A Garden In A Sinkhole…

The region in the southeast of South Australia, near Mount Gambier, is littered with many volcanic and karst features such as volcanic craters, lakes, limestone caves, water-filled caves and sinkholes. One particular sinkhole, located just off Jubilee Highway East, is particularly worth visiting. What was once a typical limestone cave formed by the corrosion of limestone rocks by seawater, and the subsequent collapse of the chamber’s roof, has been transformed into a beautiful garden.

The Sunken Garden in the Umpherston Sinkhole was built by James Umpherston in the 1880s, after he purchased the property about twenty years prior. Being retired, Umpherson wanted to create a place where the people of Mount Gambier could come to relax and escape the heat of summer. He carved a path in the side of the rock and erected a set of wooden steps so people could descend into the sinkhole and to his sunken garden, where he planted all sorts of ferns, shrubs and flowers. The sinkhole even had a small lake within where visitors could take boat rides.

The garden became an immediate success and very popular among the residents of Mount Gambier. After James Umpherston died in 1900, his garden fell into disrepair, and it was only about forty years ago that the garden was rescued from a rubbish dump that it had become. The garden was restored by the employees of the South Australian Woods and Forests Department in 1976. They removed the rubbish and cleared the weeds, and planted hydrangeas and other species along the terraces.

Once again, the garden has become a popular recreation spot. In 1995, the garden was added to the South Australian Heritage Register.

Source….kaushik in http://www.amusingplanet.com

Natarajan

“ஆட்டோ ஓட்டுவது வருமானம்… பசியாற்றுவது சந்தோஷம்”..! கோவையில் ஓர் அன்னபூரணன்!!!

 

சித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு’ என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி’ என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்…

நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன். மதியம் 12 மணிக்கு ஜி.ஹெச் வந்திருங்க, பார்க்கலாம். அங்கேதான் சோறு போட்டுக்கிட்டு இருப்பேன்” என்று  தகவல் சொன்னார். அவர் சொன்ன நேரத்துக்குச் சென்றோம். ‘பசியாற சோறு’ என்ற பெயர் தாங்கிய ஆட்டோவின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள் மக்கள். சிலர் கையில் பாத்திரங்களும், சிலர் கையில் பாலித்தீன் பைகளும் இருந்தன. அனைவரின் முகத்திலும் பசியின் கொடுமையும் வறுமையும் தெரிந்தன.

தான் வைத்திருந்த பாலித்தீன் பையில் சோறு வாங்கிய ஒரு பெண்மணி, “இன்னும் கொஞ்சம்  கிடைக்குமா சார்?” என்று தயக்கத்துடன் கேட்க, “எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கங்கம்மா… ரசத்துக்குத் தனியா கவர் வெச்சிருக்கீங்களா?” என்றபடி இன்னும் இரண்டு கரண்டி சேர்த்து அள்ளிப்போட்டுவிட்டு, “போதும்மாம்மா..?”  என்றார் ராஜா சேது முரளி. பதில் சொல்ல வார்த்தை கிடைக்காமல் வாய் நிறைய புன்னகை உதிர்த்து,  தலையை ஆட்டிய அந்தப் பெண்மணியின் முகம்,  பசியின் சித்திரம். இப்படி எத்தனையோ மனிதர்கள் சோற்றுக்கு வழி இல்லாமல் அரசு மருத்துவமனை வாயில்களிலும், கோயில்களிலும், பஸ்ஸ்டாண்ட் பிளாட்பாரத்திலும் ஒட்டிய வயிற்றுடன், `யாரோ ஒருவர் பசியாற்றுவார்’ என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறார்கள். புதிய இந்தியா பிறந்தும் பழைய காட்சிகள் மாறாததுதான் இங்கு எவ்வளவு பெரிய துயரம்!

