படித்து ரசித்தது …”இதுதான் அத்வைதம் …” !!!

> ஒரு இளம் ஸன்யாஸி காஞ்சிபுரம் வந்து  பெரியவாளை தரிசனம் பண்ணினார்.
> “என்ன பண்ணிண்டிருக்கே?”
> “அதிகநாள் எந்த இடத்லையும் தங்கறதில்லே பெரியவா …..இப்படி ஊர் ஊராப் போயிண்டிருக்கேன். பிக்ஷையா எது கிடைக்கறதோ சாப்பிட்டு, முடிஞ்ச அளவு நிறைய ஜபம் பண்றேன். சில இடங்கள்ள எதாவுது பேச சொன்னா எனக்கு தெரிஞ்ச பகவத் விஷயங்களை சொல்லுவேன். அவ்ளோதான்”
> நல்லது. அத்வைத ப்ரசாரம் பண்ணேன்!
> ஆனா எனக்கு அத்வைதம் பத்தி என்ன தெரியும் பெரியவா?” குரலில் தாபம்.
> “அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே! நான் ஒரு கதை சொல்றேன். அதை நீ போற கிராமத்துலல்லாம் சொல்லு!”-
> “பெரியவா சொல்றபடி செய்யறேன்..”
> “ஒரு ஊர்ல ராமஸாமி ராமஸாமின்னு ஒருத்தன் வேலை வெட்டி எதுவுமில்லே. ஆளைப் பாத்தா நன்னா ஆஜானுபாஹுவா ஸாண்டோ மாதிரி இருப்பானா அதுனால ஆத்துல எல்லாரும் அவனை  “ஏண்டா, இப்டி தீவட்டி தடியனாட்டம் ஒக்காந்து நன்னா சாப்பிடறியே? எதாவது வேலை பாத்து பொழைக்க வேணாமான்னு திட்ட ஆரம்பிச்சா. அவனுக்கு ரொம்ப ரோஷம் வந்து எங்கயாவுது வேலை கிடைக்குமான்னு தேடிண்டு இருந்தான்.
> அந்த ஊர்ல ஒரு ஸர்க்கஸ் கம்பெனி  வந்து டேரா போட்டுது.  இவன் அந்த ஸர்க்கஸ் மானேஜர்கிட்ட போனான்.
> “ஸார் ஸார் எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்கோ” ன்னு கெஞ்சினான்.
> அந்த நேரம் ஸர்க்கஸ்ல ஒரு ஆதிவாஸி ஒர்த்தன் வித்தை காமிச்சுண்டு இருந்தான். என்ன வித்தைன்னா, அவன் ஆங்கிலம் பேசுவான்! ஆதிவாஸி ஆங்கிலம் பேசறான்னுட்டு அதுக்குன்னே கூட்டம் வரும். அவன் கொஞ்சநாள் முன்னால செத்துப் போய்ட்டான். அதுனால ஸர்க்கஸ் ரொம்ப டல்லா இருந்துது. ராமஸாமி அந்த ஆதிவாஸி மாதிரி ஆஜானுபாஹுவா, நல்ல தாட்டியா இருந்தானா அதுனால, அந்த ஆதிவாஸியாட்டம் நடிக்கற வேலை கிடைத்தது. பழையபடி கூட்டம் வர ஆரம்பிச்சுது.
> சர்க்கஸ் மானேஜர் ஒருநாள் ராமஸாமிகிட்டே “ஏம்பா…இப்படி எத்தனை நாள் ஆதிவாஸியா ஆங்கிலம் மட்டும் பேசி நடிப்பே? ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே! கயிறு மேல பாலன்ஸ் பண்ணி நடக்கறது மாதிரி இதெல்லாமும் கத்துக்கோன்னார். கத்துண்டான். அன்னிக்கி ஆதிவாஸி மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு மொத மொத, ஜனங்கள் பாக்கறச்சே, கயறு மேல பெரிய குச்சியை பாலன்ஸ் பண்ணிண்டு இவன் நடந்துண்டு இருக்கான்…….லேஸா கீழ பாத்தா ஒரு புலி !
> “கரணம் தப்பினா மரணம்”ன்னு யாரோ மைக்குல பேசி இவனை உத்ஸாகப் படுத்திண்டு இருக்கா! கரணம் தப்பிடுமோ? மரணந்தானோ? புலியைப் பாத்தானோ இல்லியோ, இவனோட கான்சன்ட்ரேஷன் போயிடுத்து. காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. “தீவட்டி தடியனாவே இருந்திருக்கலாமோ! கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம்!” ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் “தொபுகடீர்”ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான்! அவ்ளோவ் கிட்ட புலியை பாத்ததும் ஸப்தநாடியும் ஒடுங்கிப் போய்டுத்து!
> அந்தப் புலி மெதுவா இவன் கிட்ட வந்து “டேய், ராமஸாமி! பயப்படாதேடா, நான் தான் க்ருஷ்ணஸாமி! ஒனக்கு ஆதிவாஸி வேஷம் குடுத்தா மாதிரி, எனக்கு புலி வேஷம் குடுத்திருக்கா……” ன்னு புலிஸாமி பேசினதும், ராமஸாமியோட பயம் போய்டுத்து!
> இதான் அத்வைதம்! எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு. அவ்ளோவ்தான்!
> ‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்திதா ன்! இதான் அத்வைதம். இந்த கதையை சொல்லு போறும்……” என்று கூறி ஆஸிர்வதித்தார்.
> விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி  ஒரு  பெரிய அத்வைத சித்தாந்தம் சொல்ல  மஹா பெரியவாளாலே சுலபமா முடியும்…

