Message for the Day….” When your Heart is filled with Bliss …”

If you are ill or if your mind is pre-occupied , you will not Ienjoy the taste of delicious food. So also if your heart is full of ignorance (tamas) or is straying, no joy will be experienced, even if you are engaged in remembrance of the name (namasmarana), devotional singing (japa), or meditation. The tongue will be sweet as long as there is sugar on it. Likewise if the pillar of light called devotion continues to burn in the corridor of the heart, there will be no darkness. The heart will be illumined in bliss. A bitter thing on the tongue makes your whole tongue bitter; when qualities like greed and anger enter the heart, the brightness disappears, darkness dominates the scene, and one becomes the target of countless griefs and losses. Therefore those who aspire to attain the holy presence of the Lord must acquire certain habits, disciplines, and qualities. You must modify your daily living through spiritual discipline.

Sathya Sai Baba

வானவில் பெண்கள்: “எழுபதுக்குப் பிறகும் சாதிக்கலாம்!”

விளையாட்டுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தனது வெற்றிகள் மூலம் நிரூபித்துவருகிறார் எழுபது வயது லட்சுமி லோகநாதன். கோவையைச் சேர்ந்த இவர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துவருகிறார்.

உள்ளூர் முதல் ஒலிம்பிக் வரை

கோவை ஹோப் காலேஜ் ஸ்ரீநகரில் இருக்கும் லட்சுமியின் வீடு முழுக்க பதக்கங்களும் கோப்பைகளும் நிரம்பிவழிகின்றன. மூத்தோர் தடகளப் போட்டிகளில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், போல்வால்ட் ஆகிய விளையாட்டுகள் எங்கு நடந்தாலும் அங்கே லட்சுமியைப் பார்க்கலாம். பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் பதக்கங்கள் வெல்வது இவரது சிறப்பு.

கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது இவரது இந்தத் தடகளப் பயணம். கடந்த 13 ஆண்டுகளில் மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 83 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை நடந்த ஆறு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தொடர்ச்சியாக 16 பதக்கங்களை வென்றுள்ளார். இதில், ஆறு தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளிப் பதக்கங்களும், ஏழு வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். இதைவிட கூடுதல் சிறப்பாக, 2009-ம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற உலக மூத்தோர் ஒலிம்பிக் போட்டியில் கழியூன்றித் தாண்டுதல் (போல்வால்ட்) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பயிற்சிக்காக தினமும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிவிடும் லட்சுமி, இத்தனை வெற்றிக்கும் முக்கியமான காரணம் தனது கணவர் லோகநாதன் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

துணை நிற்கும் துணை

“கோவை வெள்ளலூர்தான் சொந்த ஊர். திருமணத்தின்போது பி.யு.சி. வரை மட்டுமே படித்திருந்தேன். அது 1965 காலகட்டம். திருமணம் முடிந்ததும் என்னை வீட்டிலேயே முடக்கிவிட எனது கணவர் விரும்பவில்லை. எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்ததை அறிந்துகொண்ட அவர், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி வகுப்பில் என்னைச் சேர்த்தார்.

அதை முடித்தவுடன் சில ஆண்டுகளில் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணி கிடைத்தது. பணிக் காலத்தில் தடகளப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளவில்லை. ஆனால், நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளேன்” என்று சொல்லும் லட்சுமி, கடந்த 2001-ம் ஆண்டு விருப்ப ஓய்வில் பணியை விட்டு விலகினார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தார். இவரது கணவர் லோகநாதனும் ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்.

“வீட்ல சும்மா இருப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள், பதக்கம்கூட முக்கியமில்லை என்று சொல்லி என்னை அவர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்று ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றேன். அதுதான் எனது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. அந்த போட்டியைத் தொடர்ந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றேன். பின்னர், தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக 2004-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய போட்டிக்குள் நுழைந்தேன்” என்று சொல்கிறார் லட்சுமி லோகநாதன்.

யோகா பயிற்சியில் பெரும்பாலான ஆசனங்களையும் எளிதாகச் செய்யும் இவர், சமையலிலும் கலக்குகிறார். ஆறு ஆண்டுகளாக முயற்சித்து, கடந்த டிசம்பர் மாதம் உடற்கல்வி மற்றும் யோகா பயிற்சி என்ற பாடப்பிரிவில் பி.எச்டி. முடித்துள்ளார். எம்.ஏ., எம்.பி.எட்., பி.எட்., எம்.ஃபில்., பி.எச்டி., என இவரது கல்வித் தகுதி நீள்கிறது. பல்வேறு விஷயங்களில் சிறப்பாகச் செயல்படுவதற்கு நேர மேலாண்மையே கைகொடுக்கிறது என்கிறார் லட்சுமி.

சாதனைகள் சாத்தியமே

இத்தனை உயரத்தை இவர் மிக எளிதில் எட்டிப்பிடித்துவிடவில்லை. மூத்தோர் தடகளப் பிரிவில் 2011-ம் ஆண்டு சண்டீகரில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஓர் ஆண்டுவரை நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. விளையாட்டுக்கு முழுக்குப் போட்டுவிடுமாறு மருத்துவர்கள் எச்சரித்த பிறகும் தன்னம்பிக்கையைத் தளரவிடவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது ஆகும் செலவுதான் பெரிய இடையூறாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“போக்குவரத்துச் செலவை நாங்கள்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். போட்டியில் பதக்கம் வென்றால் மட்டும் அரசு சார்பில் 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பினால் குறைந்தபட்சம் 2 லட்சம்வரை ஆகிறது. இதைவிட, அந்த நாடுகளில் உள்ள சீதோஷ்ண நிலை எங்களை வாட்டி வதைத்துவிடும். பின்லாந்து உலகப் போட்டியில் கலந்து கொண்டபோது அங்கு 6 மாதம் தொடர்ச்சியாக, பகல் மட்டுமே இருந்த காலம்.

