Uttering the truth is easy. But indulging in falsehood is a tortuous process. One has to take a lot of trouble to cover up one lie with more lies. Hence it is said: Speak the truth, speak what is pleasing, do not utter truth that is unpleasant (Sathyam brooyath; priyam brooyath; na brooyath Sathyam Apriyam). God is the embodiment of Truth. Truth is the foundation of the universe. This transcendental changeless Truth is beyond mind, speech and the categories of time and space. Vedanta has described it as‘Ritam’. Live up to this Truth. Internalize the fact that the Lord is present in everyone. Only when you recognise the omnipresence of the Divine, will you easily experience the Divine. Hence from today give up swartha (selfishness), turn your mind towards the Supreme (Parartha), lead a life of Truth (Yadartha) and sanctify your lives. If you earn the love of God even to the slightest extent, you will experience infinite joy.
There is nothing greater in the world than Bhakti (devotion). Once sage Narada demonstrated to his disciples how devotion is greater than anything in the world, including the Divine. While the Divine was greater than the cosmos, which the Lord as Vamana could measure in two steps, the Lord Himself is held in his heart by the devotion of the devotee. Devotion bestows the highest benefits. Devotion alone is the means to Realisation. Devotion alone confers supreme peace. Devotion is the panacea for all ills. Divine love encompasses all sacred acts. To achieve oneness with the Divine, one will have to be prepared to sacrifice everything. It is not easy for anyone to recognise the truth about the Divine. His leelas (miraculous sportive activities) are beyond the grasp of the mind and speech. There is no Veda or Sastra superior to devotion.
தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.
”ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்… தெரியுமோ?”
”மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே…”
”அது இருக்கட்டும்… என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது”.
”பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே”.
”நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?”
”அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..”
”காலேஜ்லே என்ன படிச்சே?”
”பி.காம்”
”மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்… பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!”
சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.
பெரியவா பேசத் தொடங்கினார்: ”ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?”
”கேள்விப்பட்டிருக்கேன்”
”அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா… ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, ‘நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். ‘சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, ‘கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், ‘கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். ‘இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.
போஜராஜா நெசவாளியைப் பார்த்து, ‘நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, ‘கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, ‘கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, ‘மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!
நாலாவது அடிலே, ‘நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்” என்று சொன்ன பெரியவா, ”நீயும் போயிட்டு வா!” என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
பெரியவா சொன்ன கவிதை இதுதான்…
காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி
யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.
அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், ‘ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.
அது போகட்டும்… வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?
இது ஒருபுறம் இருக்கட்டும், ”நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ‘பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.
ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,
‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’
என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).
இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.
ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.
ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் ‘Six Mystics of India’ என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது
You may install idols and worship them. But do not forget the inner significance of all that worship. All external activities are necessary only to help you to get the spirit of non-duality and experience unity in diversity. Love and sacrifice are very important. Where there is pure, unsullied, selfless, sacred and sublime love there is no fear at all. Giving and not getting is the underlying principle of spiritual sadhana. Your heart is full of love, but you are using it only for selfish purposes instead of diverting it towards God. God is in the heart and not in the head. The heart is full of love. Every day, remind yourself that God is one; all religions uphold the same principle of ‘One God, who is omnipresent.’ Do not have contempt for any religion, as each is a pathway to God. Fostering love towards your fellow-beings, receive the blessings of the Divine. This is the goal of life.
Festivals indeed occupy an important place in our lives and they bring our family and friends together. But aren’t we supposed to spread happiness and share our joy with the world too?
This year, from Spiderman to Bahubali, we stumbled upon some of the most innovative designs of Ganesha idols.
But, this wonder woman, Rintu Kalyani Rathod, chose to celebrate Ganesh Chaturthi in a totally different way.
She has her own bakery, ‘Rini Bakes – Bake my Dreams’ in Mumbai. Apparently, this wonder woman made a 38 inches tall chocolate Ganesha with 35 kg of chocolate in 50 hours.
After 5 days, she has planned to immerse Ganesha in milk, feed the chocolate Ganesha to hundreds of underprivileged kids and spread happiness in the lives of those kids.
