3-திருப்பதி… திருப்பம்… திருப்தி…

சின்ன குழந்தைகளிடம் சென்று, ‘திருமலை திருப்பதியில் என்ன விசேஷம் குழந்தே?’ என்று ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள்…

பெரும்பாலான குழந்தைகள், ‘வேங்கடாசலபதி சாமீ’ என்று சொல்லாது. விழிகளைச் சற்று பெரிதாக்கி, நாக்கையும் சப்புக் கொட்டிக் கொண்டு ‘லட்ட்டு’ என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும். அந்த அளவுக்கு திருப்பதியும் லட்டும் இணைந்தே இருப்பவை.

திருப்பதிக்குப் போய்விட்டு வந்தால், லட்டு இல்லாமல் எவரும் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள். ஒரிஜினல் லட்டு கிடைக்கவில்லை என்றாலும், அதிகக் காசு கொடுத்து டூப்ளிகேட் லட்டையாவது வாங்கி வருவார்கள்.

ஒரிஜினல் லட்டுக்கு அதிக தேவை இருக்கும்போது, டூப்ளிகேட் லட்டுகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கின்றன என்பது சோகம். இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானமும் யோசித்து வருகிறது.

 

முதலில் ஒரு சின்ன பொதுத் தகவல்: லட்டு என்பது தமிழ் வார்த்தை இல்லை. சம்ஸ்க்ருத வார்த்தையில் இருந்து மருவி வந்தது. ‘லட்டுகா’ என்றால், சின்ன பந்து என்று அர்த்தம். லட்டும் பந்து சைஸில் இருப்பதால், அதற்கு அப்படி ஒரு பெயரே நிலைத்துவிட்டது போலும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா பாஷையிலும் ‘லட்டு’ தான்!

திருமலை திருப்பதியில், தினம் தோறும் லட்சக்கணக்கில் தயாராகும் லட்டு, சாப்பிடுகிற ஒரு உணவுப் பண்டம் மட்டுமல்ல… அதையும் தாண்டி – ஸ்ரீவேங்கடாசலபதியின் பரிபூரண பிரசாதம்! பலராலும் விரும்பப்படும் பிரசாதம். அதில் இருப்பவை சர்க்கரையும், முந்திரியும், திராட்சையும் மட்டுமல்ல; பெருமாளின் அனுக்ரஹமும்கூட.

நீங்கள் ஆசைப்பட்டால் மட்டும் அது, உங்கள் கைக்கு வந்து விடாது. அந்தப் பிரசாதம் உங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைத்தால், நீங்கள் திருவண்ணாமலையில் இருந்தாலும், அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். அதுதான் பெருமாளின் மகிமை.

ஏதோ, ஆயிரக்கணக்கான வருடங்களாக திருப்பதியில் லட்டு தயார் செய்து பக்தர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்றுதானே நமக்கெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அதுதான் இல்லை. லட்டு என்கிற இந்த இனிப்பு பிரசாதம் அறிமுகமாகி சுமார் முந்நூறு வருடங்கள் தான் ஆகி இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

லட்டு பிரசாதம் எப்போதில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லும் தகவலோ, கல்வெட்டுக் குறிப்போ கிடையாது. என்றாலும், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது தகவல்.

பெருமாள் சேவைக்குப் பணம் கட்டு பவர்களுக்கும், பக்தர்களுக்கு இலவச விநியோகம் செய்வதற்கும், ஒருவருக்கு இவ்வளவு லட்டு என்று விலைக்குத் தருவதற்கும் திருமலையில் தினமும் லட்டுகள் தயாராகின்றன. சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், டோலோத்ஸவம், வசந்தோத்ஸவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை – இப்படிப் பல சேவைகளில் பணம் கட்டிக் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு சிறு லட்டுகள் பிரசாதமாக தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன.

திருமலை – திருப்பதியில் இன்று தினம்தோறும் மாபெரும் விசேஷமாகவும், தவிர ஒவ்வொரு ஊரிலும், வெளிநாடுகளிலும் விமரிசையாக நடந்து வருகின்ற ஸ்ரீநிவாசர் திருக்கல்யாண உத்ஸவம், கி.பி. 1546-ஆம் ஆண்டில் தாளப்பாக்கம் திருமலை ஐயங்கார் என்பவரால் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது என்று ஒரு கல்வெட்டுத் தகவல் உண்டு. அதாவது – அது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம். பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் இந்தத் திருக்கல்யாண உத்ஸவம் வெகு விமரிசையாக நடக்கும். ஆனால், இந்த உத்ஸவத்தில் லட்டு என்கிற பிரசாதம் விநியோகிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. அப்போது திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டுத் தகவல் சொல்கிறது.

திருப்பதி திருக்கோயிலில் 17ஆம் நூற்றாண்டிலேயே லட்டு அறிமுகமாகிவிட்டாலும், பிரசாதமாக வந்தது 20ஆம் நூற்றாண்டில்தான் என்பது ஆணித்தரமான கருத்து. இன்று பிரசாதமாக நாம் விரும்பிச் சாப்பிடுகிற லட்டுவுக்குக் காரணகர்த்தா கல்யாணம் ஐயங்கார் என்பவர்.

1932ஆம் ஆண்டில் மதராஸ் அரசாங்கத்தினரால் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தது. என்றாலும், மடப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையும் ‘மிராசி’கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்தன. ஐந்து மிராசிகளுக்குப் பிரதிநிதியாக ஒருவர் உண்டு. அந்தப் பிரதிநிதிதான் மேல் பத்தியில் நாம் சொன்ன கல்யாணம் ஐயங்கார். ஒட்டுமொத்த மடப்பள்ளி நிர்வாகத்தையும் இவரே பொறுப்பேற்று நடத்திய தகவல் இன்றும் திருப்பதி தேவஸ்தான குறிப்பேடுகளில் இருக்கிறது.

அப்போது ஒருநாள் திருப்பதி திருக்கல்யாண உத்ஸவத்துக்கு ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) என்கிற ஒரு பிரார்த்தனையை தெலுங்கு பக்தர் ஒருவர் செய்தார். அதற்குரிய பணத்தையும் தேவஸ்தானத்தில் கட்டினார். அதன்படி பல்லாயிரக்கணக்கான லட்டுகளைத் தயாரித்து திருக்கல்யாண வைபவத்தை ‘மலை’க்க வைக்கும்படி ஜமாய்த்துவிட்டார் கல்யாணம் ஐயங்கார். பக்தருக்கும் இதில் ரொம்ப திருப்தி.

