நம் கல்வி… நம் உரிமை!- அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.

மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன. காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம்

பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.”

“இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே

ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா.

தொடரும் வெற்றிப் பயணம்

2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்!

தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள்.

அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார்.

கைதூக்கி விட நாங்கள் தயார்

நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள்.

அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது.

– குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

Natarajan

” கக்கனின் வேட்டி அழுக்கு …ஆனால் அவர் கை சுத்தம் …”

முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலை
முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலை

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.

கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.

இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:

ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?

ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.

அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்

என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.

ஆலயப் பிரவேசத்தில் கக்கன்

1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.

தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக

அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.

வளர்ப்பால் மகனானவர்

அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.

அரசு மருத்துவமனையில் அனுமதி

1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

எம்.ஜி.ஆர் நலம் விசாரிப்பு

ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவரைப் பார்த்து எம்.ஜி.ஆர்.கண்கலங்கிவிட்டார். காமராஜர் ஆட்சியில் போலீஸ் மந்திரியாக பணியாற்றியவர்.

உடனே எம்.ஜி.ஆர். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?’ எனக் கேட்க, ‘உங்கள் அன்பு இருந்தால் போதும் நீங்கள் வந்ததே சந்தோஷம்’ என்று கூறினார் கக்கன்.

எப்படி மனம் வந்தது?

‘விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டார் கக்கன்.

ஆனாலும் எம்ஜிஆர் மனம் பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ‘,இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’ என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நூல் பெயர்: தியாகசீலர் கக்கன்

நூல் ஆசிரியர்: இளசை சுந்தரம் 

Source……www.tamil.thehindu.com

natarajan

” ஹனுமான் பலமும் பாகவதர் பாரமும் …” !!!

ஜூன் 12 காஞ்சிப்பெரியவர் ஜெயந்தி

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!
கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார். போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து “ஜால்ராக்களையும்’
அழைத்து வந்திருந்தார்.

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி.
பேச்சின் இடையே அவ்வப்போது, “ம்ஹும்…ம்ஹும்…’ என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, “பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்… பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார்.

“”பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்…. ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல…. ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ….” என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார்.

இதைக் கண்ட பெரியவர், “”மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,” என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.

Read more: http://periva.proboards.com/thread/7480/#ixzz3XqoTQ97p

Source……www.periva.proboards.com

Natarajan

” பூமி பூஜை செய்த புண்ணியம் …”

ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்

“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா ”

என்று கேட்டார்.

பணக்காரக் குடும்பத்தினருக்கு, ஒரு நொடி ‘சப்’பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,

‘ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்’ , ‘ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்’

என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘செய்யப்படுகிறது’ என்றனர்.

ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.
‘யாரால் செய்யப்படுகிறது?’ என்று வினவினார்.

இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் ‘வேலைக்காரிதான்’ என்றாள் தனவானின் மனைவி.

மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்துவிட்டது!” என்றார்.

அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.

தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.

எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்வோமே…

மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்
தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்., மாடம்பக்கம்.சென்னை.

Read more: http://periva.proboards.com/thread/9027/#ixzz3XHGctChO

Source…….. http://www.periva.proboards.com

Natarajan

 

” Vishyanand”…A Planet Named After Viswanathan Anand …!!!

Vishyanand: Planet named after Indian chess grandmaster Viswanathan Anand

The Indian Chess grandmaster, Viswanathan Anand adds another feather in his cap with a minor planet being named after him. The planet was discovered back in 1988 but had not been formally named until recently. The news about a minor planet being named after him should excite Anand who recently fell to Magnus Carlsen in the recent World Chess Championship.

The minor planet is located roughly between the orbits of planets Mars and Jupiter. The discovery of the planet happened on October 10, 1988 thanks to the works of Kenzo Suzuki in Toyota, Aichi Prefecture in Japan.

Typically, the discoverer retains the rights to suggest a name for the discovered minor planet for 10 years. However, the final authority to assign a name to a minor planet rests with a committee within the International Astronomical Union.

