” பேய் ” என பெய்யும் மழை …

சிந்திப்போம் ….சாதிப்போம்
………………………………………………..
நம்ம ஊரில் மழை பெய்யுமா  என தினம் தினம் ஒரு கேள்வி
சும்மா இல்லாம வருண பகவானுக்கும் நித்தமும்  ஒரு ” அர்ச்சனை ” …இப்போ சொல்லுங்க
நம்ம சென்னை மக்களே …இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா …இப்போ   கேட்பது  வருணன் … ரமணன் அல்ல !!!
கொஞ்சம் யோசிங்க மக்களே … நாம் அழைத்து
நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி வருணன் …
 ஆனா அவர்  வந்து தங்க
நாம கொடுக்கலியே இடம் அவருக்கு … அவர் வரும்போது தங்கும்
மனையும் அவர் இடமும் இப்ப நம்ம பிடியிலே ..நம் வேதனை நீக்க
நாம் கருணை மனு கொடுத்து நம்மிடை வந்த வருணனுக்கே   இந்த சோதனை ..
தன் மன வேதனை பொறுக்காமல்   வருணன் வடிக்கும் கண்ணீர் அல்லவா
இப்போ “பேய் என பெய்யும் மழை” …இந்த நிலை
மாறி “பெய் என பெய்யும் மழை” சக்தி  மீண்டும்
நம்மிடை உருவாக நாம் முதலில் மாற வேண்டாமா ?
சிந்திப்போம் ….சாதிப்போம் …!!!
2b979-newsam7-6
*சென்னை  மற்றும்  தமிழக நகரங்களில்  பெய்து வரும் மழையின்  பின்னணியில்  உருவான  ஒரு  ஏக்க  கவிதை …
நடராஜன்
25 Nov 2015

 

வானவில் பெண்கள்: இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்….

விஜயலட்சுமி, படம்: கண்ணன்

விஜயலட்சுமி, படம்: கண்ணன்

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி. தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார். தமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார்; திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். கடல்வாழ் உயிரினப் படிப்பில் இந்தியாவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் 1981-ல் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரைக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1975-ல் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த அவர் அன்று முதல் இன்றுவரை காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மரம் நடுதல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

பணி நிறைவு பெற்றுவிட்ட பிறகும் விஜயலட்சுமி ஓய்வாக அமரவில்லை. இப்போதும் அதே சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார். “பராசக்தி கல்லூரியில் கிடைத்த ஊக்கத்தால் கழிவுப் பொருள்கள் உதவியுடன் காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் அவர், 1962-லேயே இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்லூரி அளவில் பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அப்போது அமைத்த சாண எரிவாயு அமைப்பு இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்.

பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பிலிருந்து கிடைத்த கழிவுப் பொருள்கள் மூலம் மீன் வளர்த்திருக்கிறார். சாதாரண நீரில் மீன் வளர்ப்பதைவிட இந்தக் கழிவுப் பொருள் நீரில் மீன் வளர்ப்பதால் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் மீன் உணவான மிதவை உயிரிகள் மிகவும் விரைவாக உற்பத்தியாகிவிடும் என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மீன் வளர்ப்பில் கிடைத்த உற்சாகத்தால் கழிவு நீரில் காளான் வளர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

“செயற்கையாகக் காளான் வளர்க்கலாம் என்னும் உத்தி இப்போது நன்கு பரவி திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே இந்தக் காளான் வளர்ப்பு பலன் தரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் விஜயலட்சுமி. தென்காசி அருகே இருக்கும் வல்லம் கிராமத்தை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

1980-ல் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, அவர் சந்தித்த பல்கலைக்கழக டீன் கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வைக்கோல் கழிவிலிருந்து மண்புழுவை வளர்க்கலாம் என்ற திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் பேராசிரியர் விஜயலட்சுமிக்கு உந்துதலாக இருந்துள்ளது. ‘மண் புழு மண்ணிலேயே இருக்கிறதே அதை ஏன் செயற்கையாக வளர்க்க வேண்டும்?’ என விஜயலட்சுமி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி, ‘நீங்கள் நினைப்பது போல் அல்ல, இப்போதெல்லாம் மண்ணைத் தோண்டினால் மண்தான் வரும், மண்புழு வராது’ என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதில்தான் மண்புழு வளர்ப்பை நோக்கி விஜயலட்சுமியைத் திருப்பியது. மண்புழு வளர்ப்பு தொடர்பாக பெங்களூர் விவசாயக் கல்லூரியில் பணியாற்றிய முனைவர் ராதா அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இயற்கையான எல்லாக் கழிவுகளிலும் மண்புழுவை வளர்க்கலாம் என முனைவர் ராதா தெரிவித்துள்ளார்.

