environment
மரச்செக்கரைத்து எண்ணெய் எடுக்கும் பட்டதாரிகள்….
நம் முந்தைய தலைமுறை வரை, மரச்செக்கில் அரைத்து எடுத்த எண்ணெயால் சமைத்த உணவுகளை உண்டு, ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால், இன்றோ, எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே, ஏகப்பட்ட நோய்க்கு ஆளாகி விடுகிறோம்.
‘சுத்திகரிக்கப்பட்டது’ என்ற பெயருடன் வரும் எண்ணைகள் எல்லாம், உண்மையில், மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே!
இதனாலேயே, ‘செக்கு எண்ணெய் உபயோகியுங்கள்…’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வருகின்றனர். செக்கு எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
இரும்புச்செக்கில், 350 டிகிரி வெப்பத்தில் அரைத்து, தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்து, ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதை தான், செக்கு எண்ணெய் என்று கூறி, விற்கின்றனர், பலர். இது, நம் உடல் நலத்திற்கு உதவாது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம், 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதில், உயிர்ச்சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும், உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
மரத்தாலான செக்கை பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து, விற்பனை செய்கின்றனர், திருச்சியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர்.
திருச்சி, தாராநல்லூர், எஸ்.வி.ஆர்., கார்டன் பகுதியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட சிறிய கட்டடத்தில், மரத்தினாலான செக்கு வைத்துள்ளனர், எஸ்.அகஸ்டின் ராஜா மற்றும் எஸ்.ஜான்பால் ராஜிவ்.
பட்டதாரிகளான இவர்கள், சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான செய்திகளை படித்து, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெயை நாமே உற்பத்தி செய்வோம் என, முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, சிறிய கட்டடத்தில் மரச்செக்கு அமைத்து, எள், தேங்காய் மற்றும் கடலையை செக்கில் தனித் தனியே ஆட்டிப் பிழிந்து, எண்ணெய் எடுத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
சந்தையில் விற்பனையாகும், பிற சமையல் எண்ணெய்களின் விலையை விட, இதன் விலை கூடுதலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகஸ்டின் ராஜா கூறுகையில், ‘நம் முன்னோர் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை, அப்படியே பயன்படுத்தினர். உடற்பயிற்சி முடிந்ததும், ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்னையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்கு பதிலாக, நல்ல எண்ணெய் என்று குறிப்பிட்டனர்.
‘அதனால் தான், நாங்களும் பாரம்பரியத்தை காக்கும் வகையில், மரத்தாலான செக்கு அமைக்க முடிவு செய்தோம். வேம்பு மரத்தில் உலக்கையும், வாகை மரத்தில் உரலும் கொண்ட செக்கு அமைத்து, மின்மோட்டார் உதவியுடன், செக்கை இயக்குகிறோம்.
‘முதலீட்டுக்கு ஏற்ப, சொற்ப லாபத்தில், விற்பனை செய்கிறோம். இயந்திரத்தில் எண்ணெய் பிழியும் போது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்து விடுவதால், அதில் கிடைக்கும் புண்ணாக்கில், உயிர்ச் சத்துகள் மிஞ்சாது. ஆனால், மரச்செக்கில், மெதுவாக எண்ணெய் பிழிவதால், 80 சதவீதம் மட்டுமே எண்ணெய் கிடைக்கிறது. இதனால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் அதிகமிருக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும், உயிர்ச்சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
‘மரத்தாலான செக்கை பயன்படுத்தி, எண்ணெய் ஆட்டும் முறை குறித்து, இலவசமாக கற்றுத் தருகிறோம்…’ என்றார்.
சகோதரர்கள் இருவரின் உடலிருந்தும் வழிவது வியர்வையா, எண்ணெயா என்று தெரியாத அளவிற்கு, கடுமையாக உழைக்கும் இவர்களது உழைப்பிற்கு பின் இருக்கும் லட்சியமும், சமூக அக்கறையும், இவர்களை நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்!
இவர்களை வாழ்த்த நினைத்தால், தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 96777 90080.
Source….
எல்.முருகராஜ் in http://www.dinamalar.com
natarajan
” Tiger in the Toilet ” !!!
