வீட்டு குழந்தைகள் விஜயதசமி அன்று பொம்மைகளுடன் பேசுவதாக வடிக்கப்பட்ட ஒரு சிறு கவிதை.
நடராஜன்
வீட்டு குழந்தைகள் விஜயதசமி அன்று பொம்மைகளுடன் பேசுவதாக வடிக்கப்பட்ட ஒரு சிறு கவிதை.
நடராஜன்

மதம் பிடிக்கா மனிதர்
மனித நேயப் புருஷர்
தமிழ் படித்த விஞ்ஞானி
தமிழுக்கு கிடைத்த ஞானி!
எத்தனையோ பேர்
இப்பதவிக்கு வந்த போதும்
நீர் வந்த போது தானே
குடியரசுத் தலைவரென்ற கோபுரப் பதவி
சந்தனத்தை பூசிக் கொண்டது!
எத்தனையோ பேர்
தொட்டுப் போன நாற்காலியில்
நீர் அமர்ந்த பின் தானே
பட்டுப் பீதாம்பரங்களின்
பாரம்பரியத்தை உதறி
பருத்தி ஆடையில் பேசிக் கொண்டது!
மனப்பாடுகள் தீர
மனப்பாடங்கள் தந்தவர்
கணப்பாடுகள் மீற
கனவு காணச் சொன்னவர்!
சின்னத்திரையிலும்,
வண்ணத்திரையிலும் நடிக்காமல்
எண்ணற்ற இளசுகளின்
மனத்திரையிலும், மானசீகத்திலும்
வாழ்ந்த கதாநாயகர்!
இவரின் வருகைக்கு பின் தான்
கரிசல் காட்டுக்கும் கனவு வந்தது
இவரின் இருக்கைக்குப் பின்தான்
இஸ்ரோ தன் சிறகுகளை சிலிர்த்தது!
சாமானியனுக்கும்
சாம்ராஜ்ய பாஷை சொல்லிக் கொடுத்த
சாக்ரட்டீஸ் நீர்
சாதிக்கச் சொல்லியே
சரித்திரத்தை சரியான
பாதைக்கு ஓட்டிய சாரதி நீர்!
எவர் வருவர் உம்போல்
எவர்வரினும் இணையோ
உம்தாள் போல்
எம்மான் நீர் வாழ்க
இந்து சமுத்திரமாய்
நீர் வாழ்க!
Source— சுசீந்திரன், சென்னை.in http://www.dinamalar.com
Natarajan
அமைதி ஆயுதம் போதும்!
உலகம் போற்றும்
உத்தமனே
உன்னால்தானே
உரிமை பெற்றோம்!

நாங்கள்
உயரப் பறக்க
சிறகுகள் தந்து
உன் உயிர் சிறகை
உதிர்த்துக் கொண்டாயே!
அன்னையின்
அடிமைச்சங்கிலி உடைக்க
அர்ஜுனனைப் போல
அஸ்திரம் ஏந்தவில்லை!
சச்சரவுகள் தீர்க்க
வாசுதேவனைப் போல
சாவகாசமாக வந்து
சர்க்கரை பேச்சு பேசி
சமரச முயற்சியும்
மேற்கொள்ளவில்லை!
ஆயுதம் எடுக்கவில்லை
அறைகூவல் விடுக்கவில்லை
அடிமைச்சங்கிலியை
எப்படி அடக்கம் செய்தாய்?
அமைதிப்பிரியனே…
உன் மவுன யுத்தத்தின்
உச்சி தவத்தால் தான்
எத்தனை மகத்துவம்!
மறந்து போன மனித நேயம்
உன் ஜனன தேதியில் மட்டும்
மறுமுளை விட்டு
மறுபடியும்
மறைந்து கொள்கிறது!
ஆனாலும்
மகாத்மா என்ற சகாப்தத்தின்
தலைமகன் நாமம் மட்டும்
மறந்து போவதே இல்லை
கருவறையிலிருந்து கல்லறை
செல்லும் வரை!
நீ அழைத்துச் செல்ல மறந்த
அகிம்சையென்னும்
அமைதி ஆயுதம் ஒன்று போதும்
இந்த உலகம் உயர்ந்து நிற்கும்
உன் பேர் என்றும் நிலைத்து நிற்கும்!
— க.அழகர்சாமி, கொச்சி.
Source….www.dinamalar.com
Natarajan
பிள்ளையார் சுழி!
விநாயகர் சதுர்த்தி-செப்டம்பர் 17-09-2015
மகா சுவாமிகளுடன்…
பரணீதரன்

காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி
யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!
(பெரியவா சொன்ன கவிதை)
தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.
”ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்… தெரியுமோ?”
”மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே…”
”அது இருக்கட்டும்… என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது”.
”பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே”.
”நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?”
”அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..”
”காலேஜ்லே என்ன படிச்சே?”
”பி.காம்”
”மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்… பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!”
சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.
பெரியவா பேசத் தொடங்கினார்: ”ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?”
”கேள்விப்பட்டிருக்கேன்”
”அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா… ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, ‘நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். ‘சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, ‘கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், ‘கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். ‘இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.
போஜராஜா நெசவாளியைப் பார்த்து, ‘நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, ‘கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, ‘கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, ‘மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!
நாலாவது அடிலே, ‘நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்” என்று சொன்ன பெரியவா, ”நீயும் போயிட்டு வா!” என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
பெரியவா சொன்ன கவிதை இதுதான்…
காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி
யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.
அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், ‘ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.
அது போகட்டும்… வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?
இது ஒருபுறம் இருக்கட்டும், ”நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ‘பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.
ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,
‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’
என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).
இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.
ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.
ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் ‘Six Mystics of India’ என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது
Source….Expeience of Bharanidharan in http://www.periva.proboards.com
Natarajan

தகப்பன் சாமிக்கு அண்ணனே என் அப்பன் பிள்ளையார்
அப்பனே ….அப்பமொடு அதிரசம் அவல் பொரியும்
உன் மனம் மகிழ மோதகமும் தப்பாமல் உனக்கு
நான் தருவேன் அப்பா …..
தப்பு என் மீது எது இருந்தாலும் …. நீ
தப்பாமல் என் வீடு வந்து அப்பமெல்லாம் சப்பு கொட்டி
சாப்பிடு அப்பா !!!!! என் அப்பனே பிள்ளையாரப்பா…
இப்போ என் பேரப்பிள் ளையும் உனக்காக
சாப்பிடாமல் என்னுடன் காத்திருக்கிறான் உன்னைப்பார்க்க
அப்பனே… தப்பாமல் நீ வர வேணும் இன்று …
அப்பம், அமுது எல்லாம் என் பேரனுக்கும் இன்று நீ ஊட்டி , நீயும்
சாப்பிட்டால் வேறு என்ன பேறு வேண்டும் எனக்கு ?…அப்பனே
தப்பாமல் வந்து விடு பிள்ளையார் அப்பனே …!!!
நடராஜன்
16 செப் 2015
Camp…Brisbane , Australia
நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது…..
உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?…..
பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்…..
சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை…..
விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை…..
நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி…..
கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை…..
ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்…..
நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?…..
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்…..
iPodடை’யும் Androidடை’யும் தின்னமுடியாது
Windowsஐ’யும் Vistaவை’யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது…..
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா…..?
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பட முடியாது _
-உண்மை இன்று புரியாது.
உண்மை புரியும் நேரம் …
கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்….
Source…unknown… input from a friend of mine
Natarajan
முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு!
‘தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்’
என்று மிரட்டினாய்
அரசு பயந்து அமைத்தது
அம்மா உணவகம்!