Source…input from a friend of mine

Natarajan

 

 

தெய்வத்தின் குரல்: விபூதி, திருமண்ணின் மகிமை…

“விறகுக்கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்த பின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

‘விபூதி பூதிரைச்வர்யம்’ என்று ‘அமர கோச’த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மகா பஸ்மம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்துவிட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மகா பஸ்மம். அவன் பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்திய மாறுதல் கருப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.

பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்த பின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் ‘சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதியான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்த பின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய். வெண்மையே உண்மை.

ஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று கிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், ‘பஸ்மமாகிவிடும்’ என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகிவிடவில்லை. அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்னும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும். மிகுந்து நிற்பதே ‘மகா பஸ்ம’மான பரமாத்மா.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார். விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக்கொள்வதினால் சகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் துன்னூறு எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், “துன்னூறு கொடுங்கள்” என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.

வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக்கொள்வது வழக்கம். மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகிவிடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப்படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம்.

ரங்கத்தில், வில்வ விருஷ மண்ணை எடுக்கிறார்கள். வில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம். விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிக துர்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூடப் பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்தவல்லது பஸ்மமாகிய திருநீறு. மகா பஸ்மமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.

திருநீற்றையோ திருமண்ணையோ இட வேண்டும். திருமண் இடுவதற்கு, ‘நாமம் போடுவது’ என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, தர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லிப் போட்டுக்கொள்வதாலேயே ‘நாமம் போடுவது’ என்று பெயர் வந்துவிட்டது.

திருநீறு, திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது.

Source….www.tamil.the hindu.com

Natarajan

Message for the Day…” Without Good thoughts and Good deeds one can not accomplish anything Good ….”

Sathya Sai Baba

With diligent efforts success can be achieved. Even an ant can cover miles by moving continuously. However even Garuda (the celestial eagle) cannot soar two feet if it has no will to fly. Likewise without good thoughts and good deeds based on them, one cannot accomplish anything good. The child Dhruva achieved what he desired despite many difficult obstacles, because of his firm determination and spiritual austerities. By his sublime thoughts, he achieved the status of a star in the sky. Likewise any person, irrespective of age or abilities, with faith and determination, can accomplish what they want. In every field steadfast performance (sadhana) is essential. In addition, you must control your temper. Sage Durvasa, despite his penance had no peace because he could not control his temper. Together with peace, the quality of (Kshama) is essential. Forgiveness is truth, it is Dharma, it is the essence of the Veda, it is non-violence and the best penance(Yajna).