When time came to formally name the numbered minor planet discovered in 1988, Michael Rudenko of Minor Planet Center, a committee of the International Astronomical Union, decided to give the minor planet the name of the chess grandmaster Anand.

Why Anand got his name the planet

According to Rudenko, the idea of naming the numbered minor planet after Anand was actually his own. However, he took some matters into consideration in arriving at the name. Rudenko selected Anand because he considered him a great chess player. Further to that, he selected him because he is an astronomy enthusiast.

How the naming happened

Therefore, when it came to giving the numbered minor planet a formal name, Rudenko proposed “Vishyanand”. The name itself was based on some set of rules that govern the naming of such objects. For one, the rule requires that the proposed name should have 16 characters or less. The naming rule also requires that the proposed name should not have spaces.

In addition to the name proposal, a brief citation that explains the reason for the proposed name should be supplied. Rudenko did all that to get “Vishyanand” through as the name of the numbered minor planet.

Anand is excited

Anand tweeted about his excitement for a planet being named after him. He also thanked Rudenko for taking the trouble to get his name to the outer space.

Source……… www .pc-tablet.co.in

Natarajan

” பையனுக்கு புத்தி சொல்லலாம் …இப்போ உனக்குதான் சொல்லணும் …” !!!

பெரியவா எல்லாம் அறிந்தவர் என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சி.

மூலம்——-மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள்—–ஆறாம் தொகுதி

சொன்னவர்——ஸ்ரீமடம் பாலு மாமா.

தொகுத்தவர்—–டி.எஸ்.கோதண்டராம சர்மா.

பதிப்பகம்——வானதி பதிப்பகம்.

நவநீதசோரன்.

சந்தானராமன், பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு தன்னுடைய பூர்வீகம், பெயர் போன்ற விவரங்களைச் சொன்னார்.

“நீ நவநீதசோரநன்தானே?”

சந்தானராமனுக்கு ஒரே திகைப்பு!.

“ஆமாம்”

“இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே? பத்னி, குழந்தைகள்…?”

“டில்லியிலே இருக்கேன். பெரிய உத்யோகம், மனைவி, குழந்தைகள் சௌக்கியம்…”

பெரியவாள் அணுக்கத் தொண்டர்களைப் பார்த்தார்கள்.

“இவன் கதை தெரியுமோ?”

‘தெரியாது’ என்று எல்லோரும் தலையாட்டினார்கள்.

பெரியவா கதை சொன்னார்கள்.

“சந்தானராமன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பையன். பெற்றோர்கள் படு சிக்கனம். குழம்பு, ரஸம், மோர்—–அவ்வளவுதான் தினமும்.

பத்து வயதுப் பையன், மற்றப் பையஙன்கள் போண்டா, வடை, பஜ்ஜி, தோசை, இட்லி என்றெல்லாம் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, ஏங்கிப்போவான்.

நாக்குச் சபலத்தைத் தீர்த்துக்கொள்ளணுமே?…

வழி கண்டுபிடித்தான்.

அப்பாவின் சட்டைப்பையில் கைவிட்டான். நிறைய காசுகள் இருந்தன. ஒரு அணா( இன்றைய 12 பைசா) மட்டும் எடுத்துக்கொண்டான். ஒரு வடை—ராமு ஐயர் காப்பி கிளப்பில்!

மறுநாள் ஓர் அணா——–பஜ்ஜி!

அடுத்த நாள் ஓர் அணா—போண்டா.

இவன் அப்பாவுக்கு சந்தேகம் தட்ட ஆரம்பித்தது. ‘பையில் காசு குறைகிறமாதிரி இருக்கே…’

ஒருநாள் கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்டான், சந்தானராமன்.

வழக்கம்போல் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள் அந்தக் குடும்பத்தினர்.

தகப்பனார், பெரியவாளிடம் முறையிட்டார்.

“…பையன் திருட ஆரம்பிச்சுட்டான். இப்பவே இப்படி இருந்தால், பிற்பாடு திருட்டுப் பழக்கம் வந்துடுமோன்னு கவலையாயிருக்கு…பெரியவா புத்தி சொல்லணும்….”

