ஏரி காத்த அருண்…….!!!

e_1475133384

சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு தன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போதுபோய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?
சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க…

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?
சின்ன வயசிலேர்ந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரி தான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்யறேன்.

எப்படி திட்டமிடறீங்க?
ரொம்ப மோசமா இருக்கற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்லை. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா உடனடியா எடுத்துக்கறோம்.
முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?
ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.
காலையில் ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை, பப்ளிசிட்டி இல்லை, சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?
நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணும்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், போர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க, நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?
ஆமாம், முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?
தாராளமா, இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க, அவங்க தான் எடுத்துக்கிட்டுப் போனால்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்துப் போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?
போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

அடுத்தடுத்த திட்டங்கள்?
ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இரக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?
அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கிறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு பல பள்ளிகள், கல்லூரிகளுக்கப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு

ஆர். வெங்கடேஷ்  in http://www.dinamalar.com  based  on  an input from Kalki 

Natarajan

 

ஒப்பில்லா ஓணம்….!!!

1

 

பண்டிகைகளும் விரதங்களும் பாரத நாட்டு மக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. நமது நாட்டின் சமூகப்பண்பாட்டை வளர்ப்பதோடு மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவைகள் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று ஓணம் பண்டிகை. கேரளாவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருமால் தசாவதாரங்களில் முதன் முதலாக மனித உருக்கொண்டு தோன்றியது வாமன அவதாரத்தில்தான். சிறு அந்தணச்சிறுவனாய் தோன்றி மகாபலியிடம் மூன்று அடி மண்கேட்டு பிறகு அவரே பெரிய உருக்கொண்டு திருவிக்ரமனாய் வந்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது. தன் குலகுரு அறிவுரையையும் பொருட்படுத்தாமல் கொடுத்தவாக்கை காப்பாற்ற மகாபலி காட்டிய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும், அதே சமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப்பேயை அழிக்கவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதே வாமனதிருவிக்ரம அவதாரம். இதனையே “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் போற்றிப் பாடுகின்றாள். “மகாபலியின் மனத்தூய்மையை சோதிக்க வைத்த பரீட்சையா..?’ என்று குருவாயூரப்பனை நோக்கி வினவுகிறார் நாராயண பட்டத்ரி தனது நாராயணீயம் காவியத்தில்.

இந்த அவதாரத்தை தொடர்புப் படுத்தி பேசப்படும் திருத்தலம் திருக்காட்கரை (எர்ணாகுளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது) மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இதனை வாமன úக்ஷத்திரமாகக் கருதி, கோயில் கொண்டிருக்கும் மூலவரை வாமனராக வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு தன்னை ஆட்கொள்ள வந்தவன் திருமாலே என அறிந்து அவரிடம் மகாபலி மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை பாதாள லோகத்திலிருந்து தான் வந்து உலக மக்களைச் சந்திக்க அருளுமாறு வேண்டி அவ்வரத்தையும் பெற்றான். அந்தப் பேறு பெற்றது ஒரு ஆவணிமாதத் திருவோணநாளாகும். அந்நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் இவ்வூரில் வாழ்ந்த விவசாயி ஒருவர் தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவதுகண்டு இத்தல பெருமாளை வேண்டி தங்கத்தால் வாழைமரக் குலை ஒன்றை சமர்ப்பித்தான். பெருமாளின் நேத்ர கடாஷத்தினால் வாழை மரங்கள் குலைகளுடன் செழித்து வளர்ந்தன. அது முதல் அந்த மரத்தின் பழங்கள் நேத்ரபழம் என்றும், பெருமாளிடம் நேர்ந்து கொண்டு காய்த்ததால் நேந்திரம் பழம் என்றும் பெயர் பெற்றது.

இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் “வாமன ஜெயந்தி’ உற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. நம்மாழ்வார் பாசுரம் பெற்ற தலம் இது. தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தங்களை தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். அத்தப்பூ என்று பூக்களால் போட்ட கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அன்று காணலாம். பெண்கள் கை கொட்டுக்களி என்று நடனம் ஆடுவதும், பல வகை பதார்த்தங்களைக்கொண்டு அறுசுவை உணவு விருந்து வைத்தலும், படகுபோட்டி, விளையாட்டு போட்டி நடத்துவதும், யானைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு உணவு படைத்தலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், என கேரளாவே அமர்க்களப்படும்.

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடுவது சிறப்பு. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இவ்விழா கொண்டாடியதை சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மயிலை கபாலீசுரர் ஆலயத்தில் திருவோணவிழா நடைபெற்றுவந்ததை திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

காலைத் தூக்கியபடி திரிவிக்ரமனாய் காட்சியளிக்கும் திருமாலின் உலகளந்தான் கோலத்தை தமிழ்நாட்டில் காஞ்சியில் உலகளந்தப்பெருமாள் ஆலயத்திலும், திருக்கோவிலூர், சீர்காழி (காழிச்சீராம விண்ணகரம்) திருநீர்மலை போன்ற திவ்ய தேசங்களில் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் வாமனர் சந்நிதியும் உண்டு. இங்கு பிரதி திருவோணம் நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.

எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி (ஆவணி, சிரவணம்) ஓணம் பண்டிகை மற்றும் வாமன ஜெயந்தி நாளாகும். இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர் என்பது திண்ணம்.

Source…….www.dinamani.com

Natarajan

வாரம் ஒரு கவிதை…” என் ஓட்டம் என் இலக்கு ” …

 

என் ஓட்டம் …என்  இலக்கு
………………………
என் ஓட்டம் …ஓடும் நதியோட்டம் ..  என்  உயிரோட்டம் … என் இலக்கு… நதி நீர்
இந்த  மண்ணுக்கும் …மண்ணில்  விளையும்  பயிருக்கும் !
விதி விலக்கு இதில் எதுவும் இல்லை எனக்கு … ஓடிக்கொண்டே   இருக்கும்
நதி எனக்கு , நீயும் பிள்ளைதான் , அவனும்  பிள்ளைதான் !
மதி கெட்டு   நதி நீர் “எனக்கு”  மட்டும்தான்  என்று ஆணவக்
கூக்குரல் எதற்கு மனிதா? மமதையுடன் மண்ணுக்கும் , தண்ணீருக்கும்
உரிமைக்  குரல்  எழுப்பும்  நீ அந்த விண்ணுக்கும் , விண்ணில் உள்ள
நிலவுக்கும் ,பகலவனுக்கும்   தனி  உரிமை கோர முடியுமா சொல்லு  ?
நதி மூலம் அறியாமல் உன் மதி மயங்கி  ஒரு நதியின்  ஓட்டத்தை
தடுக்க நினைக்காதே ! உன்   அரசியல் விளையாட்டுக்கு எல்லாம்
நதி என்னை பகடைக் காயாக்காதே !
நதி என்னை என் வழியில் ஓட விடு ..என் ஓட்டத்தையும்
இலக்கையும்  குலைக்க  நினைக்காதே !
Natarajan
13 sep 2016

Watch this Chennai guy slay Karnataka and TN over Cauvery issue (Tamil)…

Watch this and share pl….

Source….In the video produced by Put Chutney, Raj Mohan talks about Karnataka’s contempt towards courts and environmental concerns in TN….YOU TUBE

and, www. thenewsminute.com

Natarajan

 

வாரம் ஒரு கவிதை….” நெல்லுக்கு இறைத்த நீர் …” !!!

