வாரம் ஒரு கவிதை…” விடையில்லா விடுகதை “

 

விடையில்லா  விடுகதை …
——————————
விதையில்லாமல் செடி ஒன்று வளர்ந்தால்
விடையில்லா விடுகதையும் சாத்தியமே !
விடை தெரியாத கேள்விகள் பல உண்டு
நம் வாழ்வில் …அவை எல்லாம் விடை
இல்லா கேள்விகள் இல்லையே !
விடுகதையும் அப்படியே …நம் வாழ்வே
ஒரு விடுகதை ! விடை உண்டு வாழ்வின்
விடுகதைக்கும் !
இந்த விடுகதையின் விடை தேடி ஓடி
இங்கும் அங்கும் அலைந்து விடை ஏதும்
தெரியாமல்  “வாழ்வே ஒரு விடுகதை
அது ஒரு தொடர் கதை “
என்று மட்டும் சொல்லத்  தெரியும் நமக்கு !
விதை இல்லாமல் ஒரு செடி முளைக்காது
என்று தெரிந்தால் விடை இல்லாமல் எந்த
விடுகதையும் இல்லை என்பதும் புரியும் !
Natarajan

பறவைகள் மோதிய விமானம்… ஆற்றில் இறக்கிய பைலட்… விமான வரலாற்றில் ஒரு ‘வாவ்’ சம்பவம்!


 

 

 

 

 

 

 

 

 

 

2009 ஆண்டு ஜனவரி 15 குளிர்காலத்தின் வியாழக்கிழமை. நியூயார்க் நகரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கிறது. லகுவார்டியா விமானநிலையம் பரபரப்பாக இருக்கிறது. விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. விமானங்களுக்கு ஓடுபாதையில் இறங்க வேண்டிய நேரத்தை சிக்னலாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். லகுவார்டியாவிலிருந்து US ஏர் பஸ் 1549  A320 என்கிற விமானம் நார்த் கர்லோநியாவில் உள்ள சார்லோட்டி விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகிறது. 66 டன் எடை கொண்ட விமானம் இரண்டு என்ஜின்களைக் கொண்டது. இரண்டு என்ஜின்களும் 40000 குதிரைத் திறன் கொண்டவை. பைலட்டின் பெயர் செஷ்லே சுல்லேன்பெர்கர் (Chesley Sullenberger). வயது 57. இவர் அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக  இருந்தவர். மொத்தம் 19663 மணி நேரம் பறந்தவர். அதில் 4765 மணி நேரம் A320 விமானத்தில் பயணித்தவர்.

ஏர் பஸ் 1549  A320 விமானத்தில் 150 பயணிகளும் ஐந்து விமானச் சிப்பந்திகளும் பயணிக்கிறார்கள். விமானம் கிளம்புவதற்கான ஒப்புதல் நிலைய அதிகாரிகளிடமிருந்து கிடைக்கிறது. விமான நிலையத்தின் நான்காவது ஓடுபாதையிலிருந்து மாலை 3:24:56 நொடிகளுக்கு விமானம் புறப்படுகிறது.

விமானம் 2818 அடி உயரத்தில் 343 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது. விமான முகப்புப் பகுதியில் விமானத்தின் முன்பாக பறவைகள் வருவதை பைலட் பார்க்கிறார். அவை கனடா கீஸ் வகை பறவைகள். 3:27:11  பறவைகள் விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதுகின்றன. பறவைகள் மோதியதில் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதாகின்றன. விமானம் பழுதானதை உணர்கிற பைலட் உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலைத் தெரிவிக்கிறார். 3:27:33 வினாடிகளில் “விமானத்தில் பறவைகள் மோதிவிட்டன.  உடனே விமானத்தை லகுவார்டியாவில் தரை இறக்க வேண்டும் ஓடுபாதையை கிளியர் செய்து கொடுங்கள்” என்கிறார். நிலைமையின் தீவிரத்தை அறியாத விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை நியூ ஜெர்சியில் இருக்கிற டேடேர்போரோ விமான நிலையத்தில் இறக்குங்கள் எனத் தகவல் சொல்கிறார்கள்.