அந்த சீதோஷ்ண நிலையை 20 நாட்கள் எதிர்கொள்வதற்கு எனது தள்ளாத வயதில் மிகவும் சிரமப்பட்டேன்” என்று வெளிநாட்டுப் பயணம் சார்ந்த தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் லட்சுமிக்கு சைவ உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதாம்.

“எத்தனை கஷ்டம் இருந்தாலும் பதக்கம் வெல்கிற அந்த நொடி, அத்தனை துயரங்களையும் மறக்கடித்துவிடுகிறது” என்று கை உயர்த்திப் புன்னகைக்கிறார் லட்சுமி.

Source…..ம. சரவணன் in http://www.tamil.thehindu.com

Natarajan

” Why My 92-Year-Old Grandfather Left the City to Build a School in His Village…” ?


Shalini Narayanan’s 92-year-old grandfather has started a school for children in Sikhra village of Uttar Pradesh. He left behind the comforts of a city life, and decided to go back to his native place to help students get access to quality education. Amidst several challenges, and the problems of living in a village, this is how he did it all.

Seven years ago, my grandfather decided to give up the comforts of urban life to return to his native village and start a school there. He is 92 years old today – his dream school is up and running, and he has been changing many lives for the past few years.

Located in Sikhra village in Hathras district of Uttar Pradesh, this school has been built with the aim of providing easily accessible education to children living there.

Schools in Rural India

My grandfather at the school reception

My grandfather had left his village and lived in the city for about half a century. But when he looked behind after having spent several years of life working for his family, he realised that he had enough money, but there was no one around him who needed it. That was when he decided to set up a school. Sikhra already had a government school for students till Class 8. But after that, children had to travel for about 7km to reach the school where they taught students of Class 9 and beyond. That is why most of the girls and several boys dropped out after class 8.

So he started the Tikaram Smarak Inter-College, an English-medium high school affiliated to the State Board, where students from Class 9 to 12 would study. But he realised his mistake within a couple of years. Students coming from government schools were not qualified enough for higher classes. Unless he thought of something else, there was no way he could get them ready for the board exams. That was when he started the primary wing in the school, which has around 200 children now.

While his age makes it very difficult for grandpa to live in a village, but he continues to stay there even during the winters. I can picture him sitting in his dark, cold room during the nights, thinking about the past and the present. But each morning comes with some hope.

His inspiring spirit defies his age, as he gets ready to welcome the little ones for their lessons.

Schools in Rural India

Some students at school

Not many have the courage to wish him good morning or interact with him. People in the village respect him a lot, and everyone calls him ‘Baba’. One angry rebuke and the entire class is silent. I think this is what keeps him glued to the project – the way he inspires respect, the way students touch his feet, and how everyone greets him when they see him.

But even after the school building was ready, and it received the affiliation, there was still no time for  him to rest on his laurels. Who would manage the school after him – that was his biggest worry. In the last four years, he approached many institutions and missionaries that are running schools in Delhi, corporate organisations working in rural India and other education trusts, but nothing materialised. Nobody is interested in his project because the school is located in a very remote area. He is still trying to negotiate with different organizations.

Additionally, there are other daily occurrences that add on to the pressure – like many children don’t come to school during the harvesting season, parents keep asking him to excuse their child from some classes, and more. The school makes no profit and barely manages to run with the funds coming from my grandfather’s fixed deposits. But it is operational. Children now have an option to attend a school that actually provides education.

I remember visiting the school two years ago and meeting a little girl who had won the school essay competition. Her parents were so proud! That same girl went on to score 88 percent in high school.

Thinking about my grandfather reminds me of a quote by my Hindi teacher – “Be your own guru, your own teacher. Light the lamp and march on without fear.”

Source……Shalini Narayanan in http://www.the betterindia.com

Natarajan

இந்த வாரக் கவிதை ….” என் தேசம் …என் சுவாசம் …” !

 

என் தேசம் …என் சுவாசம்
…………………………
திரைகடலோடி திரவியம் தேடும் நம் வீட்டுப் பிள்ளைக்கு
“யாதும் ஊரே யாவரும் கேளிர் ” !
மறு கரையில் இருக்கும் தாய் வீடும் நாடும் ஒரு போதும்
மறப்பதில்லை நம் பிள்ளைக்கு ! ..அக்கரை சீமையில்
எக்கரையில் இருந்தாலும் அவருக்கு ஒரு தனி செல்வாக்கு …அது
“நான் ஒரு இந்தியன்” என்னும் அவர் சொல் வாக்கு !
ஆனால் நாம் பிறந்த  மண்ணில் மட்டும் இன்னும் நம்மை அடையாளம்
காட்டுவது  மொழியும் , மதமும் மட்டுமே ! தேசிய நீரோட்டம் வெறும்
ஏட்டில் மட்டும் பூத்திருக்கும்  ஒரு அத்திப் பூ !
ஒரு வேளை கங்கையும்  காவிரியும் இணைந்தால் மட்டுமே
சாத்தியமாகுமா  தேசிய நீரோட்டம் ?
“நான் ஒரு இந்தியன்  பாரதம் என் தேசம் …எம்மதமும் எனக்கு
 சம்மதம் ..நாம் காண்போம் வேற்றுமையில்  ஒற்றுமை “..இதுவே
  நாம் பேசும் ஒரே இந்திய மொழியாகட்டும் இனி …ஒரு
 தேசிய கீதமாக இசைக்கட்டும் இம்மொழியை  நம் சுவாசக்காற்று !
சுவாசம் இசைக்கும் இந்த இசை மழையில் நம்
இதயங்கள் நனைந்தால்  தன்னால் இணையும் நீரும் நதியும் !
இமயம் முதல் குமரி வரை உருவாகும் ஒரு அருமையான புது
பந்தம் …அதில் மலரும் சொந்தங்கள் நிச்சயம் உச்சரிக்கும் மந்திர
சொல் ” என் தேசம் …என் சுவாசம் …” ! இந்த சொல் வாக்கால்
நம் செல்வாக்கும் சிகரம் தொடும் நாம் பிறந்த மண்ணில் !
” நான் ஒரு இந்தியன் ” என்னும் ஒரே ஒரு அடையாள அட்டையுடன் !
Natarajan