This is what this amazing lady said on her Facebook post:
“It pains me tremendously to see the way our environment is exploited in the name of devotion. I just couldn’t bare the sight on the beach after the visarjan. Drunk people dancing on the streets on vulgar film songs blaring from loud speakers is not devotion.
I am a commercial designer turned designer baker. I decided to make my idol from chocolate last year. We immersed the idol in milk and distributed the chocolate milk among the underprivileged kids prasad. 1100 people took the prasad last year. It was a 28 kg, 32 inches tall idol. Real visarjan is done by bringing smiles on the faces of little kids not by polluting our waters.
This year my idol is 35 kg and 38 inches tall. It took me 50 hours to make it. Hope to distribute prasad to many more people this time, so bappa can stay in them forever. After all, bappa’s favourite place to reside is inside us, nowhere else.”
Isn’t this the perfect way to celebrate Ganesh Chaturthi? After all, happiness doesn’t result from what we get, but from what we give.
If you really believe in God, then do your bit. Be a better person and celebrate the spirit of mankind.
News Source: Facebook andShuvro Ghoshal in www.storypick.com
God is infinite. It is impossible to measure Him or compare Him with anything, for there is no ‘other’ to compare. He is omnipresent. The Vedas declare, “He is One alone without a second“ (Ekam eva Advitiyam). The Divine willed: “I am One; I shall become many”(Ekoham Bahusyaam). By His Will God manifested Himself in the many. All religions have accepted this truth. The Bible declares: “God created man in His own image.” Thus from the One, the manifold cosmos emerged. With the growth of knowledge, the animal nature in man has diminished and he has been able to develop and refine his culture. As the saying goes, Divine appears in human form (Daivam maanusha rupena). Hence do not consider yourself as a mere product of Nature, a creature of the senses and the physical elements. You are an embodiment of Divinity.
Credit ….Photo as well as the Clay Model ….By my Son Senthil Natarajan Brisbane Australia
Senthil Natarajan deserves a pat on his back for his artistic creation of the clay model pillayar as well as an eye catching photographic image of the art he created thro his photoshoot this day.. REf his facebook page .
This Pillayar is going to be kept in the Ganesh Pooja Tomorrow.@ our Home in Australia
வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும் விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.
இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.
இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும் கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.
முழுமுதற் கடவுள் விநாயகர். இவர் இல்லாத ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப் பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.
முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும் தேவகோட்டச் சிற்பம் – விநாயகர்.
பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை, பாசமும் அங்குசமும் ஆகும். இந்த அடையாளங்கள், தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.
பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.
கணபதி வரலாறு
விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான், கணபதியைப் பற்றி பாடும்பொழுது வாதாபி கணபதியே எனப் பாடினர்.
அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
திருச்சி மலைக்கோட்டையின் கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.
ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.
வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.
உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும், விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால் பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட சோழர்களின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய பிள்ளையார்.
‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.
இலக்கியங்களில் கணபதி
சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.
சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் –
‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’
என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.
விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.
நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி அருள வேண்டுகிறேன். இவன் திருவடிகளை நாமும் இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.
Source…..ச.செல்வராஜ், தொல்லியல் துறை…www.dinamani.com
டெல்லியில் ஸென்ட்ரல் கவர்ன்மென்ட் உத்யோகம். 1974 ல் காலை ஆபிஸுக்கு வந்து அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடப் போனபோது ….எங்கே போடுவது? என்றுகூட தெரியாத அளவு திடீரென்று பார்வை போய்விட்டது! பகவானே! உடனேயே ஸப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு போய் காண்பித்தார். டாக்டர்களோ கண்ணாடி போட்டால்கூட பார்வை வருவது ஸந்தேஹம் என்று சொல்லிவிட்டனர். உடனே மெட்ராஸுக்கு வந்து அப்போதுதான் ப்ரபலமாகிக் கொண்டிருந்த டாக்டர் பத்ரிநாத்திடம் காண்பித்தார்.