“விமானத்தை டேடர்போரோவில் இறக்குவதற்குச் சாத்தியமில்லை” என பைலட் பதிலளிக்கிறார். விமானம் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்திற்கு மேலாகப் பறந்துக்கொண்டிருக்கிறது. பயணிகளுக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. விமானத்தில் இருக்கிற 150 பயணிகளையும் காப்பாற்றியாக வேண்டிய அசாதாரண சூழ்நிலை. நொடிக்கு 18 அடி கீழ் நோக்கி விமானம் சென்றுகொண்டிருக்கிறது. தீவிரத்தை உணர்கிற பைலட் 3:28:10 நேரத்தில் விமானத்தை அட்சன் பகுதியில் இறக்குவதாக விமான நிலையத்திற்குத் தெரிவிக்கிறார். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் ”அட்சன் பகுதியிலா வேண்டாம்” என்கிறார்கள். காரணம் அட்சன் என்பது ஓடுதள பகுதி அல்ல என்பதே. நியூயார்க் நகரத்தில் இருக்கிற ஒரு ஆறு. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் இருக்கிற நகரின் பரபரப்பான பகுதி. மொத்த விமான நிலையமும் பதற்றத்திற்கு வருகிறது. அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாகச் செல்லும் ஆறு. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள்.

வேறு வழியின்றி விமானத்தை பைலட் அட்சன் ஆற்றுப் பகுதியில் இறக்க முடிவு செய்கிறார். பயணிகளுக்கு நிலைமை எடுத்துச் சொல்லப்படுகிறது. விமான ஒலிபெருக்கியின் மூலம் விமானிப் பயணிகளுடன் உரையாடுகிறார். பயணிகள் பயத்தில் உறைகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத சூழல். விமான நிலையக் கட்டுப்பட்டு அறையில் இருக்கிற அதிகாரிகள் நியூயார்க் கடற்படைக்குத் தகவல் கொடுக்கிறார்கள். கடற்படையின் படகுகள் கப்பல்கள் குறிப்பிட்ட இடத்திற்குக் கிளம்புகின்றன. பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், படகுகள் என அட்சன் ஆறு மிகப்பெரிய விபத்திற்கு தயாராகிறது

3:30  நிமிடத்திற்கு பைலட் விமானத்தை அட்சன் ஆற்றில் இறக்குகிறார். ஆற்றுக்கும் விமானத்திற்குமான இடைவெளி 500 அடியிலிருந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. 100 அடி, 50 அடி, 20 அடி, 10 அடி எனக் குறைகிறது. 0.  அவ்வளவுதான். அதிபயங்கரச் சத்தத்துடன் விமானம் ஆற்றில் பாய்கிறது. அட்சன் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கிற மக்கள் பேராபத்தை உணர்கிறார்கள். விமானம் ஆற்றில் பாய்ந்த அடுத்த நிமிடம் ஆற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. நல்ல வேளையாக விமானம் தீப்பிடிக்கவில்லை. விமானத்தின் தானியங்கி கதவுகள் மூடிக்கொள்கின்றன. கதவுகள் மனித முயற்சியில் திறக்கப்படுகிறது. அடித்துப் பிடித்துக்கொண்டு பயணிகள் விமானத்திலிருந்து வெளியே வருகிறார்கள். சிலர் பதற்றத்தில் வெளியே குதிக்கிறார்கள். குளிர்காலம் என்பதால் நீர் ஐந்து டிகிரி குளிராக இருக்கிறது. விமானத்திலிருந்து வெளியே வந்தவர்களை குளிர் வாட்டி வதைக்க ஆரம்பிக்கிறது. விமானத்தின் இறக்கைப் பகுதிகளில் ஏறி நின்று  கொண்டு உதவிக்கு அழைக்கிறார்கள். விமானம் ஆற்றில் இறங்கிய நான்கு நிமிடங்களில் கடற்படையின் படகுச் சம்பவ இடத்திற்கு வந்து சேர்கிறது. பயணிகளில் ஒருவர் மாற்றுத் திறனாளி. விமானம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க ஆரம்பிக்கிறது. கடற்படை வீரர்கள் பயணிகள் எல்லோரையும் பத்திரமாக மீட்கிறார்கள். படகுகள் மூலம் எல்லோரும் மீட்டு ஆற்றின் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். 3:55 நிமிடத்தில் விமானத்தின் கடைசிப் பயணியும் பத்திரமாக மீட்கப்படுகிறார். எல்லோரும் காப்பாற்றபட்டார்கள் என்பதை உறுதி செய்கிற விமான பைலட் கடைசியாக வெளியே வருகிறார். ஐந்து பயணிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். எழுபத்தி எட்டு பயணிகளுக்குச் சிறிய காயங்கள். சிலர் குளிர் காய்ச்சலுக்கு ஆளானார்கள். ஒரு பயணிக்கு விமானத்தின் எரிபொருள் கண்ணில் பட்டதில் பார்வை போனது.