அன்றைய தினம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதமாகத் தங்களுக்குக் கிடைத்த லட்டைப் பல பக்தர்களும் வீட்டுக்கு எடுத்துச் சென்று அக்கம்பக்கத்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.

மூதறிஞர் சக்ரவர்த்தி ராஜாஜி அவர்களே, கல்யாணம் ஐயங்கார் தயார் செய்த லட்டுவின் பெருமையை ஏகத்துக்கும் பாராட்டி இருக்கிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்போது மிராசி நடைமுறை இல்லை. அப்போது என்ன ஓர் ஒப்பந்தம் என்றால், தேவஸ்தானத்தில் 51 லட்டு தயாரித்தால், அதில் இருந்து 11 லட்டை மிராசி குடும்பத்தினருக்குக் கொடுத்து விட வேண்டுமாம். இதில் விருப்பம் இல்லாத திருப்பதி தேவஸ்தானம், சுப்ரீம் கோர்ட் வரை போய் மிராசி நடைமுறையையே ஒழித்துவிட்டது. இப்போது லட்டு தயார் செய்யும் பணியை தேவஸ்தானமே மேற்பார்வை இடுகிறது.

திருப்பதி பெருமாளுக்கு அவ்வப்போது திருக்கல்யாண உத்ஸவம் ஆலயத்திலேயே கோலாகலமாக நடந்து வந்தது. இது 1940ஆம் ஆண்டில் இருந்து நித்ய கல்யாண வைபவம் ஆயிற்று. இந்தக் கல்யாண வைபவத்தில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் எல்லோருக்கும் இனிப்பாக லட்டு வழங்கப்பட்டது.

1943ஆம் ஆண்டிலிருந்து, பெருமாள் கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. அதே சமயம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளாத பலரையும் இந்த விநியோக முறை ஏங்க வைத்தது. ‘கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொண்டால் மட்டும்தான் லட்டு பிரசாதமா?’ என்று தேவஸ்தான அதிகாரிகளிடம் குறைப்பட்டுக் கொண்டனர்.

அதன்பின் தேவஸ்தான அதிகாரிகள் அமர்ந்து பேசி, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆலய தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்குவது என்று தீர்மானித்துச் செயல்பட ஆரம்பித்தனர். பிறகு, அதுவே நிரந்தரமாகிவிட்டது.

லட்டு இன்னும் தீரவில்லை. சுவையான தகவல்கள் அடுத்த பதிவிலும் காத்திருக்கின்றன.

Source…..www.balhanuman.wordpress.com

நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்) and P Swaminathan

Natarajan

1-“திருப்பதி… திருப்பம்… திருப்தி…”

’திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா!’ என்றார் கண்ணதாசன்.

ஆந்திராவின் தென்கிழக்குப் பகுதியில், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பதி. ஒன்பது ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மூலவர் ஸ்ரீவேங்கடம் உடையான் என்று அழைக்கப்பட்டாலும் – ஸ்ரீவேங்கடவன், ஸ்ரீவேங்கடாசலபதி, ஸ்ரீபாலாஜி, ஸ்ரீசீனிவாசப் பெருமாள், ஸ்ரீஏழுமலையான் என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.

உலகிலேயே மாபெரும் பணக்காரக் கடவுள் யார் என்று கேட்டால், சிறு குழந்தை கூட ‘திருப்பதி வேங்கடாசலபதி’ என்று யோசிக்காமல் சொல்லிவிடும். அந்த அளவுக்குப் பிரசித்தமானவர்.

விசேஷ காலங்களில் தினப்படி காணிக்கையாக இவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் குவிகிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

இன்றைக்குத்தான் என்றில்லை. பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் ‘வசூல்ராஜா’வாகத்தான் விளங்கி வந்திருக்கிறார். இவரது சந்நிதிக்குச் செல்லும் எந்த ஒரு பக்தரும் பணத்தைக் கொட்டிவிட்டுத்தான் தரிசனம் செய்து திரும்புகிறார்.

திருப்பதி கோயிலுக்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம். கிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியருக்கும் எதற்கெடுத்தாலும் போட்டிதான். கண்களைப் பறிக்கும் வேலைப்பாடுகள் அமைந்த ஒரு தங்கப் பேலாவை கிருஷ்ண தேவராயரின் ஒரு மனைவி திருப்பதி கோயிலுக்கு தானமாகக் கொடுத்தாள் என்றால், இன்னொரு மனைவி, அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை ஓரிரு வருட இடைவெளியில், திருப்பதி பெருமாளுக்கு தானம் கொடுத்திருக்கிறாள். இந்த விவரம், கன்னட மொழியில் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

எண்ணற்ற குறுநில மன்னர்கள், ராஜாக்கள், பிரபுக்கள் போன்றோர் நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள் என்று சகட்டுமேனிக்கு வாரி வழங்கி உள்ளனர் திருப்பதி பெருமாளுக்கு. தற்போது திருப்பதி தேவஸ்தானம் பாதுகாத்து வரும் நகைகளின் மதிப்பு மட்டும், பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பது ஒரு கணக்கு.

இன்றைக்குக் கோடீஸ்வரர் என்றாலும், ஸ்ரீபத்மாவதித் தாயாரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, குபேரனிடம் கடன் வாங்கினார் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்கிறது புராணம். ‘கலியுகம் முழுதும் வட்டி கட்டிவிட்டு, கலியுகம் நிறைவடையும்போது அசலைத் தருகிறேன்’ என்ற நிபந்தனையில், கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டாராம். மாலவன் வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்துவதற்காகத்தான், அவரது அருளுக்குப் பாத்திரமான அடியவர்கள், இன்று திருமலைக்குப் போய்க் கொட்டோ கொட்டென்று பணத்தையும் தங்கத்தையும் கொட்டி வருகிறார்கள் போலிருக்கிறது.

இறைவன் தானாகவே விரும்பி வந்து எழுந்தருளிய தலங்கள் சிறப்பு கொண்டதாகச் சொல்லப்படுகின்றன. பரந்தாமனாகிய திருமால், அப்படித் தானே விரும்பி எழுந்தருளிய தலங்களாக திருவேங்கடம், திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், நாங்குநேரி, புஷ்கரம், பத்ரி, சாளக்கிராமம் போன்றவை சொல்லப்படுகின்றன. இவற்றுள் – திருவேங்கடம் என்கிற திருமலை திருப்பதி விசேஷமானது.

வேங்கடாசலபதி ஏழுமலைகளுக்கு உரியவர். அதனாலேயே அவரை ஏழுமலையான் என்று அழைக்கிறோம். சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், விருஷபாத்திரி, அஞ்சனாத்திரி, நாராயணகிரி, வேங்கடாசலம் ஆகியவையே அந்த ஏழுமலைகள்.