“இந்திய மண்புழு, ஆப்பிரிக்க மண்புழு, சீன மண்புழு ஆகிய மூன்று வகைகளை நான் வளர்த்திருக்கிறேன். சீன மண்புழுவையும், ஆப்பிரிக்க மண்புழுவையும் வளர்க்க மண்ணே தேவையில்லை, வெறும் இலையிலும் கழிவுகளிலுமே அவை வளரும்” என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மேலும், “சீன மண்புழு ஒன்றரை அங்குலம் நீளமே இருக்கும். எனவே அதிக இடம்கூடத் தேவையில்லை. இலை, தழைகளை மட்டுமே அவை சாப்பிடும். தினசரி சாணிப்பால் மட்டும் தெளிக்க வேண்டும். நாற்பத்தி ஐந்து நாட்களில் உரம் தயாராகிவிடும்” என்கிறார் அவர்.

இப்போதும் குற்றாலம் அருகே இருக்கும் தனது வீட்டின் அருகே செயல் விளக்கம் செய்து காட்டுவதற்காக மண்புழு உரக் கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது செயல் விளக்கப் பயிற்சியின் மூலம் சிறு சிறு தொழிற்சாலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் கழிவுப் பொருளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மண்புழு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார்.

“மண்புழு உரம், மற்ற உரங்களைவிட சிறப்பானது. தீங்கிழைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மண்புழு உரத்தை நெருங்காது. ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் போதுமானது. இதனுடன் மேல் உரம், அடி உரம் போட்டால் போதும்” என்று சொல்லும் விஜயலட்சுமி, மண்புழு உரத் தயாரிப்பை லாப நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.

Source……ரிஷி…. http://www.tamil.thehindu.com
Natarajan

படகு சவாரி முன்னே… பாசனம் பின்னே……

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),

‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல

அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’

என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!

நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?

ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?

கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.

மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்‌ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.

தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!

Source…..டி.எல்.சஞ்சீவிகுமார்…www.tamil.thehindu.com

Natarajan

படித்ததில் பிடித்தது ….” நம் திறமை வெளிப்படும் நேரம் …”

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Source….unknown….input from a friend of mine

Natarajan

” If anyone asks me, whether I have seen God, my answer would be ‘yes’ because I have seen Periva as my Maha Vishnu.”…

A Miracle in the Life of a Devotee  Gayathri Rajagopal   .. Pl read further and get blessed

Natarajan

Periva brought life to my left leg fingers after six years ….says HIS devotee Gayathri Rajagopal 

I have experienced many Periva’s miracle which I am posting through my weekly articles in Periva forum site. I have also heard the experience of others through “Experience with Mahaperiyava” site in you tube.. But the miracle happened to me on 10th November 2014 is something huge and a medical miracle.

Yes! After six years of my paralytic stoke, my left foot fingers were dead and absolutely no movements. The fingers of my left foot folded inside (against gravity). Hence I could not walk because the folded left foot fingers were scratching on the floor while walking. Consequently there will be ulcers with blood oozing out always, whenever; I try to walk a little. This was very much painful. It is not the pain due to ulcers in the fingers but my inability to go to Kanchi to have darshan of Maha Periva at Periva Adhishtanam was my real pain and unquenchable thirst.

I was unable to wear slippers and go out and if this condition continues my ambitious plan of going to Periva Adhishtanam at Kanchi will become an unfulfilled dream till my last breath. I was really worried and always with the clouded mind and will not speak to others. The food intake was also reduced considerably, which resulted in possible another stoke because of blood pressure variation.

On 9th November 2014, before I retire for bed, I submitted my prayer with the glistened eyes that “I am prepared to undergo my karma but why you don’t, show me some consideration for my prayer. I do not want to go anywhere except “you’re Adhishtanam Periva” at Kanchi “.I submitted my prayer and retired for bed with tears in my eyes. Even during this narration, I shed tears because this miracle was instant by Periva when all my prayers were unanswered by other God and goddess. If anyone asks me, whether I have seen God, my answer would be yes because I have seen Periva as my Maha Vishnu.