Once a stranded Tiger entered the washroom of a Corporate Office and hid in a dark corner. Since there were people outside the washroom throughout the day, the Tiger was afraid to come out.
Many people frequented the washroom, but the frightened Tiger didn’t touch anyone. However, after four days it couldn’t bear hunger anymore, so it caught a man who had come in, and ate him.
This man happened to be an Assistant General Manager in the organization, but nobody noticed his disappearance.
Since nothing untoward happened, the Tiger became bolder and after two days caught another man and ate him.
This man was the General Manager of the organization.
Still, nobody was worried over his disappearance (Some people were even happy that he was not seen in the office).
Next day, the Tiger caught the Vice President who was a terror in the organization. Again nothing happened.
The Tiger was very happy and thought that this was the perfect place for him to live.
The very next day the happy Tiger tried to catch a man who had entered the washroom while balancing a tray of teacups in one hand.
The frightened man fell unconscious. Within fifteen minutes a huge hue and cry ensued, and everyone in the office started looking for the man. The search team reached the washroom, flushed out the Tiger and saved the unconscious man. He was the tea boy in the office.
*Moral of the Story*
It is not the position, but our usefulness to others that makes us lovable and respectable. If your subordinates are happy in your absence that means you are not a perfect leader.
இசைகுயிலுக்கு ஓர் நினைவாஞ்சலி!
அனுதினம் பாரதத்தை தனது சுப்ரபாதத்தால் துயிலெழுப்பும் இசைக் குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூறாவது பிறந்த நாள் இன்று.
தமிழிசை, பட்டிமன்றம், சொற்பொழிவு, ஆன்மிக இலக்கியம் என்று பல்துறையில் முத்திரை பதித்திருக்கும் முனைவர் பேராசிரியை சரஸ்வதி ராமநாதன், “அம்மா’ என்று அவர் அழைக்கும் இசை அரசி எம்.எஸ் முன்னிலையில் தமிழிசைப் பாடல்கள் பாடி எம்.எஸ் அம்மாவின் பாராட்டுப் பெற்றவர். செட்டிநாட்டு வட்டாரங்களில் கச்சேரி செய்ய எம்.எஸ் வரும் போதெல்லாம் முன் வரிசையில் இடம் பிடித்து, எம். எஸ். அவர்கள் பாடி, கேட்டு, அவரையே படித்து வளர்ந்தவர். சென்னை கம்பன் கழகத்தின் “கம்பன் அடிப்பொடி’ விருதினை சரஸ்வதி ராமநாதனுக்கு வழங்க பரிந்துரைத்ததே எம்.எஸ். அம்மாதான் என்கிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.
எம். எஸ் அம்மா குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து;
“மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான் எம். எஸ். சுப்புலட்சுமி என்றாகியது. அவரது அம்மா சண்முகவடிவு நன்றாக வீணை வாசிப்பார். ஒரு முறை மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சண்முகவடிவு என்ன நினைத்தாரோ வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு, “அம்மா குஞ்சம்மா இங்கே வா…” என்று மகள் சுப்புலட்சுமியை அழைத்தார். வெளியே சுப்புலட்சுமி என்றாலும், வீட்டில் குஞ்சம்மாள் என்றுதான் அவரை அழைப்பார்கள். பத்து வயது சிறுமியான குஞ்சம்மாள் அம்மா மேடைக்கு அழைத்ததும் “குடு குடு’ என்று மேடை ஏறி நிற்க.. “சபைக்கு நமஸ்காரம் செய்திட்டுப் பாடு” என்று சண்முகவடிவு சொல்ல… மேடைப் பயம், சபைக் கூச்சம் ஏதும் இன்றி இந்துஸ்தானி ராகத்தில் “ஆனந்த ஜா…’ என்ற மராட்டியப் பாடலை அருமையாகப் பாட…. கச்சேரிக்கு வந்திருந்த அனைவரும் கை தட்டி ரசித்தார்கள். இதுதான் எம்.எஸ் அம்மாவின் முதல் மேடை அனுபவம்.