பெரிதாக எந்த அசம்பாவிதமும் அந்த விபத்தில் நிகழவில்லை. பயணிகள் பைலட்டை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். விபத்து நடந்த இரண்டாம் நாள் விமானம் ஆற்றுப் படுக்கையிலிருந்து மீட்டு நியூ ஜெர்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. விஷயம் நீதி மன்றத்துக்குச் செல்கிறது. விமான நிர்வாகம் விமான பைலட்டை குற்றம் சாட்டுகிறது. விமானத்தை டேடர்போரோ விமான நிலையத்தில் தரை இறக்கி இருக்கலாம்; அதற்கான நேரம் இருந்தது. ஆனால் விமானி அவசரப்பட்டு விமானத்தை ஆற்றில் இறக்கிவிட்டார் என வாதாடுகிறது. விமானி செஷ்லே சுல்லேன்பெர்கர் அந்த நேரத்தில் பயணிகள் உயிர் குறித்து மட்டுமே சிந்தித்ததாகச் சொல்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத விமான நிறுவனம் நீதிமன்ற உத்தரவுபடி ஒரு விமானத்தை சோதனை முயற்சியாக விபத்து நடந்த இடத்திலிருந்து டேடர்போரோ விமான நிலையத்தி இறக்கிக் காட்டுகிறது. ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி ”சோதனை செய்யப்பட்ட விமானிக்கு என்ன நடக்கப்போகிறது எனத் தெரியும். அதனால் அவர் எளிதாக விமானத்தை தரையிறக்கி விட்டார். மேலும் அவர் அதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் என்னுடைய நிலை வேறு” எனச் சொல்லி வாதிடுகிறார்.

விமான நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு  சோதனை முயற்சியில் இறங்குகிறது. நடுவானில் விமானத்தின் இரு எஞ்ஜின்களையும் செயலிழக்கச் செய்து டேடர்பெரோ விமான நிலையத்தில் தரை இறக்குகிற முயற்சியில் இறங்கியது. விமானம் பெரிய சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகிறது. அனைத்தையும் ஆராய்ந்த நீதிமன்றம் செஷ்லே சுல்லேன்பெர்கர் செய்தது சரி எனச் சொல்லி தீர்ப்பளிக்கிறது. செஷ்லே சுல்லேன்பெர்கர் விமானி பல பதக்கங்களைப் பெறுகிறார். விமான நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடை வழங்கியது.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘சல்லி(Sully)’ என்றொரு படம் வெளியானது. டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார்.

Source….George Anthony in http://www.vikatan.com

Natarajan

108 ஆம்புலன்ஸ் சேவை தெரியும்… `515 கணேசன் கார் சேவை’ தெரியுமா?

108 ஆம்புலன்ஸ் சேவை நமக்கெல்லாம் தெரிந்திருக்கும்… `515 கணேசன் இலவச கார் சேவை’ தெரியுமா? தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், `உதவி’ என்று யார் கேட்டாலும், காரை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பிரசவம், அவசர சிகிச்சை… எனப் பல உதவிகளுக்காக 46 வருடங்களாக ஒரு ஆம்புலன்ஸ் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கணேசனின் அம்பாசிடர் கார்.

 

 

 

 

 

 

 