On 10th at 4.30 A.M, (next day) I got up with the usual frame of mind and started my morning routine and completed my brahma Muhurtham prayer. Periva already gave life to my left hand fingers and I could light Vilaku without anyone’s help now. I have already posted my article “Periva brought life to my dead fingers after six years” which please note.

With the grace of Periva, lit the Vilaku and dropped the match stick with little fire on the floor but by mistake the match stick was fallen on my left leg fingers. Immediately the fingers started moving and stretching out. The folded left leg fingers for six years were unfolded and released on that day. From that day onwards I started wearing slippers and do walking practice. I was with watery eyes:

“Periva not only wiped my tears 
But hold my tears in his hand 
Before the tears touches the ground.” 

Now I can go to Kanchi with someone’s help. Periva is translating my dream as a reality. Virtually, I was losing mental balance to notice the dead fingers of hand and leg becomes alive instantly on submission of my prayer. Thereby,

Medical Theory was disproved by Periva 
What a way to bless his devotees. 

Periva’s blessing disproved doctor’s conclusion that I cannot show any further improvement. Periva has enabled me to show remarkable sign of improvement. This improvement has given enormous confidence to me and to my people that they can accompany me anywhere without any problem as days go on. From today onwards, I will walk more to regain my functionalities.

After so much of divine miracles happened in my life, within such a short period of time, I could not find an answer, I am heading towards what? Periva will certainly give me the answer shortly or when time is ripe. I will certainly post my experience once Periva show me the way.

Un assumed Periva 
Enabled me to  
Assume what I lost!

Hara Hara Shankara Jaya Jaya Shankara 

Gayathri Rajagopal ….in http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/10460/periva-brought-fingers-after-years#ixzz3qBe0XRQZ

” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

” On My 25th Birthday, I Gave Society a Return Gift to Remember…” Says Sushrut Ahale …

Sushrut Ahale wanted to do something special on his birthday, and to make the day a happy one for many people around him. This is what he did.

I am a student pursuing a master’s degree in Ophthalmology from the Institute of Ophthalmology – Joseph Eye Hospital, located in Tiruchirapalli, Tamil Nadu. And this year, on my 25th birthday, I decided to do something that would help me thank all my friends and relatives for their heart-warming wishes and blessings in a much better manner than just saying thank you. I wanted to make my birthday a happy day for one and all around me, and a simple ‘thank you’ did not seem sufficient.

So this is how I went about it.

My college falls under the administration of the Tamil Evangelical Lutheran Church. Now, the church is located inside a large campus which consists of staff quarters, a primary and secondary school, the college and a park called the Luther Park.

It’s a small park in the vicinity of our college – disdained and neglected, it once wore a very shabby, saddening, and haunted look. One could only spot wildly grown weeds and creepers, dead and dried bushes, and thorny shrubs there. The park was also used as a dumping ground for plastic waste, broken glass and garbage in general.

I used to notice that park every day. And this October, it struck me that it would be a great idea to rejuvenate the place and make it brighter, cleaner, and more accessible for people inside the campus. This, I wanted to do just as a gesture of returning back to the society. So I went ahead and requested the church officials to allow me to take up this project. And fortunately, I got their approval.

The authorities were more than happy to let me proceed. One staff member, Mr. Stephan, even arranged for a spade, sickle, plough and some brooms that were required for cleaning up the place.

Finally, on a hot Saturday evening, I started my work – that of cleaning up and planting saplings in the park. While I began all alone, some very encouraging incidents took place within a matter of few hours, and they motivated me to continue. About half an hour after I started, a 10-year-old boy came up to me and asked if he could help. I was pleased and gave him some simple things to do. He was then followed by a gardener who came about an hour later and joined us. In two hours’ time, we were a small group of 10-12 people working together – all strangers, but all motivated towards the same cause.

And lastly, with the help of that gardener, some energetic school boys, a few friends and a couple of locals who had joined me, we successfully removed more than a trolley-full of garbage from the park. This was accompanied by the plantation of 16 saplings. The task got competed on Oct. 19 – my birthday.

At the end of it, my small team sang the birthday song for me. It was a really amazing feeling. This small deed made me realise that money isn’t always the best award we can get in return for doing something good. It’s goodwill and kindness that give one the satisfaction after a hard day’s work.