Message for the Day…..”The Right Attitude to March Forward to attain the Presence of God …”

Sathya Sai Baba

A farmer clears and levels the land, removes the stones and thorns, ploughs and prepares the field, manures and strengthens the soil, waters and fertilizes it. Then after sowing, transplanting, weeding, spraying, and waiting, he reaps the crop. After winnowing and threshing, he stacks the corn. All these various processes are for the sake of feeding the stomach. So too one must feel that all hunger and thirst, joy and sorrow, grief and loss, suffering and anger, food and appetite are but impulses that help us march forward to attain the Presence of the Lord. When you have this attitude, sin will never tarnish any of your activities. Your appetite for hunger and material desires will also vanish, without a vestige of name or form. On the other hand, if you treat the appetites as more important, you will be sure to earn only sorrow, not joy. It will be impossible to acquire peace.

Children in Rural India Have Found a New Way to Travel the World. And It’s Heartwarming…

With the motto ‘Inform, Communicate & Empower!’, New Delhi-based organisation Digital Empowerment Foundation (DEF) finds sustainable ICT solutions for marginalised communities to overcome information poverty and enable better access to benefits and rights in rural India.

Udita Chaturvedi witnessed a positive change in Rajasthan’s villages. Parents and children are embracing computer literacy. Read about her experiences.

Last month, I was in Alwar district of Rajasthan (Alwar is about 160 km from Delhi), accompanying two foreign nationals who’re shooting for a film in India.  They are documenting how lives are changing in this country due to digital literacy.

While the filmmakers were busy shooting in a Community Information Resource Centre (CIRC), established byDigital Empowerment Foundation (DEF) to promote digital literacy and social awareness, I was sitting among some mothers and their children, discussing their lives and understanding the difficulties they face.

It was during this conversation that I learnt that most of the mothers in Mungaska, a slum-like locality in Alwar, are either illiterate or school dropouts. While they chose not to study or were forced to drop out of school, they all wanted proper education for their children.

Meena is the mother of an extremely talented eight-year-old boy. The boy, Aman, is born into a family of professional bhapang players and is, in fact, the youngest bhapang player himself — he started learning at the age of three!

Eight-year-old Aman is the youngest bhapang player in the village. Photo source: Udita Chaturvedi

Eight-year-old Aman is the youngest bhapang player in the village. Photo: Udita Chaturvedi

Aman, his elder brother, and sister are the first school-going generation of the family. While several efforts are being made by the family to ensure that bhapang doesn’t prove to be a dying art, it is not the reason the younger generation is attending school. The reason is that Meena believes, “Education can make or break a person, but mostly make.”

Aman’s mother only studied till class 5, because, back then, there was no school in Mungaska for students who wanted to study beyond class 5. “Education is important for everything today. Whether you want to use a computer or get a government job, school education has become a must,” says Meena.

But what made her realise this?

“I have seen smart children grow up, playing in the lanes of our colony. There’s nothing wrong in playing. In fact, I encourage Aman to play after school. But I’ve seen those smart children grow into useless 20-year-olds as well. They still play cricket in the lanes all day long and live off their father’s income. What will they do when their father is no more? How will they feed their wife or children?” she questions.

Meena is very sure she wants Aman to study, and not just till class 12. She wants him to go to college. At the same time, she doesn’t want Aman to give up on his musical talents. In fact, she believes Aman will be able to take their family’s music to a wider audience around the globe, if he’s well educated and digitally literate.

“He can do so much with the Internet,” she says.

Rimpy, a young mother of three children — two girls and a boy, has similar views. Rimpy never went to school because she “wasn’t interested in studying”. However, when her children give her the same excuse in the morning, they’re scolded and pushed out of the house.

“Education makes people independent. It helps them get a job, or even fight society. I know my life could have been very different had I been to school. If nothing else, I could have at least brought in some extra income into the house. Maybe my family would even listen to my opinions more,” she says.

Rimpy, a mother of three, believes education can make a person independent. Photo: Udita Chaturvedi

Rimpy is a housewife. One of her friends studied till class 12 and got married. However, a year later her husband died and she returned to her parents’ house in Mungaska. Here, she enrolled at a CIRC, established by DEF, and took computer lessons. Rimpy wishes she had been to school too, because learning computers at the age of 30, with no education at all, was far more difficult than she had imagined. While her widow friend aced, she lagged behind. Now, Rimpy doesn’t want her children to face a similar fate.

“School education is as important as computer training. In fact, all schools should also teach children how to use computers,” she says.

There are many others like Meena and Rimpy who understand the value of education — both traditional and digital — because they themselves have been deprived of it for some reason or the other.

In today’s time, where knowledge of computers has become crucial, English has become an aspirational language and a degree has become mandatory for jobs. It is silly to not go to school or learn computers, believes Rafia, the mother of a nine-year-old girl. “Even Modi (Indian Prime Minister Narendra Modi) wants the youngsters to learn computers today,” she adds.

However, I would be lying if I say that every child in Mungaska understands the importance of education. While a lot of them enjoy going to school or learning computers in a group at the CIRC, there are some who only attend school because they’re forced by their parents or only because they get to play games or use Google Search after an hour of practicing on Microsoft Office.

Google Search, in fact, seemed like the second favourite — after Facebook, of course — feature of the Internet for most children.

Aman uses Google Search to travel, though his travel has been restricted to Alwar and Delhi so far. He says, “The day before, I searched for Qutub Minar on Google after I read about it in my school textbook. Do you know how tall it is? It’s 240 feet tall.” He was right, I cross-checked on the Internet.

The story was no different in Chandauli village where Sahil was coincidentally looking up the Taj Mahal, when I entered the CIRC there.

When I asked him what he was doing, he replied, “People from America come to India to see the Taj Mahal, so I wanted to see it too. But I can’t travel to Agra, it’s very far. So I am looking it up on Google.”

A student explores the Taj Mahal through Google Images. Photo: Udita Chaturvedi

Sahil showed me at least a dozen different pictures of Taj Mahal, each from a different angle. By the time he finished, he had inspired other children at the centre to look up some city or the other. Somebody used Google Search to travel to Agra while another travelled to Jaipur.

A kid even asked Will, one of the filmmakers in our group, where he was from and then looked up “America”. But he soon lost interest and searched for the Red Fort in Delhi instead.

The visit to Alwar gave me a whole new perspective about how these CIRCs are impacting society. It’s not just about digital literacy and learning how to operate Microsoft Office tools, but so much more. DEF has eight CIRCs in as many villages of Alwar district (and a total of 150 across 23 Indian states) where the poorest of the poor spend their time learning computers, playing with the Internet, and utilising various digital tools. It is interesting how these digital resource centers are making children, youth — both, boys and girls — and their families look at education in a non-traditional manner.

At these centers, the locals, who had never stepped out of their village, are now travelling to various parts of the country and the world, and learning about things that they had only heard of. These villagers, who are first-time learners of digital tools, are not just learning but are also teaching us that a connected digital device is just not a tool for digital literacy, but a tool that impacts them socially, behaviourally, economically and perhaps even responsibly.

Featured image source: Facebook

Source…….About the author: Udita Chaturvedi is a former journalist who now works with Digital Empowerment Foundation and writes stories of impact in the areas of digital literacy,education, and women empowerment. She can be reached atudita@defindia.org or through her Twitter handle @uditachaturvedi.    .www.the betterindia.com

Natarajan

IN PICTURES: An Indian Artist Portrays Train Engines in a Way They Were Never Seen Before!

Kishore Pratim Biswas used to live near a locomotive workshop in Kolkata when he was a child. It was very easy for one to spot steam locomotives every now and then, and as an enthusiastic 5-year-old kid, he loved to run out and watch them go. He would then come back home and sketch what he saw. A giant locomotive surrounded by steam – the aura of that picturesque scene attracted him tremendously, and inspires him even today. The firemen and drivers at the workshop became his friends, and they would usually gather around to look at his sketches. He remembers listening to their stories and trying to sketch all their emotions on a piece of paper.

Today, 42-year-old Kishore has his art studio in Mumbai and he is working on a series of paintings based on this memory. He calls the series the ‘Nostalgia of Steam Locomotives’. He graduated in Fine Arts from Government College of Art & Craft, Kolkata, spent a few years in his hometown, and then moved to Mumbai in 2009.

In spite of all the years that have passed, the nostalgia still lingers on. Have a look at these incredible sketches to understand his bond with locomotives.

kishor10

kishor9

 

kishor8

kishor7

kishor6

kishor5

kishor3

kishor1

 

Source………Tanaya Singh in http://www.the betterindia.com

Natarajan

Kolkata Girl Makes It to Forbes 30 Under 30 List for Developing Pathbreaking Underwater Drones…

28-year-old Sampriti Bhattacharyya, a PhD scholar from Massachusetts Institute of Technology, has designed an underwater drone that can map ocean floors at places where GPS does not work. She is the founder of Hydroswarm – a startup that designs and markets small, autonomous drones for ocean exploration and maritime big data. These drones are shaped like an egg and are roughly the size of a football.

Sampriti, who hails from Kolkata, has been featured among Forbes’ top 30 most powerful young change agents of the world.

 

drone

She pursued engineering from St. Thomas’ College of Engineering & Technology in Kolkata and then went to Ohio State University to study aerospace engineering. She later switched to robotics at MIT.

The absence of any easy way to study ocean floors inspired her to create an underwater robot. As of now, remotely operated autonomous underwater vehicles (AUV) are used to explore the deep sea. They are deployed for missions like studying oil spills, environmental monitoring, search operations, etc. But AUVs are very costly and mission-oriented. They are not used to study the ocean on a day-to-day basis to understand the underwater environment better.