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலங்குடி. ஊரில் இறங்கி, `கணேசன்…’ என்ற பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. `515…’ என்றால் உடனே அடையாளம் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு டீக்கடைக்காரரிடம் `515 கணேசன்’ குறித்து விசாரித்தோம்… “நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டாரு. உதவினு யார் கேட்டாலும், காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாரு. அக்கம்பக்கத்துல இருக்குற புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஊருங்க மட்டும் இல்லை… சமயத்துல வெளி மாநிலங்களுக்குக்கூட அவரோட கார் பறக்கும். `கையில் காசு இல்லை’னு சொன்னா, `எனக்குப் பணம் முக்கியம் இல்லை’ம்பாரு. அவர்கிட்ட இருக்குற பணத்தைச் செலவு செஞ்சு உதவி செய்வாரு 515. (அவரை `515’ என்றுதான் ஊர் மக்கள் அழைக்கிறார்கள்). பெத்த புள்ளைக்கு அஞ்சு ரூபா தர்றதுக்கு யோசிக்கிற இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷர். சாதாரண ஓட்டு வீட்டுலதான் குடியிருக்காரு. `ரேஷன் கடை அரிசியும் பருப்பும் இருந்தாப் போதும்… எங்க வயிறு நிறைஞ்சிடும்’னு சொல்லிட்டு வர்றவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செய்வார். இவரோட நல்ல எண்ணத்துக்கு ஏராளமான பரிசுகள் கிடைச்சிருக்கு. வேற என்ன… ஏகப்பட்ட பட்டங்கள், சான்றிதழ்கள்தான். இவ்வளவு ஏன்… அவர் தெருவுல இருக்குறவங்க, அவங்களோட வீட்டுக்கு வழி சொல்லணும்னா எப்படிச் சொல்வாங்க தெரியுமா… `515 வீட்டுலருந்து நாலு வீடு தள்ளி எங்க வீடு இருக்கு’, `515 வீட்டுக்கு எதிர்ல எங்க வீடு…’ இப்படியெல்லாம்தான் சொல்வாங்க’’ என்று சொல்லி கணேசன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார் டீக்கடைக்காரர்.

பல வருடங்களாக இப்படி ஒரு சேவை செய்ய வேண்டும் என்றால் ஒன்று, அவர் பெரும் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். அல்லது, ட்ரஸ்ட் ஏதாவது நடத்தி, நிதி திரட்டி, அதைக்கொண்டு உதவி செய்பவராக இருக்க வேண்டும்.’ – இப்படியெல்லாம் யோசித்தபடி வழி விசாரித்துக்கொண்டு `515’ வீட்டுக்குச் சென்றோம். நாம் நினைத்ததுபோல அவர் வீடு பெரிய பங்களா எல்லாம் இல்லை. சாதாரண பிளாஸ்டிக் கூரை வேய்ந்த எளிமையான வீடு. வீட்டுக்கருகில் அழகழகான குட்டிக் குட்டிச் செடிகள்… சிவப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்ட தரை. மலர்ந்த முகத்தோடு நம்மை வரவேற்றார் கணேசன். நரைத்த தலை, லுங்கி, சாதாரணமான ஒரு சட்டை. `இவரா மக்கள் சேவை செய்பவர்?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே சரளமாகப் பேச ஆரம்பித்தார் கணேசன்…

“ஆலங்குடிதான் எனக்குச் சொந்த ஊர். அப்பா ஒரு மாட்டுத் தரகர். என் சின்ன வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க. அப்புறம் நானா ஏதேதோ வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினேன். வாழ்க்கையில முன்னேறிக் காண்பிச்சவங்க எல்லாருக்குமே மனைவிதான் உதவியா இருப்பாங்க. எனக்கும் என் மனைவி தெய்வானைதான் எல்லாமே. எங்களுக்கு அஞ்சு பெண் குழந்தைங்க… எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு…’’ என்றவரிடம், “அது ஏன் உங்களை `515’-னு எல்லாரும் கூப்பிடுறாங்க?’’ என்று கேட்டோம்.

அது, 1968-ம் வருஷம். ரோட்ல நடந்து போய்க்கிட்டு இருந்தேன். ஒருத்தர், தன்னோட மனைவியை ஒரு தள்ளுவண்டியிலவெச்சு தள்ளிக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தாரு. ஏன்னு பார்த்தப்போதான் தெரிஞ்சுது… அந்தப் பொண்ணு நிறைமாத கர்ப்பிணினு. என் மனசு உடைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்கு வந்து, என் மனைவி தெய்வானைகிட்ட விஷயத்தைச் சொன்னேன். `இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு உதவறதுக்கு ஏதாவது பண்ணணும்’னு என் ஆதங்கத்தையும் சொன்னேன். அவங்க, `இதை உங்களால மாத்த முடியுமா… இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு உங்களால என்ன பண்ண முடியும்’னு கேட்டாங்க. `முடியும்’னு சொன்னேன். நான்வெச்சிருந்த பழைய இரும்புக்கடையை வித்தேன். 17,500 ரூபா கிடைச்சுது. அந்தப் பணத்துல, செகண்ட் ஹேண்ட்ல ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அந்த காரோட நம்பர் TNZ-515. நான் முதன்முதல்ல வாங்கின காரோட நம்பரையே `515 இலவச சேவை கார்’னு பேரா வெச்சேன். `உதவி’னு கேட்குறவங்களுக்கு, நேரம் காலம் பார்க்காம காரை எடுத்துட்டுப் போய் என்னால ஆனதைச் செய்றேன்…’’ அடக்கத்தோடு சொல்கிறார் கணேசன்.