இன்னொரு தருணத்தில், சண்முகவடிவு மகள் எம்.எஸ்ஸுடன் சென்னை சென்றிருந்தார். சண்முகவடிவு வீணை மீட்ட அதைப் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட, ’டுவின்’ இசை நிறுவனம் சென்னைக்கு அழைத்திருந்தது. அங்கேயும் அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில் எம். எஸ். பாட… இசை நிறுவனத்தார் இப்படி ஓர் இனிமையான குரலா.. என்று ஸ்தம்பித்து நின்றனர். இசைப் பொக்கிஷத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை அங்கீகரிக்கும் விதமாக, உடனே, “மரகதவடிவும் செங்கதிர்வேலும், விதிபோலும் இந்த…’ என்னும் இரண்டு பாடல்களை எம். எஸ்ஸை பாடச் சொல்லி இசைத்தட்டாக வெளியிட்ட பின்னர்தான் வேறு வேலை பார்த்தனர். இசைத்தட்டு ஸ்டிக்கரில், பாடியிருப்பது “மிஸ். சுப்புலட்சுமி, வயது பத்து’ என்று அச்சிட்டிருந்தனர்.
எம்.எஸ் அம்மாவின் அதிகாரப்பூர்வ மேடைக் கச்சேரி 1935 -ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அவருக்கு வயது பத்தொன்பது. மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை தட்க்ஷிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவின் போது அம்மாவின் சங்கீதக் கச்சேரி அற்புதமாக அரங்கேறியது. அன்றைய மைசூர் சமஸ்தானத்தின் அரச சபையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கம் வாசிக்க எம்.எஸ். பாட… தென்னகம் முழுவதையும் அவரின் குயில் குரல் இனிமை, தென்றலாகத் தழுவி சிலிர்க்க வைத்தது.
தெய்வீக அழகும், சுருண்ட முடியும், பாடும் போது பாவங்களை முகத்தில் நர்த்தனம் ஆடவிடும் திறமையை அம்மாவிடம் கண்ட திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் அம்மாவை தனது சொந்தப் படமான “சேவாசதனம்’ படத்தில் கதாநாயகியாக்கினார். 1936-இல் அம்மாவின் திரையுலகப் பிரவேசம் நடந்தது. அப்போது பாடல்கள் சிறப்பாக அமைந்தால் படம் வெற்றி பெறும் என்ற நிலைமை. “சேவாசதனம்’ பாடல்கள் பிரமாதமாக அமைந்திருந்ததால் படம்அமோக வெற்றி பெற்றது. “சேவாசதனம்’ படத்தில் எம்.எஸ். பாடிய “மா ரமணன், உமா ரமணன்’, “சியாம சுந்தர கமலவதன’, “ஆதரவற்றவர்க்கெல்லாம்’ போன்ற பாடல்களைப் பாடாத, முணுமுணுக்காத ஆண் பெண் அன்று தமிழகத்தில் இல்லை. அந்த அளவுக்கு அந்தப் பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. இந்தப் படம் மூலமாக அறிமுகமான தேச விடுதலை தியாகி டி.சதாசிவம் அவர்களை எம். எஸ். அம்மா 1940 -இல் திருமணம் செய்து கொண்டார்.
“சகுந்தலை’ படத்தைத் தயாரித்த ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் எம்.எஸ்ஸை தங்களது புதிய தயாரிப்பான “சாவித்திரி’ பட நாயகியாக நடிக்க வைக்க விரும்பினர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று எம். எஸ் வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். சில நாட்கள் கழித்து, கல்கி இதழைத் தொடங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டதால், “சாவித்திரி’ படத்தில் நடிக்கிறேன் என்று தகவல் அனுப்பினார்.
“நீங்கள் நாயகியாக நடிக்க சம்மதிக்காததால் மராத்தி நடிகை சாந்தா ஆப்தேயை நாயகியாக போட்டுவிட்டோம். நாரதர் வேடத்திற்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. படத்தில் நாரதருக்குத்தான் அதிக பாடல் காட்சிகள். நீங்கள்தான் நாரதராக நடிக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார். கணவர் சதாசிவம் “ம்ம்.. தாராளமாக நடி” என்று உற்சாகப்படுத்தினார். எம். எஸ்ஸும் உடனே சம்மதித்தார். இந்த செய்தி வெளியே தெரிந்ததும், பட வெளியீட்டாளர்கள் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற தயாரிப்பாளரை மொய்த்து விட்டார்கள். பட உரிமையும் நல்ல விலைக்கு விற்பனையானது.