This is what Sampriti wants to change with Hydroswarm, by developing drones that can roam the oceans and collect data all the time.

drone1

“Underwater navigation has been a reality for many years but for advanced searches you need maps that are as refined as, say, the Google map. This is where my drone comes in. It can map the ocean, sitting on its bed, and you can zero in on the minutest objects, living or non-living. You can even map underwater pollution with the help of his drone,” she told The Times of India when she was in Kolkata for some time recently.

These drones can withstand the immense pressure in deep oceans, can cover up to 100 square meters in one hour, and can swim across the ocean floors mapping the topography, studying aquatic life, etc.

To commercialize her drone by starting a company, Sampriti joined a business programme at Harvard Business School. She was one of the top eight contenders to reach the finals of MIT $100K Entrepreneurship Competition, winning $15,000.

All pictures: Twitter

Source……..Tanaya Singh in http://www.the betterindia.com

Natarajan

” இறைவனின் அழைப்பை உணர்ந்த போது……”

அண்ணல் காந்தி “நான் 125 ஆண்டுகள் வாழ்வேன்’ என்று பல முறை சொல்லியிருக்கிறார். ஆனால், தனது 79-ஆவது வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.
ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் தாங்கள் இறக்கும் காலம் எப்போது என்பதை முன்னதாகவே உணர்ந்து, அறிவிக்கும் சக்தி படைத்தவர்கள் என்பார்கள். சுவாமி விவேகானந்தர் தன் ஆன்மா பிரியும் நாளை, வங்காளப் பஞ்சாங்கத்தைப் பார்த்து, தானே முடிவு செய்து கொண்டார்.
அதேபோல், மகான் காந்தியும் தனது இறுதிக் காலம் நெருங்கிவிட்டது; இறைவனின் அழைப்பு வந்துவிட்டது என்பதை உணர்ந்தார்; அந்த உள்ளுணர்வை வெளிப்படுத்தவும் செய்தார் தன் சொல்லாலும், செயலாலும்.
இறப்பதற்கு முந்தைய நாள் (29.01.1948) அந்த உள்ளுணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.
அன்று மதிய உணவு வேளையின் போது, தில்லி பிர்லா பவன் புல்வெளி அரங்கில் அமர்ந்திருந்தார். அப்பொழுது நேருஜியின் சகோதரி கிருஷ்ணா ஹதீசிங், கவிக்குயில் சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி, நான்கு வயதான ராஜீவ் காந்தி – ஆகிய நால்வரும் வந்தார்கள். வண்ண வண்ண உடைகள் அணிந்திருந்த அவர்களைப் பார்த்து “இந்த ஏழையைப் பார்ப்பதற்கு இளவரசிகள் வந்திருக்கிறார்களோ!’ என வேடிக்கையாகப் பேசி வரவேற்றார் காந்திஜி. “முன்பை விட உங்கள் உடல் தேறியிருக்கிறது: மிகவும் நேர்த்தியாகக் காணப்படுகிறீர்கள்’ என்று ஹதீசிங் சொன்னதற்கு, காந்திஜி பதில் எதுவும் பேசவில்லை.
அவ்வேளையில் சிறுவன் ராஜீவ், அங்கே சிதறிக்கிடந்த மலர்களை தன் இரு கைகளாலும் சேகரித்து எடுத்து, அண்ணலின் அருகில் சென்று, அவரது காலடிகளில் வைத்தான். உடனே காந்திஜி, ராஜீவைப் பிடித்து, அவரது காதை செல்லமாகக் கிள்ளியபடி “நீ இதைச் செய்யக் கூடாது. மலர்களை இறந்தவர்களின் காலடியில் வைப்பது தான் வழக்கம்’ என்று சொன்னார்.

ஒருமணி நேரம் கழித்து, பிரபலமான “லைஃப்’ பத்திரிகை நிருபர் “மார்கரெட் பூர்சி ஒயிட்’ அண்ணலிடம் பேட்டிக்காக சந்தித்தார். அதுவே காந்திஜி அளித்த கடைசிப் பேட்டியாக அமைந்தது. அந்த நிருபர் “125 வயதுவரை வாழ வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா?’ என்று கேட்க, அதற்கு அண்ணல், “அந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். இன்று உலகில் நிகழும் கொடிய நிகழ்வுகளே அதற்குக் காரணம். இருண்ட உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை’ என்று சற்று அழுத்தமாகவே சொன்னார்.
அதன்பின் மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு, வீடுகளை, சொத்துக்களை இழந்த ஒரு கிராம மக்கள் கூட்டம் காந்தியைச் சந்தித்தது. வந்தவர்களில் பலர் கண்ணீர் விட்டு அழுது கொண்டே கை வணங்கி நின்ற போது, உணர்ச்சி வசப்பட்ட ஒரு நபர் கோபத்தோடும், வேகத்தோடும் காந்தியை நோக்கி “நீங்கள் எங்களுக்கு செய்த தீங்குகள் போதும், எங்களை முழுமையாக அழித்து விட்டீர்கள், எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இமயமலைக்குச் சென்று விடுங்கள். அது போதும் எங்களுக்கு’ என்று கொடிய சொற்களை கொட்டித் தீர்த்தார். இது அண்ணலின் மனதை அதிகம் பாதித்திருக்க வேண்டும். ஆகவேதான், தன் பேத்தி மனு பென் இடம் “ஏழைகளின் இந்த கோபக்குரல் எனக்கு இறைவனின் குரலாகவே தோன்றுகிறது. இறைவன் எனக்கு அனுப்பும் மரண எச்சரிக்கையாக இதனை நான் கருதுகிறேன். ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்வேன். இமயமலையில் எனக்கு அமைதி கிடைக்காது. அவதியுறும் என் மக்களுக்கு உதவுவதே எனக்கு அமைதியைக் கொடுக்கும். மக்களுக்கு மத்தியில் நான் வாழ விரும்புகிறேன். குழப்பத்திற்கு மத்தியிலேயே நான் சாக விரும்புகிறேன். இறைவன் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை எடுத்துக் கொள்ளட்டும். (I want to find peace in the midst of my people: I want to die in the turmoil. God may take me away any time as He wills) என்று சொன்னார்.
இந்த நிகழ்வு அவர் நெஞ்சை மிகவும் பாதித்தது. ஆகவே தான், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, தன் நீண்ட கால சகாவான பிரிஜ் கிருஷ்ணா சந்தி வாலாவிடம் “இதனை இறைவன் எனக்கு அனுப்பிய இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று திரும்பவும் சொன்னார்