தெய்வத்தின் குரல் – முருகன்: பதவி பெறவே பிறவி….

ஜனனத்தை எடுத்துக் கொண்டால், ‘குமார ஸம்பவம்’ என்பதாக முருகன் ஜனனம் எடுத்ததற்கு அலாதிப் பெருமை இருக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் ராம லக்ஷ்மணர்களுக்கு விசுவாமித்ரர் அந்தக் கதையைச் சொல்லி முடிக்கும்போது ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். ஆதி கவியின் அந்த வாக்கை எடுத்துக் கொண்டுதான் மகாகவி காளிதாசரும் ‘குமார ஸம்பவம்’ என்றே தலைப்புக் கொடுத்து மகாகாவ்யம் எழுதினார்.

அந்தச் சம்பவத்திலே அதாவது ஜனனத்திலே அப்படி என்ன விசேஷம்?

மற்றவர்கள் பிறந்து, வளர்ந்து, கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்ற அப்புறம் பதவிக்கு வருவார்கள். ஆனால் மகா பெரிய பதவி, தேவர்களுடைய சேனைகளுக்கெல்லாம் அதிபதியாக இருக்கும் பதவி, இந்தக் குமாரர் சம்பவிக்க வேண்டுமென்று இவருக்காகவே காத்துக்கொண்டிருந்தது.

ஜன்மிக்கிறபோதே தேவர்களின் சேனாதிபதி. அசுரர்களிடம் அடி உதை பட்டுச் சொல்ல முடியாத கஷ்டத்திலிருந்த தேவர்கள் இவர் சம்பவித்ததால்தான் தங்களுக்கு விடிவு, விமோசனம் என்று காத்துக்கொண்டு, எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் ஏற்பட்டது அவருடைய ‘ஸம்பவம்’, அதாவது தோற்றம்.

சிவனுக்கு சமானமான ஒருத்தர்தான் தங்களை வதைக்க முடியும் என்று சூரபத்மாசுரன், தாரகாசுரன் ஆகியவர்கள் அந்த சிவனிடமே வரம் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். சிவனுக்கு சமானம் வேறே யார்? அவரேதான் அவருக்கு சமம். வரம் கொடுத்த அவரே வரம் வாங்கிக்கொண்டவர்களை வதம் பண்ணுவது நியாயமாகாது. அதனால்தான் இப்படி சாமர்த்தியமாக வரம் கேட்டு வாங்கிக்கொண்டு, அப்புறம் சத்ரு பயம் என்பதே இல்லாமல் அந்த அசுரர்கள் தேவர்களை இம்சித்துவந்தார்கள்.

ஆலோசித்துப் பார்த்த பிறகு இதற்கு தேவர்கள் வழி கண்டு பிடித்தார்கள். ‘ஆத்மாவை புத்ர நாமாஸி’ என்ற ச்ருதி வாக்கியப்படி ஒருத்தனுக்கு சமதையாக இருப்பது அவனுடைய புத்ரன். இவன் வீர்யத்திலே அவன் உண்டாவதால் இரண்டு பேரும் ஒன்று என்கிறது சாஸ்திரம்.

ஆகையால் தங்களையெல்லாம் அசுரர்களிடமிருந்து ரட்சிப்பதற்காக தங்களுடைய நாயகனாக, சேனா நாயகனாகப் பரமேச்வரன் ஒரு புத்ரனை உண்டு பண்ணித் தந்துவிட்டால் வழி பிறந்துவிடும், விமோசனம் கிடைத்துவிடும் என்று தேவர்கள் முடிவு பண்ணி, அதற்காகத் தபசிருந்தார்கள். சுவாமியும் தக்ஷிணாமூர்த்தியாகத் தபசிருந்த சமயம் அது. அவருக்குப் பணிவிடை செய்ய வந்த அம்பாள் பார்வதியும் தபசிருந்தாள். இப்படி ஒரே தபோமயமான புண்ய background -ல் குமார ஸம்பவம் ஏற்பட்டது. அதுதான் அதன் பெருமை.