‘ஓடி விளையாடு பாப்பா’ என்றாய்
ஓயாமல் விளையாடுகிறோம்
வீடியோ கேம்!
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்றாய்
ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம்
கவுரவக் கொலைகளால்!
‘ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று’என்றாய்
ஆட்டமாய் ஆடி
பாடாய் படுத்துகின்றனர்
ஆட்சி, அதிகாரத்திலிருப்பவர்கள்!
‘மனதில் உறுதி வேண்டும்’ என்றாய்
நான்கு குவார்ட்டர் அடித்தாலும்
தள்ளாடாமல் நிற்பதற்கு தான்
டாஸ்மாக்கில் பயிற்சி எடுக்கிறோம்!
காணி நிலம் வேண்டும்’ என்று
ஆசை படச் சொன்னாய்…
புறம்போக்கு நிலங்களையும்
வளைத்து விட்டோம்!
‘சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்’
என்றதை செய்து பார்த்து
சேது சமுத்திரத் திட்டத்தில்
பைசா பார்த்து விட்டோம்!
‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று
பாடத் தான் முடிகிறது
பாலியல் வன்முறைகளைப் பார்த்து!
‘சொல்லடி சிவசக்தி…
எனை சுடர் விடும்
அறிவுடன்
ஏன் படைத்தாய்’ என்று
உன்னோடு சேர்ந்து
பாடி அழத் தான் முடிகிறது
வேறு வழியற்று!
— அ. யாழினி பர்வதம்,
சென்னை.
Source…www.dinamalar.com
Natarajan
A Tribute to my Dear Teacher BRO.ANSELM on TEACHERS DAY…5th September
Natarajan
Bro.Anselm ….My Teacher ….a Friend , Philosopher and Guide to me ….

Dear Brother..
Every year , on this DAY..5 SEP….Teachers Day… i used to talk to you over Phone and seek your Blessings …. For the third year in a row , I miss that call today . I MISS YOU … Brother…
I send my Regards and Respests to You on this TEACHERS DAY, …. thro ” this Blog Post . I am sure Your Blessings and Good Wishes are always available in plenty to me and my family on this Day …and for many more days to come ….
with affectionate Regards,
Your “Raja’ ….Natarajan.
BRO.ANSELM … My Teacher
….In 1965 at my age of 15 he handed over my SSLC BOOK in person to me and wished me well….The bond between me and my teacher however continued further… I was so emotionally attached to him that we used to be in touch with each other till the Christmas in 2012. …When i talked to him after receiving his affectionate Christmas card in DEC2012, he was telling me that he would be meeting me in Feb 2013, at chennai when he comes down to Chennai from Yercaud for his medical checkup.
Perhaps this is the first time , he was not able to keep up his words ….One of Santhome Montford Brothers called me on the night of 7 Jan2013 and told me that our affectionate BRO.ANSELM has left all of us in lurch and merged with JESUS on 7th evening at Yearcud Montford School.
He was not only my Teacher….but a Good Friend, Philosopher and Guide at all times ….I am sure many of his students would miss him a lot like me.. on this DAY….
Here is a Poetical Tribute to that Great Personality.
அறியாமை இருள் விரட்டுங்கள்!
கரும்பலகைகளில் வெளிச்சம் விதைத்து
அறியாமை இருள் விரட்டி
சூரியப் பிரதிகளை உருவாக்கும்
‘ஆ’ சீரியர்களே…
அறிவு மாளிகைக்கு
அஸ்திவாரம் அமைத்து
திறம்படக் கட்டி
திறப்பு விழா நடத்தி
விளக்கேற்றி வைக்கும்
வெள்ளை மனக் கோட்டங்களே…
நீங்கள்
முள்காட்டை செப்பனிட்டு
முல்லை மலர் வளர்க்கிறீர்கள்
சிப்பிகளில் மட்டுமல்ல
நத்தைகளிலும் முத்து விளைவிக்கிறீர்கள்
கூழாங்கற்களை வைரங்களாய்
வடித்தெடுக்கிறீர்கள்!