எம்.எஸ்ஸுக்கு சம்பளமாக கிடைத்த நாற்பதாயிரத்தை அப்படியே கல்கி இதழ் தொடங்க தந்துவிட்டார்.
1946-ஆம் ஆண்டு எம். எஸ் நடித்து வெளியான “மீரா’ திரைப்படம் தமிழகத்தைக் கொள்ளைக் கொண்டது. கல்கி எழுதிய “காற்றினிலே வரும் கீதம்’, “கிரிதர கோபாலா’ போன்ற பாடல்கள் தமிழக மக்களின் செவிகளில் தேனைச் சொரிந்தன. அந்த கானங்களின் இனிமையில் தமிழகம் மயங்கிப் போனது. தமிழில் வெற்றி கண்ட “மீரா’ ஹிந்தியிலும் “மீரா’வாகவே தயாராகி அகில இந்திய சாதனைப் படமானது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, எம். எஸ். அவர்களை ’இசை அரசி’ என்று அழைக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்த இசை அரசிக்கு முன் நான் வெறும் பிரதமர் மட்டுமே.. என்று நெகிழ்ந்து பாராட்டி, எம். எஸ். அவர்களின் குடும்ப நண்பர் ஆனார் நேரு.
சபர்மதி ஆசிரமத்தில் அண்ணலின் முன்னிலையில் அம்மா பல முறை பாடியுள்ளார். நாடு விடுதலையான 1947- ஆம் ஆண்டு வந்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 -இல் எம். எஸ். பாட வேண்டும் என்று காந்தி விரும்ப.. தான் பாடிய பாடலை ஒலி நாடாவில் பதிவு செய்து அம்மா அனுப்பி வைத்தார். பிரபல காந்தி அஞ்சலி பாடல்களான எம். எஸ். பாடிய “வைஷ்ணவ ஜனதோ’, “ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல்கள் அண்ணல் காந்தியை வென்ற பாடல்கள். காந்தியின் மறைவிற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாடல்களாகிவிட்டன.
Source…By – பிஸ்மி பரிணாமன் in http://www.dinamani.com
Natarajan
Why iodine is added to Salt ….?
Iodine in a gaseous state. The fact that it is purple in this state is how it got its name, from the Greek for violet (iodes)
Today I found out why iodine is added to salt.
Iodine first began being added to salt commercially in the United States in 1924 by the Morton Salt Company at the request of the government. This was done as a response to the fact that there were certain regions in the U.S., such as around the Great Lakes and in the Pacific Northwest, where people weren’t getting enough iodine in their diets due to it not being prevalent in the soil in those regions. Among other problems, this caused many people to develop goiters (swelling of the thyroid gland, also sometimes spelled “goitre”).
About 90% of people who develop a goiter do so because of a lack of iodine in their diets, so the simple solution was to add iodine to something pretty much everyone consumes fairly regularly, namely salt. This practiced was not thought up by the U.S., but was copied from the Swiss who were adding iodine to salt at this time for the same reason. This resulted in researchers at the University of Michigan testing this practice out with good results and subsequently Morton Salt Company adopting the practice on a national level.
This ultimately didn’t cost Morton and the other salt companies that followed suit much money, only a few cents per person per year in iodine, but drastically cut the number of people who developed goiters in the United States and beyond as the practice gradually became adopted throughout much of the developed world.
Today because most food in developed countries like the United States often isn’t grown locally, coming from all over the country and world, depending on the food item, continuing to add iodine to salt isn’t strictly necessary. People in regions where the soil is lacking in iodine will likely consume plenty of food from regions where it is not, thus getting the iodine their bodies need, particularly because our thyroids don’t need much to function properly.
For reference, the U.S. Food and Drug Administration recommends that you consume about 150 micrograms of iodine per day and, on average, men in the United States gets about double that amount per day and women each consume about 210 micrograms of iodine per day. Your thyroid itself only needs about 70 micrograms per day to function properly.
Even though most people get plenty of Iodine in their diets, because Iodine is so critical to our bodies functioning properly and the Tolerable Upper Intake Level is so high (about 1100 micrograms per day, and you won’t take a fatal dose unless you ingest about 2 million micrograms, or 2 grams), adding it to salt is still recommended by many government health agencies the world over to stave off certain health problems.