 

நெல்லுக்கிறைத்த  நீர்
…………………..
தண்ணீர் விட்டா வளர்த்தோம்  நம் சுதந்திர செடியை  ?
கண்ணீரும்  செந்நீரும் விட்டு வளர்த்த கொடி மரமல்லவா அது !
கேட்க  முடியுமா நம் முன்னோரிடம் அந்த கொடியின் விலை என்ன என்று ?
விலை மதிப்பில்லா சுதந்திரக் காற்று சுவாசிக்கும் நாம்  விலை வைத்து
விட்டோமே  குடிக்கும் நீருக்கும் , குழந்தைகள் படிக்கும் படிப்புக்கும் !
விலை இல்லா பொருள் கொடுத்து  எனக்கும், உனக்கும், எவருக்கும்
ஒரு விலை உண்டு என்று சொல்லிவிட்டதே  நம்  அரசியல்
கட்சிகள் !  விலை  மதிப்பில்லா நேர்மைக்கே ஒரு சோதனை காலம் இது !
நிலைமை கண்டு துவள வேண்டாம்  தம்பி …நீ ! சோதனை பல
கண்டாலும் சாதனை புரிய காத்திருக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று !
எடுக்க வேண்டும் ஒரு உறுதிப்பாடு  நீ  இன்று…
“என் முன்னோர் செய்த தியாகம்  விழலுக்கு இறைத்த நீர் அல்ல …
 அது நெல்லுக்கு இறைத்த நீரே   அன்றும் ,இன்றும், என்றும் ! …என் தேசம் என்
 சுவாசம் !
 எதற்கும் விலை போகாமல் நான் காண்பேன்  ஒரு புதிய பாரதம் “
தடைக் கற்கள் யாவும் உனக்கு படிக்கற்கள் ஆகும் …புதிய
பாரதமும்  பொலிவுடன் மலரும் ஒரு வல்லரசாக …!
நாளை உனதே தம்பி ! நாளைய பாரதமும் உன்னை நம்பிதான் தம்பி  !
Natarajan

படித்ததில் பிடித்தது…” இயற்கை கற்பிக்கும் பாடம் …” !!!

 

ஞானத்தை யாரிடம் கற்பது ?
”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.
காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.
அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.
அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.
இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.
ஆனால்,
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.
இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.
தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
‘எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், “சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,
“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,
“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,
“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…“ என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.
“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் – தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
“வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.
“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்… ”
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.


நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

Source…..FaceBook Post from  Sridharan  Sivaraman

Natarajan

படித்து ரசித்தது …” பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய்.”

 

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?

மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… ‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’ என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள்.

வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும் உணவுப்பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள். ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன. அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது.

எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும், மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக் கட்டணமாகத் தங்கம் பெறப்பட்டது.

நாடே போர்க்களம் போல் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்க… விவசாயிகள் மட்டும் எந்தவித பதற்றமோ சலனமோ இன்றி எப்போதும்போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வாரச் சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி, பருப்பு வாங்க, நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள். உணவுப் பொருட்களுக்காக பங்களா, கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது.

வேலை தேடி எல்லோரும் கிராமங்களுக்குச் செல்ல… மூன்று வேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்துக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு, அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின. அரசுக்குத் தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாகப் பெற்றார்கள். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்ததால், நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டது. வறண்ட பூமியெல்லாம் தவறாது மழை பெய்ததால் விவசாய நிலங்களாக மாறின. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால், மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணம் எனும் மாய வலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப் பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது.

தயவுசெய்து குறட்டையை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள்… இது கனவுதான். ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை. சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை

இந்தக் கனவும் அப்படித்தான்…

உயிரற்ற காகிதத்தால் ஆன காசிற்காக,

உயிருள்ள
மனித இனமே,
மனித
இனத்தை அழித்து
கொண்டிருக்கிறது.
எங்கும் கலப்படம்,
எதிலும் கலப்படம்.

பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய். பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது!
இன்றைய நிலை

Source :  FaceBook post of Sridharan Sivaraman

Natarajan

வாரம் ஒரு கவிதை …” எதிர் கால கனவு ” !!!

 

எதிர்கால  கனவு
……………
குழந்தை பிறந்த நிமிடம் முதல் அம்மா அப்பாவுக்கு  கனவு
அவர் பிள்ளையின் எதிர்காலம் !
கனவு பல கண்டு வளரும் பிள்ளை உனக்கும்    அந்த  கனவுதான்
அஸ்திவாரம் நீ  கட்டும் உன்  வாழ்க்கை வீட்டுக்கு …உன் நாட்டுக்கு !
கனவு  பல  இருக்கலாம் ..ஆனால்  அது உன் தூக்கத்தில்
வரும்  கனவு அல்ல தம்பி… உன்னை  தூங்க விடாமல் உன்னை
துரத்தும்  உன் லட்சியக் கனவாக மட்டுமே இருக்கலாம்  தம்பி !
கனவிலும்  உன் சிந்தனை இருக்கலாம் …சிந்தித்து சிந்தித்து
உன் லட்சியம் எட்ட நீ  ஏறும் ஏணியாக உன் கனவு இருக்கலாம் !
முடியாத செயலை முடிக்க வேண்டும் என்று  கனவு இருக்கலாம் !
இதை  நான் சொல்லவில்லை  தம்பி !…அந்த மாமனிதன்
கலாம்  சொன்னது  உனக்கு !.. மறக்க வேண்டாம் நீ   அந்த
மாமனிதனின்  மணி மொழி ! அவன் சொல் வழி நீ  நடந்து
மாற்றிக் காட்டு உன் தாய் நாட்டை ஒரு புதிய பாரதமாக !
“இருபது இருபது …பாரதம் ஒரு வல்லரசு” …இதுவே உன்
 கனவாகட்டும் …உன் கனவு  நனவாகும் அந்த நாள்
மாமனிதன் கலாம் கண்ட கனவும்  நனவாகும்  பொன்னாள் !
Natarajan……My kavithai in http://www.dinamani.com  on 22 august 2o16

படித்ததில் பிடித்தது …” ஜாக்கிரதை …ஜாக்கிரதை ” !!!

 

ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” என்று கத்திக்கொண்டே போவான்….
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று….
அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு ‪#‎வேதமறிந்த_பண்டிதனாக‬இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது…

இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்கிரதை சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்….
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்….
அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.
”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ,
இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?”
காவல் காரன் நடுங்கினான்…..
ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?
முதல் நாள் இரவு பையன் ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை….

அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது.
அந்த நீதி வாக்யங்கள் இவைதான்…….

‪#‎ஸ்ரீஆதிசங்கரர்‬ அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில……..

(1)

माता नास्ति पिता नास्ति नास्ति बन्धुः सहोदरः।
अर्थँ नास्ति गृहँ नाति तस्मात् जाग्रत जाग्रत॥

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

There is no mother, no father, no relationships nor any siblings. No money or house. Therefore be alert, Wake up!

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,…

(2)

जन्म दुःखँ जरा दुःखँ जाया दुःखँ पुनः पुनः।
सँसारसागरँ दुःखँ तस्मात् जाग्रत जाग्रत॥

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

Birth is sorrow, aging is sorrow, spose is sorrow !
Samsara itself is sorrow, therefore remain awake! be alert!

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,
விழித்துக்கொள் ஜாக்ரதை….
(3)

कामक्ष्च क्रोधक्ष्च लोभक्ष्च देहे तिष्ठन्ति तस्कराः।
ज्ञनरत्नापहाराय तस्मात् जाग्रत जाग्रत॥

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

Kama (desires), Krodha (Anger), Lobha (Greed) are like theifs in this body who steal the jewel called “Jnana” [Self Knowledge]. Therefore be alert! Be Awake!

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை…

(4)

आशाया बध्यते जन्तुः कर्मणा बहुचिन्तया।
आयु क्षीणँ न जानाति तस्मात् जाग्रत जाग्रत॥

“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

We are [The animal -humans are also addressed as animals here] bound by Expectations: various activities and excess thinking. so much so that we do not recognize the ebbing away of life. Therefore be awake! Be Awake!

ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை கட்டுபவர்கள்… அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.

(5)

सम्पदः स्वप्नसँकाशाः यौवनँ कुसुमोपम्।
विधुच्चन्चचँल आयुषँ तस्मात् जाग्रत जाग्रत॥

All possessions are like what are seen in a dream, youthfulness is only for a short time , like a flower’s lifetime. Life passes away like a lightening therefore be alert!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல … நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,.

(6)

क्षणँ वित्तँ क्षणँ चित्तँ क्षणँ जीवितमावयोः।
यमस्य करूणा नास्ति तस्मात् जाग्रत जाग्रत॥

Money, memory and life are all momentary. Lord Yama, the lord of death, does not show any mercy. Therefore be awake!!

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை

(7)

यावत् कालँ भवेत् कर्म तावत् तिष्ठन्ति जन्तवः।
तस्मिन् क्षीणे विन्श्यन्ति तत्र का परिदेवना॥

As long as their karma lasts so long we see the animal here, the moment the karma is over, the animal is gone. what is there to brood over this ?

சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான்.
இதில் என்ன யோசிக்க இருக்கிறது. மேடையில் ஏறியாயிற்று.., வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை…..

Source ….Facebook post of Sridharan Sivaraman

Natarajan

Life Lessons We Can Learn from Children….!!!

 

Children seem to know something that adults have forgotten. They appear more confident, more courageous and enjoy life more intensely than we adults do. I often look back at my childhood years and cannot help but think of them as the best years of my life. I was a carefree spirit; I lived in the present moment; I had no anxieties and I had no fears. I often wish that I could return to the innocence and zest for life I once had when I was a child. I believe that we can all learn something from our younger selves to bring more clarity and joy into adulthood.

1. They see each day as a new beginning

When you are young, a day can feel like an eternity. Yet with each new day we are aware of the new prospects and new opportunities to make new friends, explore new adventures and learn new things. Every day is an opportunity to start afresh. And, unlike adults, children do not carry baggage from one day to the next.
2. They are fearless
Children are more willing to explore and try new things. They are unaware of the consequences and are more willing to try something new. If they injure themselves they use it as an opportunity to learn from their mistakes. As adults, we often hold ourselves back, predominantly because of fear. We stop ourselves from taking chances and seeing what happens. Successful people tend to be those that step out of their boundaries and take risks.
3. They lose themselves in creative projects
A child can often be seen getting lost in a creative project for hours at a time, be it drawing, playing with clay, building a sand castle, and so on. Yet, as we get older, we stop seeing creative activities as worthwhile. How many adults do you know (aside from artists) who spend their free time drawing, playing with clay or finger painting?
4. They find joy in most things and laugh every day

 

Children have a beautiful ability to find joy all around them. They see silliness everywhere.

 

5. They cry if they feel like it

Crying is not often an emotion that adults feel comfortable expressing, yet children do so all the time. Crying helps release our emotions in a normal, healthy way. Yet, instead, we always make it a point to keep it in check. Consequently, we end up keeping our emotions to ourselves. At times, it’s okay for us to be a little more open and vulnerable with people we feel comfortable around.

6. Children are active

Thinking back to my younger years, it was a joy to play outside, running around until I was out of breath and my cheeks were rosy. I never thought of being active as exercise or daily fitness, for me, I was just playing and it was fun.

7. They are more willing to try new things

Children will attempt to play a sport that they have never tried before. They are more willing to jump on a trampoline or dive into a pool, or ski down a mountain, even if they have never done so before. Adults tend to have a fear of the unknown and prefer to stay in their comfort zone, rarely venturing out. Adventure though can make us feel exhilarated and awakened.

8. They are enthusiastic

Children often tend to have so much enthusiasm. They feel lots of excitement, and are hopeful and optimistic. We too should learn to approach life in a more optimistic way. As adults, we often tend to dwell on the negative

9. They nurture friendships

Observe children playing with their friends, they often find pure joy in doing so and are always keen to make new ones. Children tend to enjoy their many activities too – they join soccer teams, go to birthday parties and enjoy quite a number of after school activities too.

10. They notice the little things

The simple things that we often take for granted tend to bring incredible joy and profound inspiration to children. They notice the tiny miracles that surround them each day. How much more beautiful life could be if we noticed the same things they do?

 

Source….www.ba-bamail.com

Natarajan