கிட்டத்தட்ட 46 வருடங்களாக இந்தச் சேவையைச் செய்துவருகிறார் கணேசன். அதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. காருக்கு டீசல் போடுவது, அது ரிப்பேர் சரி பார்ப்பது… என அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார். கார் சேவைக்கு வேளை வராத நேரத்தில், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்துகிறார். இதுவரை 19 அம்பாசிடர் கார்களை வாங்கியிருக்கிறார் கணேசன். ஒரு கார் பழுதாகிவிட்டது, இனி ஓடும் கண்டிஷனில் இல்லை என்று தெரிந்ததுமே அடுத்த காரை வாங்கிவிடுவார். எல்லாமே செகண்ட் ஹேண்ட் கார்கள்தான். அத்தனைக்கும் `515’தான் பெயர். அவரேதான் முதலாளி, அவரேதான் டிரைவர்!

இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றிருக்கிறது, விபத்துக்கு ஆளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றிருக்கிறது 515 கார். அது மட்டுமல்ல… பணம் இல்லாமல், சடலத்தை ஊருக்குக் கொண்டு போக முடியாமல் தவிப்பவர்களுக்கும் இவரின் கார் உதவிக்கு ஓடி வரும்… இலவசமாக! அப்படி, இது வரை 5,400 சடலங்களை பல ஊர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. கொச்சின், பெங்களூரு, தூத்துக்குடி… என கணேசன் பயணித்த ஊர்கள் எண்ணற்றவை. நாம் அவரைப் பார்ப்பதற்கு சற்று முன்னர்தான் திருநெல்வேலி வரை ஒரு கர்ப்பிணியை அழைத்துச் சென்று, விட்டுவிட்டு வந்திருந்தார்.

நாம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே செல்போனில் அவருக்கு அழைப்பு! உள்ளே போனவர், கார் சாவியுடன் வெளியே வந்தார். `நீங்க என் மனைவி தெய்வானைகிட்ட பேசிக்கிட்டு இருங்க. பக்கத்துல ஒரு பொண்ணுக்குப் பிரசவ வலியாம்… ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்துடுறேன்.’’ நம் பதிலை எதிர்பாராமல், காரை எடுத்துக்கொண்டு விரைந்தார் கணேசன். `காலம் மாறினாலும், சிலரின் குணங்கள் மாறாது’ என்பார்கள். உலகெங்கும் நாம் அறியாத எத்தனையோ கணேசன்கள், பிரதிபலன் பார்க்காமல் யாருக்கோ உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 515 கணேசனின் சேவையை மனமார வாழ்த்தலாம், வணங்கலாம்!

Source….Priyadharshni in http://www.vikatan.com

Natarajan

 

வாரம் ஒரு கவிதை….” என் முதல் கனவு “

 

என் முதல் கனவு
—————
அம்மாவின் கருவறையில் நான் கேட்ட முதல் ஒலி
அம்மாவின் குரலும் பாட்டும் …இதுதான் உன் அம்மா
என்று என் அம்மாவின்  முகத்தை என் மனத்
திரையில் படம் பிடித்துக் காட்டியது
என் முதல்  கனவே ..அதுவே  நான்
பார்த்த முதல் ஒலியும் ஒளியும் !
நான் கண்ட அந்த முதல் கனவு  நனவு ஆனது என்
அம்மாவின் முகம் நான் பார்த்த முதல் நாள் !
வாழ்வில் எத்தனை எத்தனை கனவுகள் !
கனவு அத்தனையும் நனவாகவில்லையே !
அத்தனை ஏன் ?  நேற்று இரவு கண்ட
கனவு என்ன என்று விடிந்தால் புரிவதில்லையே !
என் முதல் கனவு மட்டும் எனக்கு இன்னும்
மறக்க வில்லையே !  ஏன் ?
அது எனக்கு முதல் கனவு மட்டும் அல்ல !
நனவை கனவில் அடையாளம் காட்டிய
இனிய புதுமைக் கனவும் அதுவே !
இன்றும் என்றும் அதுவே எனக்கு
முதல் கனவு ! முடிவே இல்லாத
முதன்மை கனவும் அதுவே !
My Kavithai  in http://www.dinamani.com dated 26th Nov 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை ….” யாருமில்லாத மேடையில் …”

யாருமில்லாத மேடையில் …
————————–
குளியல் அறையில் நான் பாடிய
பாட்டு …யாருமில்லாத மேடையில்
அரங்கேறிய என் முதல் கச்சேரி !
என் வீட்டு மொட்டை மாடியில்
நான் ஆடிய நடனம் …யாருமில்லாத
மேடையில் என் முதல் நாட்டியம் !
நிலைக் கண்ணாடி முன் நின்று
நான் பேசிய பேச்சு ..யாருமில்லாத
மேடையில் என் முதல் சொற்பொழிவு !
யாருமில்லாத மேடையில் பேசி,
பாடிய நான் இன்று யாரும் இல்லாத
ஒரு அரங்கு முன்னாலும் பேசத்
தெரிந்த ஒரு திறமைசாலி !
ஆம் …எனக்கு வேலை இன்று
ஒரு தொலைக் காட்சி செய்தி
வாசிக்கும்  மேடையில் !!!
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 19th Nov 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…”மேகத்தில் கரைந்த நிலா …”

மேகத்தில் கரைந்த நிலா …
————————-
நிலவு உனக்கு மேகமே மேலாடை
மேலாடை உன் முகம் மறைக்க
முழு நிலவு நீயும் இள நிலவாய்
புன்னகைப்பாய் உன் மேலாடைக்குப்
பின்னால் எப்போதும் !
மேகம் கரைந்து மழை பொழியும்
நேரம் கரை புரண்டு ஓடுது மழை
நீர் வெள்ளம் என் மண்ணில் இன்று !
கடற்கரையின்  கரையிலும் கூட
மேகக் கரைசலின் தாக்கம்.. இது
வரை நான் பார்க்காத ஒன்று !
முழு நிலவு நாளில் உன் முகம் காண
வானம் பார்க்கிறேன் நான் இன்று !
மேக மேலாடைக்குப் பின்னால்
மறைந்து இருக்கிறாயா நிலவே ?
இல்லை …நிலவு  நீயும் மேகக் கரைசலில்
கரைந்து கீழே என் மண்ணில் விழுந்து
கடல் நீரில் கலந்து விட்டாயா ? …சொல்லு நிலவே !
Source…My Kavithai as appeared in http://www.dinamani.com dated 4th Nov 2017
K.Natarajan

Chandrakant Bhide: Here is Why RK Laxman Was a Fan of this Diligent Typist…

A typist is required to be fast and accurate, and while he proved to be precisely that, Bhide was much more too. Throw in artistic to those set of skills, and you have Chandrakant Bhide.

“Sachin Tendulkar’s curls gave me the most trouble!”

Chandrakant Bhide is a typist by profession. In 1967 he joined the Union Bank of India and worked there for 3 decades.

A rather implausible scenario for Tendulkar’s curls to give him grief, right?

A typist is required to be fast and accurate, and Bhinde proved he was precisely that but more too.

Throw in artistic to those set of skills, and you have Chandrakant Bhide.

 

 

 

 

 

 

Chandrakant Bhide and a typed out sketch of RK Laxman’s the Common Man

“Art helped me meet important people. How else does a modest typist like me get to meet and be appreciated by people like R. K. Laxman and Mario Miranda,” questions Mr Chandrakant Bhide?

Mr Bhide is anything but ‘just a typist’. His art is indicative of his sheer talent and why the likes of the above-mentioned greats were his fans.

Growing up, he always wanted to join an art school – specifically the Sir J.J. School of Art in Mumbai.

But financial constraints forced him to take a more secure job.

“One day I was asked to type out a list of phone numbers, instead of typing a regular list, I made one in the shape of a telephone instrument,” he remembers. That was the beginning of many more artistic endeavours to come.

 

“I typed out Lord Ganesha using the ‘x’ key and it was published in the Maharashtra Times newspaper in 1975. I slowly started improvising and started using other keys like ‘_’, ‘=’, ‘@’, ‘-’, ‘,’ in my sketches,” recalls Bhide.

His father’s words inspired him to be better and do better. Each sketch takes him about 5-6 hours to complete.

 

 

 

 

 

Bhide’s sketches of Bal Gangadhar Tilak and Sardar Patel done on the typewriter

“I hold the paper with my left hand and use the fingers on my right hand to type out the symbols. The different shades in a sketch are added by using a light or a hard touch on the keys. My hands start aching after 10-15 minutes, and so I need constant breaks,” he adds.

One day, Mr Bhide sketched RK Laxman’s, Common Man. It was a time when Xerox machines had just made their appearance. His friend helped him get copies and requested to keep the original.

 

 

 

 

 

A huge fan of RK Laxman’s work, Bhide has made several sketches of Laxman’s iconic “Common Man”, winning him the famous illustrator’s admiration

“I wanted to show the sketch to R.K. Laxman sir. I went to his office without an appointment and showed it to the cartoonist. Laxman sir was so thrilled with it that he said the result could not have been better with a pen and brush. We spent 1.30 hours talking, and I even mentioned my lost dream of studying in Sir J.J. School of Art, and he said, you can be an artist anyway!” he recalls.

Bhide continued to keep in touch with the famed cartoonist and takes great pride in having several original ‘Common Man’ sketches.

Over the years, Mr Bhide has created almost 150 sketches including several of people he admires including Amitabh Bachchan, Dilip Kumar, Sunil Gavaskar, Dr Ambedkar, Lata Mangeshkar and more.

But it was Sachin Tendulkar’s curls that frustrated the master typer! “I finally used the ‘@’ symbol to get it right,” he recalls.

One of his fondest memories was meeting up with renowned cartoonist and illustrator Mario De Miranda via a common friend, the famous Behram Contractor also known as the Busy Bee. “I was nervous when I rang the bell to Mario’s home, but he soon put me to ease. Once he saw some of my sketches based on his famous characters (Ms Fonseca, Godbole and Boss), he autographed one of my sketches with the words – ‘I wish I could draw like you type.’ That was my biggest compliment,” says Mr Bhide.

Mario De Miranda encouraged and inaugurated Mr Bhide’s first exhibition. He went on to hold several more, including ones in festivals like IIT Mumbai’s Mood Indigo and IIT-Kanpur’s Antaragini.

Mr Chandrakant Bhide retired from the Union Bank of India in 1996. He approached the administration department with a request to buy his beloved companion, his typewriter but was denied it as it was against policy. But on the day of his farewell, the chairman of the Bank allowed him to buy it for just Rs. 1.

Today, the typewriter still holds a place of pride in his household. “It has been with me for fifty years now, I understand it, it understands me,” he chuckles.

Source….Uma Iyer in http://www.the betterindia.com

Natarajan

 

 

 

வாரம் ஒரு கவிதை…” தீ தின்ற உயிர் “

 

தீ தின்ற உயிர்
—————-
மகனே நீ உண்ணும் உணவு மணக்க.. தீ நான்
என் உயிர் கொடுக்கிறேன் தினமும் !
நீ உயிர் வாழ என் உயிர் தேவை உனக்கு நாளும் !
நான் உயிர் பிழைக்க நீ எதற்கு எனக்கு ?
மகனே … நீ ஏற்றி வைத்திருக்கிறாயே   சாதி மதத் தீ
அது … உன் அரசியல்  விளையாட்டில் நீ குளிர் காய !
பெட்டி பெட்டியாய் நீ பணம் சேர்க்க வட்டிக்கு
வட்டி , வட்டி மேல் வட்டி  என்னும் கந்து வட்டி
தீயும் நீ ஏற்றி வளர்க்கும் தீயே !  ஆனால்
மகனே ..கந்து வட்டி தீ ஒரு ஆட்கொல்லி தீ !
சாதி மத பேதம் இல்லாத கந்து வட்டி  கலாச்சாரம்
வட்டிக்கு கடன் வாங்கிய பலரை  உன் முன்னால்
முட்டி போட வைக்கும் … தட்டி கேட்க முடியாது உன்னை !
வட்டி கட்ட முடியாமல் புழுங்கி புகைந்து துடிக்கும்
ஒரு ஏழையின் குடும்பத்தை துடிக்க துடிக்க
பொசுக்குமே  உன் கந்து வட்டி தீ !
அவர் உயிரைப் பறித்து தின்றது உன்னுள் எரியும்
பணம் பணம் என்னும் பேராசை  தீ !
உன் பேராசை தீ தின்ற உயிரை,…  அக்னி நான்
தின்றேன் என்று மாற்றி சொல்லி விடாதே
மனிதா !
My Kavithai as appeared in http://www.dinamani.com dated 29th Oct 2017
Natarajan

God on the Runway ….