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்ட இடம் திருமலை என்றும், அவருடைய தேவியான ஸ்ரீபத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள அடிவாரம் திருப்பதி என்றும் வழங்கப்பட்டாலும், பெருமாள் குடிகொண்ட இடம் மேல் திருப்பதி எனவும், தாயார் குடிகொண்ட இடம் கீழ் திருப்பதி என அழைக்கப்படுவதே வழக்கமாக இருக்கிறது.

வேங்கடவனின் மாபெரும் பக்தரான தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்திஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்.

சிறந்த பக்தனான மன்னன் தொண்டைமான், தன்னை அண்டிய ஒரு குடும்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டான். இது அவனது குற்றம் இல்லை என்றாலும், அந்தப் பொறுப்புக்கு உரியவன் ஆகிவிட்டான். அவன் திருவேங்கடமுடையானிடம் கதறியபோது, பெருமாள் பிரத்யட்சமாகத் தோன்றினார். அவனுடைய குறையைத் தீர்த்தார். பிறகு, கலியுகத்தில் வசித்து வரும் மனிதர்கள், நீ செய்தது போலவே அறிந்தும் அறியாமலும் கொடிய பாவங்களைச் செய்து வருகிறார்கள். அதன்பின் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டுக் கதறுகின்றனர். ஒரு வேளை, அவர்களை நான் காப்பாற்றவில்லை என்றால், என்னைக் குறை கூறுகின்றனர். பக்தர்கள் படும் துன்பத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, கலியுகம் பூர்த்தியாகும் வரையில், நான் விக்கிரக உருவில் இருப்பேன். உண்மை பக்தர்களிடம் பேசுவேன்” என்று சொல்லி, ஸ்ரீபத்மாவதி தாயாரை, தன் மார்பில் இருத்திக் கொண்டு சிலாரூபமானார்.

ஆனந்த விமானத்தின் கீழே, சுயம்புவாக எழுந்தருளிய இந்த மூலவர், சுமார் பத்தடி உயரம். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய சேவை.

 

தன் திருச்சன்னிதிக்கு முன்னால் நின்று ‘கோவிந்தா… கோவிந்தா’ என்று, இருகரம் கூப்பித் தொழும் பக்தர்களின் குறைகளைப் போக்கி, அவர்களின் வாழ்வில் என்றென்றும் ஆனந்தம் நிலவ ஆசிர்வதிக்கிறார்.

‘கோவிந்தா’ என்கிற நாமம், திருமலை பகவானுக்கு மிகவும் உகப்பானது. அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே, அவர் உளம் கனிகிறார்; மனம் நெகிழ்கிறார்; ஓடோடி வந்து உதவுகிறார்.

‘அச்சுதா’, ‘அனந்தா’, ‘கோவிந்தா’ என்கிற பெயர்களை உச்சரிப்பதால், எல்லா வியாதிகளும் நீங்கிவிடும். இது உண்மை’ என்று இருமுறை சத்தியமிட்டுச் சொல்கிறார் வியாச முனிவர்.

‘உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், நடக்கும்போதும், தடுக்கும் போதும், தும்மினாலும், இருமினாலும், ‘கோவிந்தா’ என்று கூற வேண்டும். எந்த உணவைச் சாப்பிட்டாலும், ‘கோவிந்தா’ என்று கூறி, சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாம் எதிர்பாராத நன்மை உண்டாகும்’ என்று க்ஷத்ரபந்து என்ற மன்னனுக்கு, மாமுனிவர் ஒருவர் போதித்ததாக விஷ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.

நம்முடைய பாவங்கள் அகல்வதற்கு சுலபமான ஒரு வழியைக் காட்டித் தருகிறார் நம்மாழ்வார். என்ன வழி? திருமலைக்குப் போய், கூட்டத்தில் இடிபட்டு, ஸ்ரீநிவாசனை சேவிக்கவேண்டியதில்லையாம். இருந்த இடத்தில் இருந்தபடியே, ‘திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற பெருமானுக்கு நம:’ என்று சொல்லிவிட்டால் போதுமாம். அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாவங்களும், இனிமேல் வரக்கூடிய பாவங்களும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமாம்.

எனவே, திருப்பதிக்குச் செல்ல முடியவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள், இருந்த இடத்தில் இருந்தபடியே அந்தப் பெருமாளை வணங்குங்கள்!

சரி; செல்வச் சீமானாக விளங்கும் ஏழுமலையானுக்கு பிரசித்தியான தினசரி நைவேத்தியம் என்ன தெரியுமா? ஒரு புத்தம்புதிய மண்சட்டியில் (அதுவும் இரண்டாக உடைந்த சட்டியில்) சாதாரண தயிர்சாதம்!

திருமலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்த மடைப்பள்ளியில், லட்டு தவிர பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி… இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தினம்தோறும் தயாராகின்றன.

தவிர, தினமும் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. ஒருநாள் லட்டு தயாரிக்க, 5 ஆயிரம் கிலோ கடலைப் பருப்பு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, 150 கிலோ ஏலக்காய் போன்றவை தேவைப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தற்போது தயாராகும் ஒரு லட்டின் எடை 800 கிராம்.

பணக்காரக் கடவுள் என்பதற்கேற்ப, பெருமாளின் வழிபாடு சம்பந்தப்பட்ட சில தகவல்கள், பிரமிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆம்ஸ்டர்டாமிலிருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், லவங்கம், குங்குமம், புனுகு போன்ற வாசனைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

பெருமாளின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ; நேபாளத்தில் இருந்து கஸ்தூரி; பாரீஸில் இருந்து வாசனை திரவியங்கள் போன்றவை வரவழைக்கப்படுகின்றன. விமரிசையான ஒரு அபிஷேகத்துக்கு உண்டான செலவு மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்.

நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)  and P.Swaminathan 

 

Source…..www. balhanuman.wordpress.com

Natarajan

 

” காஞ்சி மஹிமை ….”

‘கச்சி மூதூர்’ என்று சங்க இலக்கியமான ‘பெரும் பாணாற்றுப்படை‘ முதலியவற்றிலேயே சொல்லப்படும் அந்தப் புராதனமான நகரம் மகாக்ஷேத்ரம் என்பதாக மட்டுமின்றி பெரிய வித்யா ராஜதானியாகவும் இருந்திருக்கிறது.