பெரியவாள் உதடு பிரியாமல் சிரித்தார்கள்.

“பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசில், வெண்ணெய், தயிர், பால் திருடியதாகச் சொல்வார்கள். அதனால் அவனுக்கு, நவநீதசோரன்னே பேர் வந்துடுத்து. உன் பிள்ளை சின்னப்பையன். நாக்கு கிடந்து அலையறது. சகஜம்தானே…. வாய்க்கு ருசியாக பட்சணங்கள் பண்ணிக் கொடுக்கச் சொல்லு. வசதியில்லாத குடும்பமா இருந்தா—–‘அப்பாவைத் தொந்திரவு செய்யாதே; திருடாதே’நன்னு பையனுக்கு புத்தி சொல்லலாம். இப்போ உனக்குத்தான் சொல்லணும். Pocket expense—க்கு அப்பப்போ ஓரணா—-ரெண்டணா கொடு. இனிமேல் திருடமாட்டான். பெரிய உத்யோகம் பார்ப்பான்….
என்று சொல்லி கதையை முடித்தார்கள் பெரியவா.
பெரியவ குரலை ஏற்றி இறக்கி, கைகளை ஆட்டி அசைத்துக் கதை சொன்னதை எல்லோரும் சுவைத்தார்கள்.

‘நவநீதசோரன்’ கண்களில் யமுனை பெருகிக்கொண்டிருந்தது!

Read more: http://periva.proboards.com/thread/2781/mahaperiavas-sarvagnathvam#ixzz3Vob004rL

source:::: http://www.periva.proboards.com

Natarajan

” படித்ததில் பிடித்தது ….கவலைப்படாதே செல்லம் …” !!!

கவலைப்படாதடா செல்லம்

கள்ளிப்பாலோ

குப்பத்தொட்டி கலாசாரமோ

நம்மகிட்ட இல்ல…

காக்கைக்கும் தன் குஞ்சு

பொன் குஞ்சுன்னு சொன்ன பகுத்தறிவுள்ள

மனுசங்களுக்குத்தான் அதெல்லாம்..

பட்சி ஜாதி நாம இங்கே பகுத்தறிவாளர பாக்காதீங்க

கா.. கா.. கா.. கா…

source:::::Somasundaram Thirumalaiswamy in http://www.dinamani.com

Natarajan

ஹைக்கூ எழுதும் டீக்கடைக்காரர்……

கோவையைச் சேர்ந்தவர் நா.முத்து. டீக் கடைக்காரர். கவிஞர். சாகித்ய அகாதெமி சார்பில், சிறந்த 100 ஹைக்கூ கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்ததில் இவரது கவிதைத் தொகுப்பும் ஒன்று.

நா.முத்து 8-ஆம் வகுப்பு வரைதான் படித்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அப்பாவுடன் டீக்கடைப் பணியில் சேர்ந்துவிட்டார். ஏன்? படிக்கவில்லை என்று

கேட்டபோது, “”எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானலும் வாசிப்பேன். ஆனால், மனப்பாடம் செய்து எழுதுவது  எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனால் தான் படிக்கவில்லை.

ஆனால், படிக்காதது இப்போது வருத்தமாக உள்ளது” என்கிறார்.

“தலைவர் எழுச்சியுரை, உற்சாகம் தந்தார் சுக்குக் காப்பிக்காரர்’

“நேரம் சரியில்லை கடிகாரக் கடை’ என்பது போன்ற நகைச்சுவை ஹைக்கூ கவிதைகளை அள்ளி வீசுகிறார்.

நகைச்சுவை ஹைக்கூக் கவிதைகளை மட்டுமே மையமாக வைத்து எழுதாமல், சமூக நோக்கிலும் பல ஹைக்கூக் கவிதைகளை எழுதியுள்ளார்.

“ஆயிரம் மரங்கள் மரணம்

ஆறுவழிச் சாலை ஜனனம்

அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்

மரம் நடுவோம், மழை பெறுவோம்’

என்கிற கவிதையை கோவை, அவிநாசி சாலையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.