Specifically, Iodine is a critical element used by your thyroid in being able to synthesize certain gland secretions which, among other things, influences your heart, metabolism, nerve responses, etc. Further, a lack of iodine during pregnancy and in the baby’s diet after being born can cause a myriad of significant health and developmental problems. Iodine deficiency has also been linked to increased difficulty with information processing, diminished fine motor skills, extreme fatigue, depression, weight gain, and low basal body temperatures, among other things.
Bonus Facts:
- Iodine deficiency, besides being a leading cause of goiters in the world, is also currently the number one easily preventable cause of mental retardation in the world, due to the fact that, despite iodized salt being fairly prevalent, there are still about two billion people in the world today that are iodine deficient.
- Iodine was discovered by accident by the son of a saltpeter manufacturer, Bernard Courtois, in 1811. This was thanks partially to the Napoleonic Wars which resulted in saltpeter, for gunpowder, being in high demand (the Napoleonic Wars also helped give us canned food and cheap and easily made pencils, read more at the links). In the process of producing saltpeter, sodium carbonate was needed. In order to get the sodium carbonate, the saltpeter manufacturers would isolate it from seaweed by burning the seaweed and washing the ash with water. The waste from this process was then destroyed with sulfuric acid. At one point, Courtois accidentally added too much sulfuric acid to the waste and he observed a purple vapor, which crystallized on cold surfaces. He then gave samples of this substance to others to study in more detail as he suspected he’d discovered a new element. One person he gave the substance to was chemist Joseph Louis Gay-Lussac, who subsequently announced at the Imperial Institute of France that Coutois’ discovery was either a new element or was some compound of oxygen. Another scientist, Humphry Davy, also studied the substance and determined that it was indeed a new element.
- During the Cold War, it was a common practice for people to have iodine pills on hand in case of a nuclear strike. Among many other problems we’d all have during a nuclear war is the issue of radioactive iodine accumulating in our thyroids. In order to combat this accumulation, the idea was to take an iodine pill and give your thyroid so much iodine that it wouldn’t be able to absorb the radioactive iodine.
- The first confirmed people to figure out how to cure most goiters were the Chinese during the Tang Dynasty (618-907). During that time, they treated people with goiters by grinding up the thyroids of sheep and pigs to form a powder which was then consumed in a pill or in powdered form. These animal thyroids are very iodine rich, so this cure worked quite well, though they didn’t realize why at the time.
- The Pharmacopoeia of the Heavenly Husbandman also implies that as early as the 1st century BC the Chinese cured goiters with sargassum (a type of seaweed), which also contains significant quantities of iodine. Whether this dating is accurate or not, at least as far as recorded history goes, it appears that the Chinese were the first to come up with an effective cure for a goiter.
- Seafood typically contains relatively large amounts of iodine, so if you eat much seafood, you’re very likely getting more than enough iodine, without consuming salt laced with it.
- According to a study done at the University of Texas about 47% off major salt manufacturers no longer put enough iodine in their salt to meet the U.S. Food and Drug Administration’s recommended levels. This problem is further exacerbated when salt is exposed to air or in humid regions. This will gradually lower the iodine content in the salt over time.
- Salt is typically iodized by spraying it with potassium iodate at a rate of 60 ml per one ton of salt (which comes to a little over $1 of potassium iodate per ton of salt).
- Salt with iodine added makes for a poor choice for curing, as the iodine in large enough quantities will add a certain amount of bitterness to the cured food.
- While pure salt doesn’t technically expire, when iodine is added, it does, having a shelf life of about five years on average, according to Morton Salt Company.
- Calcium silicate is typically added to table salt as an anti-caking agent, to keep the salt flowing smoothly, rather than clumped together as it absorbs moisture. Around .5% of the contents of a typical table salt container is calcium silicate.
- Iodine was originally named “iode” by Gay-Lussac from the Greek word for violet (iodes), due to the purple vapor observed which formed the crystals.
Source….www.today i foundout.com
Natarajan
ஒப்பில்லா ஓணம்….!!!
பண்டிகைகளும் விரதங்களும் பாரத நாட்டு மக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. நமது நாட்டின் சமூகப்பண்பாட்டை வளர்ப்பதோடு மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவைகள் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று ஓணம் பண்டிகை. கேரளாவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.
திருமால் தசாவதாரங்களில் முதன் முதலாக மனித உருக்கொண்டு தோன்றியது வாமன அவதாரத்தில்தான். சிறு அந்தணச்சிறுவனாய் தோன்றி மகாபலியிடம் மூன்று அடி மண்கேட்டு பிறகு அவரே பெரிய உருக்கொண்டு திருவிக்ரமனாய் வந்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது. தன் குலகுரு அறிவுரையையும் பொருட்படுத்தாமல் கொடுத்தவாக்கை காப்பாற்ற மகாபலி காட்டிய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும், அதே சமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப்பேயை அழிக்கவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதே வாமனதிருவிக்ரம அவதாரம். இதனையே “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் போற்றிப் பாடுகின்றாள். “மகாபலியின் மனத்தூய்மையை சோதிக்க வைத்த பரீட்சையா..?’ என்று குருவாயூரப்பனை நோக்கி வினவுகிறார் நாராயண பட்டத்ரி தனது நாராயணீயம் காவியத்தில்.
இந்த அவதாரத்தை தொடர்புப் படுத்தி பேசப்படும் திருத்தலம் திருக்காட்கரை (எர்ணாகுளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது) மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இதனை வாமன úக்ஷத்திரமாகக் கருதி, கோயில் கொண்டிருக்கும் மூலவரை வாமனராக வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு தன்னை ஆட்கொள்ள வந்தவன் திருமாலே என அறிந்து அவரிடம் மகாபலி மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை பாதாள லோகத்திலிருந்து தான் வந்து உலக மக்களைச் சந்திக்க அருளுமாறு வேண்டி அவ்வரத்தையும் பெற்றான். அந்தப் பேறு பெற்றது ஒரு ஆவணிமாதத் திருவோணநாளாகும். அந்நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் இவ்வூரில் வாழ்ந்த விவசாயி ஒருவர் தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவதுகண்டு இத்தல பெருமாளை வேண்டி தங்கத்தால் வாழைமரக் குலை ஒன்றை சமர்ப்பித்தான். பெருமாளின் நேத்ர கடாஷத்தினால் வாழை மரங்கள் குலைகளுடன் செழித்து வளர்ந்தன. அது முதல் அந்த மரத்தின் பழங்கள் நேத்ரபழம் என்றும், பெருமாளிடம் நேர்ந்து கொண்டு காய்த்ததால் நேந்திரம் பழம் என்றும் பெயர் பெற்றது.
இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் “வாமன ஜெயந்தி’ உற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. நம்மாழ்வார் பாசுரம் பெற்ற தலம் இது. தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தங்களை தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். அத்தப்பூ என்று பூக்களால் போட்ட கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அன்று காணலாம். பெண்கள் கை கொட்டுக்களி என்று நடனம் ஆடுவதும், பல வகை பதார்த்தங்களைக்கொண்டு அறுசுவை உணவு விருந்து வைத்தலும், படகுபோட்டி, விளையாட்டு போட்டி நடத்துவதும், யானைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு உணவு படைத்தலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், என கேரளாவே அமர்க்களப்படும்.
ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடுவது சிறப்பு. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இவ்விழா கொண்டாடியதை சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மயிலை கபாலீசுரர் ஆலயத்தில் திருவோணவிழா நடைபெற்றுவந்ததை திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
காலைத் தூக்கியபடி திரிவிக்ரமனாய் காட்சியளிக்கும் திருமாலின் உலகளந்தான் கோலத்தை தமிழ்நாட்டில் காஞ்சியில் உலகளந்தப்பெருமாள் ஆலயத்திலும், திருக்கோவிலூர், சீர்காழி (காழிச்சீராம விண்ணகரம்) திருநீர்மலை போன்ற திவ்ய தேசங்களில் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் வாமனர் சந்நிதியும் உண்டு. இங்கு பிரதி திருவோணம் நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.
எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி (ஆவணி, சிரவணம்) ஓணம் பண்டிகை மற்றும் வாமன ஜெயந்தி நாளாகும். இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர் என்பது திண்ணம்.
Source…….www.dinamani.com
Natarajan
வாரம் ஒரு கவிதை…” என் ஓட்டம் என் இலக்கு ” …
படித்து ரசித்தது …” என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆவது நாள் பட்டினப்பாக்கம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பால் காய்ச்சிக் குடியேறினோம். அடிப்படையில் நானோர் ஓவியன் என்பதால், இல்லத்தின் வரவேற்பறையில் என்னுடைய ஓவியங்கள் அழகுற அமைகின்றன. நான் ஓவியன் என்பதோடு கவிஞனும் என்பதால், வீட்டின் முகப்பில் மகாகவி பாரதியாரின் படத்தை மாட்டுகிறேன்.
புது வீட்டில் குடியேறிய மூன்றாம் நாள் எனக்கோர் வியப்பு! ஆமாம், வீட்டுக்குள் நான் வரைந்த வண்ணப் படங்களும் விழாவில் எடுத்த ஒளிப்படங்களும் சட்டமிட்டு மாட்டியிருக்க, அவற்றை விட்டுவிட்டு, வீட்டின் முகப்பில் அணிசெய்த மகாகவி பாரதியின் படத்திற்குப் பின்புற இடைவெளியில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டியிருந்தன! அசந்து போனேன் நான்! “”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடிய கவிஞனின் படத்தின் பின்புற இடைவெளியில் குருவிக்கூடு! அடடா என்ன பொருத்தம்!
இன்னொரு நிகழ்ச்சி… தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒவ்வொரு தளமாக ஏறிச்சென்று கடிதம் கொடுக்க முடியாததால் அஞ்சல் துறையினர், அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் ஓர் அறிவிப்பினைச் செய்திருந்தார்கள்:
“குடியிருப்பாளர்கள் அனைவரும் தரைத்தளத்தில், படியேறும் முன்பாகவே, சுவரில் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைப் பொருத்துதல் நலம் பயக்கும்’ என நயமாகவும் அழுத்தமாகவும் அறிவித்திருந்தார்கள். அதன்படி எங்கள் குடியிருப்பில் இருந்த அனைவரும் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைச் சுவரில் பொருத்தி விட்டோம்.
ஆச்சரியம் பாருங்கள்! மூன்றாம் நாள். மற்றவர்களின் அஞ்சல் பெட்டிகளை விட்டுவிட்டு, எமது அஞ்சல் பெட்டியில் மட்டும் குருவிகள் கூடு கட்டிவிட்டன! அடடே! எனது பெயரில் “பாரதி’யாரின் பெயரும் இணைந்திருக்கிறதல்லவா! பாரதி என்றாலே குருவிகளுக்குக் கொண்டாட்டந்தான் போலும்! எனக்குச் சிலிர்ப்பாயிற்று. உடனே நான் ஒரு செயலைச் செய்தேன்.
அஞ்சல் பெட்டியின் குருவிக் கூட்டுக்குத் தொல்லை நேராமல் இருக்கவும், அஞ்சல்காரருக்கு வசதியாகவும், அஞ்சல் பெட்டியின் கீழே, ஒரு பையைக் கட்டித் தொங்கவிட்டேன். பெட்டியின் மேற்பகுதியில், ஓர் அட்டையில், “”பெட்டியில் குருவிக் கூடு; அஞ்சலைப் பையில் போடு” என எழுதி மாட்டிவிட்டேன். அதனைப் படித்த அஞ்சல்காரரும் ரசித்துப் புன்னகைத்தார்.
“மகாகவி பாரதி என்னுடன் இருக்கிறார்’ என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நானும் என் துணைவியார் திருமதி ராணியும் காசி நகர்ப் பயணம் செல்ல வாய்த்தது. பல இடங்களைப் பார்த்துவிட்டு, 19ஆம் தேதி காலை காசி நகர் போய்ச் சேர்ந்தோம். சுற்றுப் பயணக் குழுவில் எங்கள் பகுதியினர் தங்க வேண்டிய இடம் வேறு. ஆனால், நாங்கள் “அனுமன் காட்’ எனும் தெருவில் உள்ள விடுதியில் வந்து தங்கிவிட்டோம். சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் “”பரவாயில்லை, இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மேல் கங்கையில் நீராடக் கிளம்பினோம்.