குழந்தையாகப் பிறந்தோமே என்பதற்காக ஆறு நாள், ஆறே நாள்தான், குமாரசுவாமி பால லீலைகள் பண்ணினார். அவருக்கு எல்லாம் ஆறு. முகம் ஆறு. அவர் மந்திரத்தில் அக்ஷரம் ஆறு. அவர் பிறந்தது ஆறாம் திதியான ஷஷ்டி. அவருக்குப் பால் கொடுத்தது கிருத்திகா தேவிகள் என்று ஆறு பேர். வேடிக்கையாகச் சொல்வதுண்டு, அவர் உத்பவித்த கங்கையும் ‘ஆறு’ என்று. ‘குமாரர்’ என்றே குழந்தை பேர் வைத்துக்கொண்டிருந்தாலும் அவர் குழந்தை விளையாட்டு ஆறே நாள்தான் செய்தார். ஆறு நாளிலேயே அபரிமித லீலைகள் பண்ணினார். அப்புறம், உடனேயே, தேவ சேனாதிபத்யம் தாங்கி, சூராதி அசுரர்களை சம்காரம் பண்ணி தேவர்களையும், சர்வ லோகத்தையுமே ரக்ஷித்துவிட்டார்.

மனு, கினு போட்டு ‘அப்பாயின்ட்மென்ட்’ என்றில்லாமல் சகல தேவ சமூகத்திற்கும் ரக்ஷகனாக, ‘கமான்டர்-இன்-சீஃப்’ஆகப் பெரிய்ய்ய்ய அப்பாயின்ட்மென்ட்டோடேயே அவர் பிறந்ததுதான் குமார சம்பவத்தின் விசேஷம்.

“சரி, ஸ்வாமிகளே, இதிலே விக்நேச்வரருக்கு என்ன ‘பார்ட்?” என்றால், சிவனுக்கு சமானமானவர் சிவசுதானே என்றால், விக்நேச்வரர் சிவசுதர்தானே?அப்படியிருக்க, குமாரஸ்வாமி உண்டாகணுமென்று தேவர்கள் தபஸ் பண்ணினார்கள் என்றால் அப்போது விக்நேச்வரர் தோன்றியிருக்கவில்லையா? சுப்ரமண்யருக்கு அப்புறந்தான் அவர் தோன்றினாரா என்றால், இல்லை. இதை ‘அன்டர்லைன்’பண்ணிக் காட்டத்தான் ‘ஸ்கந்த பூர்வஜர்’ என்று அவருக்குப் பேர் சொல்லி இருக்கிறது.

‘சரி, அவர் அப்போதே இருந்தாரென்றால், அவரிருக்கும்போது இன்னொரு சிவசுதருக்காக தேவர்கள் தபஸ் செய்வானேன்? சுதராயிருந்தும் அவர் அப்பாவுக்கு சமானமாயில்லாதவர் என்று அர்த்தமா?’

அப்படியில்லை. அவர் அப்பாவுக்கு சமதை யானவர்தான். த்ரிபுர சம்ஹாரத்தின்போது அப்பாவும் தம்மைப் பூஜை பண்ணின பிறகுதான் காரியசித்தி பெற முடியும் என்று காட்டியிருக்கிறாரே.

பின்னே ஏன் இன்னொரு சிவசுதர் சம்பவிக்க வேண்டுமென்று தேவர்கள் நினைத்தார்கள்? சூரபத்மா கேட்டிருந்த வரத்தின் ஒரு நிபந்தனைதான் காரணம். தாங்கள் வரம் கேட்கிற காலத்தில் இருக்கிற எவருமே தங்களை வதம் பண்ண முடியாதபடிதான் அசுரர்கள் சாமர்த்தியமாக நிபந்தனை போடுவார்கள். அப்படித்தான் இவனும் பண்ணினான். தன்னைக் கொல்லக் கூடிய சிவஸத்ருசன் சிவனுக்கொப்பானவன், அம்பாள் சம்பந்தமில்லாமலே பிறந்தவனாயிருக்கணும் என்று அவன் கண்டிஷன் போட்டிருந்தான். சர்வ சக்தரான பிள்ளையார் தன்னை வதம் பண்ண முடியாதபடி debar பண்ணிவிட வேண்டுமென்றே இப்படி சாமர்த்தியமாகக் கேட்டிருந்தான்.