ஹைக்கூ கவிதையில் ஆர்வம் வரக் காரணம் என்னவென்று கேட்டோம்:

“”நாம் பார்ப்பதெல்லாம் ஹைக்கூ தான். எதைப் பார்த்தாலும் எதாவது சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு தான் ஹைக்கூ கவிதை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. எனவே, நான் பார்ப்பதை, யோசிப்பதை தெளிவாக சொல்ல வழிவகுத்தது ஹைக்கூ கவிதை தான்.

இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில், “இருக்கு’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சூழல் சார்ந்த கவிதைப் புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. “எடை குறைவாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி வருகிறேன்.

குறும்படங்கள், வீதி நாடகங்கள், கோவை வானொலியில் கவிதைகள் வாசிப்பது, புகைப்படக் கலை, இலக்கியக் கூட்டங்களில் பேசுவது என தற்போது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்பது என் மனதுக்குப் பிடித்த கவிதை. பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதே உற்சாகமும், தைரியமும் பிறக்கும். எனவே, அவரது கவிதைகளை அதிகம் வாசிப்பேன்.

“நம் பிறப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால், நம் இறப்பு ஒரு சரித்திரமாக மாற வேண்டும்’ என்ற வரிகளுக்கேற்ப எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து செயல்படுத்துவதே அறிவுடைமையாகும் என்பதற்கு சான்று டீக்கடை முத்து.

Source:::::www.dinamani.com

Natarajan

 

One Year on, This Chennai Family Waits for MH 370 Passenger… Whole World Still Looking For Clues…

 

 

Chandrika Sharma(L)was one of the 239 people on board the ill-fated MH370 flight that disappeared while on its way to Beijing on March 8, 2014. In this photograph, she is seen with her daughter Meghna and husband Narendran.

KS Narendran, Chandrika Sharma’s husband, is a shattered man. His wife was one of the 239 people on board the ill-fated MH370 flight that disappeared while on its way to Beijing, one year ago on March 8, 2014.

Sharma had taken the flight on her way to Ulan Bator to participate in a Food and Agriculture Organisation conference to represent the NGO she worked for. Narendran, a management consultant, is a quiet man and has since chosen to keep to himself.

A colleague of Sharma at the NGO she worked at, International Collective in Support of Fishworkers (ICSF), said Narendran did not want to be disturbed. “Till date he has not received any death certificate,” the colleague added

https://i0.wp.com/www.hindustantimes.com/Images/popup/2015/3/08-03-pg21a.jpg

The couple’s only daughter is studying in a Delhi college and is currently preparing for her annual examinations.

On Friday, Narendran was present at a workshop organised by the NGO where Sharma’s co-workers and government officials paid tribute and spoke about her commitment to the cause and dedicated service to the people.

A stoic Narendran looked on as speaker after speaker narrated their own experiences at the NGO and shared their thoughts about Chandrika Sharma.  The ICSF in its website homepage has a section titled “Waiting for Chandrika Sharma”.

If the massive undersea search for Malaysia Airlines Flight 370 turns up nothing by the end of May, the three countries leading the effort will go “back to the drawing board,” Malaysia’s transport minister said on Saturday.

Liow Tiong Lai told a small group of foreign reporters on the eve of the anniversary of the plane’s disappearance that he remains cautiously optimistic the Boeing 777 is in the area of the southern Indian Ocean where the search is ongoing.

Despite the exhaustive search for the plane, which disappeared last March 8 during a flight from Kuala Lumpur to Beijing, no trace of the jet has been found. Malaysia’s government on January 29 formally declared the incident an accident and said all 239 people on board were presumed dead.

“By the end of May, if we still can’t find the plane, then we will have to go back to the drawing board,” Liow said.

Asked if Malaysia might stop the search if there are no new leads by the end of May, when bad weather usually sets in, Liow said it was “too early to pre-empt anything now,” and that the government would continue to rely on the group of experts leading the hunt.

“We stand guided by the expert team,” he said.

“I am cautiously optimistic it should be in this area,” he said, adding that “we need directions, we need plans, we need to review all the data that we have.”