வடக்கே காசி மாதிரி தெற்கே காஞ்சி. “சான்றோர் உடைத்து” என்று சிறப்பிக்கப்படும் ‘தொண்டை நன்னாட்டின்‘ தலைநகரம் அதுதான். “கடிகா ஸ்தானம்” எனப்படும் சமஸ்கிருத யுனிவர்சிடி இருந்த நகரம் அது. அப்பர் சுவாமிகள் “கல்வியைக் கரையில்லாத காஞ்சி மாநகர்” என்கிறார். பல மத சித்தாந்திகளும் கூடியிருந்த இடம் அது என்று ‘மணிமேகலை‘யிலிருந்து தெரிகிறது.

பௌத்தம், ஜைனம், காபாலிகம் முதலான எல்லா மதங்களும் அங்கே பிற்காலத்தில் இருந்ததென்று மகேந்திர பல்லவனின் ‘மத்த விலாஸ ப்ரஹஸன‘ நாடகத்திலிருந்து தெரிகிறது. சரித்திரத்தில் சக்கரம் ஒரு முழு சுற்றுச் சுற்றிப் பழையபடியே மறுபடி நடக்கும்போது எந்த வட்டாரத்தில் எப்படியிருந்ததோ அப்படித்தான் திரும்பவும் நடக்கும்.

அதனால் ஆசார்யாள் காலத்திலும் அங்கே பல மதங்கள் இருந்திருக்க வேண்டும். இப்போதும் பௌத்த சிற்பங்கள் பல அங்கே அகப்படுகின்றன. காஞ்சி மண்டலத்துக்குள்ளேயே இருக்கும் திருப்பருத்திக்குன்றம் ஜைனகாஞ்சி என்கிற சமண தலமாகப் பேர் பெற்றிருக்கிறது.

க்ஷேத்ரம் என்று பார்க்கும்போது, ‘ரத்ன த்ரயம்‘ என்கிற ஈச்வரன், அம்பாள், பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் முக்கியமான தலமாயிருப்பது அது. எண்ணி முடியாத கோவில்கள் சகல தெய்வங்களுக்கும் அங்கே இருப்பதில் ஏகம்பம் பரமேச்வரனின் பஞ்சபூத தலங்களில் ப்ருத்வீ க்ஷேத்ரமாயிருக்கிறது.

அம்பாள் காமாக்ஷியின் காமகோஷ்டம் – ‘காமகோட்டம்‘ என்பது- அத்தனை அம்மன் சந்நிதிகளுக்கும் மூல சக்தி பீடமாயிருக்கிற பெருமாள் வரதராஜாவாக உள்ள விஷ்ணு காஞ்சியை – ‘அத்தியூர்‘ என்று வைஷ்ணவர்களின் திவ்ய தேசங்களில் சொல்வது. அதை மூன்று முக்கியமான க்ஷேத்ரங்களில் ஒன்றாகச் சொல்கிறார்கள். ரங்கமும், திருப்பதியும் மற்ற இரண்டு.

விஷ்ணு காஞ்சியைத் தற்போது சின்ன காஞ்சிபுரம் என்கிறோம். பெரிய காஞ்சிபுரம் என்பது சிவகாஞ்சி. கச்சி ஏகம்பமும் காமகோட்டமும் உள்ள இடம். ரத்ன த்ரயம் மட்டுமில்லாமல் ஷண்மத தெய்வங்களுக்குமே முக்கியமான க்ஷேத்ரம் காஞ்சி.

 

பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்திலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு.

கஞ்சி வரதர்

காஞ்சீபுரத்தில் வரதராஜா ‘பேரருளாளப் பெருமாள்‘ என்று விசேஷமாக, விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ரசித்தமாக இரு சொல்லலங்கார ஹாஸ்யத் துணுக்கு இருக்கிறது.

“கஞ்சி வரதப்பா!” என்று காஞ்சீபுர வரதராஜாவை நினைத்து, வியாதியில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருத்தர் வாய்விட்டு அரற்றினாராம்.

பக்கத்திலே ஒரு சாப்பாட்டு ராமன் இருந்தான். அவனுக்குக் கொஞ்ச நாளாக ஜ்வரம். டாக்டர், ‘சாதம் சாப்பிடக்கூடாது. கஞ்சி வேண்டுமானால் கொஞ்சம் குடிக்கலாம்‘ என்று கண்டிப்புப் பண்ணியிருந்தார். “கஞ்சி எப்போ வரும்? எப்போ வரும்?” என்று அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

அதனாலே, பக்கத்திலே இருந்தவர், “கஞ்சி வரதப்பா” என்று சொன்னதை, “கஞ்சி வருகிறது அப்பா” என்று அவர் சொல்லுகிறாரென்று நினைத்துவிட்டான். ஆள் யாரும் வரக்காணோமே என்பதால், “எங்கே வரதப்பா?” என்றானாம்.

பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்திலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு.

சுப்ரமண்யருக்கு குமரக் கோட்டம் என்று தனிக் கோயில் இருக்கிறது. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணம் எழுதி அரங்கேற்றியதே அங்கேதான்.

கச்சபேச்வரர் கோவிலில் சூரியன் சந்நிதியில் “மயூர சதகம்” என்று நூறு சுலோகம் கொண்ட சூரிய துதி கல்வெட்டில் பொறித்திருப்பதிலிருந்து அது ஒரு முக்கியமான சூரிய க்ஷேத்ரமாகத் தெரிகிறது.

 

இப்படி ஷண்மதங்களுக்கும் முக்கியம் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் இருக்கிறது. ஆசார்யாளுக்கு முந்தியே அப்படியிருந்து அவர் அதனாலேயே அங்கே வந்து தங்கியிருக்கலாம். அல்லது ஷண்மத ஸ்தாபனா சார்யாளாகிய அவர் வந்து தங்கியதாலேயே அது இப்படிப் பெருமை பெற்றிருக்கலாம்.

சப்த மோக்ஷபுரிகளில் தக்ஷிணத்தில் உள்ள ஒன்றே ஒன்று காஞ்சீபுரம்தான் என்பது அதன் தலையாய சிறப்பாகும். சமய முக்கியத்துவம், வித்யா ஸ்தான முக்கியத்துவம், ராஜரீக முக்கியத்துவம், வியாபார முக்கியத்துவம் எல்லாமே அந்த ஊருக்கு இருந்ததால்தான் “நகரேஷு காஞ்சி” என்று புகழப்பட்டிருக்கிறது.

– தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி

(ஸ்ரீ சங்கர சரிதம்)

Source….www.tamil.thehindu.com

Natarajan

“டெல்டா மார்ட்:”…. விவசாயிகளின் வாழ்வில் ஒரு சின்ன ஒளிக்கீற்று !!!

