pune that the Yoga teacher met the famous violinist, Yehudi Menuhin. This meeting was the beginning of Iyengar’s journey from being an Indian yoga teacher, to an international guru. Menuhin used to complain that he was unable to sleep properly, and was suffering from muscular aches. But with the help of Yoga, he was able to overcome his health problems. Being highly impressed by the guru, Menuhin invited him to Switzerland in 1954. This was followed by Iyengar’s visits to the US and the rest of Europe as well. He came up with the idea of teaching yoga to groups, and encouraged women to take up Yoga even during pregnancy.

“The West knows yoga because of Iyengar. He developed a style of yoga for ordinary people. He introduced simple props and aids like ropes, blankets, wall to facilitate people to make it easy for the masses,” Yogi Santatmananda Saraswati of Swami Dayananda Ashram, Rishikesh, said at the time of his death.

4. And to teach many famous personalities:

Iyengar4

Photo Credit: Gaurav Mishra/Flickr

B.K.S. Iyengar is known to be the teacher of many famous people like Yehudi Menuhin, Sachin Tendulkar and Queen Elizabeth of Belgium. It is said that Queen Elizabeth of Belgium learned his trademark sirsasana headstand at the age of 80. His other devotees and students include novelist Aldous Huxley, actress Annette Bening and designer Donna Karan.

5. He collected several awards and authored many books too:

Iyengar3

Photo Credit: Chris Drumm/Flickr

He was awarded the Padma Shri in 1991, the Padma Bhushan in 2002 and the Padma Vibhushan in 2014. B.K.S. Iyengar published his first book called Light on Yoga in 1966, which became an international best-seller. He has authored a total of 14 books.

Source….Tanaya Singh in http://www.the betterindia.com

Natarajan

” மனித நேயம் ” …. ஒரு புதுக் கவிதை !

“மனித  நேயம்”
…………..
இயற்கை அன்னையின் சீற்றத்தில் பொங்கியது
ஆறும் , ஏரியும்  மட்டுமா ?
மனித நேயமும்  சேர்ந்துதானே !
பிரளய நேரத்தில் பிற மொழி மக்களும் நெருங்கிய
உறவாக மாறி  தங்கள் கரம் நீட்டி பல இன்னுயிர்
காக்க ….காரணம்…   இன்னமும் இம்மண்ணில் வற்றாமல்
ஊறும்  மனித நேயம் !
இது எம் மதம் அது உம் மதம் என பேதம் பார்க்காமல்
எம்மதமும் சம்மதம் …”அதுவே என் வேதம் இனி” என
நம்மை சொல்ல வைத்ததும் … நம் உயிர் காத்த வேற்று மத
மனிதநேயம் !
வீடிழந்த   மக்களை  தேடி அழைத்து நம் வீட்டில் தங்க
இடம் கொடுத்து  உன்ன உணவும் நாம் கொடுத்த அந்த தருணம்
நம்முள் தூங்கி விட்ட மனித நேயத்தை நாமே   தட்டி எழுப்ப ,
இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய  வாய்ப்பு !
இயற்கையின் சீற்றத்தில் பொங்கி வழிந்த இந்த மனித நேயம்
இனி  என்றும்
மங்காமல்,வற்றாமல் ஒரு ஜீவ நதியாகவே  தங்கி ஓடவேண்டும் நம்முள்!
This Kavithai of mine has been published in Dinamani as  Vaasagar Kavithai under the caption ” Kavimani “…. in http://www.dinamani .com on 14 dec 2015
Natarajan

Message for the Day….” When your mind dwells with the Lord always, you will be drawn automatically only toward good deeds”

Twenty hammer strokes might not succeed in breaking a stone, but the twenty first might. Does this mean the first 20 blows were of no avail? No! Each stroke contributed its share to the final success which was the cumulative effect of all 21 strokes. So too, your mind is engaged in a struggle with the internal and external world. Needless to say, you may not always succeed. You can attain everlasting bliss by immersing yourself in good works and saturating your mind with the love of God. Infuse every moment of life with that love. Then evil tendencies will not obstruct you. When your mind dwells with the Lord always, you will be drawn automatically only toward good deeds. The objective of all spiritual practices is to destroy the mind, and some day, one good deed will succeed in destroying it, just like the 21st stroke. Hence no good deed is a waste – every little act counts!

Sathya Sai Baba