Ships looking for debris from the plane on the ocean floor off the coast of western Australia have so far scoured 44 percent of the 60,000-square-kilometer (23,166-square-mile) area the search has been focused on, Liow said. In the latest report he received Friday, he said the search team had identified 10 hard objects that still need to be analysed.

Such findings, which often include trash and cargo containers from passing ships, have been common during the search, and so far no trace of wreckage has been located.

Liow said that Australia, Malaysia and China would meet next month to discuss the next steps in the search. Most of the plane’s passengers were Chinese.

Australian transport minister Warren Truss said last week that if the plane isn’t found by May, one option is to expand the hunt beyond the current search zone to a wider surrounding area.

Australian Prime Minister Tony Abbott said on Thursday, “I can’t promise that the search will go on at this intensity forever,” but added that “we will continue our very best efforts to resolve this mystery and provide some answers.”

Liow said an interim report on the investigation – a requirement under international civil aviation regulations – would be presented to the Malaysian government on Saturday and released to the public on Sunday. He didn’t comment on it.

But he outlined measures his government has already undertaken, including plans to upgrade radar systems to cope with bigger traffic volume and a new tracking system on Malaysia Airlines flights that sends aircraft data every 15 minutes, instead of the previous 30 to 40 minutes.

Liow said the government has allocated 700 million ringgit ($190 million) for the improved radar.

He said that the radar upgrade had been in the works even before Flight 370 disappeared. The plane dropped off civilian radar when its transponder and other equipment were switched off shortly after takeoff from Kuala Lumpur, but was tracked for some time by Malaysia’s military radar as it headed south across the country toward the Indian Ocean.

SOURCE:::: http://www.hindustantimes.com

Natarajan

ஒரு பிடி அவல் …. அது திருப்புகழ் …

ஒரு பிடி அவல்
ஒரு முனிவர் தன்  சீடனிடம் கடைசி வார்த்தையாக, “நான் சொல்வது   ஞாபகத்தில்  வை” என்று கூறி உயிர் நீத்தார்.  ஆழ்ந்து சிந்தித்தபோது சீடனுக்கு அதன் பொருள் விளங்கியது. “ஞா” (ஞானம்) + “ப” (பக்தி) + “வை” (வைராக்கியம்). ஞானமும் பக்தியும், அகத்தில் (உள்ளத்தில் /இல்லறத்தில் / உலகில்) வைராக்யமுமே நான் சொல்வது (நான்  சொல்லும் உபதேசம்)!

தமிழின் அழகு இதுவே! சூசகமான (மறைபொருள்) பொதிந்த இம்மொழியின் தலைவனே முருகன். நம் உள்ள குகையில் மறைந்திருப்பான். எனவே  குகன் என்ற பெயர் ஒரு காரணப்பெயர். காரணமும் காரியமும் பிரிக்கமுடியாததது. ஒரு காரணமாகவே நம்முள் மறைந்துள்ள குகன் செய்யும் காரியம் என்ன?  காருண்யம். மறைந்திருந்து தனிப்பெரும் கருணையால் தடுத்தாட்க்கொள்வது.

இது அவனது நான்காவது, ஐந்தாவது தொழில்கள்.  ஐம்பெரும் தொழில்களில் நான்காவது திரோதானம்(திரோபாவம்) அதாவது மறைத்தல். கடைசியாவது அனுக்கிரகம். நான்காவது தொழில் அவனது பண்பு. ஐந்தாவது அந்தப் பண்பின் பயன். எங்குமே பண்பும் பயனும் பிரிக்க முடியாதது.

முத்தீ
ஒரு கரும்பலகையின் பண்பு கருமை. பயன் எழுதப்பயன்படுவது. அதுபோல மறைத்தல்/மறைந்திருத்தல் என்ற அவனது பண்பினால் நாம் பெறும்  பயன் அவன் அருள். அதைப் பெற நாம் செய்யவேண்டியது என்ன? ஞானம், பக்தி, வைராக்கியம் இம்மூன்றையும் வளர்த்தல். அதைத்தான் சூசகமாக அந்த முனிவர் சொல்லி மறைந்தார். மறைந்து நிற்கும் முருகனுள்ளே  நாமும் மறைவதே முக்தி எனும் முடிவு நிலை.  முத்தீ (முக்தி) என்பது மூன்று “தீ” (நெருப்பு) சேர்க்கை.