As part of the custom, the idols along with temple elephants are taken to Shangumugam beach for the ritualistic bath.

For two days in a year, the Thiruvananthapuram International Airport halts its flight operations for five hours on the basis of a ‘Notice to Airmen’ (NOTAM).

Respecting a centuries old temple tradition, the airport runway makes way for a grand procession.

Saturday is one of the two days in a year that sees members of the Travancore royal family, temple priests, police, and even elephants walk down the runway, as part of the temple procession. Hundreds of people also escorted the idols past the 3400-metre runway.

Flights have been halted between 4pm and 9pm at Thiruvananthapuram on Saturday.

 

The ‘Arat’ procession marks the conclusion of the Painkuni festival and the Alpassi festival. Painkuni and Alpassi are references to Tamil months. While Painkuni is in April, Alpassi is in October.

Arat is the ritualistic bath procession of temple idols at Sree Padmanabha Swami temple in Thiruvananthapuram. The procession, which began at 5pm, crossed the runway at 6.30 pm.

As part of the custom, the idols along with temple elephants are taken to Shangumugam beach for the ritualistic bath. The procession sees royal family members wearing traditional attire and carrying swords. All priests along with royal family members take a dip into the sea three times. The idols are also given a ritualistic bath.

The procession returns to the temple on the same route, accompanied by people carrying traditional fire lamps.

They have to, however, ensure that they clear the runway by 8.45pm.

“The ritual was started centuries ago when the Travancore royal family ruled here. Even after the airport was established, the procession continued to pass through the runway. When the airport was established in 1932, it was under the Royal Flying Club. Since then, the runway was open for these processions. Even after it was converted into an international airport in 1991, the practice continued as the tradition is very important to this place,” an airport official told TNM.

Since the runway is part of traditional arat procession route, the Airport Authority of India issues passes to those who participate in it. Only those who have a pass can enter the route and cross the runway to head to the beach.

“There are strict restrictions inside the airport area. CISF officials guarding the area allow only people with passes. We issue the pass only to people in the list given by temple authorities,” he added.

NOTAM is issued a week before these two dates in the year, so that all the international flights can change their schedule. NOTAM is a notice issued to pilots or airline operators before flights, alerting them of the circumstances or changes in aeronautical facilities or about local procedures that affect safety.

 

 

 

 

 

 

 

 

Source….Haritha John in http://www.the newsminute.com

Natarajan

 

 

வாரம் ஒரு கவிதை …” வான வேடிக்கை “

வான  வேடிக்கை ….
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இடி மின்னல் வேடிக்கை காட்டி வானம்
நான் தப்பாமல் நனைக்கிறேன் உன் மண்ணை !
வேடிக்கை காட்டியே  இந்த உலகுக்கு  உயிர்
கொடுப்பது  என்  வாடிக்கை !
உயிர் கொடுக்கும்  எனக்கு நீ கொடுக்கும் பரிசு
என்ன தெரியுமா உனக்கு ?..மகனே !
வான வேடிக்கை என்னும் பெயரில் வானம்
என் நாடித்  துடிப்பையே அடக்க நினைக்கிறாயே !
மகனே …இது நியாயமா ?
நீல வானம் வேண்டும்,  மாசில்லா காற்று
வேண்டும் எனக்கு என்று மேடையேறி பேசி விட்டு
எந்த ஒரு வெற்றி விழாவுக்கும் வேண்டும் ஒரு
வான வேடிக்கை என்று நீ கேட்பது வேடிக்கையிலும்
வேடிக்கை மகனே !
கரி எடுத்து என் முகத்தில் பூசி விட்டு ,வேண்டாம்
எனக்கு கரு வானம் …வேணும் எனக்கு
ஒரு நீல வானம் என்னும் உன் வாதம் ஒரு
ஒரு வேடிக்கை வினோதம் , மகனே !
My Kavithai in http://www.dinamani.com dated 23rd Oct 2017
Natarajan