அம்பாள் சம்பந்தமில்லாமல் தன்னுடைய நேத்ரங்களிலிருந்து வெளியேவிட்ட அக்னிப் பொறிகளிலிருந்தே குமாரஸ்வாமியை உண்டு பண்ணினார். சுப்ரமண்யம் என்ற திவ்யமூர்த்தி கிடைத்தது.

பிள்ளையாருக்குக் குமார ஸம்பவத்தில் நேராகப் பங்கு இல்லாவிட்டாலும், இவர் அசுர சம்ஹாரம் செய்யவில்லை என்பதால்தான் அது ஏற்படவே செய்தது என்பதால் ‘நெகடிவ்’ சம்பந்தமிருக்கிறது. வலுவான நெகடிவ் சம்பந்தம்.

Source……..www.tamil.thehindu.com
natarajan

ஜனவரி 8 1994….பெரியவா மஹா சமாதி அடைந்த நாள் …

1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்…

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.

நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.

‘பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…’

‘திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…’

‘இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…’

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?

‘பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?

பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’

‘நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’

‘பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே…’

‘பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே…’

‘தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே..’

இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

‘எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?’ என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!

அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் – மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, ‘ஏமாந்து போயிட்டோம்…இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா…தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்…எதிர்பார்க்காம சேதி வந்தது.’என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, ‘ஒ, வந்திருக்கேளா?’ என்று கேட்பது. ‘உங்களுக்கு எப்போ தெரியும்?’ என்று பரிவுடன் விசாரிப்பது…’பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?’என்று பார்வையிடுவது… பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள்.

எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது.

வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே

Read more: http://periva.proboards.com/thread/10890/06-01-2016/#ixzz3wZpAMVSV

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

 

“Periva’s Miracles- Always race with the time-Living example “

Periva’s Miracles- Always race with the time-Living example 

I wish to inform to the members of Periva forum, devotees of Maha Periva and readers of my post that my son, who is at Australia with his family, has reached Chennai after floods on 10th of this month. (December 2015). This is his annual visit to Chennai to take care of us every year.

After a couple of days, my only son Mr.Bharath and his wife Sow. Lakshmi wanted to go out for lunch to some good hotel along with me and my wife. I should make special mention about my small family members and their unmatched character and attitude in a short statement.

 My only son Mr.Bharath, who Exemplify the relation-ship between parents and children and we are fortunate enough to have a son like Bharath.

 My only daughter in law Sow. Lakshmi not only Lakshmi by name but Goddess Lakshmi in real sense to our sweet home.

 We are also blessed with a granddaughter by name Kriti who equals all aishwaryam to our sweet home.

Thanks to Periva’s Grace. 

We all started, on 13th December 2015 (Sunday) after noon at 12.00 Noon and reached a well reputed and posh star hotel. We all had nice time and very good lunch. The occasion was like a get together of our family after two years. All possible selfee were taken and we could reach home at 4.00 P.M. As everyone was tired, we all retired for sleep at 9.00 P.M.

Next day morning, my son got up from sleep and he was not comfortable. He was complaining of nausea and vomiting along with stomach pain. The excruciating pain was escalating every second and he said that that the pain was unbearable and he did not feel like having his Tiffin.

The pain was too much at 8.45 A.M. Myself and my wife were mentally disturbed and we did not know what to do. I am also a paralytic stoke patient and could not go out to reach any doctor. I immediately went to Maha Periva and prayed for my son’s sufferings. I prayed and took some “Vibhuti” from Maha Periva and put some Vibhuthi in my son’s mouth and applied little on his forehead also.