ஞானத்தீ, பக்தீ, வைராக்யத் தீ! மூன்றும் சேர்ந்தால் அந்த பெரும் தீயில் நம் தீய வினை யாவும் பொசுங்கி முக்தி பெறலாம். ஞானமும், பக்தியும், வைராக்கியமும் வளர நாம் சில பயிற்சிகளை மேற்கொண்டு பழக வேண்டும். அவைகளே பூசை, தியானம், மௌனம், யோகப்பயிற்சி, பிராணாயாமம், ஏகாதசி விரதம், தீர்த்த யாத்திரை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு முதலியன. இந்தப் பட்டியலில் கடைசி இரண்டை மட்டும் சற்று விளக்குவோம்.

உள்ளமெனும் குகையில் ஒளிந்திருப்பவன் Child Krishna stealing butter
தீர்த்த யாத்திரை செல்லும்போது மிகவும் எளிதான, கொண்டு செல்ல வசதியான, நெடு நாட்கள் கெடாது இருக்கும்படியான, நம் உடலுக்குத் தேவையான சத்து நிறைந்த பொருளே ‘பிடி அவல்”.  அவ்வப்போது அதை வெந்நீரில் வெந்து உப்பு சேர்த்து உண்ணலாம் அல்லது வெல்லம்  சேர்த்து உண்ணலாம். கண்ணனைப் பார்க்க நெடுதூரம் நடந்த சுதாமா என்ற குசேலரும் அதைத்தான் எடுத்துச் சென்றார்.  அய்யப்ப பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்லுவதில் முன் முடி அய்யனுக்காக, பின் முடி தனக்காக என்றிருப்பதுபோல் குசேலரும் பிடி அவலை இரு பகுதியாக கொண்டு சென்றிருக்கலாம். தெரியவில்லை!

கண்ணன் மாளிகையும் சூழ்நிலையையும் பார்த்தபின் போயும் போயும் அழுக்குத்துணியில் சுற்றிக்கொண்டு வந்த ஆறிய உலர்ந்த அவலைப்போய் அவனுக்குத் தருவதா என்று அவர் சங்கோசப்பட்டது நியாயமே! அதைப் பிடுங்கி உண்டு அவர் வினை அறுத்த வள்ளல் கண்ணன்! கோகுலத்திலும் அதையே செய்தான்! ஒளித்து வைத்த வெண்ணையைத் திருடியாவது   கோகுலவாசிகளைக் காக்க சிரமப்பட்டவன் கண்ணன்! நம் வினைகளின் திரட்டே அந்த வெண்ணை. அறியாமையால் அதைக் கட்டிக்காத்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம். நம்மைவிட அவனுக்குத்தான் அக்கறை அதிகம்! முருகனும் அதையே செய்கிறான். வேலும் மயிலும் எதற்கு?

வெறும் அலங்கார வேஷமா? இல்லை.  கிரௌஞ்ச மலையைக் காட்டிலும் அதிகமாகவே இறுகி நிற்பது நமது உள்ளம் எனும் பாறாங்கல். அதை கூர்வேல் கொண்டு துளைத்து, மயில் மீது விரைந்து வந்து உள்ளே புகுந்து உள்ளக்குகையில் மறைந்து அருளும்  குகன் அவன். உள்ளேயிருக்கும் அவனை வெளியே காணவே நாம் குன்றுதோறாடி தீர்த்த யாத்திரை செல்கிறோம். செல்ல உதவுவது இந்தப் பிடி அவல். அவலை அவனுக்குத் தந்து, கவலை நீங்கி  நம் அவல நிலையிலிருந்து மீள்வோம். வள்ளி தந்த தினைமாவு உண்ட வாயனுக்கு நாம் தரும் அவல் கசக்குமா?