கடுமையான இருமலுக்காக டாக்டர் சொன்ன பெனிசிலின் மாத்திரையை எடுத்துக் கொடுத்த போது, என்றுமில்லாத வகையில் கோபத்தை வெளிப்படுத்திச் சொன்னார். “நான் நோயால் அல்லது கட்டியால் இறக்க நேர்ந்தால், இவன் ஒரு “போலி மகாத்மா’ (False Mahatma) என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து உரக்கச் சொல்லுங்கள். ஆனால், ஒரு எதிர்பாராத நிகழ்வால் அல்லது ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகள் என் நெஞ்சிலே பாய்ந்து, எந்த ஏக்கமும் இல்லாமல், ராம நாமத்தை என் உதடுகள் உச்சரித்தவாறே, என் உயிர் போகுமானால், அப்பொழுது இவன் உண்மையான மகாத்மா (True Mahatma) என்று நீங்கள் சொல்லலாம்…’
அண்ணலின் இறுதி நாளான, ஜனவரி 30 அன்று, மாலை 4 மணி அளவில் சர்தார் படேலுடன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தார். அது சமயம் அவரைச் சந்திப்பதற்காக, அவரது சொந்த மாநிலமான “கத்தியவாரி’லிருந்து இரண்டு தலைவர்கள், முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் “பிரார்த்தனை கூட்டம் முடிந்த பின், அவர்களைச் சந்திப்பதாக சொல்லுங்கள். அதுவும் அப்பொழுது நான் உயிரோடு இருந்தால்’ என்று சொன்னார்.
இதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால், காந்தி இருமலுக்காக எடுக்க வேண்டிய மருந்தை – கிராம்பும் வெல்லமும் சேர்ந்த கலவையை – எடுத்து வருகிறேன் என்று மனு பென் சொன்ன போது “இன்று இரவுக்குள் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்? நான் உயிருடன் இருப்பேனா? என்பது கூடத் தெரியாதே’ என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு, தனது இறுதிக் காலம் நெருங்கி விட்டது. இறைவனின் அழைப்பு வந்து விட்டது. தனது மரணம் ஒரிரு நாள்களில் நிகழும் என்பதை மற்ற மகான்கள், ஞானிகள், சித்தர்கள் போல் மகாத்மா காந்தி அடிகளும் முன்னதாகவே உணர்ந்தார். அந்த உள்ளுணர்வை பலமுறை வெளிப்படுத்தவும் செய்தார்.

ஜனவரி 30-ஆம் நாளன்று அண்ணல் மூன்று முக்கிய செயல்களில் ஈடுபட்டார் எனச் சொல்லலாம். “பிரிவினைக்குப் பின் நிகழ்ந்து வரும் குழப்பங்களையும் கொடுமைகளையும் பார்த்த பின்பும் காந்திஜி பாகிஸ்தானின் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறாரே என்று குற்றம் சாட்டி, காந்திஜியின் சேவை இனி தேசத்திற்குத் தேவை இல்லை. அவர் இமயமலைக்குத் துறவியாகச் செல்வதே உசிதம்’ என்ற குரல் வலது சாரிகள், மதவாதிகள், பிற்போக்குவாதிகளிடமிருந்து பலமாக ஒலிக்கத் தொடங்கியது. ÷ஆனால், காந்தியோ தன் அமைதிப்பணி, தான் இல்லாவிட்டாலும், தொடர வேண்டியது முன்பை விட மிகமிக அவசியம் எனக் கருதியிருக்க வேண்டும். ஆகவேதான், அன்று எவரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்தவர்களை ஒரு குறிப்பிட்ட குஜராத்தி பஜனைப் பாடலைப் பாடும்படி பணித்தார்.
அந்த பாடல் வரிகளின் பொருள்:
“ஓ! மனிதா! நீ களைப்படைந்தாலும், இல்லா விட்டாலும், ஓய்வு எடுக்காதே! உன் போராட்டத்தை நிறுத்தாதே! தனிமனிதனாக அதனைத் தொடர்ந்து நடத்து’ என்பதாகும்.
தான் மறைந்தாலும், ஒவ்வொரு தனிமனிதனும் தன் போராட்டத்தைத் தொடர வேண்டும் என மகாத்மா எண்ணியதால் தான், இப்பாடலைப் பாடச் சொல்லியிருக்க வேண்டும்.
“தேசம் இன்று இருக்கும் சூழலில் நேரு, படேல் ஆகிய இரு தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். அவர்களது அறிவும், ஆற்றலும், சேவையும், அர்ப்பணிப்பும் தேசத்திற்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும்’ – என்ற ஆவலை அண்ணல் உறுதிபட வெளிப்படுத்தினார். அதற்கு சர்தார் படேல் இசைவு தெரிவித்தார். அன்றைய தினத்தில் அண்ணலின் இரண்டாவது முக்கியமான பணி இது.
மூன்றாவதாக, காங்கிரஸ் பேரியக்கத்தின் இலட்சியம், அணுகுமுறை, செயல்பாடு ஆகியவற்றைத் திருத்தும், வரைவு ஆவணத்தைத் (Draft Document) தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இதனை காங்கிரஸின் கடைசி அத்தியாயத்தைக் காந்திஜி எழுதிக் கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். அதே நாளில் தான், நாதுராம் கோட்சே, காந்திஜியின் கடைசி அத்தியாயம் எழுதப்படுவதற்கான திட்டத்தைத் தீர்க்கமாக, வகுத்துக் கொண்டிருந்தான்.

பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சரியாக 5 மணிக்கு செல்பவர் மகாத்மா. அன்று 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டதை அறிந்த அண்ணல், தன்னையே நொந்து கொண்டு “நான் என்னையே சிதைத்துக் கொள்ள வேண்டியது தான்’ என்று சொன்னார். அவைதான் அண்ணலின் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தைகள்.
காலதாமதம் ஆகிவிட்டதால், என்றுமில்லாத வகையில் வேகமாக நடந்தார் காந்திஜி. எதிரே ராணுவ பாணியில் காக்கி உடை அணிந்திருந்த கோட்சே, காந்திஜியின் முன் வந்து வணங்கினான். பதிலுக்கு காந்திஜியும் இருகரம் கூப்பி வணங்கினார். கூப்பிய கைகளை எடுக்கும் முன்பாக, கோட்சே, தன் கைத் துப்பாக்கியால் காந்திஜியின் நெஞ்சை நோக்கி 3 முறை சுட்டான். “ஹே! ராம்’ என்ற வார்த்தைகள் அண்ணலின் வாயிலிருந்து கடைசியாக வந்தன. நிலைகுலைந்து மண்ணில் சாய்ந்தார் மகாத்மா.
கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பலர் பயந்து ஓடினார்கள். பலர் கதறி அழுதார்கள். அதிர்ச்சிக்கு உள்ளாகாமல், ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றிருந்தான் கோட்சே. அவன் தப்பிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், அமெரிக்கத் தூதரகத்தின் இளம் அதிகாரி-ஹெர்பர்ட் டாம் ரெய்னர்-கோட்சேயின் தோள்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காவல் அதிகாரி வந்தவுடன் ஒப்படைத்தார்.
அண்ணலின் உடலை மனு பென் தன் மடியில் வைத்துக் கொண்டார். அங்கிருந்த ஓர் இளம் பெண் மருத்துவர், காந்திஜியைத் தொட்டுப் பார்த்தார். உயிர் பிரிந்து விட்டது என்பதை அறிந்தார். ஆனால், அதனை அறிவிக்க அவருக்கு மனோதிடம் வரவில்லை.
செய்தி அறிந்தவுடன் தன் மகள் மணிபென் உடன் முதலில் ஓடிவந்தவர் சர்தார் படேல். அதிர்ச்சியடைந்த நிலையில், அண்ணலின் மணிக்கட்டைப்(Wrist) பிடித்துப் பார்த்தார். இதயம் இன்னும் கொஞ்சமாவது இயங்கும் அறிகுறி இருக்கிறதா? என்ற ஏக்கத்தோடு பார்த்தார் படேல். ஆனால், அந்த அறிகுறி எதுவும் இல்லை போலும்.
அடுத்து வந்த டாக்டர் பி.பி. பார்கவா, உயிர்பிரிந்து 10 நிமிடங்கள் ஆகிவிட்டன என்பதை அறிவித்தார். கூடியிருந்தோர் அழுது புலம்பினர்.
அடுத்து ஓடிவந்து சேர்ந்தவர் அண்ணலின் மகன் தேவதாஸ் காந்தி. அவரது மகன் கோபாலும் உடன் வந்திருந்தார். தன் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறினார். காந்திஜியின் காதருகே தன் முகத்தை வைத்துக் கொண்டு, “பாபு! ஏதாவது சொல்லுங்களேன் என்று அழுதுகொண்டே கேட்டார். அழு குரல் விண்ணை எட்டியது.