He slept for 10 minitues and exactly at 9.00 A.M. he came to kitchen and asked me to prepare doshas for him. I enquired about his stomach pain and he said that he is relieved of all sufferings including stomach pain. Absolutely, no traces of pain or any sufferings from 9.00 A.M, thanks to Maha Periva for HIS instant reply to my prayer.


I am sure that the experience of mine in my son’s case is a living example for the devotees of Maha Periva. Our faith on Periva never let us down in problems and crisis. Still HE is living among us and take care of devotees at all times.

What a way Maha Periva gave relief to my son. The treatment of Maha Periva is always very much clinical in nature. Even medicines may take some time to give relief or cure a disorder But Maha Periva’s blessings out beat even time.

Periva’s blessings are always  
Racing with the time, 
In serving the devotees needs. 

Read more: http://periva.proboards.com/thread/10884/periva-miracles-race-living-example#ixzz3wZkSJ99X

Source..

Gayathri Rajagopal in http://www.periva.proboards.com

Natarajan

 

” மஹா விஷ்ணுவும் , கொசுவும் ஒண்ணு …..” !!!

10482143_599228513527816_46027082804070919_n.jpg

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்,” மகா விஷ்ணுவும்

கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?” என்றார் பெரியவா.

வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

“விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு,கொசுவும்

சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு.

கெட்டவர்கள் விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.

கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர்

விஷ்ணு. [ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு [ச்ருதி=காது]!”

இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு

அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.

“அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு

நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!” என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம்.

இப்படி எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும் அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.

ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும் கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது.உடனே பெரியவா”சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?”என்றார்: “நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே…அந்த சாக்கைச் சொன்னேன்!” என்று தமாஷ் பண்ணினாராம்

Read more: http://periva.proboards.com/thread/10869/#ixzz3wPgbz2Ii

Source ……..www.perivaproboards.com

Natarajan

 

“தாளமிடும் யானை ….கோலமிடும் மாடு ….’ !!!

தாளமிடும் யானை! கோலமிடும் மாடு!

பார்க்க அழைக்கிறார் காஞ்சிப்பெரியவர்

கஜகர்ணம்-கோகர்ணம்-விளக்கம்

10482143_599228513527816_46027082804070919_n.jpg
(உண்மையான அர்த்தம்)

நவம்பர் 24,2015,.தினமலர்

ஒரு செயலைச் செய்வது மிகவும் கடினம் என்றால், “கஜகர்ணம் போட்டாலும் நடக்காது’, “கோகர்ணம் போட்டாலும் நடக்காது’ என்று சொல்வார்கள். “யானை மாதிரி குட்டிக் கர்ணம் போட்டாலும் நடக்காது’ என்ற கருத்தில் இதைச் சொல்வதாக பலர் நினைக்கிறார்கள்.

ஆனால், காஞ்சிப் பெரியவர் அதன் உண்மையான அர்த்தம் சொல்கிறார் கேளுங்கள்.

விலங்குகளில் யானை மட்டுமே காதை விசிறி மாதிரி இயல்பாகவே ஆட்டிக் கொண்டிருக்கும் ஆற்றல் படைத்தது. இதற்கு “கஜ தாலம்’ என்று பெயர். “தாலம்’ என்பதற்கு “பனையோலை விசிறி’ என்று பொருள். விசிறி போன்ற காதை, ஒரே சீராக தாளம் போடும் விதத்தில் அசைப்பது அதன் இயல்பு.

மனிதர்களால் அப்படி காதை ஆட்ட முடியுமா! அது மிகவும் சிரமமான வித்தை. அதையே “கஜ கர்ணம் போட்டாலும் நடக்காது’ என்பார்கள். அதுவே நாளடைவில், “கஜ கரணம்’ என்ற பொருளில்” யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காதாக்கும் ‘என்று அர்த்தம் உண்டாகி விட்டது.