சொல் அவல்
இருப்பவல்  என்ற சொல்லை நாம் திருப்புகழில் காண்கிறோம்.  பயந்த தனிவழிக்குத்துணை திருப்புகழே.! எனவே  திருப்புகழும் பிடி அவலும் பிரிக்கமுடியாதது. இரண்டுமே நாம் தனிவழிப் போகையிலே துணையாக நிற்பது. நெல் அவலைவிட சொல் அவலாக விளங்குவது.நமது நீண்ட பயணத்தின் கடைசி கட்டம் முருகனின் திருவடிகளைப் பார்ப்பது. அதை ‘பல்லவி” என்பர்.  இன்னும் நெருங்கிய நிலை “அனு பல்லவி”. அதனுடன் ஐக்கியமாகும் நிலை “சரணம்’.

நாம் பாடும் இசைப் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. ஆனால் திருப்புகழ் பாடல்களில் அந்த பிரிவுகள் கிடையாது. ஏனெனில் திருப்புகழ் முழுவதுமே ஐக்கிய நிலையிலிருந்து (மனோலயத்திலிருந்து) தோன்றியவை. ஆகவே சற்று தள்ளி, அருகே என்ற பேச்சுக்கே இடமில்லை! அரைநிமிஷ நேரமட்டில் சரணகமலாலயத்தில் நிலைக்கும் அனுபூதியைத் தருவது திருப்புகழ். என்றும் கை இருப்பு அவலே திருப்புகழ்! ஒரு பிடி அவல் உண்டு, பல படிவிழாக்களில் பாடிப் பெறும் பயனில் பேசா அநுபூதி பிறக்கும்.  கந்தரநுபூதி தரும் செய்தி இதுவே.
நான், எனது எனும் இருகுண சேர்க்கையில் எழுந்தது சூரன் எனும் மாமரம். வேற்படை அதை இரு கூறாக்கியாதே தவிர அழிக்கவில்லை. மற்ற புராணக் கதைகளிலிருந்து கந்த புராணம் இங்கு வேறுபடுகிறது. சூரன் இருகூறாகி அடங்கினான். அதுபோலவே நமது உள்ளத்தில் ஆட்டம் போடும் சூரனான அகங்காரமும் மமகாரமும் அடங்கி ஒடுங்கி முறையே மயில், சேவலாகி அமரும். மயில் முருகனின் காலடியிலும், சேவல் மேலே திருக் கொடியிலும் அமர்ந்தன. சேவல் எப்படி கூவிற்று? “கொக்கறு கோ கோ” என்றால் என்ன பொருள்? கொக்கு= மாமரத்தை; அறு= அறுத்த; கோ = வேந்தன், கந்தன், என் சொந்தன் இவன் என்று பறைசாற்றுகிறது!

நாதவிந்து கலாதீ நமோ நமோ
பூதங்களின் பதி இறைவன். “அனு” என்றால் சமீபம். ஆக, அநுபூதி  என்றால் இறைவனருகே கொண்டு செல்வது என்று பொருள். அது மௌன நிலையில் பிறக்கும் என்பதை “பேசா அநுபூதி பிறந்ததுவே” என்கிறார் அருணகிரியார். அகரம் முதல் க்ஷகரம் வரை 51 விந்து எழுத்துக்கள் (பீஜாக்ஷரங்கள்) தரும் சக்தியை திருமூலர் திருமந்திரத்தில் விளக்கியதைப்போல் அமைந்தது 51 பாடல்கள் கொண்ட கந்தர் அநுபூதி. அந்த அநுபூதியைப் பெறும் நமது நீண்ட ஆன்மீகப் பயணத்தில் துணையாக வருவது பிடி அவலும்  இருப்பவலான திருப்புகழும். அதைப் பெற்று, ப்ரணவ நாதமும் விந்துவும் (பீஜமும்) சேர்ந்த அரும் பெரும் நிலையை வணங்குவோம்! நாதவிந்து கலாதீ நமோ நமோ!

SOURCE:::: Dr.K.Rajaram in murugan bhakthi.org
Natarajan