வெளியே பக்கத்து வீட்டுத் திண்ணையில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், “”அம்மா! பாரதியார் தன் இளம் வயதிலே காசியிலே இருந்ததா வரலாறுண்டு. அவர் எந்தத் தெருவிலே, எந்தப் பகுதியிலே இருந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று பொதுவாகக் கேட்டேன்.
“”தெரியுமே! இதோ, இந்த எதிர்வீட்டில்தான் அவர் இருந்தார். அவரோட ஒன்றுவிட்ட மருமகன்கூட அங்க இருக்கார். டி.என்.கிருஷ்ணன்னு பேரு, போய்ப் பாருங்க” என்று அந்த அம்மையார் கூறியதைக் கேட்டதும் அசந்து போனேன் நான்!
எதேச்சையாக எங்கள் குழு இடம் மாறித் தங்கிடப் போக, அந்த இடத்தின் எதிர் வீடுதான் பாரதியார் தங்கியிருந்த “சிவமடம்’ என்கிற வீடு என்றால்… எப்படி இருக்கும் எனக்கு? “இது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான்’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியில்லை; ஆத்மார்த்தமாக பாரதியாரை நேசிக்கும் எனக்கு அப்படிக் கருத முடியவில்லை.
அருவமாக முன்னின்று அவரே எம்மை, அவர் வாழ்ந்த சிவமடத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டதாகவே நம்புகிறேன். ஆமாம், “”என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”
Source……….ஓவியக் கவிஞர் அமுதபாரதி in http://www.dinamani.com on Sep 11 2016
Natarajan
Paralympics Gold Medallist Mariyappan Thangavelu’s Story Is A Lesson In Grit…
In May this year, Mariyappan Thangavelu said during an interview, “It’s not beyond me.” India’s rising star in para-athletics had just cleared a distance of 1.78m in the men’s high jump T42 event at the IPC Grand Prix in Tunisia. So what was not beyond him? A gold at the Paralympics, he said.
Three months later Thangavelu has showed the country what walking the talk is supposed to look like.
Not only is he the first athlete to bag a gold in this year’s Paralympics, he is also the first Indian high jumper to win a gold in the history of Paralympics.
According to NDTV, ‘T-42 is a disability sport classification for differently-abled track and field athletes with single ‘above the knee’ amputations or a disability that is comparable’.
Born in a small village of Periavadagampatti, 50km from Salem, in Tamil Nadu, Mariyappan’s brush with unpredictability of life, occurred at a tender age of five. Fifteen years ago, Mariyappan was on his way to school in his village, when he met with a terrifying accident. A bus took a wrong turn, spun out of control and hit the five-year-old, running over his right leg and crushing it in process.
Later, when he was old enough to comprehend the tragedy that had hit him, he was told that the driver of the bus was drunk. However, that information did nothing to comfort him or ease the difficult road that lay ahead of him. In an interview to The Hindu, Mariyappan said, “It doesn’t matter. My right leg is now stunted — it is still a five-year-old’s leg; it has never grown or healed.”
A report on Sportskeeda states that Mariyappan’s mother had then taken a loan of Rs 3 lakh to pay for his treatment. Years later, the vegetable vendor is still repaying the money.
The same article traces Mariyappan’s interest in sports back to his physical education teacher, who encouraged him to take up athletics and nurtured his interest in high jump. He also played volleyball.
“His coach Satyanarayana spotted him at the National Para-Athletics Championship when he was just 18. After rigorous training in Bengaluru, he became the World Number 1 in 2015, his first year of senior-level competition,” Sportskeeda reports.
His first competitive event was when he was 14 years old and participated in an athletics meet with other able-bodied students. He finished second.
“At first, my classmates didn’t believe I could do it. But once I made that first jump, they were all excited. After that day, a lot of people came to support me whenever I competed in the district,” he told The Hindu.
Source…..www.huffingtonpost.com
Natarajan
Watch this Chennai guy slay Karnataka and TN over Cauvery issue (Tamil)…
Watch this and share pl….
Source….In the video produced by Put Chutney, Raj Mohan talks about Karnataka’s contempt towards courts and environmental concerns in TN….YOU TUBE
and, www. thenewsminute.com
Natarajan