நீங்கள்
வியர்வை வெப்பத்தில் புழுங்கி
வேதனை துளிகளை விழுங்கி
சாக்பீசில் முகங் கழுவி
சரித்திரம் படைக்கிறீர்கள்!
நீங்கள்
நெற்றிக்கண் திறந்து
நெருப்பை உமிழ நேரினும்
கொதித்து வரும் தீயினிலும்
குளிர்ச்சி உறைந்திருக்கும்
புயலாய் சீறுகிற போதிலும்
புன்னகை மறைந்திருக்கும்!
நீங்கள் திட்டுவதால்
நாங்கள் தீட்டப்படுகிறோம்
உளிபடாமல், துளிச்சிதறல் இல்லாமல்
எதிர்கால இந்தியாவை
சிரத்தையாய் செதுக்கும் சிற்பிகளே…
உங்களை
சிரம் தாழ்த்தி வாழ்த்தி
வணங்கி மகிழ்வதில்
பெருமிதம் கொள்கிறோம்!
Source…சுப்புராஜ், திருமுல்லைவாயில்…..www.dinamalar.com
natarajan
ஜகத்குரு தரிசனம்
வேப்பம்பூ பச்சடி
(எழுசீர் விருத்தம்: காய் விளம் விளம் தேமா . காய் காய் காய் )

வேப்பம்பூ புளியுடன் வெல்லமும் நாங்கள்
. வேதமுனி அவைதன்னில் சமர்ப்பித்தோம்
வேப்பம்பூ பச்சடி செய்விதம் என்ன
. மேதையவர் எங்களிடம் கேட்டாரே
யாப்பென்றே அவரிடம் ஓர்முறை சொன்னோம்
. யாதுமறி யாதவர்போல் செவிமடுத்தார்
சாப்பாட்டுக் கித்துடன் தேனுடன் நெய்யும்
. சற்றேசேர் பச்சடியில் சுவைகூடும்! … 1
பக்குவமாய்ச் செய்தபின் பச்சடி அம்பாள்
. பாதத்தில் நைவேத்யம் செய்வீரே
முக்கண்ணி நம்மிடம் வசப்படு வாளே
. முன்வந்தே அருள்செய்து காத்திடுவாள்
அக்கணத்தில் கேட்டது சரியெனச் சொல்வார்
. அகமுடையான் பச்சடியை உண்டாலே!
சிக்கலின்றி பணிகளைச் செய்வரே செய்வோர்
. சீர்மிக்க பச்சடியின் மகிமையன்றோ! … 2
பக்குவமாய்ப் பச்சடி செய்திடச் சொல்லிப்
. பணித்தாரே திருமடத்தின் பிரசாதம்!
சிக்கனமாய்ப் பச்சடி தந்தவர் கேட்டார்
. தெரிகிறதா நான்தந்த காரணமே?
தக்கபடிப் பெரியவர் சொல்வது உள்ளம்
. தங்கிடவே என்றுரைத்தாள் ஓர்மங்கை
முக்கண்ணி பக்தியில் எந்நாளும் நீங்கள்
. முழுகிடவே தந்தேன்நான் என்றாரே. … 3
புதுக்கோட்டை பத்தராய்த் தரிசனம் செய்தே
. புண்ணியங்கள் பெற்றோமே நாங்களெலாம்!
எதுசொன்னா லுமதிலோர் தத்துவம் காட்டி
. எங்களுக்கு வழிசொல்லும் காஞ்சிமுனி
பொதுவான அறமென உள்ளதைச் செய்தால்
. பொலிவுடனே வாழ்ந்திடலாம் என்றாரே
எதுநல்ல காரியம் என்றுநாம் தேர்ந்தே
. இறைபக்தி உடன்சேரச் செய்வோமே! … 4
–ரமணி, 13/08/2015
Source…www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/9877?page=1&scrollTo=16638#ixzz3ihamzKId