வால்ட் மார்ட்’க்கு எதிராக போராட்டங்களை நடத்திய காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், 1000 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான ‘டெல்டா மார்ட்’ என்ற நிறுவனத்தைதிறந்திருக்கிறார்கள்.

இயக்குநர்குழு, ஆலோசனைக்குழு, மையக்குழு ஆகிய மூன்று அடுக்கு நிர்வாக முறையை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வணிகக் காப்பகத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் செயல்படுகிறது.

வேளாண்மைத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துதல், மண்வளம் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாத்தல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை தருதல், விவசாயி உற்பத்தி செய்யும் பொருளை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கியிருக்கிறார்கள்.

 

“டெல்டா மார்ட்டை நாங்கள் உருவாக்கியதன் நோக்கம், விவசாயிகளிடையே உற்பத்தி செய்கின்ற பொருளை, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நாங்களே குறைந்த விலையில் நுகர்வோருக்கு கொடுக்க வேண்டுமென்பதே. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களையும் வெளிமார்க்கெட் விலையைவிட மிகக் குறைவாக கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘நம்மால் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு விவசாயிடமும் உருவாக்கவேண்டும் என்பதும்  எங்கள் டெல்டா மார்ட் துவக்கத்தின் முக்கிய நோக்கம்.

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்ற உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருளை விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயி இடைத் தரகர்களாலும், அரசுகளாலும் இன்னும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றான். அதை களைந்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திலும் நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.

விவசாயத்தை மட்டுமே செய்து வந்த விவசாயிகளுக்கு சந்தையை பற்றி தெரியாது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளை, இடைத்தரகர்கள் எப்படியெல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, உற்பத்தி செய்வதோடு சந்தைபடுத்துவதிலும் அவர்களை தேர்ந்தவர்களாக்குவதற்கு இந்த அமைப்பு வழிசெய்யும்.

விவசாயிகள் பிள்ளைகள் விவசாய தொழிலில் ஈடுபடுவதில்லை. காரணம் போதிய வருமானம் இல் லாதது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனத்தன்மை இல்லாததால், ஆர்வம் இல்லாமல் மாற்று வேலைக்கு செல்கிறார்கள். அவர்களையெல்லாம் விவசாயத்தின் பக்கம் திருப்பும் வகையில் இந்த நிறுவனம் விவசாயிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் பாடுபடும்” என்கிறார் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பாண்டியன்.

மற்றொரு செயல் இயக்குநர் பன்னீர்செல்வம் கூறுகையில், “120 விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களின் பொருட்களை மட்டுமல்ல மற்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் நாங்கள் கொள்முதல் செய்கிறோம். எங்களின் நோக்கம் இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்து, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

உழவர் சந்தை, மார்க்கெட்டுகளைவிட எங்கள் டெல்டா மார்க்கெட்டில் விலை குறைவாக கிடைக்கும். அதாவது  வாழைப்பழ தாரை ரூபாய் 250க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கும் வியாபாரிகள், அதை விற்பனை செய்யும்போது ஒரு பழம் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கிறார்கள்.

அதே வாழைப்பழ தாரை டெல்டா மார்க்கெட் விவசாயிடம் ரூ.400 க்கு வாங்கி 5 ரூபாய்க்குள் விற்கலாம். இதில் நுகர்வோருக்கும் லாபம். டெல்டா மார்ட்டுக்கும் லாபம். விவசாயிகளுக்கும் லாபம் தரும்.

அதுதான் எங்கள் டெல்டா மார்ட்டின் நோக்கம். இயற்கை விவசாயம் செய்த தேங்காய் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே தேங்காயை 20 ரூபாய்க்கு நாங் கள் தருகிறோம். சாதாரண தேங்காய் வெளிமார்க்கெட்டில் 15 ரூபாய் என் றால், எங்களிடம் 12 ரூபாய்க்கு கிடைக்கும்.

இதுமட்டுமில்லாமல் விவசாய இயந்திரங்களை நாங்களே கம்பெனிகளி டமிருந்து வாங்கி, அதை விவசாயிகளிடம் விற்பனை செய்யவும் முயற்சி எடுத்து வருகிறோம். ஒரு டிராக்டரை வாங்கி விற்பனை செய்தால் 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

 

இதிலிருந்து கிடைக்கின்ற லாபத்தை, ஆயிரம் உறுப்பினர்களுக்கும் அவர்கள் செலுத்தியிருக்கிற முதலீட்டுக்கு தக்கபடி  லாபத்தை பிரித்துக்கொடுப்போம். எங்களின் அடுத்த இலக்கு ஆயிரம் டெல்டா மார்ட்டை டெல்டா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்பதே” என முடித்தார்.

நலிந்து போன விவசாயத்தின் இருள்படர்ந்த நிலப்பரப்பில் ‘டெல்டா மார்ட்’ என்ற சின்ன ஒளிக்கீற்று தென்படுகிறது. ஆயிரம் விவசாயிகளின் கூட்டு முயற்சி அடுத்த தலைமுறையினரை காக்கட்டும்.

வாழ்த்துவோம் விவசாயிகளை!

– ஏ. ராம்
படங்கள்:
கே. குணசீலன்

Source…www.vkalathurseithi.com

Natarajan

” இது துவைக்கற கல் இல்லை….லிங்கம் …சிவலிங்கம் …”

 

இது துவக்கற கல் இல்லே… சிவலிங்கம்! — மகாபெரியவா
clip_image001
சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங்கலில் தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.
அவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். “இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ! இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.
clip_image002
clip_image003
பெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.
சென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.
பிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை! இன்னொரு சிறப்பு… மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்!
–நன்றி சக்தி விகடன்
Source…..www.knramesh.blogspot.in
Natarajan

” நேற்று ராத்திரி வந்து ஒரு கொய்யாப் பழம் வேணுன்னு கேட்டேனே …”

பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற சமயத்துல அவரை தரிசனம் பண்ண பல ஊர்கள்ல இருந்தும் நிறையப்பேர் தினமும் வருவா. அதுவும் விசேஷ நாள்னா கேட்கவே வேண்டாம். கூட்டம் திமிலோகப்படும். மடத்து சிப்பந்திகள் இங்கேயும் அங்கேயுமா நின்னுண்டு வரிசையை கட்டுப்படுத்திண்டு இருப்பா.