அவர் எல்லா டெஸ்டும் பண்ணிவிட்டு இது “போட்டோ கொவாகுலேஷன் ” என்று சொல்லிவிட்டார். அதாவது ரெடினாவை ஒரு திரவம் மறைப்பதால்,உண்டாகும் ஒரு வ்யாதி. ஆபேரஷன் மூலம் அந்த திரவத்தை வற்றச் செய்யலாம். அதோடு ஒரு கண்ணாடியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
என்ன ஆனாலும் பெரியவா தர்ஶனத்துக்கு அப்பறந்தான்! என்று மனஸை திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார் டெல்லி பக்தர். நல்ல கூட்டம். அங்கே போனதும் இவர் மனஸில் ஒரு ஸங்கல்பம். “பெரியவாளா கூப்டு கேட்டாலொழிய அவர்கிட்ட எதுவும் சொல்லப் போறதில்லே” என்பதே! கிணத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவா இவரையும் இவர் குடும்பத்தாரையும் எதுவும் கேட்காமல் ஆஸிர்வாதம் மட்டும் பண்ணினார்.
பக்தரும் குத்து மதிப்பாக பெரியவா இருந்த திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் சொல்லாமல் வந்துவிட்டார். மறுநாள் கண்ணாடியுடன் டாக்டரை பார்க்கப் போனபோது கடைசி பொடி எழுத்து வரை ஈஸியாக படித்துவிட்டார். டாக்டர் பத்ரிநாத்துக்கோ ஆச்சர்யம்! “என் மெடிக்கல் நாலெட்ஜை தாண்டி ஏதோ அதிஸயம் நடந்திருக்கு. ரெட்டினால நேத்திக்கு கசிஞ்சுண்டு இருந்த liquid இன்னிக்கு எப்டியோ ஒங்க ஸிஸ்டத்துக்குள்ள absorb ஆயிருக்கு” என்றார்.
“என்னது? அவ்ளோவ்தானா! அதானே பாத்தேன்! மஹாவைத்யநாதன் ஒங்களுக்கு அனுக்ரஹம் பண்ணினதுக்கப்பறம் வேற யார் treatment குடுக்கணும்?…..” டாக்டர் பத்ரிநாத் பெரியவாளின் பரம பக்தராச்சே!
அவ்வளவுதான்! பெரியவா என்ற தெய்வத்திடம் நாம் எதுவுமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதில்லை, என்ற பேருண்மையை டெல்லி பக்தர் அன்றே அப்போதே ப்ரத்யக்ஷமாக உணர்ந்தார். ஆனாலும், நம் மனித மனம் ‘குரங்கு’ இல்லையா? பக்தருக்கும் ஒரு ஸந்தேஹம் வந்தது….. “கண் பார்வை வந்தது…ஒருவேளை ரொம்ப நாளானதால, automaticஆ, மங்கின பார்வை தானாவே சரியாப் போய்டுத்தோ? இது இயற்கையா நடந்ததுதானோ?இதுல, நாமளா பெரியவாளோட கருணை…ன்னு, நடுவுல சொருகிட்டோமோ?” என்று அலைபாய்ந்தது.
‘கல்கி’ இதழில் அவருடைய கண் பார்வை கிடைத்த அனுபவம் வெளியாகியிருந்தது. அதை படித்துக் கொண்டிருக்கும் ஸமயத்தில்தான் இந்த பாழாப் போன ஸந்தேஹம். இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, மேலே எதையுமே படிக்க முடியாதபடி பார்வை மங்கிவிட்டது!
“ஈஶ்வரா! என்னை மன்னிச்சுடுங்கோ!பெரியவா! ஸாக்ஷாத் சந்த்ரமௌலீஶ்வரனோட க்ருபையை ஸந்தேஹப்பட்டுட்டேனே! மஹாப்ரபோ! அடியேனோட பார்வையை பிச்சையா போடுங்கோ!” கண்ணீர் வழிய வாய் விட்டு அலறினார்.
அடுத்த க்ஷணம்…….இதோ…..மந்தஹாஸமான புன்னகையோடு தண்ட கமண்டலுவோடு இவருடைய அனுபவத்தோடு வெளிவந்த பெரியவாளின் ஜோதிப் பிழம்பான திவ்யமங்கள ரூபம் இவர் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது.