” வெறும் கை என்பது மூடத்தனம்…விரல்கள் பத்தும் மூலதனம் “

ரயிலில்  கற்ற  பாடம் …

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி
விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும்,
நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு
மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று
கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து
கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம்
ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட
தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் ,
குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ்
விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ
மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் ,
பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர்
சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்
அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.வழக்கமாக
இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு
சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள்
தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு
பழக்கமாகிபோனதுஅப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன்.
ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக
வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக
சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை
எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில்
மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி ,
இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில்
இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை ,
ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம்
எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே
நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த
புன்னகை அவரிடமிருந்தது .ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது
அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன்
அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக
புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும்
வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு
போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற
நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு
தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி
களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி
தூண்டியது.“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”
“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே
முடிச்சிறனும்!”
“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”
“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்
“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை
அடைந்ததுஉடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில்
போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர்
தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும்
இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து
நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு
மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி
கிளம்பியது.இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் .
இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது
“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”
“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான்
இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர்
கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்
“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,
“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த
டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”
சிரிப்பு வந்தது எனக்கு. “டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் ,
பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு
அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு
என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என
விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது“குப்பை பொறுக்கும் ஒருவன்
எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான்
ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில்
நான் அழைத்தேன்.
“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு
பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .
திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்”
என்றேன்“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ்
கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே
என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம்
என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன
பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம்
சாதித்தேன்“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர்
செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற
நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும்
வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .அண்ணன்,
ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர்
டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால்
கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே
நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி
அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான்
குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு
பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல்
வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில்
போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு
நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய்
நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத
சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் ,
வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது
கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று
வழித்தடங்கள் உள்ளன .மலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில்
அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி
பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன
ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல்
உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே
பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ
சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில்
செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம்
என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.“சார் ! எனக்கு
தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு
உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும்
அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன். .மேற்படி
பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த
உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை
விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.
மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு
அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!
Source::::
http://kadayanallur.org/  & Input from a friend of mine

Natarajan

Gmail Passwords Leaked ? ….

About 5 million Gmail addresses and passwords were leaked this week, sparking fears among many–even Yahoo Mail and Outlook email users–but people shoudln’t worry, Google says. There’s no evidence that any other email services other than Gmail were compromised in any way, and Google says it wasn’t hacked.

The password leak came likely via phishing scams and hacked websites.

But the leak, however, underscores that Gmail, Yahoo, and Outlook users should be wary of phishing scams. Users should also make sure their password is strong enough.

It was reported that 5 million Gmail accounts and passwords were dumped on a Russian Bitcoin forum last week, but the data is old, according to PC World and other reports.

Google said that users should not be too concerned about the leak.

“One of the unfortunate realities of the Internet today is a phenomenon known in security circles as “credential dumps”—the posting of lists of usernames and passwords on the web. We’re always monitoring for these dumps so we can respond quickly to protect our users. This week, we identified several lists claiming to contain Google and other Internet providers’ credentials,” it said in a blog post.

It added: “We found that less than 2% of the username and password combinations might have worked, and our automated anti-hijacking systems would have blocked many of those login attempts. We’ve protected the affected accounts and have required those users to reset their passwords. It’s important to note that in this case and in others, the leaked usernames and passwords were not the result of a breach of Google systems. Often, these credentials are obtained through a combination of other sources.”

PC World, citing the CSIS Security Group, reported that the Russian leaker says more than 60 percent of the data is legitimate.

“We can’t confirm that it is indeed as much as 60 percent, but a great amount of the leaked data is legitimate,” Peter Kruse, the chief technology officer of CSIS, told the website. “We believe the data doesn’t originate from Google directly,” Kruse added. “Instead it’s likely it comes from various sources that have been compromised.”

Source::::, Epoch Times | September 11, 2014

Natarajan

Message For the Day…” Your Actions Reflect Your Inner Being …”

All aspirants must have internal purity, as all actions arise from internal impulses and not external forces. Your actions reflect your inner being. When pure feelings arise within you, your actions will naturally be pure. To cleanse the internal impulses, you must be pure in your mind, speech and the body. Of these three, purity in speech is the most important. Gita reveals, “Every word you utter should be free from causing excitement or agitation (Anudhvegakaram Vakyam Satyam Priyahitam cha yat)”. Your speech must be true and pleasing. Four factors account for the pollution of speech; they are – uttering falsehood, excessive talking, carrying tales against others, and abuse or criticism of others. Make sure your tongue does not indulge in these offences. Only when you get rid of these four evil tendencies from within, your speech will become pure and unpolluted.

Sathya Sai Baba

Autonomous People Movers Heathrow Airport Terminal ….

Matthew Phenix  in BBC .com

The autonomous Ultra pods of London's Heathrow airport

These autonomous people-movers run along a closed course between Heathrow’s Terminal 5 and the Business Car Park, 2.4 miles away. (Matthew Phenix)

Tucked in a corner of Terminal 5 at London’s Heathrow airport, the future of urban mobility is quietly unfolding.

Since 2011, on a closed course between the terminal and the Business Car Park, 2.4 miles away, a fleet of 21 diminutive passenger pods have ferried as many as 1,000 passengers each day, quietly logging well more than 1m autonomous miles in the process. It’s a small-scale experiment, commissioned by Heathrow Airport Holdings Limited and built by UK-based Ultra Global PRT (for Personal Rapid Transit), but its success – measured by cost savings, environmental impact and user-friendliness – may help define locomotion in the city of tomorrow.

This is no miniature railway; Ultra pods are real cars, with rubber tires and untethered, battery-driven powertrains. Although they OFFER space for as many as six people and their luggage, they are compact, measuring 12ft long, 5ft wide and 6ft tall; and lightweight, tipping the scales at just 1,870lbs, including a 141lb battery pack. At its 25mph top speed, the pod draws only 2kW of electricity and hums along at 35dB (quieter than a refrigerator). Pods self-monitor battery level, occasionally excusing themselves at station stops for “opportunity charging”.

Pods wait in the station at Heathrow’s Terminal 5. (Matthew Phenix) 

More than a novelty, the Heathrow pod network boasts some impressive environmental claims. The system already meets Kyoto Protocol 2050 projections, delivering a 50% reduction in per-passenger carbon emissions compared with diesel-powered buses and 70% compared with cars. By Heathrow’s estimate, the pods replace some 70,000 bus journeys each year. And unlike a shuttle bus, the average wait time for a pod is less than 10 seconds (80% of passengers have no wait at all).

Operation is splendidly simple. In the station, touch-screens allow riders to select their destination (Heathrow’s system OFFERS only two outbound options). The doors open and a mellifluous recorded voice welcomes the rider and begins narrating the experience. After the passenger presses the “Close doors” and “Start” buttons, the pod autonomously backs out of its parking spot and hums away from the station.

Pods accommodate as many as six passengers and their luggage; controls couldn’t be simpler. (Matthew Phenix) 

It’s a five-minute ride from end to end, and the experience is altogether delightful. Crossing over seven roads and two rivers, a journey by Heathrow pod is more like a theme-park ride than a car-park transfer.

Of course, building a closed-course autonomous vehicle is decidedly easier than building one for the open road, à la the Google self-driving car, which must negotiate such obstacles as complex roadway interchanges, pedestrians and non-autonomous vehicles. But simplicity has its advantages. The pods themselves, which use mostly off-the-shelf automotive hardware, have proven highly reliable, and the system’s lightweight infrastructure – slender, easily installed trackways and flyovers – is, says Ultra, between six and 10 times more resource-efficient than typical road or rail systems.

Pods self-monitor battery status, occasionally excusing themselves at station stops for “opportunity charging”. (Matthew Phenix) 

And Ultra has big plans for its little pods. Working with investors in India, the company intends to build a 4.8-mile elevated circuit in the city of Amritsar, about 285 miles north of New Delhi. This network will include seven stations and more than 200 pods capable of transporting some 50,000 passengers a day. And in November 2013, Ultra Global PRT and Taiwan-based China Engineering Consultants completed a feasibility study for the implementation of a sprawling PRT system New Taipei City, population 6.9m.

While it is not difficult to imagine specific pod applications – within city centres, for example, or between cities and airports – an all-pod future is a decidedly loftier proposition. A pod network like Heathrow’s works because riders can grab any pod, at any time, with no waiting. And while the service is personal, it isn’t private. The question is, will future drivers be willing relinquish the privilege of owning the cars of their choice – and the freedom of driving those cars themselves – for the convenience of a hands-off motoring future?

  

Source::::bbc.com

Natarajan

” குன்றென நிமிர்ந்து நில்! “….இன்று பாரதியார் நினைவு நாள்…

‘சிதையா நெஞ்சு கொள்’ எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.

பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.

“நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ -இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி சிவசக்தி-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

தாயின் இறப்பு : பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887ல் பாரதியின் தாய் லட்சுமி அம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

“என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண் எய்திய தாய்” பாட்டி பாகீரதி, தாய்வழிப்பாட்டனார் ராமசாமி ஐயரின் அன்பு பாரதியைச் செழுமைப்படுத்தின. பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசை இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார். ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி, ஓடியாடவில்லை.

இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ”பள்ளிப் படிப்பினிலே- மதிபற்றிட வில்லை” என்ற வரி கவனத்திற்குரியது.

தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்து கல்வி பயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது.பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.

”செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;

தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;

நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை

நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!”

உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி

‘பெரிதினும் பெரிது கேள்’ என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.

தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்ப முடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக அனுப்பி வைத்தான். திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவர். என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டார். அதனால் தான் திருநெல்வேலி ம.தி.தா., பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் மரணம் : 1898 ஜூலை 20 ல் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள். தந்தை மரணமடைகிறார். பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாட்டி பாகீரதி குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்தார். படிப்பிற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்து போராடிய பாரதியின் பாட்டியின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.

தோல்வியிற் கலங்கேல் : பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டவர். பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழு வயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோது தான் எதிர்கொண்டான். ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான். ”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.

‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற வரிகள் பாரதி பட்ட அடிகளில் இருந்து பிறந்தது. ரசிக்கும் மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:

”தந்தைபோயினன் பாழ்மிடி சூழ்ந்தது;

தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;

சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்

திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்

எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?”

இப்படி வருந்தினாலும் மனஉறுதியை கைவிடவில்லை பாரதி.

“தேடிச் சோறு நிதந் தின்று பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?”

என்றும் பாடினார்.

சிறு துன்பங்களுக்கும் விதியை

நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பதுதான்.

 

முனைவர் சவுந்தர மகாதேவன்  in dinamalar.com

தமிழ்த்துறை தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

திருநெல்வேலி

mahabarathi1974@gmail.com

 

Natarajan

 

” இருப்பவல் திருப்புகழ் …”

Thanigesan
‘இருப்பவல் திருப்புகழ்’ என்று துவங்குகிறது திருத்தணித் திருப்புகழ்ப் பாடலொன்று. திருப்புகழ் கையிருப்பிலே உள்ள அவலைப் போன்றது. பண்டைய காலத்தில் பிரயாணத்தின் போது அவல் எடுத்துக் கொண்டு போவது வழக்கம். சுடுநீரில் ஊற வைத்து கழுவி உப்பு அல்லது சர்க்கரை இட்டுச் சாப்பிடலாம்; வெல்லப் பொடி கலந்து அல்லது எலுமிச்சை பிழிந்து சாப்பிடலாம். கி.வா.ஜ அவர்கள் கூறும் விளக்கவுரை மிக அருமையானது. “காலன் ஊருக்குச் செல்லும் நெடுவழிப் பிரயாணத்தில் உபயோகப்படும் அவல் அது; அருணகிரிநாதர் கந்தனுக்கு ஒரு வகை அவல் கொடுத்தார்; குசேலர் அளித்தது நெல் அவல், அருணகிரியார் அளித்தது சொல் அவல்!” [‘பெரும் பெயர் முருகன்’]

இரும்பு அவல் திருப்புகழ் என்று கூறுவாருண்டு. அது திருப்புகழின் பெரு வலிமையைக் காட்டுவது. அவல் போல உண்ணலாம்; இரும்பு போல மனோ திடம் பெறலாம். “அந்தகா வந்து பார் சற்று என் கைக்கெட்டவே” என யமனையும் அறைகூவி அழைக்கும் திறத்தையும் பெறலாம் என்பது திரு வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்களது கருத்து.

இருப்பவல் திருப்புகழ் பற்றி ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் அமிர்தவசனி ஆன்மீக இதழில், வெளியான ஒரு குறிப்பு சற்று விநோதமாக இருந்தது. அது கீழே தரப்படுகிறது.

“இருப்பவல் என்பது பாம்பு போல் கொடி வளைந்து படர்ந்திருக்கும். வேரொடு பிடுங்கினால் அடியில் கிழங்கு பெரிதாக இருக்கும். அக் கிழங்கை நிழலில் உணர்த்தி, சூரணம் செய்து ஒரு மண்டலம் வரை உட்கொண்டால் 300 வயது வரை பலம் பெற்றிருக்கலாம். என்றும் உண்பவர் அளவில்லாத காலம் வாழலாம். அது மட்டுமல்ல, அக்கிழங்கு ஈரமாக இருக்கும் போதே இடித்துச் சாறு எடுத்து அதனில் பாதரசத்தை இட்டு உறவாக்கி குகையில் வைத்து உருக்கிக் குளிகை செய்து கட்டிக் கொண்டால் நினைத்தது யாவும் நிறைவேறும். ஆயுள் அளிக்கும், நினைத்தவை அளிக்கும் அருமை உடைய இந்த இருப்பவலைப் போன்றது திருப்புகழ் என்று அருணகிரியார் தணிகைத் திருப்புகழில் அறிவிக்கும் அருமையை நினைக்கவே நெஞ்சம் நெகிழ்கிறது. இருப்பவலால் உடல் உரமெய்தி விடும்; திருப்புகழால் உயிர்க்கு உறுதி கிட்டும். இவ்விரண்டினுடனும் உறவு பூண்டால் என்றும் இறையருள் எய்தி இருக்கலாம் என்று அத்திருப்புகழுக்கு உரை காண்பது உயர்ந்த நிலை என்று ஊகிக்கிறது நமது மனம்.”

[‘சித்தர்கள் சிறப்பு’ – கருவூர்ச் சித்தர் சொல்லும் கற்ப முறை: உரை= குகஸ்ரீ ரசபதி அவர்கள்.
செய்தி- அமிர்தவசனி- ஆன்மீக இதழ்]
பாடல் முழுவதும் படித்து மகிழுங்கள்:-

 இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு …… மெனவோதும்

இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய …… கவிநாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத …… லறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் …… விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த …… மதவேளைக்

கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் …… கயிலாயப்

பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் …… தருசேயே

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு …… பெருமாளே.  

source:::: Murugan Bhakthi  …
சித்ரா மூர்த்தி,
சென்னை.

Natarajan

“இயற்கையை ரசியுங்கள்” – பாரதியார் நினைவு நாள்… செப்.11

 

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி

கரிய நிறமான காகம் கா… கா… என்று கத்தும்.

மரக்கிளைகளில், வானவெளியில், அதிகாலைப் பொழுதினில்

காகம் தன் கூட்டத்தாரோடு சேர்ந்தே திரியும்.

நாலாபுறமும் சுதந்திரமாய் பறந்து செல்லும்.

தேவி பராசக்தி விண்ணில் செம்மையான கிரணங்களை

காட்டி சூரியனாய் வந்து உதிப்பாள்.

தென்னை மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி

கீச்சுக் குரலில் பாடித் திரியும்.

சின்னஞ்சிறு குருவி விண்ணில் வட்டமடித்திடும்.

பருந்து மெல்ல வட்டமிட்டவாறே நெடுந்தொலைவு சென்று பறக்கும்.

தெருவில் இரை தேடித் திரியும் சேவல் ‘சக்திவேல்’ என்று கூவித் திரியும்.

செம்மை ஒளி வீசிப் பகலை வெளிச்சமாக்கிய கதிரவன்

மாலையில் மறைந்துவிடும்.

மயக்கும் மாலை வேளையில் நிலவு தன்

அமுதக் கிரணங்களைப் பொழிய ஆரம்பிக்கும்.

இந்த ரம்மியமான மாலை நேரத்தில், என் அன்பிற்குரியவளும்

உச்சி மாடத்தின் மீது ஏறி வந்து கண்ணுக்கு இனிமை சேர்த்திடுவாள்.

மனமே! வானில் திகழும் மணித்திரளான நட்சத்திரக் கூட்டத்தைக்

கண்டு இன்பம் கொள்வாய்.

நிலவையும், வான் நட்சத்திரங்களையும் கண்ணால் கண்டு மனதால்

உண்டு களிப்பதைவிடவும் வேறொரு செல்வம் உலகினில் உண்டோ?

தென்னை மரக்கீற்றில் ‘சலசல’ என்று சத்தமிடும் பூங்காற்றின்

மீது குதிரைச் சவாரி போல ஏறிக்கொண்டு

உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.

பண்ணோடு இசைத்துப் பாடிக் களித்திருங்கள்.

Source:::The Hindu….Tamil
Natarajan

Message For the Day…” How to Get Rid off Desire and Expectations …”

Is it possible for anyone in this world to be free of any desire and expectation? Not quite! Some things (material and sensual) may be attractive to some persons and some big aims (non-physical and transcendental) may interest others. Almost all desires fall into one of the above categories. Then how is it possible to get rid of both kinds of desires? This is possible! In the Gita, the Lord has declared that He is present in all righteous actions. Therefore those who perform righteous actions can develop anapeksha (desirelessness). This means that when a man performs all actions as OFFERINGS to the Lord, they become desireless actions. The Lord is the One who from within, makes one act, speak, listen, see, etc. If a person performs all actions with the conviction that the indwelling Lord is the real Doer, then the actions become desireless. Hence to begin with every sadhaka should regard one’s actions as OFFERINGS to the Divine.