20683_671948076266709_3512172854606087227_n.jpg  

ஒரு சமயம் மகரசங்கராந்தி அன்னிக்கு அதே மாதிரி ஆயிரக்கணக்கானபேர் பெரியவாளை தரிசனம் பண்றதுக்காக மடத்துல குவிஞ்சிருந்தா! அனுமார் வால் மாதிரி நீண்டு இருந்த வரிசையை, மடத்து சிப்பந்திகள் கிரமப்படுத்தி, உள்ளே அனுப்பிண்டு இருந்தா.

அந்த கூட்டத்துல ஒரு தம்பதி நின்னுண்டு இருந்தா. அவாளைப் பார்த்தாலே முகம் முழுக்க ஏதோ ஒரு சோகம் நிரந்தரமா அப்பிண்டு இருக்கறது தெரிஞ்சது. ஆமையா நகர்ந்துண்டு இருந்த வரிசை கொஞ்சம் வேகமா நகராதா, சீக்கிரமா ஆசார்யாளை தரிசிக்க மாட்டோமாங்கற ஏக்கம் அப்பப்போ அவாகிட்டே எட்டிப் பார்க்கறதையும் உணர முடிஞ்சது.

கூட்டம் நகர, நகர நேரமும் சேர்ந்து நகர்ந்து உச்சிக்காலத்தை நெருங்கித்து. அந்த சமயத்துல அந்தத் தம்பதிகள் கிட்டே ஏதோ ஒர பரபரப்பு தொத்திண்டுது. ரெண்டுபேரும் எதையோ முணுமுணுத்துக்கறதும், குறுக்குல போயாவது பெரியவாளை தரிசிக்க ஏதாவது வழி இருக்குமான்னு அங்கேயும் இங்கேயுமா எட்டி எட்டிப் பார்க்கிறதுமா நிலைகொள்ளாம தவிச்சாங்க.

அந்த சமயத்துல அங்கே இருந்த மடத்து சிப்பந்தி, அவாளை ஒழுங்கா நில்லுங்கோ… இப்படி நகர்ந்து நகர்ந்து மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணாதீங்கோன்னு மென்மையா சொன்னார்.

சட்டுன்னு தன்னோட கையில் இருந்த மஞ்சப்பையை உயர்த்தி அந்த சிப்பந்திகிட்டே காட்டினார் அந்த ஆசாமி. “பெரியவா எங்கிட்டே கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம். அவர் பிட்சாவந்தனத்துக்கு போறதுக்கு முன்னால குடுத்துடணும்னு தான் பரபரப்பா இருக்கோம். நீங்க கொஞ்சம் தயசு வைச்சா, கொஞ்சம் முன்னால போய் அவர்கிட்டே குடுத்துடறோம்..’ சொன்னார்.

அவர் காடிடன பைக்கு உள்ளே உருண்டையா ஏதோ இருக்கறது தெரிஞ்சுது. “என்ன கூட்டம் நெறைய இருக்கறதால சுலபமா பார்க்கறதுக்கு வழி தேடறேளா… பெரியவா கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம்னு சொல்லி ஏமாத்தப்பார்க்கறேளா? அதெல்லாம் விடமுடியாது..’ கண்டிப்பாகவே சொன்னார் மடத்து சிப்பந்தி.

“இல்லை.. பொய் சொல்லலை… ஆசார்யா நேத்து எங்க ரெண்டுபேரோட கனவுலயும் வந்து கேட்டார்! அதனாலதான் இந்தக் கொய்யாப்பழத்தை எடுத்துண்டு வந்திரக்கோம்!’ கெஞ்சலா சொன்னா, அந்த தம்பதி.

“யார்கிட்டே கதைவிடறேள்? பெரியவா ஒரு வார்த்தை சொன்னா வண்டிவண்டியா பழத்தைக் கொண்டு வந்து குவிக்க பல பெரிய மனுஷா தயாரா இருக்கா. அப்படி இருக்கறச்சே.. அவர் உங்ககிட்டே கேட்டாரா? அதுவும் கனவுல வந்து இந்த ஒரே ஒரு கொய்யாப்பழத்தை

எடுத்துண்டு வரச்சொன்னாராக்கும்?

வழியில சாப்பிடறதுக்கு வாங்கி வைச்சதை பெரியவா கேட்டான்னு சொல்லிட்டு முன்னால போகலாம்னு பார்க்கறேளோ?’ முன்னால பின்னால இருந்த யாரோ குரல் எழுப்பினா.

அவ்வளவுதான், பேசாம தலையைக் குனிஞ்சுண்டு நின்னுட்டா அந்த தம்பதி. “அவர்தானே கேட்டார்? அதை எப்ப வாங்கிக்கணும்னு அவருக்கே தெரியும்.. நாம் ஏன் அவசரப்படணும்?’ மெதுவா முணுமுணுத்தார் அந்தப் பெண்மணி.

ஆச்சு, மெதுவா நகர்ந்து நகர்ந்து பெரியவாளை அந்தத் தம்பதி தரிசிக்கிற முறை வந்தது. ஆம்படையானும், பொண்டாட்டியுமா ஆசார்யா கால்ல விழுந்தா, பிரசாதத்தை வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினா.

பிரசாதத்தைக் குடுக்கறக்கு பதிலா, “என்னைப் பார்த்ததும் வந்த வேலையை மறந்துட்டியா? நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’ பெரியவா கேட்க, எல்லாரும் அதிர்ந்துபோனா. அவா பொய் சொல்றதா குரல் எழுப்பினவா தலையை குனிஞ்சுண்டா.

அவசர அவசரமா, மஞ்சப்பையில இருந்த கொய்யாப் பழத்தை எடுத்து நீட்டினார் அந்த ஆசாமி. ஆசார்யா தன் பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார். அதோட அர்தத்தை புரிஞ்சுண்ட அந்த சீடர் சட்டுன்னு ஒர மூங்கில் தட்டை நீட்டி அந்தப் பழத்தை வாங்கி, கொஞ்சம் ஜலம் விட்டு அலம்பிட்டு ஆசார்யா பக்கத்துல வைச்சார்.

கனிஞ்சிருந்த அந்தக் கனியை கனிவோட எடுத்து பெரியவா மென்மையா ஒரு அழுத்து அழுத்தினார்.

கிருஷ்ணரோட கால் படறதுக்காவே காத்துண்டு இருந்த யமுனை அவரோட பாதம் பட்டதும் பட்டுனு விலகி வசுதேவருக்கு வழிவிட்ட மாதிர, பரமாசார்யாளோட கரம் படறதுக்காகவே காத்துண்டு இருந்த மாதிரி அந்தக் கொய்யாப்பழம் சட்டுன்னு இரண்டு விள்ளலா பிளந்துண்டுது.