அப்போழுது, சர்தார் படேல் “மற்றவர்கள் அழலாம். கண்ணீர் வடித்து தங்கள் துக்கத்தைக் கரைத்துக் கொள்ளலாம். நான் அதைச் செய்ய முடியாதே! என் செய்வேன்! என்றார்.
அடுத்து வந்து சேர்ந்த பண்டித நேரு, ரத்தக் கறை தோய்ந்த காந்திஜியின் உடையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ஒரு குழந்தையைப் போல, தேம்பித் தேம்பி அழுதார். படேல், நேருஜியின் முதுகில் மெதுவாக வருடி, அவரை அமைதிப்படுத்த முயன்றார். நேருவும், படேலும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டு எவரும் கட்டுப்படுத்த முடியாத அளவில் விம்மி, விம்மி அழுதார்கள். (They embraced each other and sobbed uncontrollably). இந்திய தேசத்தின் பிரதம மந்திரியும், உள்துறை அமைச்சரும், தன் தந்தையை இழந்த மகன்களைப் போல் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு, அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பதை பதைத்துப் போனார்கள் மக்கள்.
மக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன். அப்பொழுது ஒரு இளைஞன் கோபமாக “காந்திஜியை ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டான்’ (It was a muslim who murdered gandhiji) எனக் கூக்குரலிட்டான்.
அது கேட்ட மௌண்ட் பேட்டன் “ஏ முட்டாள்! காந்தியைக் கொன்றவன் ஒரு இந்து’ (you fool! It was a Hindu) என்று உரக்கக் கத்தினார். இதனை உடனே சொல்லியிருக்காவிட்டால், நிலைமை பயங்கரமானதாக மாறியிருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
நேருஜியும், படேலும் அதிர்ச்சியாலும் துக்கத்தாலும் நிலைகுலைந்து நின்றார்கள். அப்பொழுது மௌண்ட் பேட்டன், நேருஜியை படேல் அருகில் அழைத்துச் சென்று, இருவரிடமும் மெதுவாக “நீங்கள் இருவரும் இணைந்தே இருக்க வேண்டும் என்பது தான் காந்திஜியின் கடைசி ஆசை’ என்றார். அதனைக் கேட்டு, இருவரும் மனம் வெதும்பினார்கள். ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அழுதார்கள். சமரசப் பேச்சு மூலம் சாதிக்க முடியாத இருவரின் ஒற்றுமையை, காந்திஜியின் மரணம் சாதித்துக் காட்டியது.
அண்ணலின் உடலைப் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்து, மக்களும், விஜயம் செய்யும் வெளி நாட்டுத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நிரந்தர ஏற்பாட்டைச் செய்யலாமா? என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது, அண்ணலின் செயலாளர் பியாரேலால் “அண்ணல் அது கூடாது என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்’ என்றார்.

இந்த விவாதம் தொடர்ந்த போது, பொறுமை இழந்த நேருஜி, “ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்? என்ன எற்பாடு செய்ய வேண்டும் என்பதை பாபு-விடமே கேட்போம்,’ (Why waste time! Lets us go and ask Babu what arrangements must be made) என்றார். அதனைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழத் தொடங்கிவிட்டார்கள்.
அண்ணலின் இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காந்திஜி சுடப்பட்ட போது, மனுவின் கையிலிருந்து விழுந்த மலர் மாலை, அண்ணலுக்கு அணிவிக்கப்பட்டது. கதர் மாலையும் சூட்டப்பட்டது. தலைக்குப் பின்னால் “ஹே! ராம்’ என்று எழுதப்பட்டது. கால் அருகில் “ஓம்’ என எழுதப்பட்டது. உடம்பை மலர்களாலும், அண்ணலே நூற்று நெய்த கதர் ஆடையாலும் மூடத் தொடங்கினார்கன். அப்பொழுது மகன் தேவதாஸ். “பாபுவின் நெஞ்சை மட்டும் (மலர்களாலோ, ஆடையாலோ) மூடாதிர்கள். அது திறந்தே இருக்கட்டும். ஏனென்றால் பாபுவைப் போன்ற நேர்த்தியான நெஞ்சு, உலகில் எந்த வீரனுக்கும் இல்லை’ (I asked for the chest to be left bare. No soldier ever had a finer chest than Bapu’s  என்று சொன்னார்.
பாபுஜிக்குப் பிடித்தமான பஜனைப் பாடல்களை மிகவும் மென்மையான குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கேட்ட நேருஜி, பாடகர் குழுவை நோக்கி ஓடினார். “ஏன் மென்மையாகப் பாடுகீறீர்கள்! உரக்கப் பாடுங்கள்! யார் கண்டார்கள்! உங்கள் பாடல் கேட்டு பாபு எழுந்து வந்தாலும் வந்துவிடுவார்’ – (Sing louder; who knows Bapu may wake up) என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
காந்திஜியின் வாழ்க்கையே ஒரு வரலாறு. அவரது மரணமும் ஒரு தனி வரலாறு. அவர் சுடப்பட்ட போது “ஹே! ராம்!’ என்றார். அவரைச் சுட்டவனும் “ராம்’ என்ற பெயரைக் (நாதுராம் கோட்சே) கொண்டவனாக இருக்கிறானே! கொடுத்தவனே எடுத்துக் கொண்டானா! படைத்தவனே பறித்துக்கொண்டானா?
விடை காண முடியாத வினா இது!
அண்ணல் காந்தி ஓர் அணையா ஜோதி! அந்தத் தீப ஒளியில், அவர்காட்டிய வழியில் நடப்போம் நாம்!

(இன்று மகாத்மா காந்தியின்
69-ஆவது நினைவு தினம்.)
“ஒரு எதிர்பாராத நிகழ்வால் அல்லது ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகள் என் நெஞ்சிலே பாய்ந்து, எந்த ஏக்கமும் இல்லாமல், ராம நாமத்தை என் உதடுகள் உச்சரித்தவாறே, என் உயிர் போகுமானால், அப்பொழுது இவன் உண்மையான மகாத்மா என்று நீங்கள் சொல்லலாம்…’

Source……..முனைவர் அ. பிச்சை in http://www.dinamani.com

Natarajan

The Parallel Worlds Of Puddles In Toronto…!!!

With my Instagram account I try to demonstrate that you don’t need a professional camera to take a nice picture. With the use of a smartphone, one can take a beautiful picture that tells its own story.

Many people don’t like rain, but the puddles left behind can be more than magical. Every time I see a puddle I take out my smartphone and put my camera lens as close as I can to the water and capture its parallel world. These are some of my puddle reflections I have taken in Toronto, Canada last month.

More info: Instagram

Source………Guigurui

Guigurui

Community Member  in http://www.boredpanda.com

Natarajan