அதே போல, கோகர்ணம்’ என்பதற்கும் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள். “கோ’ என்றால் “பசு’. இங்கு “கர்ணம்’ என்பது பசுவின் காதைக் குறிப்பதில்லை. இங்கு வினைச் சொல்லாக வரும் “கர்ணம்’ என்ற சொல்லிற்கு “குத்துவது, துளைப்பது’ என்பது பொருள்.

மாட்டின் உடம்பில் விரல் அல்லது தார்க்குச்சி மூலம் குத்தினால், கோலமிட்டது போல அலை, அலையாக உடம்பெங்கும் சலனம் பரவும். இதை மாதிரி மனிதர்களால் செய்து காட்ட முடியாது. இதுவும் ஒரு அபூர்வ வித்தையே.

இதனால் தான் நடத்த முடியாத செயல்களை, கஜகர்ணம், கோகர்ணம் என்ற வார்த்தைகளால் குறித்தனர்.

மகாபெரியவர் தந்துள்ள அற்புதமான விளக்கத்தைப் பார்த்தீர்களா!

Read more: http://periva.proboards.com/thread/10881/#ixzz3wPewAOpV

Source……..www.periva.proboards.com

Natarajan

” வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் …”

நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்…
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……”
‘ஸரஸ்வதி’ அழைத்தாள்!
“நா…..சொல்றதை திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டி தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!…”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
வாய்க்கு கல்கண்டும், ஞானக்கல்கண்டு மலையிலிருந்து உண்மையான நல்லறிவுக்கு கல்கண்டும், குழந்தைக்கு கிடைத்தது!
அப்போது அங்கே சில தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தது…..
“மூஷிக வாஹன மோதகஹஸ்தா…..” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத்தான்! ஆனால், அத்தனை மொழிகளுக்கும் ஆதார ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…”
உண்மைதான்! இன்றைய கல்வியறிவு “வாக்குண்டாம்……” ஸ்லோகத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த புது வர்ஷத்தில், நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும்.
Source…input from a friend of mine
Natarajan

” யார் மூட்டை தூக்கி …” ?

246400_479182102136836_1433845875_n.jpg
(முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக் கள் செதோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன.

அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக் கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந் தினால் போகிறது. )

கல்கியில் வந்த அருள் வாக்கு.

உங்கள் வீடு ஒரு குடும்பம். இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள். உங்கள் குடும்பத்துக்கு நடுவில் பள்ளிக்கூடம் என்கிற ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களுடன் படிக்கிறவர்களெல்லாம் உங்கள் குடும்பத்தில் உடன் வாழ்கிற சகோதரர்கள் மாதிரி. இந்தப் பள்ளிக் குடும்பத்தின் தலைவர் உபாத்தியாயர் ‘வாத்தியார்’ என்கிற ஆசிரியர். அவரையும் ஓர் அப்பா அம்மாவாக நீங்கள் மதித்து வணங்க வேண்டும்.

பள்ளிக் காலத்தில் உங்கள் கடமை படிப்பது ஒன்றுதான். உங்களுடைய கவனம் முழுவதும் படிப்பதிலேயே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களிலெல்லாம் நீங்கள் ஈடுபட இது சமயம் அல்ல. வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்கூட அவற்றையும் நீங்கள் படிப்பு முடிந்த பின்தான் கவனித்து ஈடுபடலாம். ‘இப்போதே எனக்கு அவற்றில் ஈடுபடச் சிறிது சக்தியும், புத்தியும் இருக்கிறதே; எனவே உலகத்துக்கு நல்லது செய்கிற அந்தச் சமாசாரங்களில் இப்போதே பிரவேசிப்பேன்’ என்று போகக்கூடாது.

சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.

ஏற்கெனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செகிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக் கள் செதோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக் கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந் தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும்.

இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப் போகும். தா, தந்தை, ஆசிரியர், தெவம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

Read more: http://periva.proboards.com/thread/10842/#ixzz3vxxbQliu

source……www.periva.proboards.com

Natarajan