அடுத்து யாருமே எதிர்பார்க்காதபடி, செவேல்னு இருந்த அந்தப் பழத்துல ஒரு பாதியை அப்படியே வாயில போட்டுண்டுட்டார், பெரியவா. இனனொரு பாதியை அந்தத் தம்பதிகிட்டே கொடுத்தார். “நீயும் உன் ஆம்படையாளும் சாப்பிடுங்கோ.. எதை நினைச்சு ஏங்கறேளோ அது கிடைக்கும்!’ ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

எல்லாருக்கும் இப்போ அந்த தம்பதிமேல தனி மரியாதை வந்துது. எது மேலயுமே பற்றோ ஆசையோ வைக்காத ஆசார்யா, இவா கொண்டு வந்த பழத்தை வாங்கி, உடனே சாப்பிடறார். மீதியை பிரசாதமாவும் தர்றார்னா, இவா எவ்வளவு பெரிய பாக்யம் பண்ணியிருக்கணும்னு பேசிண்டா.

அவா செஞ்ச பாக்யம் என்ன? பெரியவா அவாளுக்குத் தந்த வரம் என்னங்கறது, சரியா ஒரு வருஷம் கழிச்சு அதே தம்பதி மறுபடியும் ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தப்போ தெரிஞ்சுது. ஆமா, இப்போ அவா கையில, பிறந்து ஒண்ணு ரெண்டு மாசமே ஆன குழந்தையும் இருந்துது. தழுதழுப்போட குழந்தையை பெரிவா காலண்டையில போட்டுட்டு ரெண்டுபேரும் நமஸ்காரம் பண்ணினா.

“என்ன உங்க கோரிக்கை நிறைவேறிடுத்தா?’ கேட்கலை மகா பெரியவா.. அவரோட புன்னகையே அதை எல்லாருக்கும் உணர்த்தித்து.

ஆசையே இல்லாத மகான், ஆசையா கேட்கறாப்புல ஒரு கொய்யாப்பழத்தைக் கேட்டு, அதையே ஆசிர்வாதமா தந்து அந்தத் தம்பதியோட ஆசையை பூர்த்தி செஞ்சிருக்கார்னா, அவரை பகவானோட அவதாரம்னுதானே சொல்லணும்

Read more: http://periva.proboards.com/thread/9707/#ixzz3gPdJELlL

1996…ஜூலை 17….மெட்ராஸ் சென்னை என மாறிய நாள் …

அடுத்த மாதம் தனது 376-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் ‘சென்னை’ மாநகரம் 17 ஜூலை 1996 வரை ‘மெட்ராஸ்’ என்றே அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னைக்கு நெடிய வரலாறு உண்டு. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் உலகெங்கிலும் இருந்து வர்த்தகர்கள் சென்னையைத் தேடி வந்துள்ளனர்.

17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால்பதித்த பின்னர், இந்நகருக்கு வேறு விதமான அடையாளங்கள் உருவாகத் தொடங்கின.

 

1639-ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன் நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என்று பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் சென்னைப் பகுதிக்கு வந்தனர். 1522-ல் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர். அப்போது அவர்கள்தான் சென்னையை ‘மெட்றாஸ்’ என அழைத்தனர்.

அதன் பின்னர் 1688-ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதறாஸ் நகரை முதல் நகரசபையாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை மதறாஸ் பெற்றது. ராபர்ட் கிளைவ் தனது ராணுவத் தளமாக மதறாஸைத் தேர்ந்தெடுத்தபோது பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு மாகாணங்களில் ஒன்றாக அறிவித்து, ‘மதறாஸ் மாகாணம்’ எனும் பெயர் சூட்டியது. ஆனால், 1746-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் மதறாஸ் மாகாணத்தையும் பிரெஞ்சு அரசு கைப்பற்றியது. மீண்டும் 1749-ல் மதறாஸை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அதனை அடுத்து திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் சென்னைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. இப்படியாக ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதாரத் தலைமைப் பீடமாக வளர்ந்தது மதறாஸ். சுதந்திரத்துக்குப் பின்னர், 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதறாஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டது. மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன. 1991-ல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று  அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. 1995-ல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே. 1996 ஜூலை 17-ல், மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ‘மெட்ராஸ்’ அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Source…..www.tamil.the hindu.com

Natarajan

It is the Rumani Semiya for Eid….in Triplicane , Chennai …

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

For 200 years now, Mushtaba’s family has been making rumani semiya, an Eid special. Here’s what goes into it

In a tiny flat in the bowels of Royapettah, Mushtaba’s family is carrying out a 200-year-old tradition. Seated on the floor, she kneads the maida dough, calling out instructions to her husband Barkath Ali. She has been waiting all year for the month of Ramzan. This is her chance to earn and contribute to the family. Every year, hundreds of Muslim women in Triplicane and Royapettah, start preparing the rumani semiya weeks ahead of Ramzan. The vermicelli will be sold by their husbands and sons and sometimes, by themselves, in the streets of Triplicane.

Making the rumani semiya is a back-breaking task and yet, families look forward to it. “It’s been the same routine as long as I can remember,” says Mushtaba, punching a medium-sized ball of dough. “I would knead three to five kilograms of maida with water and salt the previous night and wake up early in the morning to prepare the semiya.”

The fine vermicelli is made entirely by hand. It’s a fascinating process. Mushtaba pinches bits of dough from a clump in her hand, sticks it back and repeats till the mass is almost elastic. She then pulls it apart, holding the length with both hands, folding it in and out, in and out, till she achieves 12 uniform strips. She entwines them and pulls it like a rubber band — in less than 30 seconds, following a series of elastic tugs, the fine, hair-thin vermicelli emerge, which she drapes on a wooden rod that her husband hangs out to dry under a fan. In a few minutes, he rolls it on his palm and places it on a cot to dry further. The vermicelli can be made with rava as well, but even the most experienced makers of rumani semiya tend to falter if rava is mixed to the dough.

“It’s a lot of work,” sighs Mushtaba. “I sometimes count the days for Eid so I can rest, although I enjoy doing this.” There are certain unwritten rules when it comes to the making of the rumani semiya. “The dough should never change hands,” warns Mushtaba. “I remember my mother would never let me touch it when I was a little girl,” she explains. “She would say that every hand lent a unique touch to the dough and that it should never be disturbed. I would take a blob of dough and lock myself in a room and practise,” she laughs. The consistency of the dough is everything, so is the temperament of the person handling it. “If one is angry, for instance, and sits to make it, the semiya will never come out well. I’ve thrown sway several kilos of dough when they didn’t cooperate,” she observes.