Sathya Sai Baba

” சேலத்தில் பெரியவா கிரஹம்…” !!!

தலைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா!

சுவாரஸ்யமான அந்தப் புனித நிகழ்வைத் தெரிந்துகொள்வோமா?

பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால், இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான், காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதி, காஞ்சி மகானிடம் பக்தி கொண்டு இருந்தார் களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், மகானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது.
உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால், சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, ”சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா.

”சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது” என்று ராஜகோபால் சொல்ல… ”சேலத்தில் வீடு இருக்கிறதா என்றுதான் கேட்டேன்” என்றார் மகான் அழுத்தம்திருத்தமாக.

”இல்லை!” என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது… சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று!

சேலத்தில், அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர், மகானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதிகொண்டார். எங்கெங்கோ தேடி, கடைசியில் ஒரு நண்பர் மூலமாக, ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். அதை வாங்கும்பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

அதன்பின், காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க, ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி, தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்துவிட்டார் ராஜகோபால்.

”சொந்த வீடு இருக்கிறதா?” என்று மகான் கேட்டதை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால், மகானின் முன்னால் போய் நின்றார்.

இதற்கு முன் நடந்த சம்பவத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.

வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே, நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால், மகானிடம் பவ்வியமாக, ”ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்” என்றார்.

மகானின் அடுத்த கேள்வி, ராஜகோபாலை வியப்பில் ஆழ்த்தியது… ”வடக்குப் பார்த்த வீடுதானே? வாங்கிடு!”

வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மகானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால். ஆனால், அந்த மகான் கேட்டார்… ”வடக்குப் பார்த்த வீடுதானே?’

அவரது அடுத்த கேள்வி: ”என்ன விலை சொல்றான்?”

ராஜகோபால் சொன்னார்.

”அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!” என்று ஆசி வழங்கினார் மகான்.

மகான் சொன்னபடியே, வீட்டின் சொந்தக் காரர் அதன் விலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் குறைத்துத் தர முன்வந்தார். வீடும் கைமாறியது.

இதோ… ராஜகோபால் தம்பதி, மகானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மகானிடம் நீட்டும்போது, தன்னை அறியாமல் ராஜகோபால் சொல்கிறார்…

”மகா பெரியவா அனுக்ரஹத்தில், மகா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!”

‘தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. ‘பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

மகான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து, ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு, சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன்பின் கேட்டார்… ”எனக்கே எனக்கா?”

”பெரியவா அனுக்ரஹம்” என்றார் ராஜ கோபால். பத்திரத்தை மகான் உடனே திருப்பித் தரவில்லை. சற்றுநேரம் கழித்து, அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து, பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார்.

வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மகா பெரியவா, சாவியை ராஜகோபாலின் கையில் தந்து, ”சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி” என்றார் புன்னகை புரிந்தபடி.

உண்மைதான்! வீட்டுக்காரி என்னும் சொல் மனைவி என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல… வீட்டைத் தன் மனைவியின் பேரில்தானே பதிவு செய்திருந்தார் ராஜகோபால்! எனவே, வீட்டுக்கு உரிமையாளர் என்கிற அர்த்தமும் அதில் உள்ளடங்கியிருந்தது.

அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம் யாரும் எதிர்பார்க்காதது.

”உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர் யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!”

இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! ராஜ கோபால் கொஞ்சம் ஆடித்தான் போனார். ‘பெரியவாளை கீழே விட்டுவிட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது.

மகானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா?

”நான் எல்லா இடத்திலும் இருப்பேன்” என்பதைப்போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார்.

”எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக்கொண்டது, உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!” என்ற பிரதோஷம் மாமா, அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினார்.

இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மகா பெரியவா கிரஹத்தின் வரலாறு.

இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புனிதமான கோயிலாகக் கருதப்படும் இந்தக் கிரஹத்தில், பிரதோஷ நாள்களில் வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் திணறிப் போகிறார்களாம்!

மகா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க, கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள்.

புதிதாக 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப்போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.

மகானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும்.

சேலத்தில் உள்ள மகா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒருமுறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து, காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!

Read more: http://periva.proboards.com/thread/7911/#ixzz3CpLlCFRG

Source:::: http://www.periva.proboards.com

Natarajan