சோறு கிடைத்த சந்தோஷத்தில் பகைவென்ற வீராங்கனைபோல் வந்த அந்த அம்மாவிடம் பேசினேன். “என் பேரு சுசிலா. ஊரு கூடலூர். எனக்கு ஒரே மகன். என் வீட்டுக்காரர், என் மகன் சின்ன வயசா இருக்கும்போதே செத்துப்போயிட்டார். நான் படிச்சது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. அங்கன்வாடியில வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். மாசம் 2,500 ரூபா சம்பளம். பஸ்ஸுக்கே அதுல பாதி காசு போயிரும். அதனால, அந்த வேலை வேணாம்னு எழுதிக் கொடுத்துட்டு, லோக்கல்ல கிடைக்கிற கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தை ஓட்டினேன்.

எம் மகன், மேஸ்திரி வேலைக்குப் போயிக்கிட்டிருந்தான். குடும்பத்தை ஓட்டுற அளவுக்கு வருமானம் வந்தது. அவனுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் மகனுக்கு திடீர்னு மூலம் வந்திருச்சு. அதனால, பொண்டாட்டி அவனை விட்டுட்டு ஓடிட்டா. குடும்பம் சிதைஞ்சிருச்சு. டாக்டருங்க, `அவனுக்கு ஆபரேஷன் பண்ணாத்தான் குணமாகும்’னு சொல்லிட்டாங்க. சேர்த்துவெச்சிருந்த 4,000 ரூபாயோடு இங்கே வந்து 15 நாளாச்சு. மூணு வேளையும் கடையில சாப்பாடு வாங்கி கட்டுப்படியாகலை. இருந்த காசு எல்லாம் தீர்ந்துடுச்சு. இங்கே ஃப்ரீயா சோறு போடுறாங்கனு இன்னிக்குதான் தெரியும். அதான் ராத்திரிக்கும் சேர்த்து வாங்கிவெச்சுக்கிட்டேன். இதுவும் இல்லைன்னா பட்டினிதான்” என்று அவர் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. இதுபோன்று வரிசையில் நின்ற ஒவ்வொருவருக்கும் இருக்கும்  துயரக்கதையை நினைத்து உடல் வெடவெடத்துப்போனது.

எல்லோருக்கும் சோறு போட்டு முடித்த பிறகு ராஜா சேது முரளியிடம் பேசினோம். “நான் சின்ன வயசுல அனுபவிச்ச கஷ்டம்தாங்க, என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. என்கூட பொறந்தது மொத்தம் அஞ்சு பேர். அப்பா, பயங்கர குடிகாரர். அம்மா, கூலி வேலை செய்துதான் எங்களுக்கு சோறு போடுவாங்க. பல நாள்  சாப்பாடு இல்லாம பசியில தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்திருக்கேன். பசியின் அவஸ்தை எனக்கு நல்லாத் தெரியும். பெரிய ஆளாகி வேலைக்குப் போனதும், கஷ்டப்படுறவங்களுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து திருப்தியடைஞ்சுக்குவேன். கருத்துவேறுபாட்டால் என் மனைவி என்னைவிட்டு பிரிஞ்சுட்டாங்க. என்கூட பிறந்தவங்களும் அவங்கவங்க தனித்தனியா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நானும் அம்மாவும் மட்டும்தான் ஒண்ணா இருக்கோம்

ஆட்டோ ஓட்டுறதுதான் என் தொழிலா இருந்துச்சு. வாழ்க்கை, எதை நோக்கிப் போகுதுனு தெரியாம சுற்றிக்கிட்டிருந்த சமயத்துல, ஒருநாள் கோவையில் இருக்கும் ‘சிநேகாலயா ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டோர் காப்பகத்துல திவ்யானு ஒரு குழந்தை சீரியஸா இருக்கு’னு சொன்னாங்க. ஆட்டோ எடுத்துட்டுப் போனேன். அங்கே அடிக்கடி இதுமாதிரி உதவிக்குப் போறது வழக்கம். அந்த குழந்தையைக் காப்பாற்ற முடியலை. கோவை ஜி.ஹெச்-லதான் பத்து நாளைக்குமேல வெச்சிருந்தோம். நான்தான் பக்கத்துலேயே இருந்து கவனிச்சுக்கிட்டேன். அப்போதான் இங்கே வர்றவங்க சாப்பாட்டுக்காகப் படுற கஷ்டத்தைப் பார்த்தேன். என்னோட சின்ன வயசு பசி, எனக்கு ஞாபகத்துக்கு வந்திருச்சு. அரசு மருத்துவமனைக்கு ஏதோதோ பிரச்னைகளோடு வரும் ஏழைகளுக்கு உதவணும்னு முடிவுபண்ணேன். என் ஆட்டோவுல ஏறுகிற எல்லார்கிட்டயும் இதைப் பற்றிச் சொல்லி, `உங்க வீட்டுல ஏதாவது விசேஷம் நடந்தா, அப்போ மிச்சமாகும் சாப்பாட்டைக் கொடுங்க’னு கேட்டேன். கொஞ்ச கொஞ்சமா ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சது.  கல்யாண வீட்டுச் சோறோ, கருமாதி வீட்டுச் சோறோ… எந்தப் பாகுபாடும் கிடையாது. எந்த விசேஷங்கள்ல மிச்சமானாலும் எனக்கு போன் வர ஆரம்பிச்சது. அன்னூர் வடவெள்ளினு கோவையைச் சுற்றி எங்கிருந்து போன் வந்தாலும் போயிடுவேன். சாதம், ரசம்னு இருக்கிறதை வாங்கிக்கிட்டு மதியானம் இங்கே ரீச் ஆகிடுவேன்.  பல இடங்கள்ல பெட்ரோல் காசையும் அவங்களே கொடுத்திருவாங்க.

இதுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கணும்னு சமீபத்துலதான் ‘பசியாற சோறு’னு பேருவெச்சேன். ஹாஸ்பிட்டல்ல  என் போன் நம்பர் இருக்கு. அங்கே டிஸ்சார்ச் ஆனாலும், அடுத்து வர்றவங்ககிட்ட தகவலைச் சொல்லி, என் நம்பரைக் கொடுத்திருவாங்க. ‘இன்னைக்கு சோறு இருக்கானு?’ தினமும் போன் பண்ணிடுவாங்க. பல நாள் சோறு இருக்கும்; சில நாள் சோறு இருக்காது. இல்லாதபோது ‘இல்லை’னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். தயங்கித் தயங்கித்தான் சொல்லுவேன். பிறந்தநாள், நினைவு நாளுக்கெல்லாம்கூட என்கிட்ட ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து சோறு போடச் சொல்றாங்க. அது மாதிரியான நேரத்துல, நானே ஆள்வெச்சு சமைச்சுக் கொண்டு வந்து போட்ருவேன்” என்று சொல்லும் ராஜா சேது முரளியிடம், “உங்க வாழ்க்கைக்கான பணத்துக்கு என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டால், “பல நல்ல உள்ளங்கள் இருக்காங்க. ஒருத்தர் மாசத்துல ஒரு நாள் பெட்ரோல் ஃபுல் பண்ணி கொடுத்திருவார். கிடைக்கிற நேரத்துக்கு வாடகைக்கு ஆட்டோ ஓட்டி, அதுல வர்ற வருமானத்துலதான் வாழ்க்கையை ஓட்டுறேன்” என்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி, நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 150 பேரைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார் ராஜா சேது முரளி.

விடைபெறும்போது, “பசியைவிட பெரிய கொடுமை வேற இல்லீங்க. உங்களால முடிஞ்சா சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்துப்பாருங்க. அதுல கிடைக்கிற திருப்தியே தனி” என்றார் மனநிறைவுடன்.

Source…..Punniyamurthy  in http://www.vikatan.com

Natarajan

வாரம் ஒரு கவிதை ….

 

என்ன தவம் செய்தேன்…
———————-
அம்மா என்னும் பதவி கிட்டியது எனக்கு
உன்னால்தானே என் செல்லமே ! என்ன
தவம் நான் செய்தேன் செல்லமே நீ வந்து
என் கையில் தவழ !
உன் ஒருவன் வரவில்  எத்தனை பேருக்கு
பதவி உயர்வு ஒரு குடும்பத்தில் !
உன் அப்பாவுக்கு தந்தை என்னும் உயர்வு…
பாட்டி தாத்தாவுக்கும் பதவி உயர்வு …
அம்மா அப்பா என்னும் நிலையிலிருந்து !!!
தம்பி பாப்பா நீ வந்ததால் இந்த வீட்டுக் குட்டி
பாப்பாவுக்கும்  அக்கா என்னும் ப்ரோமோஷன் !
இத்தனை பேருக்கும் பதவி உயர்வு ஒரே நாளில்
உன் வரவால் !…
என்ன தவம் செய்தேன் நான் இத்தனை “சக்தி “
பெற்ற உன்னை நான் பெற்றெடுக்க !
Natarajan ….in http://www.dinamani.com dated 20th August 2017

வாரம் ஒரு கவிதை ….” மழை நீர் போல …”

 

மழை நீர் போல …
——————–
வறண்டு கிடக்கும் பூமி …வானம் திறக்குமா கண் ?
மேலும் கீழும் பார்ப்பது உழவன் மட்டுமல்ல இன்று !
அடுக்கு மாடி கட்டிடக் குவியல் கூட்டில் குடி இருக்கும்
நகரத்துப் “பறவைகளும்” மழை தேடி வானிலை
அறிக்கையை காலையும் மாலையும் அலசும் அவலம் இன்று !
மழை நீரை முத்தமிட துடிக்கும்  வறண்ட பூமி நனையுது
மழை நீர் போல பெருகி வரும் உழவன் அவன் கண்ணீரில் !
குடிக்க நீர் இன்றி தவிக்கும் அடுக்கு மாடி “பறவைகள்”
வழி மேல் விழி வைத்து காத்திருக்குது  தினமும் ஒரு
லாரி தண்ணீருக்கு !
தண்ணீரும் பணமாக மாறும் காலம் இது ..மழை
நீர் சேமிப்பின் மதிப்பு உணராத மனிதன் கொடுக்கிறான்
நீருக்கு ஒரு விலை இன்று !
மழை வெள்ளம் வரும் நேரம் “இது என்ன பேய் மழை”
என்று அலறிய மனிதன் குரல் கேட்டு வானமும்
மனம் உடைந்து “கண்ணீர் ” விடவும் மறந்து போனதோ ?
தினம் தினம் தண்ணீர் தண்ணீர்  என்று மனிதன்
கண்ணீர் விட்டு என்ன பயன் இன்று ?
மாற வேண்டும்  மனிதன்… மாற்றி யோசிக்கவும்
வேண்டும் …வானமும் மகிழ்ந்து  தன் ஆனந்தக்
கண்ணீரால்  நனைக்க வேண்டும் இந்த பூமியை !
மனிதனுக்கும் புரிய வேண்டும்  எந்த நீர்
ஆனாலும்  மழை நீர் போல ஆகுமா  என்று !
Natarajan….
in http://www.dinamani.com dated  13th August 2017

வாரம் ஒரு கவிதை …” மறு ஜென்மம்”

 

மறு ஜென்மம்
————–
நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும்
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு
மறு ஜென்மம் !  மறுக்க முடியுமா இந்த உண்மையை ?
கிடைத்தது ஒரு  அரிய மனிதப் பிறவி …தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும்  காலையில் நாம்
எடுப்பது ஒரு மறு  ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !
இருக்கும் அந்த ஒரே ஒரு  நாளில் மறக்கலாமா
நாம் மனித நேயம் ?
தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து
வேறு ஒரு புது  ஜென்ம மாய வலையில்
சிக்கி, கிடைத்த மனிதப்   பிறவியின்  மதிப்பைக்
குறைக்க வேண்டாமே நாம் !
மனிதராய் பிறந்தோம் …மனிதராகவே
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் !
Natarajan  in http://www.dinamani.com dated 26th june 2017

வாரம் ஒரு கவிதை …” மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு “

 

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு …
……………………………………………………
துள்ளி வரும் காளை …அதை அடக்கும்
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !
இது போர்க்களம் இல்லையே…ஒரு
வீர விளையாட்டுக்களம்  தானே !
ஜல்லிக்கட்டு …இந்த ஒரு பெயரே
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !
காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே
மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல …ஒரு
கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான்
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !
ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று… அவர்
ஆடும் ஆட்டம் ஒரு “சோதனை  ஓட்டம் “
இன்று… கேட்கவே வேதனை நமக்கு !
சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும்
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும்
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !
நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !
மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு …ஜெயித்துக்
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !
My Tamil Kavithai  as published  in  www.dinamani.com
Natarajan

New Year Greetings and Wishes …

 

da8d8-baba2

God does not have an iPhone or Android Mobile…No iPad with  Him either..
But HE is the  favourite contact to all of us !
HE does not have any account in FaceBook ..But HE is our Best friend !
HE does not have any handle in Twitter…but we all follow HIM !
HE does not have internet with Wifi…but we are all connected to HIM !
We can call HIM at any time  and HIS customer Service never puts us on ” Hold” !
HE loves all of us equally without any bias or discrimination ..and no conditions apply.!
 We  pray to HIM that HE continues to remain in our  contact and shower HIS Blessings upon
all of us in the Year 2017 too as HE was doing all these years !
Let this request be the only Prayer to God from all of us on this Day !
Best wishes for a Happy , Healthy and  Prosperous New Year to you and your loved ones .
Natarajan
28th Dec 2016

வாரம் ஒரு கவிதை…” சுனாமி சுவடுகள் ” …

 

ஆழிப்  பேரலை  இங்கு பதித்த சுவடுகள் என்றும் 
அழியாத வடுக்கள் அன்றோ ! ஆண்டு பன்னிரண்டு 
ஆனாலும் மறக்க முடியுமா  அந்த நாளை இன்றும் ?
சுனாமியின் சுவடுகளில் கால் பதித்து  மரம் பல பலி 
கொண்டு ஒரு நகரின் வாழ்வு  முடக்கி " வார்தா "
ஆடிய ஆட்டம் ஆழிப் பேரலையின் மற்றுமொரு 
அவதாரமா ?  பஞ்ச பூதங்கள் வரிசை கட்டி கொஞ்சமும் 
இரக்கம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக   அசுர ஆட்டம் போடுவது  
ஏன்  இந்த இசை  விழா மாதத்தில் மீண்டும்  மீண்டும் ?
வசை பாடவில்லை நான் உங்களை பஞ்ச  பூதங்களே! 
அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உங்கள் மீது !
எங்களைக் காக்கும் தாய் அல்லவா நீங்க ...பிள்ளைகள் 
எங்களை நீங்க தண்டித்தது போதும் ...உங்க அடிகளின் 
வடுக்கள் கட்டாயம் தடுக்கும் எங்களை உங்கள் கண்டிப்பான 
நெறி முறை  விதி முறை  மீறாமல் இனிமேல் ! நம்புங்க எங்க வாக்கை !
நம்பி எங்களை வழி நடத்துங்க ஒரு தடங்கல்  இல்லா 
பாதையில் நாங்கள்   எங்கள் பாத  சுவடு பதிக்க

Natarajan

www.dinamani.com ---26th Dec2016

 

Joke of the Day…”Won’t your wife be furious…” ?

 

A man was walking in the city, when he was accosted by a particularly dirty and shabby-looking bum who asked him for a couple of dollars for dinner.

The man took out his wallet, extracted two dollars and asked, “If I gave you this money, will you take it and buy whiskey?”

“No, I stopped drinking years ago,” the bum said.

“Will you use it to gamble?”

I don’t gamble. I need everything I can get just to stay alive.”

“Will you spend the money on greens fees at a golf course?”

“Are you NUTS!? I haven’t played golf in 20 years!”

The man said, “Well, I’m not going to give you two dollars. Instead, I’m going to take you to my home for a terrific dinner cooked by my wife.”

The bum was astounded. “Won’t your wife be furious with you for doing that? I know I’m dirty, and I probably smell pretty bad.”

The man replied: “That’s OK. I just want her to see what a man who’s given up drinking, gambling and golf looks like.”

Source…www.ba-bamail.com

Natarajan