Here is a look at our work:

park_8

park7

park6

park_5

park_4

park_2(1)

park1

image10

image9

 

– Sushrut Ahale

Source…www.thebetterindia.com

Natarajan

 

இன்று அன்று | 23 அக்டோபர் 1966: ஐ.நா. சபையில் ஒலித்த எம்.எஸ்.ஸின் குரல்!…

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தொடக்க நாளில் உலகின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சி நடத்தப்படும்.

1965 செப்டம்பரில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அழைப்புவிடுத்தது ஐ.நா. எனினும், அப்போது இந்திய-பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருந்ததால், அந்நிகழ்ச்சியை ரத்துசெய்தார் எம்.எஸ். 1966-ல் அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது ஐ.நா. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார் எம்.எஸ்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் அரங்கில் 1966 அக்டோபர் 23-ல் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சி மகா பெரியவர் இயற்றிய, ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலைத்தான் அன்று பாடினார் எம்.எஸ்.

அப்பாடலுக்கு ஆங்கிலத்தில் பொழிப்புரை எழுதப்பட்டு, அதன் பிரதிகள் பார்வையாளர் அரங்கில் இருந்த பன்னாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர் பாடி முடித்தபின் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரகோஷம் எழுப்பினர். கரகோஷம் அடங்க ஏறக்குறைய ஒரு நிமிடம் ஆனது!

Source…www.tamil.thehindu.com

Natarajan

” எப்போ நீங்க திரும்ப வருவீங்க எங்க வீட்டுக்கு …” ?

நீங்க வந்து எங்களுடன்  இருந்த இந்த ஒம்பது  நாளும் எங்களுக்கு
ஒரே கொண்டாட்டம்..சந்தோஷம் … உங்க பேர் சொல்லி நாங்களும்
சாப்பிட்டோம் தினம் தினம்  ஒரு இனிப்பு …சுண்டல் !!!
கூப்பிட்டு கூப்பிட்டு வீட்டுக்கு வந்த சொந்த பந்த உறவுக்கும்
ஒரே சந்தோஷம் …விருந்தாளி உங்களை எல்லாம் பார்க்க …அவங்க
சந்தோஷத்தில் பிறந்தது தினம் பல பாட்டும் , பஜனையும்
எல்லாமே உங்களுக்காக …
எங்களுக்கு இன்று ‘பொக்’கென்று போய் விட்டது
உங்களுக்கு தெரியுமா ஏன்  என்று ?
விஜய தசமி சுண்டல் இனிப்புடன் நீங்க எல்லாம்
உங்க உங்க ஊருக்கு கிளம்பி விடுவீர்களாம்
எங்க அம்மா சொன்னாங்க …
பிள்ளையாரப்பா , முருகன் மாமா  , சிவன் தாத்தா
பார்வதி பாட்டி , பெருமாள் தாத்தா , லக்ஷ்மி பாட்டி
குட்டி கிருஷ்ணா , நீங்க எல்லாம் எப்போ மறுபடி
எங்க வீட்டுக்கு வருவீங்க ? சீக்கிரமா வாங்க …
நாங்க உங்களையே நினைத்துக் கொண்டிருப்போம்
நீங்க திரும்ப  எங்க வீட்டுக்கு வரும்  வரைக்கும் !!!
………………
 நவராத்திரி கொலு நிறைவுற்றது …பொம்மைகள் எல்லாம் மீண்டும் பரண் மேலே செல்லும்…

வீட்டு குழந்தைகள் விஜயதசமி அன்று பொம்மைகளுடன் பேசுவதாக வடிக்கப்பட்ட ஒரு சிறு கவிதை.

நடராஜன்

22 OCT 2015
DSC_1014

“அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார 9 நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்…சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல .. “

                                 ஜய ஜய சங்கர
                                 ஹர ஹர சங்கர

காவேரிக் கரையில் உள்ள மண், மக்கள், ஆடு மாடு அத்தனையுமே செழிப்புதான் !

கும்பகோணம், திருச்சி அதைச் சுற்றிய க்ராமங்கள்…..ப

சுமையை வாரித் தெளித்திருக்கும்.


இந்த மாதிரி ஒரு அழகான, பசுமையான க்ராமம்தான் களத்தூர் !


அந்த ஊரில் உள்ள துர்க்கா பரமேஶ்வரியின் கோவில் மிகவும் அழகானது. சிறிய கோவில் என்றாலும், பூஜைக்கு குறைவில்லாமல் இருந்தது. 

அந்தக் கோவிலின் தர்மகர்த்தா அம்பாளின் கைங்கர்யமே வாழ்வாகக் கொண்டவர். மிக மிக நல்ல மனுஷ்யன். நவராத்ரி வந்துவிட்டால், கோவிலா, வீடா என்று போட்டி போட்டுக் கொண்டு அம்பாளுக்கு ஒன்பது நாளும் அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழித்து அப்படிக் கொண்டாடுவார். 

அண்டா அண்டாவாக சுண்டலும், இனிப்பும் ஒரு பக்கம் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அக்கம்பக்கம் இருக்கும் க்ராமங்களில் இருந்தெல்லாம் பசியோடு வருபவர்களுடைய குக்ஷியில் போய்ச் சேரும்.

தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். நாம் எல்லாருமே பிறக்கும் போதே, பிடரியில் மஹிஷவாஹனனை உட்கார வைத்துக் கொண்டுதானே பிறக்கிறோம்? 

அந்த ஜன்மத்தில் வந்த பந்தபாஶங்களை அறுத்து, இருப்போர், போனவர் எல்லாரையும் நிலைகுலையச் செய்து, அடுத்த பிறவியில் தள்ளும், பாஶக் கயிற்றை, எந்த க்ஷணத்தில் நம் கழுத்தில் இறுக்குவான் என்பதே தெரியாதே ! 

மஹிஷாஸுர மர்த்தினியான லலிதாம்பிகையின் அம்புஜ ஶரணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அவளுடைய இடது கரத்தில் உள்ள பாஶமானது, மஹிஷவாஹனனின் பாஶக் கயிற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவா பெருநிலையை அனாயாஸமாக அளித்துவிடுமே !

தர்மகர்த்தா இப்படித்தான் ‘பட்’டென்று ஒரு க்ஷணத்தில் காலமாகிவிட்டார் ! கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது ! ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள். தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, “ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்” என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு ! என்பதாக காணாமல் போனார்கள். 

கொஞ்சமும் மனஸை தளரவிடாமல்,வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்சமிருந்த தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்றுக் காஸாக்கி, தன்னுடைய ஶக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.

பையன்களில் மூத்தவன் காலேஜ் முடித்ததும், “அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு !…” என்று சொல்லுவதாக கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது ! 
படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, ‘நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !’ என்று ‘டாடா’ காட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டான் ! தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொண்டான்.

அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக, தர்மத்தை கடைப்பிடித்தது ஸ்ரீராமனின் தம்பிகள்தான் !

இப்போது, கலியில், அண்ணாவைப் போல் ‘அதர்மத்தை’ கடைப்பிடித்து, அவன் போன மாதிரியே, அம்மாவையும், கடைசி தம்பி ரமணியையும் அதோகதியாக்கிவிட்டு, மற்ற மூன்று பிள்ளைகளும் நடையைக் கட்டினர்!

ரமணி அப்போது ஒன்பதாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது ! வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே! மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள்.


சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் ! இவர்கள் குடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடையக் கூடியதாக இல்லை!

கடன்காரர்கள் வாயில் வந்ததைப் பேசும்போது, தன்னுடைய அம்மாவின் நல்லகுணத்துக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே ! என்று தாங்காமல், அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழுதான், குழந்தை ரமணி.

அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா !

கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்…..அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், ” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!…..அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணிய ஒடனே எங்கிட்ட அனுப்பு…” என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.
“ரமணி….கண்ணு…..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நவராத்ரி கொலு வெக்கணுமாம்…..ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!..”

“அம்மா…பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?….”

இருவருமே இது வெறும் கனவுதான்! என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே ! விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே?

“பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்…”

விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.

“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்……இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம் எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் ! செரியா?….” சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட,

“மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார் !…எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடியை நோக்கி..”வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..” என்றதும்

“இதோ வரேன் சித்தப்பா!…” என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா…ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”

அம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர் !

இது, பெரியவா போட்ட அடுத்த “ஆனந்த குண்டு” !

“அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து……

“அதான் பெரியவா…!” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் ! 

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி ! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே…எனக்கு உள்ள வேலையிருக்கு…..பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா….வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், “இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நா…பெரியவாளைப் பாக்கறது!” என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!

“செரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்” என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு “ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்…..

“நீதானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…..”

முழித்தான்!”

இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.. “
ரமணிக்கு இது “மூணாவது ஆனந்த குண்டு”


“என்னடா? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..” என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார், ஒரு பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.

இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும், “பெரியவா!……ஓ!….என்னோட பெரியவா!” என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்…..

“ரமணி!….அழாதேப்பா…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…”

தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

“பெரியவா……எங்கப்பா தர்மகர்த்தா….அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்…..என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா…..மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா…..

……பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு  பேசறா! நா…..படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்…..
அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா……”

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான் !

பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா…

அழாதே……கண்ணைத் தொடச்சுக்கோ! நா…..சொல்றதக் கேளு…..

நாலாவது “ஆனந்த குண்டு”….

..இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ; 
நவராத்ரி பூஜையும் பண்றதில்ல…அப்டித்தானே?”

“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம்’-னு நிரூபிச்சுட்டாரே!”
அதிர்ந்து போனான் ரமணி.

“ஆமா…….பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”

“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”

என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.
“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா…காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…” என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார்.

அவரும் ரமணியிடம்,

“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!…” என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம், “என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா….இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…” அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு
பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்

“கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? ‘இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?’-ன்னு கேட்டியாமே ! 

அந்த “இதுக்குத்தானா” குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப…..செரி செரி ….ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு….பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! “

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்

“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ!
[ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட
முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்
…. பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே
அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு ! 

“என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?…..” இப்படியாக ஒரே கேள்வி மயம்!

” அம்மா…அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட
கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! 

பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது…ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு
போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம,
ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு
நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்’-ம்மா!”

“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு….அப்டியே அந்த
சின்ன கொலுப்படியையும் எறக்கு… வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?…

பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல….இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்…நமக்கு
சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா! அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா!
கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”

ஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், ‘போறாது, போறாது’என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த
ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை!

பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி,
விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும்,
லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை. 

காரணம்?

“நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே……”
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.

அதோ…..மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!”

அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்….எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்”

அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்……

அதில் பொம்மை இல்லை! ஆனால்…..இதென்ன? ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது!

பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப்
பார்த்தாலே புரிந்தது.

என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா….இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”

“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”

“உங்கள் பாரம் எனதே! ” என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால்
, “ஓடு! பெரியவாளிடம்!..” என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்!

முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை! அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு
முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி? தெளிவு?

” நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான்,
மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்!”

“என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை? பயம்?……ஆனந்தமோ ஆனந்தம் மட்டுமே!”

இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்!

வேறு எதுவுமே இல்லை!

பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்…?

ரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார். 

சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!

பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம்
ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.

“ஸரஸ்வதி மஹால்…அங்கெல்லாம் விஜாரிச்சியோ?..”

“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட
விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா…..அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு…. எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட
போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா!
ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது…. இதான் என்னோட ப்ரார்த்தனை!….”

கண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,

“வாடா! கொழந்தே! வா….வா” என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான். தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா… “

என்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும்,

“ம்ம்….நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு! ”

இது ஐந்தாம் ஆனந்த குண்டு!

இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா…… நீங்க படிக்க வேணாமா?…”
என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.”

“நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்…..அது! “

என்னது! அவரோ வாய்விட்டு அழுதேவிட்டார்! 

“ஓ ….பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா?
இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல பெரியவா…!”

இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……”

என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்…..
அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்…

அழகாக சிரித்துக் கொண்டே….” ஏது? ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே!…” என்று
சொல்லிவிட்டு, ரமணியிடம்,

“இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!…. இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப்
போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!…”

“ஹா……!! பெரியவா…! நா…ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?…”

கூடவே ரமணியும் கபடில்லாமல் “அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?…”

பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

“செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார்.
ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!…”

அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், “ப்பூ!…” என்று ஊதித் தள்ளப்பட்டது ! நவராத்ரி ஆரம்பித்த
நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான “ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர” ஸரஸ்வதி ! 

ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் “ஶங்கரா” என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி!

அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்!  நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா
சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்!

வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக்
கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும்
இருந்தார்.

                                          ஜய ஜய சங்கர
                                           ஹர ஹர சங்கர
​Source…input from a friend of mine

Natarajan