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

During the last week of Ramzan, thousands of rumani semiya circles are sold in Triplicane; a kilogram is priced at Rs.180 to 250, depending on the size and density of the vermicelli.

“We mostly sell out every year,” says Barkath, who puts his tyres business on hold to help his wife’s vermicelli venture every year. He knows that she has a gift, which, however, has not been passed on to his daughter Heena. “I’ve just come to watch,” shrugs the 28-year-old and adds, “There’s no way I can do what mother does.” Mushtaba chuckles: “This one doesn’t have the patience.”

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

Mushtaba earns around Rs.20,000 every year from the business. “I use it to buy something for the kids for Ramzan,” she smiles. “Shoes, clothes… It feels nice to buy whatever they ask for.”

The vermicelli goes into making the sheer khurma, which is used to break the fast on Eid. Mushtaba recalls the recipe. “We deep fry the semiya in ghee or dalda and set aside. It’s added to a pan of milk, that’s simmered with sugar and khoa. A mix of crushed nuts such as cashews and pista is added to the dish,” she explains. “It’s delicious; makes all the hard work worth it.”

Keywords: Mushtabarumani semiyaTriplicane

Source…..akila Kannadasan in http://www.the hindu.com

” பறித்ததா ….கொறித்ததா …” ?

கட்டுரையாளர்-இந்திரா சௌந்தரராஜன்.

பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை. மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின!

சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நான், இதை ஒரு மிஸ்ட்ரியாக கருதுவதா, இல்லை மிக சகஜமான ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்வதா என்பதில் சற்று குழம்பிப் போனேன்.

பெரியவரைத் தவிர, எவராலும் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடியாது என்றும் நம்பினேன். இப்படி ஒரு கருணையை ஒரு தெரு நாயிடமும் அவர் காட்டிய சம்பவம் ஒன்றையும், இதைத் தொடர்ந்து நான் அறிய நேரிட்டது.

துறவிகள் வருடத்துக்கு ஒருமுறை, ஒரு நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் எனும் விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. என்னதான் அது பொன்னாகவே இருந்தாலும், அதை துலக்கத் துலக்கத் தான் அதன் பிரகாசம் அதிகரிக்கும்.

துறவிகள் விஷயத்தில் இப்படிப்பட்ட விரதங்களும் அப்படித்தான்! மகா பெரியவரும் ஒரு கிராமத்தில் தங்கி, இந்த விரதத்தை மேற்கொண்டார்கள். இதனால் தவசிவமானது அந்த கிராமத்தைச் சுற்றிலும் பரவிடும். அதன் விளைவுகளை காலத்தால்தான் நாம் உணர முடியும்.

எவ்வளவோ பெரிய அறிஞர்களும், ஞானிகளும் மின் விளக்குக்குக்கூட விதியில்லாத கிராமப்புறங்களில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புக்கு பின்னாலே, துறவியர்கள் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட தவசிவங்கள் பெரிதும் காரணங்களாய் உள்ளன.

பெரியவர் அந்த கிராமத்தில் விரத மிருந்த சமயம், தினப்படி பூஜைகள் மற்றும் சம்பிரதாய சடங்குகளும் குறைவின்றி நடந்தன. முடிவில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அன்று பங்கேற்றவர்களுக்கும் மடத்திலேயே போஜனம் அளிக்கப்படும். அதை பிரசாதமாக கருதி உண்பது சான்றோர் வழக்கம்.

ஊருக்குப் பொதுவான தர்மத்தால் வந்த அன்னம் அது. மந்திரம் சேர்ந்து சாப்பிடக் கிடைப்பது ஒரு விசேஷம். அதைச் சாப்பிடப் போய், ஒரு துளி ரத்தம் அதனால் நமக்குள் பெருகினாலும் அது போதும். உடம்பால் இன்றைய வாழ்க்கை முறையில் நமக்கு ஏற்படும் தோஷங்கள் அடிபட்டுப் போய்விடும்.

இந்த அன்னத்துக்காக ஒரு தெருநாய் கூட தவமிருந்ததுதான் விந்தை! தினமும் மதியம் எல்லோரும் சாப்பிட்ட உடன், எடுத்து எறியப்படும் எச்சில் இலைகளைத் தேடிச் சென்று, அந்த நாய் சாப்பிடத் தொடங்கிவிடும். இலையைப் போடச் செல்லும்போதே பாய்ந்துவரும். குலைக்கும். அதன் பசி அதற்கு!

இந்த சப்தம் தினமும் பெரியவர் காதிலும் விழுந்தது. அதன் பசிக்குரல், அவர் மனத்தை உருக்கிவிட்டதாம். அப்போது, ஒரு தையல் இலையில் அவர் சாப்பிட ஒரு கைப்பிடி அவலோ, இல்லை உப்பில்லாத தயிரன்னமோ அவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம். தனக்கு தரப்பட்ட அந்த இலைப் பிரசாதத்தை, அப்படியே குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர். அதற்கும் சோறு வைக்கச் சொல்லாமல், தன் சோற்றையே அவர் தரச் சொன்னதன் பின்னே, பல நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

நாயின் குலைப்பு பசி உணர்வை பெரியவருக்கு உணர்த்துகிறது. இதை வெல்வது கடினம். இந்த பாழாப்போன பசி, எச்சில் இலை என்றுகூட பார்க்காமல் நாயைத் தூண்டுகிறது.

இதுதான் மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், ‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா – இந்த உலகத்தில் ஏது கலாட்டா?’ என்று பாடவும் காரணமாகிறது.

இதை வெற்றி கொள்ளாமல், துறவை வெற்றி கொள்வதும் கடினம் என்பதுதான், அவர் உணர்ந்த, உணர்த்த விரும்பிய உண்மை.

பெரியவர், தன் இலையையே தரவும், ஆடிப்போன மடத்து ஊழியர்கள், அதன்பின் நாய்க்கு முதலில் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் போஜனத்தை தொடங்கினர்.

அதன்பின், பெரியவர் முன் இலை வைக்கும்போது நாய் குலைக்கவில்லை. அந்த ஒரு நாயின் பசிக்கு வழி செய்தாகி விட்டது. ஆனால், உலகத்தில் கோடி கோடி உயிர்கள்… ஒரு உயிரும் உணவில்லை என்று வருந்தக்கூடாதே…?

Read more: http://periva.proboards.com/thread/9687/#ixzz3g9D8AVVn

Source…www.periva.proboards.com

Natarajan

 

 

” சொன்னது நீதானா …விசுவே …” !!!

மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

Source….www.tamil.thehindu.com
Natarajan